Go to full page →

5 - சோதிக்கப்பட்ட காயீனும் ஆபேலும் PPTam 62

ஆதாமின் பிள்ளைகளான காயினும் ஆபேலும் குணத்தில் வெகுவாக வேறுபட்டிருந்தனர். தேவனுக்கு விசுவாசமாயிருக்கிற ஆவியை ஆபேல் கொண்டிருந்தான். சிருஷ்டிகர் விழுந்து போன இனத்தை நடத்தின் விதத்தில் அவன் நீதியையும் இரக்கத்தையும் கண்டு, மீட்பின் நம்பிக்கையை நம்பிக்கையோடு ஏற்றுக்கொண்டான். ஆனால் காயின் கலகத்தின் ஆவியைப் போற்றி, ஆதாமின் பாவத்தினிமித்தம் பூமியின் மீதும் மனித இனத்தின் மீதும் கொடுக்கப் பட்ட சாபத்திற்காக தேவனுக்கு விரோதமாக முறுமுறுத்தான். சுயத்தை உயர்த்துகிற வாஞ்சையில் திளைப்பதும், தெய்வீக நீதி யையும் அதிகாரத்தையும் கேள்வி கேட்கிறதுமான சாத்தானுடைய விழுகைக்கு நடத்தின் அதே வழியில் தன் மனதை ஓட அவன் அனுமதித்தான். PPTam 62.1

அவர்களுக்கு முன்னதாக ஆதாம் சோதிக்கப்பட்டதைப் போலவே, தேவனுடைய வார்த்தையை விசுவாசித்து அதற்குக் கீழ்ப்படிவார்களோ என்று இந்த சகோதரரும் சோதிக்கப்பட்டனர். மனிதனுடைய இரட்சிப்பிற்காக உண்டாக்கப்பட்டிருந்த ஏற்பாட் டோடு அவர்கள் அறிமுகமாகியிருந்து, தேவன் நியமித்திருந்த காணிக்கை முறைகளை புரிந்திருந்தனர். இந்த காணிக்கைகளின் வழியாக அவைகள் அடையாளப்படுத்தின் இரட்சகரில் விசுவா சாத்தைக்காட்ட வேண்டுமென்றும், அதே நேரத்தில் மன்னிப்பிற்காக முற்றிலும் அவரைச் சார்ந்திருப்பதை அறிக்கையிடவேண்டும் என் றும் அறிந்திருந்தனர். தங்களுடைய மீப்பிற்காக தெய்வீகத்திட்டத் தோடு இவ்விதமாக இணைந்து போவதினால், தேவனுடைய சித் தத்திற்கான தங்களுடைய கீழ்ப்படிதலுக்கு அவர்கள் சான்று கொடுக்கிறார்கள் என்பதையும் அறிந்திருந்தனர். இரத்தஞ்சிந்துத் லில்லாமல் பாவமன்னிப்பு உண்டாகாது. தங்களுடைய மந்தையில் முதற்பிறப்பை பலியாகக் கொடுப்பதன் மூலம், வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட பாவநிவாரணமாக கிறிஸ்துவின் இரத்தம் இருக் கிறது என்பதிலிருக்கும் தங்களுடைய விசுவாசத்தை அவர்கள் காண்பிக்க வேண்டும். இதைத் தவிர்த்து பூமியின் முதல் கனிகளும் தோத்திர காணிக்கையாக ஆண்டவர் முன்பாக வைக்கப்படவேண்டும். PPTam 62.2

இரண்டு சகோதரர்களும் ஒன்று போல் தங்களுடைய பலி பீடங்களைக் கட்டி, ஒவ்வொருவரும் ஒரு காணிக்கையைக் கொண்டுவந்தார்கள். ஆபேல் ஆண்டவருடைய நியமத்துக்கு இசைவாக மந்தையிலிருந்து ஒரு பலியைக் கொண்டுவந்தான். ஆபேலையும் அவன் காணிக்கையையும் கர்த்தர் அங்கிகரித்தார். வானத்திலிருந்து அக்கினி தோன்றி காணிக்கையை பட்சித்துப் போட்டது. ஆனால் காயீன் தேவனுடைய நேரடியான வெளிப்படையான கட்டளையை கருத்தில் கொள்ளாமல், வெறும் பழங்களைக் காணிக்கையாக கொண்டு வந்தான். அது ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கான எந்த அடையாளமும் வானத்திலிருந்து உண்டாகவில்லை. தெய்வீகம் கற்பித்தவிதமாக தேவனை அணுக வேண்டுமென்று ஆபேல் தன் சகோதரனை மன்றாடினான். ஆனால் அவனுடைய மன்றாட்டுகள் அவனுடைய சொந்த சித்தத்தை செயல்படுத்த அவனை அதிக தீர்மானமுள்ளவனாக்கிற்று. மூத்தவனாக, தான் தன் சகோதரனால் போதிக்கப்படுவதற்கும் மேலாக இருப்பதாக எண்ணி அவனுடைய ஆலோசனையை இகழ்ந்தான். PPTam 63.1

காயீன் வாக்குப்பண்ணப்பட்டிருந்த தியாகபலியின் மீதும் பலி காணிக்கையின் அவசியத்தின் மீதும் தன் இருதயத்தில் நம்பிக்கை யற்றவனாக முறுமுறுப்போடு வந்தான். அவனுடைய காணிக்கை பாவத்தைக் குறித்த எந்த மனவருத்தத்தையும் வெளிக்காட்ட வில்லை . தேவன் குறிப்பிடுகிற மிகச் சரியான திட்டத்தைப் பின்பற்றுவது நம்முடைய பெலவீனத்தை ஒத்துக்கொள்வதைப் போன்றது என்றும், நம்முடைய இரட்சிப்பிற்கு வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட இரட்சகரின் பாவநிவிர்த்தியையே முற்றிலும் நம்பி ஒப்படைப்பதைப்போன்றது என்றும் இன்று அநேகர் உணரு வதைப்போல அவனும் உணர்ந்தான். சுயத்தைச் சார்ந்திருக்கும் முறையை அவன் தெரிந்து கொண்டான். அவன் தனது சொந்த நன்மையைக் கொண்டு வருவான். அவன் ஆட்டுக்குட்டியைக் கொண்டு வரமாட்டான். அதன் இரத்தத்தை தனது காணிக்கையோடு கலக்கமாட்டான். மாறாக, தனது கனிகளை, தன் உழைப்பின் பலன்களைக் கொடுப்பான். அவன் தனது காணிக்கையை தேவனுக்குச் செய்யும் உபகாரமாக நினைத்து, அதின் வழியாக தெய்வீக அங்கீகாரத்தை அடைய வேண்டுமென்று எதிர்பார்த்தான். ஒரு பலிபீடத்தை உண்டாக்குவதில் காயீன் கீழ்ப்படிந்தான். ஒரு பலியைக் கொண்டுவருவதில் கீழ்ப்படிந்தான். ஆனால் அவன் ஒரு பகுதியே கீழ்ப்படிந்திருந்தான். ஒரு மீட்பரின் அவசியத்தை உணர்த்தும் அத்தியாவசியமான பகுதி விடப்பட்டிருந்தது. PPTam 63.2

பிறப்பையும் மார்க்க போதனைகளையும் கருத்தில் கொள்ளும் போது. இந்த சகோதரர்கள் சமமாகவே இருந்தனர். இருவருமே பாவிகள், பக்தி செலுத்தவும் ஆராதிக்கவும் வேண்டுமென்கிற தேவனுடைய கோரிக்கைகளை இருவரும் ஒப்புக்கொண்டிருந் தார்கள். குறிப்பிட்ட இடம் வரை வெளித்தோற்றத்திற்கு அவர்களுடைய மார்க்கம் ஒன்றாக இருந்தது. அதைத் தாண்டி அவ்விருவருக்குமிருந்த வேற்றுமை மகா பெரியதாக இருந்தது. PPTam 64.1

விசுவாசத்தினாலே ஆபேல் காயீனுடைய பலியிலும் மேன் மையான பலியை தேவனுக்குச் செலுத்தினான் (எபி. 11:4). மீட்பின் மாபெரும் கொள்கைகளை ஆபேல் பற்றிக்கொண்டான். தன்னை ஒரு பாவியாக அவன் பார்த்தான். பாவமும் அதன் விளைவாகிய மரணமும் தன் ஆத்துமாவிற்கும் தேவனோடுள்ள உறவிற்கும் இடையே நிற்பதைக் கண்டான். அவன் அடிக்கப்பட்ட பலியை, பலியாக்கப்பட உயிரைக் கொண்டுவந்ததால், மீறப்பட்ட பிரமா ணத்தின் கோரிக்கைகளை ஒப்புக்கொண்டான். சிந்தப்பட்ட இரத் தத்தின் வழியாக எதிர்கால பலியான கிறிஸ்து கல்வாரியின் சிலுவையில் மரிப்பதைக் கண்டான். செய்யப்படவிருக்கிற பாவ நிவிர்த்தியை நம்பினதால், நீதிமான் என்ற சாட்சியை அடைந்தான். அவனுடைய காணிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது. PPTam 64.2

ஆபேலைப்போலவே இந்த சத்தியங்களைக் கற்று ஏற்றுக் கொள்ளும் அதே சந்தர்ப்பம் காயீனுக்கும் இருந்தது. தன்னிச்சையான நோக்கத்திற்கு அவன் பலியாகவில்லை . ஒரு சகோதரன் ஏற்றுக்கொள்ளப்படவும், மற்றவன் நிராகரிக்கப்படவும் தெரிந்து கொள்ளப்படவில்லை. ஆபேல் விசுவாசத்தையும் கீழ்ப்படிதலையும் தெரிந்து கொண்டான். காயீன் அவிசுவாசத்தையும் கலகத்தையும் தெரிந்து கொண்டான். இங்கேதான் அனைத்துக் காரியமும் இருக்கிறது. PPTam 64.3

உலகத்தின் இறுதிவரையிலும் இருக்கப்போகிற இரண்டு கூட்டத்தினரை காயீனும் ஆபேலும் எடுத்துக்காட்டுகிறார்கள். ஒரு வகுப்பார் பாவத்திற்காக நியமிக்கப்பட்டிருக்கிற பலியை உபயோகித்துக்கொள்ளுகிறார்கள். அடுத்த வகுப்பார், தங்கள் நற்கிரியைகளைச் சார்ந்து இருக்கும் படி துணிகரங்கொள்ளு கிறார்கள். அவர்களுடைய பலி தெய்வீக மத்தியஸ்தத்தின் நன்மை இல்லாத ஒரு பலி . எனவே, அதினால் மனிதன் தேவனுடைய விருப்பத்திற்குள் கொண்டுவர முடியவில்லை. கிறிஸ்துவின் தகுதியினால் மாத்திரமே நம்முடைய மீறுதல்கள் மன்னிக்கப்பட முடியும். PPTam 65.1

கிறிஸ்துவின் இரத்தம் அவசியமில்லை என்று உணருகிறவர்கள், தெய்வீக கிருபை இல்லாத, தங்களுடைய சொந்த கிரியை களாலேயே தெய்வீக அங்கீகாரத்தைப் பெறமுடியும் என்று உணரு கிறார்கள். காயீனைப்போல் அதே தவறைச் செய்கிறார்கள். சுத்தி கரிக்கும் இரத்தத்தை ஏற்றுக்கொள்ளவில்லையெனில் அவர்கள் ஆக்கினையின் கீழ் இருக்கிறார்கள். பாவத்தின் அடிமைத்தளையிலிருந்து விடுவிக்கப்பட வேறு எந்த ஒரு ஏற்பாடும் செய்யப்பட வில்லை . PPTam 65.2

காயீனுடைய உதாரணத்தைப் பின்பற்றி, தொழுகை செய்யும் வகுப்பார் உலகத்தில் பெரும்பான்மையினராக இருக்கிறார்கள். மனிதன் இரட்சிப்பிற்காக தன் சொந்த முயற்சியை நம்பியிருக்கலாம் என்கிற அதே கொள்கையின் அடிப்படையில், ஏறக்குறைய அனைத்து மதங்களும் இருக்கின்றன. மனித இனம் மீட்பின் தேவையிலல்ல, வளர்ச்சியின் தேவையிலிருக்கிறது. அது சுத்தி கரித்து, உயர்த்தி, தன்னை புதுப்பித்துக்கொள்ளும் என்று சிலரால் உரிமை பாராட்டப்படுகிறது. பலியின் இரத்தமில்லாத காணிக்கையினால் தெய்வீக தயவை பெற்றுக்கொள்ள காயீன் நினைத்ததைப் போல இவர்களும் பாவநிவிர்த்தி இல்லாமல் மானிடத்தை தெய் வீகத் தரத்திற்கு உயர்த்த எதிர்பார்க்கிறார்கள். விளைவு என்னவாயிருக்கும் என்று காயீனுடைய சரித்திரம் காண்பிக்கிறது. கிறிஸ்து இல்லாமல் மனிதன் என்னவாக முடியும் என்று அது காண்பிக்கிறது. தன்னை புதுப்பித்துக்கொள்ள மானிடத்திற்கு ஒரு வல்லமையும் கிடையாது. அது மேல் நோக்கி, தெய்வீகத்தை நோக்கியல்ல, கீழ் நோக்கி, சாத்தானியத்தை நோக்கிச் செல்லுகிறது. கிறிஸ்து மாத்திரமே நமது ஒரே நம்பிக்கை. அவராலேயன்றி வேறொரு வராலும் இரட்சிப்பு இல்லை. நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத் தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல் லாமல் வேறொருநாமம் கட்டளையிடப்படவும் இல்லை . அப்4:12. PPTam 65.3

கிறிஸ்துவை சார்ந்திருக்கும் உண்மையான விசுவாசம் தேவ னுடைய கோரிக்கைகளுக்கெல்லாம் கீழ்ப்படிவதன் மூலம் வெளிக் காட்டப்படும். ஆதாமின் காலத்திலிருந்து இன்றுவரை மாபெரும் போராட்டம் தேவனுடைய பிரமாணத்திற்கு கீழ்ப்படிவதைப் பற்றியே இருக்கிறது. அவருடைய கட்டளைகள் சிலவற்றை கருத்தில் கொள்ளாதபோதும், தேவனுடைய தயவைப்பெறும் சுதந்திரம் தங்களுக்கு இருப்பதாக உரிமை பாராட்டும் நபர்கள், எல்லா காலங்களிலும் இருந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் கிரியைகளினாலே விசுவாசம் பூரணப்படுகிறது. கீழ்ப்படியும் கிரியையில்லாதபோது, விசுவாசம் செத்தது (யாக்கோபு 2:22, 17) என்று வேதாகமம் அறிவிக்கிறது. தேவனை அறிந்திருக்கிறே னென்று சொல்லியும், அவருடைய கற்பனைகளைக் கைக்கொள் ளாதவன் பொய்யனாயிருக்கிறான், அவனுக்குள் சாத்தியமில்லை. 1 யோவான் 2:4. PPTam 66.1

தனது காணிக்கை நிராகரிக்கப்பட்டதை காயீன் கண்டபோது, ஆண்டவர் மேலும் ஆபேல் மேலும் அவன் கோபங்கொண்டான். தெய்வீகம் நியமித்த பலியின் இடத்தில் மனுஷன் பொருத்தினதை தேவன் ஏற்றுக்கொள்ளாததால் கோபங்கொண்டான். தேவனுக்கு எதிராக கலகம் செய்ய தன்னோடு சேருவதை விடுத்து, அவருக்குக் கீழ்ப்படியத் தெரிந்து கொண்டதாலும் தன் சகோதரன் மீதும் கோபங் கொண்டான். தெய்வீக கட்டளையை காயின் கருத்தில் கொள்ளாத போதும் தேவன் அவனை அப்படியே விட்டுவிடவில்லை. மாறாக, தன்னை காரணமற்றவனாக காட்டிக்கொண்ட மனிதனோடு நியா யத்தைப் பேசும்படியாக அவர் இறங்கினார். ஆண்டவர் காயீனை நோக்கி : உனக்கு ஏன் எரிச்சல் உண்டாயிற்று? உன் முக நாடி ஏன் வேறுபட்டது? என்றார். நீ நன்மை செய்தால் மேன்மை இல்லையோ? நீ நன்மை செய்யாதிருந்தால் பாவம் வாசற்படியில் படுத்திருக்கும் என்று ஒரு தேவதூதன் மூலமாக தெய்வீக எச்சரிக்கை கொடுக்கப்பட்டது. தெரிந்துகொள்ளுதல் காயீனிடமே இருந்தது. வாக்குத் தத்தம் பண்ணப்பட்ட இரட்சகரின் தகுதியை நம்பி, அவருடைய கோரிக்கைகளுக்குக் கீழ்ப்படிந்தால், அவன் அவருடைய தயவை அனுபவிப்பான். மாறாக, அவிசுவாசத்திலும் மீறுதலிலும் நிலைப்பானேயாகில் குற்றப்படுத்த அவனுக்கு எந்த ஒரு இடமும் இருக்காது. ஏனெனில் அவன் ஆண்டவரால் நிராகரிக்கப்பட்டிருந்தான். PPTam 66.2

ஆனால் தனது தவறை ஒப்புக்கொள்ளுவதற்குப் பதிலாக, தேவன் அநீதி செய்ததாகக் குற்றப்படுத்துவதிலும் ஆபேலின் மேல் பொறாமையையும் வெறுப்பையும் போற்றுவதிலும் காயீன் தொடர்ந் தான். அவன் கோபமாக தன் சகோதரனை நிந்தித்தான். தேவன் அவர்களிடம் நடந்து கொண்டதைக் குறித்த விவாதத்திற்கு அவனை இழுக்க முயற்சித்தான். சாந்தத்தோடு, என்றாலும் பயமின்றியும் உறுதியாயும் தேவனுடைய நீதிக்கும் நற்குணத்திற்கும் ஆபேல் ஆதரவு கொடுத்தான். காயீனுடைய தவறை சுட்டிக்காட்டி, தவறு அவனிடமிருக்கிறதை அவனுக்கு உணர்த்த முயற்சித்தான். தங்களுடைய பெற்றோரை உடனடி மரணத்தைக் கொடுத்து தன் டித்திருக்கலாம் என்கிறபோது, அப்படியல்லாது அவர்களுடைய ஜீவனை தப்பிக்கவைத்த தேவனுடைய மன உருக்கத்தை அவன் சுட்டிக்காட்டி, தேவன் அவர்களை நேசிப்பதாகவும், இல்லாதிருந் தால் தம்முடைய குற்றமற்ற பரிசுத்த குமாரனை தாங்கள் சம்பாதித்த தண்டனையை சகிக்கும்படி கொடுத்திருக்கமாட்டார் என்றும் வலியுறுத்தினான். இவையெல்லாம் காயீனுடைய கோபத்தைக் கொந்தளிக்கச் செய்தது. PPTam 67.1

அறிவும் மனமும் ஆபேல் செல்லுவது சரி என்று அவனிடம் சொல்லியது. ஆனால் வழக்கமாக அவனுடைய ஆலோசனையை கேட்கிறவன் இப்போது அவனோடு ஒத்துப்போகாமல் இருப்ப தாலும், அவனுடைய கலகத்தில் பரிதாபத்தை சம்பாதிக்க முடியா மல் போனதாலும் அவன் வெகுண்டான், தன் உணர்ச்சியின் சீற்றத்தில் அவன் தன் சகோதரனைக் கொன்றான். PPTam 67.2

ஆபேல் செய்த எந்த தவறினிமித்தமும் காயீன் தன் சகோத ரனை வெறுத்து கொலை செய்யவில்லை. மாறாக, தன் கிரியைகள் பொல்லாதவைகளும், தன் சகோதரனுடைய கிரியைகள் நீதி யுள்ளவைகளுமாயிருந்ததினிமித்தந்தான் (1 யோவான் 3:12) கொலை செய்தான். இவ்வாறாக, எல்லா காலத்திலும் துன்மார்க்கர் தங்களைக்காட்டிலும் மேன்மையாக இருந்தவர்களைப் பகைத்திருக் கிறார்கள். ஆபேலுடைய கீழ்ப்படிதலும் அசையாத விசுவாச வாழ்க்கையும் காயீனுக்கு நிலையான கண்டனமாக இருந்தது. பொல்லாங்கு செய்கிற எவனும் ஒளியைப் பகைக்கிறான், தன் கிரி யைகள் கண்டிக்கப்படாதபடிக்கு, ஒளியினிடத்தில் வராதிருக் கிறான் யோவான் 3:20. தேவனுடைய ஊழியக்காரருடைய குணத் திலிருந்து எவ்வளவு பிரகாசமாக பரலோக வெளிச்சம் பிரதிபலிக்கப்படுகிறதோ, அவ்வளவு தெளிவாக, தேவபக்தியற்றோ ரின் பாவங்கள் வெளிப்படுகிறது. தங்களுடைய சமாதானத்தை பாதிக்கிறவர்களை அழிக்க அவர்கள் எடுக்கும் முயற்சிகளும் அவ்வளவு அதிக தீர்மானமானவைகளாக இருக்கும். PPTam 67.3

சர்ப்பத்துக்கும் ஸ்திரியின் வித்துக்குமிடையே - சாத்தானுக்கும் அவனுக்குக் கீழ்ப்பட்டவர்களுக்கும், கிறிஸ்துவுக்கும் அவரது பின்னடியார்களுக்குமிடையே இருக்கும் என்று தேவன் அறிவித்த பகையின் முதல் உதாரணமாக, ஆபேலின் மரணம் இருந்தது. மனிதனுடைய பாவத்தினால் சாத்தான் மனித இனத்தின் மேல் கட்டுப்பாட்டைப் பெற்றான். ஆனால் அந்த நுகத்தை வீசியெறிய கிறிஸ்து அவர்களைத் தகுதிப்படுத்துவார். தேவ ஆட்டுக்குட்டியின் மேலிருக்கும் விசுவாசத்தினால் ஒரு ஆத்துமா பாவத்துக்கு ஊழியஞ்செய்வதை விட்டுவிடுகிறபோதெல்லாம் சாத்தானுடைய கோபம் தூண்டப்படுகிறது. தேவனுடைய பிரமாணத்தை மனி தனால் கைக்கொள்ள முடியாது என்ற சாத்தானுடைய வாதத்திற்கு எதிராக ஆபேலின் பரிசுத்த வாழ்க்கை சாட்சி பகர்ந்தது. காயீன் பொல்லாங்கனுடைய ஆவியால் அசைக்கப்பட்டபோதுதான் ஆபேலை கட்டுப்படுத்த முடியாது என்று கண்டு வெகுண்டு, அவ னுடைய உயிரை அழித்தான். தேவனுடைய பிரமாணத்தின் நீதியை மெய்ப்பித்துக் காட்ட யார் நின்றாலும், அப்போதெல்லாம் அவர் களுக்கு எதிராக அதே ஆவி வெளிக்காட்டப்படும். காலங்கள் நெடுகிலும் சீஷர்களுக்கு விறகு அடுக்கிகாயீனும் ஆபேலும் சோதிக் கப்படுதல் ! PPTam 68.1

நெருப்பூட்டின ஆவி அது. ஆனால் இயேசுவின் பின்னடியார்கள் மேல் குவித்த கொடுமைகளோ, தங்களுடைய கட்டுப்பாட்டிற்கு அர்ப்பணிக்க அவர்களை கட்டாயப்படுத்த முடியாததால், சாத் தானாலும் அவனுடைய சேனையாலும் தூண்டப்பட்டவை, இது வெற்றி கொள்ளப்பட்ட சத்துருவின் உக்கிரம். இயேசுவுக்காக மரித்த இரத்த சாட்சிகள் ஒவ்வொருவரும் வெற்றி கொண்டவர்களாக மரித்தனர். மரணம் நேரிடுகிறதாயிருந்தாலும் அதற்குத் தப்பும்படி தங்கள் ஜீவனையும் பாராமல், ஆட்டுக்குட்டியின் இரத் தத்தினாலும் தங்கள் சாட்சியின் வசனத்தினாலும் அவனை (பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பை ) ஜெயித்தார்கள் (வெளி. 12:119) என்று தீர்க்கதரிசி சொல்லுகிறான். PPTam 68.2

கொலைகாரனான காயீன் அவனுடைய குற்றத்திற்காக பதில் கொடுக்க விரைவாக அழைக்கப்பட்டான். கர்த்தர் காயீனை நோக்கி : உன் சகோதரனாகிய ஆபேல் எங்கே என்றார், அதற்கு அவன்: நான் அறியேன், என் சகோதரனுக்கு நான் காவலாளியோ என்றான். காயீன் பாவத்தில் அதிக தூரம் சென்றிருந்ததால், நிலையாக இருக்கிற தேவனுடைய சமுகத்தையும் அவருடைய மேன்மையையும் ஞானத்தையும் குறித்த உணர்வை இழந்திருந்தான். எனவே தனது குற்றத்தை மறைக்க பொய்யை நாடினான். PPTam 68.3

மீண்டும் ஆண்டவர் காயீனிடம் : என்ன செய்தாய்? உன் சகோ தரனுடைய இரத்தத்தின் சத்தம் பூமியிலிருந்து என்னை நோக்கிக் கூப்பிடுகிறது என்றார். தனது குற்றத்தை அறிக்கையிட தேவ காயீனுக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுத்தார். அதை உணர்ந்து பார்க்க அவனுக்கு நேரம் இருந்தது. அவன் செய்த செய்கையின் பெருங் கொடுமையையும் அதை மறைக்க அவன் சொன்ன பொய்யையும் அவன் அறிந்திருந்தான். என்றாலும் இன்னமும் அவன் கலகக்கார னாயிருந்தான். தீர்ப்பு அதிக நேரம் தள்ளிவைக்கப்படவில்லை. மன்றாட்டோடும் அறிவுரைகளோடும் கேட்கப்பட்டிருந்த தெய்வீக குரல் . இப்பொழுது உன் சகோதரனுடைய இரத்தத்தை உன் கையிலே வாங்கிக்கொள்ள தன் வாயைத் திறந்த இந்தப் பூமியில் நீ சபிக்கப்பட்டிருப்பாய். நீ நிலத்தைப் பயிரிடும் போது, அது தன் பலனை இனி உனக்குக் கொடாது; நீ பூமியில் நிலையற்று அலை கிறவனாயிருப்பாய் என்கிற பயங்கரமான வார்த்தைகளைப் பேசியது. PPTam 69.1

காயீன் தனது குற்றத்தினால் மரண தீர்ப்பைச் சம்பாதித்திருந்த போதும் இரக்கமுள்ள சிருஷ்டிகர் அவனுடைய உயிரை தப்ப விட்டு, மனந்திரும்புவதற்கான சந்தர்ப்பத்தை அவனுக்கு வழங்கி னார். ஆனால் காயீன் தனது இருதயத்தைக் கடினப்படுத்தவும், தெய்வீக அதிகாரத்திற்கு எதிராகக் கலகத்தைத் தூண்டி விடவும், தைரியமான கைவிடப்பட்ட பாவிகளின் தலைவனாயிருக்கவுமே வாழ்ந்தான். இந்த ஒரு துரோகி சாத்தானால் நடத்தப்பட்டு, மற்றவர்களை சோதிக்கிறவன் ஆனான். பூமி மிகவும் கெட்டுப்போய் அதன் அழிவை அழைக்கும் அளவு கொடுமையினால் நிரம்பும் வரை அவனுடைய உதாரணமும் செல்வாக்கும் ஒழுக்கத்தைக் கெடுக்கும் தங்களுடைய வல்லமையை செலுத்தியது. PPTam 69.2

முதல் கொலைகாரனுடைய உயிரைத்தப்பவிட்டதில் மாபெரும் போராட்டத்தைக் குறித்த ஒரு பாடத்தை பிரபஞ்சத்தின் முன் தேவன் வழங்கினார். தேவனுக்கு எதிரான கலகத்தைச் செய்ய பாவியை எந்நாளும் பிழைக்க அனுமதித்தால் அதன் விளைவு எப்படியாக இருக்கும் என்பதற்கு காயீன் மற்றும் அவனுடைய சந்ததியினரின் இருண்ட சரித்திரம் ஒரு விளக்கமாக இருந்தது. தேவனுடைய பொறுமை துன்மார்க்கனை தனது அக்கிரமத்தில் அதிக தைரியமுள்ளவனாகவும் இணக்கமற்றவனுமாகவே ஆக்கு கிறது. காயீன் மேல் அந்தத் தீர்ப்பு சொல்லப்பட்டு, பதினைந்து நூற்றாண்டுகள் கடந்த பிறகு, அவனுடைய உதாரணம் மற்றும் செல் வாக்கின் கனிகளை குற்றத்திலும் பூமியை மூழ்கடித்த கோட்டிலும் பிரபஞ்சம் சாட்சியாகக் கண்டது. தேவனுடைய பிரமாணத்தை மீறியதால் விழுந்து போன இனத்தின்மேல் அறிவிக்கப்பட்ட மர ணத்தீர்ப்பு, நீதியும் இரக்கமுமானது என்பது வெளியாக்கப்பட்டது. மனிதன் பாவத்தில் அதிக காலம் ஜீவித்து அகிக் கட்டுப்பாடற்றவன் ஆனான். கட்டுப்படாத அக்கிரம் செய்கையை குறுக்கி, கலகத்தில் கடினப்பட்டுப்போனவர்களின் தாக்கத்திலிருந்து உலகத்தை விடுவித்த தெய்வீகத்தீர்ப்பு சாபத்தைவிடவும் ஆசீர்வாதமாக இருந்தது. PPTam 69.3

தேவனுடைய ஆட்சியின் குணத்தைத் தவறாக காண்பிக்கும்படி ஆயிரக்கணக்கான மாறுவேடங்களில் சாத்தான் தீவிரமாக, ஆற்ற லோடு நிலையாக வேலை செய்து கொண்டிருக்கிறான். விரிவாக் கப்பட்ட முறையாக அமைக்கப்பட்ட திட்டங்களுடனும், அற்புத மான வல்லமையுடனும் உலக மக்களை தனது வஞ்சகத்தின்கீழ் வைத்திருக்க அவன் உழைக்கிறான். சர்வஞானமும் நித்தியமுமான தேவன், துவக்கத்திலிருந்து முடிவை பார்க்கிறார். தீமையை கையாண்டதில் அவருடைய திட்டங்கள் தொலைநோக்கு கொண்ட தும், விசாலமுமானதாயிருந்தன. கலகத்தை அடக்குவது மாத்திரம் அல்ல, கலகத்தின் இயல்பை பிரபஞ்சம் முழுவதற்கும் விளக்கிக் காட்டுவது அவருடைய நோக்கமாயிருந்தது. அவருடைய நியாயத் தையும் இரக்கத்தையும் காண்பித்து, தீமையைக் கையாள்வதில் அவருடைய ஞானத்தையும் நீதியையும் தேவனுடைய திட்டம் வெளிப்படுத்திக்கொண்டிருந்தது. PPTam 70.1

பூமியின் மேல் நடைபெறும் சம்பவங்களை மற்ற உலகத்தின் பரிசுத்தவாசிகள் ஆழமான ஆர்வத்தோடு கவனித்துக்கொண்டிருந்தனர். கிறிஸ்துவின் அதிகாரத்தை நிராகரித்து, தேவனுடைய பிரமாணங்களை புறம்பாக்கி, பரலோகத்தில் சாத்தான் ஸ்தாபிக்க முயற்சித்த நிர்வாகத்தின் விளைவுகளை ஜலப்பிரளயத்துக்கு முன்பு பூமியில் இருந்த நிலைமைகளில் விளக்கப்படுவதை அவர்கள் கண்டார்கள். ஜலப்பிரளயத்திற்கு முன்பு வாழ்ந்த மிக ஓங்கின பாவிகளில் சாத்தான் யார்மேல் ஆட்சி செய்தானோ, அப்பிரஜைகளை கண்டார்கள். மனிதனுடைய இருதயத்து நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததாயிருந்தது (ஆதி 65). ஒவ்வொரு உணர்வும், ஒவ்வொரு துடிப்பும் நினைவும் தெய்வீக கொள்கைகளான தூய்மை, சமாதானம் மற்றும் அன்போடு போரிட்டது. சாத்தானுடைய கொள்கையான தேவனுடைய சிருஷ்டிகளிலிருந்து அவருடைய பரிசுத்த சட்டங்களின் கட்டுப் பாட்டை நீக்குவதினால் விளையும் பயங்கரமான சீரழிவிற்கு அது உதாரணமாக இருந்தது. PPTam 70.2

சாத்தானாலும் அவனால் வஞ்சிக்கப்பட்டிருக்கிற அனை வராலும் பொய்யாக்கப்பட்ட தேவனுடைய அரசாங்கச் சட்டங்களின் கொள்கைகளை மாபெரும் போராட்டத்தில் திறக்கப்பட்ட உண்மைகளின் வழியாக தேவன் விளக்கிக் காண்பிப்பார். கலகக் காரனை காப்பாற்றக்கூடாதபடி மிகத் தாமதமாக ஒப்புக்கொள்ளப் பட்டாலும், முழு உலகத்தாலும் அவருடைய நியாயம் ஒப்புக்கொள் ளப்படும். படிப்படியாக முழுமையான நிறைவேறுதலை நோக்கி அவருடைய மாபெரும் திட்டம் முன்னேறும் போது, தேவன் பிர பஞ்சத்தின் அனுதாபத்தையும் ஒப்புதலையும் தம்மோடு கொண்டு செல்கிறார். கலகத்தை கடைசியாக அழிக்கும்போதும் தேவன் அதை தம்மோடு கொண்டு செல்வார். தெய்வீக கட்டளைகளை விட்டுவிட்ட அனைவரும் கிறிஸ்துவிற்கு எதிராக தங்களை சாத் தானின் பக்கம் வைத்திருந்தது காணப்படும். இந்த உலகத்தின் அதி பதி நியாயந்தீர்க்கப்பட்டு, அவனோடு இணைந்திருந்த அனை வரும் அவனுடைய முடிவைப் பகிர்ந்து கொள்ளும் போது, பிரபஞ்சம் முழுவதும் அந்தத் தீர்ப்புக்குச் சாட்சியாக பரிசுத்தவான் களின் ராஜாவே, தேவரீருடைய வழிகள் நீதியும் சத்தியமுமானவைகள் (வெளி 15:3) என்று அறிவிக்கும். PPTam 71.1