Go to full page →

67 - பில்லி சூனியம் அன்றும் இன்றும் PPTam 896

எந்தோரிலிருந்த பெண்ணை சவுல் சந்தித்ததைக் குறித்த வேதாகம சரித்திரம், வேதமாணாக்கரில் அநேகருக்கு குழப்பத்தை உண்டு பண்ணக்கூடியதாக இருக்கிறது. சவுலுடனான நேர்முகத்தில் சாமுவேல் இருந்தான் என்று சொல்லுகிறவர்கள் சிலர். ஆனாலும் அதற்கு எதிர்மாறான முடிவிற்கு வேதாகமம் தானே போதுமான ஆதாரங்களைக் கொடுக்கிறது. சிலரால் கோரப்படுவதைப் போல சாமுவேல் பரலோகத்தில் இருப்பானானால், ஒன்று தேவனுடைய வல்லமையினால் அல்லது சாத்தானுடைய வல்லமையினால் அவன் அழைக்கப்பட்டிருக்க வேண்டும். தேவனுடைய பரிசுத்த தீர்க்கதரிசியை, தள்ளப்பட்ட ஸ்திரீயின் மந்திரத்தை கனப்படுத்தும்படி பரலோகத்திலிருந்து அழைக்க சாத்தானுக்கு வல்லமை இருக்கிறது என்று எவரும் ஒரு நொடி கூட நம்ப முடியாது. ஒரு சூனியக்காரியின் குகைக்கு வரும்படியாக தேவன் அழைத்திருப்பார் என்றும் நாம் முடிவிற்கு வரக்கூடாது. ஏனெனில் கர்த்தர் அவனுக்குச் சொப்பனங்களினாலாவது, ஊரீமினாலாவது, தீர்க்கதரிசிகளினாலாவது மறு உத்தரவு அருள்வில்லை (1 சாமு. 28). இவைகள் தான் மனிதனோடு தொடர்பு கொள்ள ஆண்டவர் நியமித்த ஊடகங்கள். சாத்தானுடைய முகவன் வழியாக செய்தியைக் கொடுக்க அவர் இவைகளைத் தாண்டவில்லை. PPTam 896.1

அந்த செய்திதானும் அது எங்கேயிருந்து வந்தது என்பதற்குப் போதுமான சான்றாக இருக்கிறது. அது சவுலைமனந்திரும்புவதற்கு நடத்தும் நோக்கத்தில் அல்ல, மாறாக அழிவிற்கு நெருக்குவதாக இருந்தது. இது தேவனுடைய கிரியை அல்ல, சாத்தானுடையது. மேலும் சூனியக்காரரோடு ஆலோசிக்கும் சவுலின் செய்கை அவன் ஏன் தேவனால் நிராகரிக்கப்பட்டு அழிவிற்கு விட்டு விடப்பட்டான் என்கிற காரணங்களில் ஒன்று என்று வேதவாக்கியத்தில் குறிப்பிடப் பட்டிருக்கிறது. அப்படியே சவுல் கர்த்தருடைய வார்த்தையைக் கைக்கொள்ளாமல், கர்த்தருக்குச் செய்ததன் துரோகத்தினிமித்தமும், அவன் கர்த்தரைத் தேடாமல் அஞ்சனம் பார்க்கிறவர்களைக் கேட்கும் படிக்குத் தேடினதினிமித்தமும் செத்துப்போனான். அதற்காக அவர் அவனைக் கொன்று, ராஜ்யபாரத்தை ஈசாயின் குமாரனாகிய தாவீது வசமாகத் திருப்பினார் (1 நாளா. 10:13,14) இங்கே சவுல் ஆண்டவரிடத்திலல்ல, அஞ்சன ஆவியிடம் விச் பாரித்தான் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. அவன் தேவனுடைய தீர்க்கதரிசியான சாமுவேலிடம் பேசவில்லை. மாறாக, சூனியக்காரியின் வழியாக சாத்தானோடு உரையாடினான். சாத்தானால் உண்மையான சாமுவேலைக் கொண்டுவர முடியாது. ஆனாலும் தன்னுடைய வஞ்சக நோக்கத்திற்கு உதவ ஒரு போலியைக் கொண்டுவந்தான். PPTam 897.1

முற்கால மந்திரம் மற்றும் பில்லி சூனியத்தின் அனைத்து முறைகளும் மரித்தவரோடு தொடர்பு கொள்ளும் நம்பிக்கையின் அடிப்படையிலேயே இருந்தன . மரித்தவர்களோடு தொடர்பு கொள்ளும் திறமையை கையாண்டவர்கள், இவ்வுலகத்தை விட்டுச்சென்றவர்களின் ஆவிகளோடு தொடர்பு கொள்ளுவதாகவும், அவர்கள் காகவும், அவர்கள் வழியாக எதிர்கால சம்பவங்களைக் குறித்த அறிவை பெற்றுக்கொள்ளுவதாகவும் உரிமை பாராட்டியிருந்தனர். மரித்தவரோடு ஆலோசிக்கும் இந்த வழக்கம் ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகத்தில் அவர்கள் உங்களை நோக்கி, அஞ்சனம் பார்க்கிறவர்களிடத்திலும், முணுமுணென்று ஓதுகிற குறிகாரரிடத்திலும் விசாரியுங்கள் என்று சொல்லும் போது, ஜனங்கள் தன் தேவனிடத்தில் விசாரிக்க வேண்டியதல்லவோ? உயிருள்ளவர்களுக்காகச் செத்தவர்களிடத்தில் விசாரிக்கலாமோ? (ஏசா. 8:19) என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. PPTam 897.2

மரித்தவர்களோடு தொடர்பு கொள்ளும் இந்த நம்பிக்கையே அஞ்ஞான விக்கிரகாராதனையின் மூலைக்கல்லை உண்டாக்கியிருக்கிறது. புறஜாதிகளின் தேவர்கள் மரித்துப்போன நாயகர்களின் தெய்வீகமான ஆவிகள் என்று அஞ்ஞான மார்க் கத்தில் நம்பப்படுகிறது. இவ்விதம் அஞ்ஞானிகளின் மதம் மரித்து போனவர்களைத் தொழும் தொழுகையாகவே இருந்தது. இதை வேதவாக்கியங்களிலிருந்து காணலாம். பெத்பேயோரில் இஸ்ரவேலின் பாவத்தைக்குறித்த சம்பவத்தில் இஸ்ரவேல் சித்திமிலே தங்கியிருக்கையில், ஜனங்கள் மோவாபின் குமாரத்தி களோடே வேசித்தனம் பண்ணத் தொடங்கினார்கள். அவர்கள் தங்கள் தேவர்களுக்கு இட்ட பலிகளை விருந்துண்ணும் படி ஜனங்களை அழைத்தார்கள், ஜனங்கள் போய்ப் புசித்து, அவர்கள் தேவர்களைப் பணிந்து கொண்டார்கள். இப்படி இஸ்ரவேலர் பாகால் பேயோரைப்பற்றிக்கொண்டார்கள்; அதனால் இஸ்ரவேலர் மேல் கர்த்தருடைய கோபம் மூண்டது (எண். 25:1-3) என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. PPTam 897.3

சங்கீதக்காரன், எப்படிப்பட்ட தேவர்களுக்கு இந்த பலிகள் செலுத்தப்பட்டன என்பதை, இஸ்ரவேலர்களின் இதே மருள்விழு கையைக் குறித்துப் பேசும்போது: அவர்கள் பாகால் பேயோரைப் பற்றிக்கொண்டு, ஜீவனில்லாதவைகளுக்கு இட்ட பலிகளைப் புசித்து (சங். 106:28) என்று கூறுகிறான். அதாவது மரித்தவர்களுக்குச் செலுத்தப்பட்ட பலிகள் என்கிறான். PPTam 898.1

மரித்தவர்களோடு தொடர்பு கொள்ளுவதைப் போலவே மரித்தவர்களை தெய்வமாக்குவதும் ஏறக்குறை ஒவ்வொரு புறஜாதி மார்க்கத்திலும் முக்கியமான இடத்தை வகித்திருக்கிறது. இந்த தெய்வங்கள் தங்களுடைய சித்தத்தை மனிதனுக்குச் சொல்லுவதாகவும், அவைகளோடு ஆலோசிக்கும் போது ஆலோசனை கூறுவதாகவும் நம்பப்படுகிறது. பிரபலமான கிரேக்க மற்றும் ரோம அசரீரிகள் இப்படிப்பட்டவைகளே. PPTam 898.2

கிறிஸ்தவ தேசங்களாக அழைக்கப்படும் இடங்களிலுங்கூட மரித்தவர்களோடு தொடர்பு கொள்ளும் நம்பிக்கை இன்னமும் இருக்கிறது. பிரிந்து சென்ற ஆவிகள் என்பவைகளோடு தொடர்பு கொள்ளும் வழக்கம் ஆவி மார்க்கம் என்ற பெயரில் எங்கும் பரவியிருக்கிறது. அது தங்களுக்கு அன்பானவர்களை கல்லறையில் வைத்தவர்களின் அனுதாப உணர்வுகளை சாதகமாக வைத்து கட்டப்பட்டிருக்கிறது. ஆவிகள் சில வேளைகளில் மரித்துப்போன நண்பர்களின் உருவத்தில் மனிதர்களுக்குத் தோன்றி, அவர்களுடைய வாழ்க்கையோடு தொடர்புடைய சம்பவங்களைக் குறிப்பிட்டு, உயிரோடு இருக்கும் போது அவர்கள் செய்த செய்கைகளைச் செய்கின்றன இவ்விதமாக மரித்த தங்களுடைய நண்பர்கள் தூதர்களாக இருந்து தங்கள் மேல் அசை வாடி தங்களோடு தொடர்பு கொள்ளுவதாக நம்ப மனிதரை நடத்துகிறார்கள். இறந்தவர்களின் ஆவிகளென்று நம்பப்படுகிறவைகள் ஒருவகையான வணக்கத்திற்குரியவர்களாக க் கருதப்படுகிறார்கள். அநேகரிடம் தேவனுடைய வார்த்தையைக் காட்டிலும் அவர்களின் வார்த்தைகள் மதிப்புள்ளதாயிருக்கின்றன. PPTam 898.3

எனினும் சிலர் ஆவி மார்க்கத்தை வெறும் வஞ்சகமாக கருதுகிறார்கள். அதனுடைய உரிமைகளைத் தாங்குகிற வெளிப்பாடுகளான இயற்கைக்கப்பாற்பட்ட குணத்தை ஊடகத்தினுடைய ஏமாற்று வேலை என்று சொல்லுகிறார்கள். பல வேளைகளில் தந்திரங்களின் விளைவே மெய்யான வெளிப்பாடுகளாக காண்பிக்கப்படுவது உண்மையாக இருப்பினும், குறிப்பிட்ட இயற்கைக்கு அப்பாற்பட்ட வல்லமைகளின் சான்றுகளும் இருந்திருக்கின்றன. ஆவி மார்க்கத்தை மனிதனுடைய திறமைகள் அல்லது தந்திரமுள்ள திட்டங்களின் விளைவே என்று நிராகரிக்கிறவர்கள், தாங்கள் காரணங்கற்பிக்கக்கூடாத வெளிப்பாடுகளைச் சந்திக்கும் போது அவைகளை விளக்கக்கூடாமற்போவதினால், அதன் உரிமைகளை ஒப்புக்கொள்ள நடத்தப்படுகிறார்கள். PPTam 899.1

மரித்தவர்களோடு தொடர்பு கொள்ளுவதை தங்களுடைய முக்கிய கொள்கையாக வைத்திருக்கிற முற்கால பில்லி சூனியம் மற்றும் விக்கிரகாராதனையின் முறைகளும் நாகரீக ஆவி மார்க்கமும், ஏதேன் தோட்டத்தில், நீங்கள் சாகவே சாவதில்லை, நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே ...... தேவர்களைப்போல் இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார் (ஆதி. 3:4, 5) என்று கூறி ஏவாளை மயக்கின் சாத்தானுடைய முதல் பொய்யின் அடித்தளத்திலேயே இருக்கின்றன. பொய்யின் மேல் தளமிட்டு, அதையே நிரந்தரமாக நிலைக்கச் செய்கிற இவைகள் இரண்டும் ஒரேவிதமாக பொய்யின் பிதாவினிடமிருந்து வருகின்றன. PPTam 899.2

மரித்தவர்களோடு தொடர்பு கொள்ளும் எந்த விதத்திலும் ஈடுபட்ட எபிரெயர்கள் தெளிவாகத் தடை செய்யப்பட்டிருந்தனர். .... மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்; ..... சூரியனுக்குக் கீழே செய்யப்படுகிற தொன்றிலும் அவர்களுக்கு இனி என்றைக்கும் பங்கில்லை (பிர. 95.) ெஎன்று சொன்ன போது தேவன் முடிவாக இந்தக் கதவை அடைத்திருந்தார். அவனுடைய ஆவி பிரியும், அவன் தன் மண்ணுக்குத் திரும்புவான், அந்நாளிலே அவன் யோசனைகள் அழிந்துபோம் - சங்.146:4. ஆண்டவர் இஸ்ரவேலிடம்: அஞ்சனம் பார்க்கிறவர்களையும் குறிசொல்லுகிறவர்களையும் பின் தொடர்ந்து சோரம் போக எந்த ஆத்துமா அவர்களை நாடுகிறானோ, அந்த ஆத்துமாவுக்கு விரோதமாக எதிர்த்து நின்று, அவனைத் தன் ஜனத்தில் இராதபடிக்கு அறுப்புண்டுபோகப் பண்ணுவேன் (லேவி. 20:6) என்று அறிவித்திருந்தார். PPTam 899.3

இந்த அஞ்சன ஆவி மரித்தவர்களின் ஆவிகளல்ல, மாறாக சாத்தானின் தூதுவர்களான தீய தூதர்கள். நாம் பார்த்ததைப்போல மரித்தவர்களை தொழுவதையும் மரித்தவர்களோடு தொடர்பு கொள்ளும் நடிப்பை உள்ளடக்கியுமிருந்த முற்கால விக்கிரகாராதனை பேய்களின் வழிபாடு என்று வேதாகமத்தால் அறிவிக்கப்படுகிறது. அப்போஸ்தலனாகிய பவுல் அஞ்ஞான அயலகத்தாரின் எந்தவிதமான விக்கிரகாராதனையிலும் பங்கெடுப்பதற்கு எதிராக தன் சகோதரர்களை எச்சரிக்கும் போது, அஞ்ஞானிகள் பலியிடுகிறவைகளை தேவனுக்கு அல்ல, பேய்களுக்கே பலியிடுகிறார்களென்று சொல்லுகிறேன், நீங்கள் பேய்களோடே ஐக்கியமாயிருக்க எனக்கு மனதில்லை (1 கொரி. 10:20) என்று கூறுகிறான். சங்கீதக்காரன் இஸ்ரவேலைக்குறித்துப் பேசும் போது, அவர்கள் தங்கள் குமாரரையும் தங்கள் குமாரத்திகளையும் பிசாசுகளுக்குப் பலியிட்டார்கள் என்று கூறி, அடுத்த வசனத்தில் அவர்கள் அவைகளை கானான் தேசத்து விக்கிரகங்களுக்குப் பலியிட்டு (சங். 10637, 38) என்று விவரிக்கிறான். மரித்த மனிதர்களை தொழுது கொள்ளுவதாக நினைப்பதில் பேய்களையே அவர்கள் தொழுது கொள்ளு கிறார்கள். PPTam 900.1

அதே அஸ்திபாரத்தின் மேல் தங்கியிருக்கிற தற்கால ஆவி மார்க்கம், முற்காலத்தில் தேவன் கடிந்து கொண்டு தடை செய்திருந்த பில்லி சூனியம் மற்றும் பிசாசு வணக்கத்தின் புதிய மறுமலர்ச்சியே . பிற்காலங்களிலே மனச்சாட்சியில் சூடுண்ட பொய்யருடைய மாயத்தினாலே சிலர் வஞ்சிக்கிற ஆவிகளுக்கும் பிசாசுகளின் உபதேசங்களுக்கும் செவிகொடுத்து (1 தீமோ. 4:1) என்று அறிவிக்கிற வேதவாக்கியத்தில் அது முன் சொல்லப்பட்டிருக்கிறது. தெசலோனிக்கேயருக்கு எழுதின் இரண்டாம் நிருபத்தில் கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்குச் சற்று முன்பாக நடக்கும் ஆவி மார்க்கத்தில் சாத்தானுடைய விசேஷ கிரியையை அவன் சுட்டிக்காட்டுகிறான். கிறிஸ்துவின் இரண்டாம் வருகையைக் குறித்துப் பேசும்போது : சாத்தானுடைய செயலின்படி சகல வல்லமையோடும் அடையாளங்களோடும் பொய்யான அற்புதங்களோடும் (2 தெச. 29) என்று அறிவிக்கிறான். கடைசி நாட்களில் சபை சந்திக்கப்போகிற ஆபத்துகளை விவரிக்கும் பேதுரு, இஸ்ரவேலை பாவத்திற்குள் நடத்தின் பொய் தீர்க்கதரிசிகள் இருந்ததைப்போலவே பொய்ப் போதகர்கள் இருப்பார்கள் என்று கூறுகிறான். அவர்கள் கேட்டுக்கேதுவான வேதப்புரட்டுகளைத் தந்திரமாய் நுழையப்பண்ணி, தங்களைக் கிரயத்துக்குக் கொண்ட ஆண்டவரை மறுதலித்து, அவர்களுடைய கெட்ட நடக்கைகளை அநேகர் பின்பற்றுவார்கள். 2பேதுரு 2:12. அப் போஸ்தலன் இங்கே ஆவி மார்க்க போதகர்களின் குணங்களுள் குறிப்பிடத்தக்க ஒன்றை சுட்டிக்காட்டுகிறான். அவர்கள் கிறிஸ் துவை தேவகுமாரனாக ஒப்புக்கொள்ளுவதை மறுக்கிறார்கள். அப்படிப்பட்ட ஆசிரியர்களைக்குறித்து அன்பான யோவான்: இயேசுவைக் கிறிஸ்து அல்ல என்று மறுதலிக்கிறவனேயல்லாமல் வேறே யார் பொய்யன்? பிதாவையும் குமாரனையும் மறுதலிக்கிறவனே அந்திக்கிறிஸ்து. குமாரனை மறுதலிக்கிறவன் பிதாவை யுடையவனல்ல (1 யோவான் 2:22, 23) என்று அறிவிக்கிறான். கிறிஸ்துவை மறுதலிப்பதன் வழியாக ஆவி மார்க்கம் பிதாவையும் குமாரனையும் மறுதலிக்கிறது. வேதா கமம் இதை அந்திகிறிஸ்துவின் வெளிப்பாடாக அறிவிக்கிறது. PPTam 900.2

எந்தோரின் பெண் வழியாக அறிவிக்கப்பட்ட சவுலின் அழிவைக் குறித்த அறிவிப்பினால் இஸ்ரவேல் மக்களைக் கண்ணியில் பிடிக்கசாத்தான் திட்டமிட்டான். பில்லி சூனியக்காரியின் மேல் நம்பிக்கை வைக்க தூண்டப்பட்டு, அவளை ஆலோசிக்க அவர்கள் நடத்தப்படுவார்கள் என்று அவன் நம்பியிருந்தான். இவ்விதம் ஆண்டவரே தங்களுடைய ஆலோசகர் என்பதிலிருந்து திரும்பி, சாத்தானுடைய நடத்துதலின் கீழ் தங்களை வைப்பார்கள். எதிர்காலத்திலிருந்து திரையை அப்புறப்படுத்தி தேவன் மறைத்து வைத்திருப்பவைகளை மனிதனுக்கு வெளிப்படுத்த முடியும் என்று கூறு கிற பாசாங்கான வல்லமையே திரளானவர்களை ஆவி மார்க்கத்தில் கவர்ந்திழுக்கும் கவர்ச்சியாக இருக்கிறது. தேவன் தமது வார்த்தையில் எதிர்காலத்தின் மாபெரும் சம்பவங்களை நாம் அறிந்துகொள்ள அவசியமாக இருக்கிற அனைத்தையும் நம் முன் திறந்துவைத்து, அனைத்து ஆபத்துகளுக்கு நடுவிலும் நம்முடைய பாதங்களுக்கு பாதுகாப்பான வழிநடத்துதலைக் கொடுத்திருக்கிறார். ஆனால் ஆண்டவர் மேல் இருக்கும் மனிதனுடைய நம்பிக்கையை அழிப்பதும், அவர்களுடைய வாழ்க்கையின் நிலையைக் குறித்து அதிருப்தியை ஏற்படுத் துவதும், தேவன் ஞானமாக மனிதனிடமிருந்து மறைத்துவைத் திருக்கிற அறிவைத் தேடி, அவர் தமது பரிசுத்த வார்த்தைகளில் வெளிப்படுத்தியிருக்கிறவைகளை நிந்திக்கவும் நடத்துவதே சாத் தானுடைய நோக்கமாக இருக்கிறது. PPTam 901.1

காரியங்களின் குறிப்பான விளைவுகளை அறிய முடியா தெனில் அநேகர் அமைதியற்றவர்களாகின்றனர். நிச்சயமின் மையை சகிக்கக்கூடாதிருந்து தங்களுடைய பொறுமையின்மையில் தேவனுடைய இரட்சிப்பைக் காண காத்திருக்க மறுக்கின்றனர். அறிந்து கொண்டிருக்கிற தீமைகள் ஏறக்குறைய அவர்களைத் திசைதிருப்புகிறது. கலக உணர்வுகளுக்கு அவர்கள் வழி கொடுத்து, வருத்த உணர்வுகளில் அங்கும் இங்கும் ஓடி, மறைக்கப்பட்டிருக்கிறவைகளைக்குறித்த அறிவைத் தேடுகிறார்கள். அவர்கள் தேவனை மாத்திரம் நம்பியிருந்து ஜெபத்தில் காத்திருப்பார்களானால் தெய்வீக ஆறுதலைக் கண்டடையலாம். தேவனுடன் தொடர்பு கொள்ளுவதினால் அவர்களுடைய ஆவி அமைதிப்படுத்தப்படும். வருத்தப்பட்டு பாரஞ்சுமக்கிறவர்கள் இயேசுவிடம் மாத்திரம் போவர்களானால் தங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதலைக் கண்டடைவார்கள். ஆனால் அவர்களுடைய சௌகரியத்திற்காக தேவன் நியமித்திருக்கிறவழிகளைநெகிழ்ந்து மற்ற ஆதாரங்களைத் தேடும் போது தேவன் மறைத்து வைத்திருக்கிறவைகளை அறிந்து கொள்ளும் நம்பிக்கையில் சவுலின் தவறையே செய்து, தீமையைக் குறித்த அறிவை மாத்திரமே அவர்கள் அடைவார்கள். PPTam 902.1

தேவன் இவ்வித முறைகளினால் மகிழ்ச்சியடைகிறதில்லை. அதை மிகவும் வெளிப்படையான வார்த்தைகளில் விளக்கியிருக்கிறார். PPTam 902.2

எதிர்காலத்திலிருந்து திரையை கிழித்துப்போடத் தீவிரிக்கும் இந்த பொறுமையின்மை, தேவன் மேல் இருக்கும் அவிசுவாசத்தை வெளிப்படுத்தி, தலைமை வஞ்சகனின் ஆலோசனைகளுக்கு ஆத்துமாவை திறந்து வைக்கிறது. அஞ்சன ஆவி வைத்திருக்கிறவர்களை ஆலோசிக்கும்படி சாத்தான் மனிதர்களை நடத்துகிறான். கடந்தகாலத்தின் மறைவான காரியங்களை வெளிப்படுத்துவதினால் வருங்காலங்களின் காரியங்களை முன்னே அறிவிக்கும் தன்னுடைய வல்லமையில் நம்பிக்கை வைக்க அவர்களை ஏவுகிறான். நீண்டயுகங்களாக பெற்றிருக்கும் அனுபவத்தினால் காரணத்திலிருந்து விளைவிற்கு காரணப்படுத்தி, ஒரு குறிப்பிட்ட அளவு துல்லியத்தோடு மனித வாழ்க்கையின் சில எதிர்காலச் சம்பவங்களை அவனால் முன்னறிவிக்க முடியும். இவ்விதம் தவறாக வழிநடத்தப்படும் எளிய ஆத்துமாக்களை வஞ்சித்து, அவர்களை தன்னுடைய வல்லமைக்குள் கொண்டுவந்து தன் சித்தத்திற்கு அடிமைகளாக்க அவன் பெலனடைகிறான். PPTam 902.3

தேவன் தமது தீர்க்கதரிசியின் மூலமாக அவர்கள் உங்களை நோக்கி. அஞ்சனம் பார்க்கிறவர்களிடத்திலும், முணுமுணென்று ஓதுகிற குறிகாரரிடத்திலும் விசாரியுங்கள் என்று சொல்லும் போது, ஜனங்கள் தன் தேவனிடத்தில் விசாரிக்க வேண்டியதல்லவோ? உயிருள்ளவர்களுக்காகச் செத்தவர்களிடத்தில் விசாரிக்கலாமோ? வேதத்தையும் சாட்சி ஆகமத்தையும் கவனிக்கவேண்டும், இந்த வார்த்தையின் படியே சொல்லாவிட்டால், அவர்களுக்கு விடியற்காலத்து வெளிச்சமில்லை (ஏசாயா 3:19, 20) என்ற எச்சரிக்கையை கொடுத்திருக்கிறார். PPTam 903.1

ஞானத்திலும் வல்லமையிலும் முடிவில்லாத பரிசுத்த தெய்வத்தைக் கொண்டிருக்கிறவர்கள், ஆண்டவருடைய சத்துருவோடு உறவு கொள்ளுவதினால் பெறும் அறிவைக் கொண்டிருக்கிற மந்திரவாதியிடம் போகலாமா? தேவனுடைய மக்களுக்கு அவர்தாமே வெளிச்சமாக இருக்கிறார். மனித கண்களுக்கு மறைக்கப்பட்டிருக்கும் மகிமையின் மேல் விசுவாசத்தோடு தங்கள் கண்களைப் பதிக்கும் படி அவர் அவர்களை அழைக்கிறார். நீதியின் சூரியன் பிரகாசமான ஒளிக்கற்றைகளை அவர்கள் இருதயங்களுக்குள் அனுப்புகிறது. பரலோக சிங்காச னத்திலிருந்து அவர்களுக்கு வெளிச்சம் இருக்கிறது. ஒளியின் ஆதாரத்திலிருந்து சாத்தானுடைய தூதுவர்களிடம் திரும்ப அவர்களுக்கு எவ்வித விருப்பமும் இல்லை. PPTam 903.2

சவுலுக்கு வந்த பிசாசின் செய்தி பாவத்தை கண்டித்ததும் தண்டனையைக் குறித்ததுமான தீர்க்கதரிசனமாக இருந்தபோதும் அவனை சீர்படுத்தும்படி கொடுக்கப்படவில்லை. மாறாக, விரக்திக்கும் PPTam 903.3

அழிவிற்கும் தூண்டி நடத்தவே கொடுக்கப்பட்டது. பல வேளைகளில் மனிதர்களை வஞ்சகப் புகழ்ச்சியினால் மிகச் சாதுரியமாக அழிவிற்குக் கவரும் சோதனைக்காரனின் நோக்கத்தையே அது நடப்பிக்கிறது. முற்காலங்களில் பேய் தெய்வங்களின் போதனைகள் மிக இழிவான இச்சைகளை ஊட்டி வளர்த்திருந்தது. பாவத்தைக் கடிந்து கொண்டு நீதியை வலியுறுத்தும் தெய்வீகக் கட்டளைகள் அப்புறம் வைக்கப்பட்டன. சத்தியம் சாதாரணமாக கருதப்பட்டு அசுத்தம் அனுமதிக்கப்பட்டது மாத்திரமல்ல, கட்டளையிடப்பட்டு மிருந்தது. மரணமில்லை, பாவமில்லை, நியாயத்தீர்ப்பு இல்லை, பழிவாங்குதல் இல்லை. மனிதர்கள் விழுந்து போகாத பாதி தெய்வங்கள் என்றும், ஆசைக்கு மேலான சட்டம் இல்லை என்றும், மனிதன் அவனுக்காக மாத்திரம் கணக்கு கொடுக்க வேண்டும் என்றும் ஆவிமார்க்கம் அறவிக்கிறது. சத்தியத்தையும் தூய்மையையும் பயபக்தியையும் காக்கும்படி தேவன் எழுப்பியிருக்கிற தடைகள் தகர்க்கப்பட்டு, அநேகர் பாவத்தில் துணிகரமடைகிறார்கள். இப்படிப்பட்ட போதனை பேய்களின் தொழுகைக்கு இணையான மூலத்தையே கொண்டிருக்கவில்லையா? PPTam 903.4

கானானியரின் அருவருப்புகளில் தீய ஆவிகளோடு தொடர்பு கொண்டிருப்பதன் விளைவுகளை ஆண்டவர் இஸ்ரவேல் முன் வைத்தார். அவர்கள் இயற்கையான பிரியமற்றவர்களாகவும், விக்கிரகாராதனைக் காரராகவும், விபச்சாரக்காராகவும், கொலை பாதகராகவும், கெட்ட ஒவ்வொரு சிந்தையினாலும் கலகங் செய்யும் பழக்கங்களினால் அருவருக்கக்கூடியவர்களா கவும் இருந்தனர். மனிதர்கள் தங்கள் சொந்த இருதயங்களை அறியாதிருக்கிறார்கள். எல்லாவற்றைப் பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது எரே 17:9. ஆனால் மனிதனின் கீழான குணத்தின் இயல்புகளை தேவன் புரிந்திருக் கிறார். கானானியரைப்போலவே இஸ்ரவேல் ஜனங்களையும் தேவனுக்கு அருவருப்பானவர்களாக்க, கலகத்திற்கு சாதகமான நிலைக்கு அவர்களைக் கொண்டுவர இப்போதைப்போலவே அப்போதும் சாத்தான் கவனித்துக்கொண்டிருந்தான். நம்மில் தடை பண்ணப்படாது ஓடும் தீமையின் வாய்க்கால்களைத் திறக்க ஆத்துமாக்களின் சத்துரு எப்பொழுதும் ஜாக்கிரதையாயிருக்கிறான். நாம் அழியவும் தேவன் முன்பு ஆக்கினைக்குட்படுத்தப்படவும் அவன் வாஞ்சையாயிருக்கிறான். PPTam 904.1

கானான் தேசத்தின் மேல் தன் பிடியை வைத்திருக்க சாத்தான் தீர்மானித்திருந்தான். அது இஸ்ரவேலரின் சுதந்திரவீதமாக்கப்பட்டு தேவனுடைய சட்டம் தேசத்தின் சட்டமாக்கப்பட்டபோது, இஸ்ரவேலை கொடியதும் தீமை செய்கிறதுமான வெறுப்பினால் வெறுத்து, அவர்களுடைய அழிவிற்கு திட்டந் தீட்டினான். தீய ஆவிகளின் முகவர்கள் வழியாக அந்நிய தேவர்கள் அறிமுகப் படுத்தப்பட்டனர். மீறுதலினால் தெரிந்துகொள்ளப்பட்ட மக்கள் முடிவாக வாக்குத்தத்த தேசத்திலிருந்து சிதறடிக்கப்பட்டனர். இதே காரியத்தை நம்முடைய நாட்களிலும் திரும்ப நடப்பிக்க சாத்தான் முயற்சிக்கிறான். தமது மக்கள் தமது பிரமாணங்களைக் கைக் கொள்ளும்படி, உலகத்தின் அருவருப்புகளிலிருந்து தேவன் அவர்களை வெளியே நடத்துகிறார். இதனால், சகோதரர் மேல் குற்றஞ்சாட்டுகிறவனின் கோபம் எல்லை மீறியிருக்கிறது. பிசாசானவன் தனக்குக் கொஞ்சக்காலமாத்திரம் உண்டென்று அறிந்து, மிகுந்த கோபங்கொண்டு, உங்களிடத்தில் இறங்கியிருக்கிறான் (வெளி. 1210, 12). நிஜமான வாக்குத்தத்த தேசம் நம் முன்பு இருக்கிறது. சாத்தான் தேவனுடைய மக்களை அழித்து அவர்களை அவர்களுடைய சுதந்திரவீதத்திலிருந்து அறுப்புண்டு போகப்பண்ணத் தீர்மா னித்திருக்கிறான். நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித் திருந்து ஜெபம் பண்ணுங்கள் (மாற்கு 14:38) என்கிற ஆலோசனை இப்போதைப்போல வேறு எப்போதும் தேவைப்பட்டிருக்க வில்லை . PPTam 904.2

அஞ்சனம் பார்க்கிறவர்களை நாடி, குறிசொல்லுகிறவர்களைத் தேடாதிருங்கள்; அவர்களாலே தீட்டுப்படவேண்டாம். இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவன் எவனும் கர்த்தருக்கு அருவருப்பானவன். (லேவி. 1931 ; உபா. 18:12) என்று முற்கால இஸ்ரவேலருக்குக் கொடுக்கப்பட்ட ஆண்டவருடைய வார்த்தை இந்தக் காலத்திலும் அவருடைய பிள்ளைகளுக்குக் கொடுக் கப்படுகிறது. PPTam 905.1