Go to full page →

8 - ஜலப்பிரளயத்திற்கு பிறகு PPTam 105

உயர்ந்த மலைகளுக்கு மேலாக பதினைந்து முழு உயரத்துக்கு தண்ணீர்கள் எழும்பின. பேழை ஐந்து மாதங்கள் காற்று மற்றும் அலைகளால் அலைக்கழிக்கப்பட, பேழைக்குள் இருந்தவர்கள் அழிந்துவிடுவார்கள் என்பது போல பல வேளைகளில் தோன்றி யது. அது ஒரு கடும் சோதனையாக இருந்தது. ஆனால் தெய்வீகக் கரம் கட்டுப்படுத்த மேலே இருக்கிறது என்கிற நிச்சயம் அவனுக்கு இருந்ததால், நோவாவின் விசுவாசம் தடுமாறவில்லை . PPTam 105.1

தண்ணீர்கள் வடியத்துவங்கிய போது, ஆண்டவர் ஒரு கூட்ட மான மலைகளால் காக்கப்பட்ட, தமது வல்லமையினால் பாதுகாக் கப்பட்டிருந்த ஒரு இடத்துக்கு பேழையை செல்லும்படிச் செய்தார். இந்த மலைகள் சற்று தள்ளித்தள்ளி இருந்தன. பேழை இந்த அமை தியான துறைமுகத்தில் நுழைந்தது. அதற்குப்பின் எல்லையற்ற சமுத்திரத்திற்கு அது தள்ளப்படவில்லை. இது, இளைத்துப்போன, புயலால் அலைகழிக்கப்பட்ட பிரயாணிகளுக்கு பெரிய இளைப் பாறுதலைத் தந்தது. PPTam 105.2

மீண்டும் பூமியின் மேல் வர ஏங்கியிருந்தபடியால், நோவாவும் அவனது குடும்பமும் தண்ணீர் வடிவதற்கு விசாரத்தோடு காத்திருந்தனர். மலைகளின் உயரங்கள் தென்பட்டு நாற்பது நாட்கள் கழிந்த பின்பு பூமி காய்ந்துபோயிற்றா என்பதைக் கண்டறிய, விரைவாக முகர்ந்தறியக்கூடிய பறவையான காகத்தை வெளியே அனுப்பி னார்கள். இந்தப் பறவை தண்ணீரைத் தவிர வேறு எதையும் காணா மல் பேழையிலிருந்து போகிறதும் வருகிறதுமாய் தொடர்ந்து பறந்து கொண்டிருந்தது. ஏழு நாட்கள் கழித்து ஒரு புறா அனுப்பப்பட்டது. அந்தப்புறா தன் உள்ளங்கால் வைத்து இளைப்பாற இடம் காணாமல், திரும்பிப் பேழையிலே அவனிடத்தில் வந்தது; நோவா PPTam 105.3

மேலும் ஏழு நாட்கள் காத்திருந்தான். பின்பு மீண்டும் புறாவை அனுப்பினான். அது மாலையிலே ஒரு ஒலிவ இலையை தன் அலகில் கொண்டுவந்ததும், மிகுந்த மகிழ்ச்சி உண்டாயிற்று. பின்னர்: நோவா பேழையின் மேல் தட்டை எடுத்துப்பார்த்தான், பூமியின் மேல் ஜலம் இல்லாதிருந்தது. பின்னும் அவன் பொறு மையாக பேழைக்குள் காத்திருந்தான். அவன் தேவனுடைய கட்டளைப்படி பேழைக்குள் பிரவேசித்ததைப்போல் அதிலிருந்து வெளியேறவும் விசேஷ நடத்துதலுக்காகக் காத்திருந்தான். PPTam 106.1

கடைசியாக ஒரு தூதன் வானத்திலிருந்து இறங்கி மகா பெரிய கதவைத் திறந்து. முற்பிதாவையும் அவன் குடும்பத்தாரையும் பூமியின் மேல் செல்லும்டியும், தங்களோடு ஜீவனுள்ள அனைத் தையும் கொண்டு செல்லும் படியும் அழைத்தான். தங்களுடைய விடுதலையின் மகிழ்ச்சியில் யாருடைய கிருபையுள்ள கவனிப் பினால் தாங்கள் பாதுகாக்கப்பட்டார்களோ, அவரை நோவா மறக்கவில்லை. பேழையை விட்டு வெளியேறியதும் ஒரு பலிபீடத் தைக் கட்டி, அதன்மீது சுத்தமான ஒவ்வொரு மிருகத்திலும் பற வையிலுமிருந்து பலி செலுத்தி, இவ்வாறு தன்னைவிடுவித்ததற்காக தேவனுக்கு நன்றியையும் மாபெரும் தியாக பலியான கிறிஸ்துவின் மேலிருக்கும் விசுவாசத்தையும் வெளிக்காட்டியது, அவனுடைய முதல் வேலையாக இருந்தது. இந்த காணிக்கை தேவனுக்கு பிரிய மானதாக இருந்தது, முற்பிதாவின் மேலும் அவன் குடும்பத்தாரின் மேலும் மாத்திரமல்ல, பூமியின் மேல் வசிக்க வேண்டிய அனைவர் மேலும் ஒரு ஆசீர்வாதத்தைக் கொடுத்தது. சுகந்த வாசனையைக் கர்த்தர் முகர்ந்தார். அப்பொழுது கர்த்தர் : இனி நான் மனுஷன் நிமித்தம் பூமியைச் சபிப்பதில்லை ....... பூமியுள்ள நாளளவும் விதைப்பும் அறுப்பும், சீதளமும் உஷ்ணமும், கோடைகாலமும் மாரி காலமும், பகலும் இரவும் ஒழிவதில்லை என்று தம்முடைய உள்ளத்தில் சொன்னார். பின்வரும் அனைத்து தலைமுறையினருக்கும் இங்கே ஒரு பாடம் இருக்கிறது. நோவா ஒரு பாழடைந்த பூமியின் மேல் வந்திருக்கிறான். என்றாலும் தனக்கு ஒரு வீட்டை ஆயத்தப் படுத்துவதற்கு முன் தேவனுக்கு ஒரு பலிபீடத்தை அவன் கட்டி னான். அவனிடமிருந்த கால்நடைகள் கொஞ்சமாயிருந்து, மா பெரும் செலவில் பாதுகாக்கப்பட்டிருக்கின்றன. என்றாலும், அனைத்தும் அவருடையது என்பதை ஒப்புக்கொள்ளும் வண்ணம் ஆண்டவருக்கு ஒரு பங்கை மகிழ்ச்சியாகக் கொடுத்தான். அதைப்போலவே, நம்முடைய உதாரணமான காணிக்கைகளை தேவனுக்குக் கொடுப்பது, நம்முடைய முதல் கவனமாக இருக்க வேண்டும். நம்மேல் அவர் காண்பிக்கும் அன்பும் தயவும், பக்தியின் செயல்களாலும் அவருடைய வேலைக்குக் கொடுக்கும் ஈவு களாலும் நன்றியோடு ஒப்புக்கொள்ளப்பட வேண்டும். PPTam 106.2

கூடும் மேகங்களும் விழும் மழையும் மற்றொரு வெள்ளத் தைக்குறித்த நிலையான பயத்தில் மனிதனைவைத்து விடாதபடிக்கு, ஒரு வாக்குத்தத்தத்தினால் ஆண்டவர் நோவாவின் குடும்பத்தை உற்சாகப்படுத்தினார். இனி மாம்சமானவைகளெல்லாம் ஜலப்பிரள யத்தினால் சங்கரிக்கப்படுவதில்லையென்று ... உங்களோடே என் உடன்படிக்கையை ஏற்படுத்துகிறேன்... எனக்கும் உங்களுக்கும், உங்களிடத்தில் இருக்கும் சகல ஜீவஜந்துக்களுக்கும், நித்திய தலைமுறைகளுக்கென்று நான் செய்கிற உடன்படிக்கையின் அடை யாளமாக நான் என் வில்லை மேகத்தில் வைத்தேன், அது எனக்கும் பூமிக்கும் உண்டான உடன்படிக்கைக்கு அடையாளமாயிருக்கும். நான் பூமிக்கு மேலாய் மேகத்தை வருவிக்கும் போது, அந்த வில் மேகத்தில் தோன்றும். அப்பொழுது எல்லா மாம்சஜீவன்களையும் அழிக்க இனி ஜலமானது பிரளயமாய்ப் பெருகாதபடிக்கு எனக்கும் உங்களுக்கும் மாம்சமான சகல ஜீவஜந்துக்களுக்கும் உண்டான என் உடன்படிக்கையை நினைவு கூருவேன் என்றார். PPTam 107.1

மனிதனோடு செய்த உடன்படிக்கையின் அடையாளமாக அழ கானவானவில்லை மேகத்தில் வைத்ததில் தேவனுடைய அருளும், தவறு செய்யும் தமது சிருஷ்டிகளின் மேல் அவருக்கு இருக்கும் மன இரக்கமும் எவ்வளவு பெரியது! வில்லைப் பார்க்கும் போது தமது உடன்படிக்கையை நினைவுகூருவேன் என்று ஆண்டவர் அறிவிக் கிறார். அவர் நம்மை எப்போதாவது மறந்து விடுவார் என்று இது பொருள்படவில்லை. மாறாக, நாம் அவரை மேன்மையாகப் புரிந்து கொள்ளுவதற்காக அவர் நம்மோடு நம்முடைய பாஷையில் பேசுகிறார். பின்வரும் தலைமுறையினரின் பிள்ளைகள் வானத்தில் பரவியிருக்கிற அந்த மகிமையான வில்லின் பொருளைக் குறித்து கேட்கும் போது, பெற்றோர்கள் வெள்ளத்தின் சரித்திரத்தை திரும்பச் சொல்லி, தண்ணீர் பூமியை இனி ஒருபோதும் மூடிவிடாது என்பதன் நிச்சயமாக உன்னதமானவர் வில்லை வளைத்து மேகங்களின் மீது வைத்திருக்கிறார் என்று சொல்லவேண்டும். இவ்வாறு, தலைமுறை தலைமுறையாக மனிதன் மேலிருக்கிற தெய்வீக அன்புக்கு அது சாட்சி பகர்ந்து, அவன் தேவன் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையை பலப்படுத்தும். PPTam 107.2

பரலோகத்தில் வானவில்லின் தோற்றம் சிங்காசனத்தைச் சூழ்ந்திருந்து, கிறிஸ்துவின் சிரசின் மேல் வளைந்திருக்கிறது. தீர்க்க தரிசி : மழை பெய்யும் நாளில் மேகத்தில் வானவில் எப்படிக் காணப்படுகிறதோ, அப்படியே சுற்றிலுமுள்ள அந்தப் பிரகாசம் காணப்பட்டது; இதுவே கர்த்தருடைய மகிமையின் சாயலுக்குரிய தரிசனமாயிருந்தது (எசே 1:28) என்கிறான். வெளிப்படுத்தல்காரன் : அப்பொழுது, இதோ, வானத்தில் ஒரு சிங்காசனம்வைக்கப்பட்டிருந்தது, அந்தச் சிங்காசனத்தின் மேல் ஒருவர் வீற்றிருந்தார். அந்தச் சிங்காசனத்தைச் சுற்றி ஒரு வானவில்லிருந்தது; அது பார்வைக்கு மரகதம் போல் தோன்றிற்று (வெளி 4:2,3) என்கிறான். மனிதன் தனது மாபெரும் அக்கிரமத்தால் தெய்வீக நியாயத்தீர்ப்புகளை அழைக்கும் போது, அவன் சார்பாக பிதாவினிடம் பரிந்து பேசுகிற இரட்சகர், மனந்திரும்பின் பாவியின் மேலிருக்கும் தேவனுடைய கிருபையின் அடையாளமாக, மேகங்களிலிருக்கிற வில்லையும் சிங்காசனத்தைச் சுற்றியிருக்கிற வில்லையும் தமது சிரசின் மேலி ருக்கிற வில்லையும் காட்டுகிறார். வெள்ளத்தைக்குறித்து நோவா விற்குக் கொடுக்கப்பட்ட நிச்சயத்தோடு, தேவன் தாமும் : நோவா வின் காலத்திலுண்டான வெள்ளம் இனி பூமியின் மேல் புரண்டு வருவதில்லை என்று நான் ஆணையிட்டது போல், உன்மேல் நான் கோபங்கொள்வதில்லையென்றும், உன்னை நான் கடிந்துகொள்வ தில்லையென்றும் ஆணையிட்டேன். மலைகள் விலகினாலும், பர் வதங்கள் நிலை பெயர்ந்தாலும், என் கிருபை உன்னைவிட்டு வில காமலும், என் சமாதானத்தின் உடன்படிக்கை நிலைபெயராமலும் இருக்கும் என்று, உன்மேல் மனதுருகுகிற கர்த்தர் சொல்லுகிறார் (ஏசாயா 54:9, 10) என்று தமது கிருபையின் விலைமதிப்பான வாக்குத்தத்தத்தை இணைத்திருக்கிறார். PPTam 108.1

தன்னோடு கூட பேழையிலிருந்து வெளியே வந்தவல்லமையான இரைகவ்வுகிற மிருகங்களை நோவா பார்த்தபோது, எட்டு பேர் மாத்திரமே இருக்கிற தனது குடும்பம் அவைகளால் அழிக்கப் பட்டுவிடுமோ என்று பயந்தான். ஆனால் ஆண்டவர் உங்களைப் பற்றிய பயமும் அச்சமும் பூமியிலுள்ள சகல மிருகங்களுக்கும், ஆகாயத்திலுள்ள சகல பறவைகளுக்கும் உண்டாயிருக்கும்; பூமியிலே நடமாடுகிற யாவும், சமுத்திரத்தின் மச்சங்கள் யாவும், உங்களுக்குக் கையளிக்கப்பட்டன. நடமாடுகிற ஜீவஜந்துக்கள் யாவும், உங்களுக்கு ஆகாரமாய் இருப்பதாக, பசும் பூண்டுகளை உங்களுக்குத் தந்தது போல், அவைகள் எல்லாவற்றையும் உங்களுக்குத் தந்தேன் என்கிற நிச்சயமளிக்கும் செய்தியுடன் ஒரு தூதனை தமது ஊழியக்காரனிடம் அனுப்பினார். மாமிச உணவை உண்ண இதற்கு முன்பு தேவன் மனிதனுக்கு அனுமதி அளித்திருக்க வில்லை . மனித இனம் பூமியின் விளைவுகளையே முழுவதும் சார்ந்து இருக்க வேண்டும் என்று அவர் தீர்மானித்திருந்தார். ஆனால் இப்போது பச்சையான அனைத்தும் அழிக்கப்பட்டுப்போன தால், பேழைக்குள் பாதுகாக்கப்பட்டிருக்கிற சுத்தமான மிருகங்களின் மாம்சத்தைப் புசிக்க அவர்களை அனுமதித்தார். PPTam 108.2

வெள்ளத்தில் பூமியின் பரப்புமுழுவதும் மாறிப்போயிற்று. பாவத்தின் விளைவாக பயங்கரமான மூன்றாவது சாபம் அதன் மேல் தங்கியது. தண்ணீர் வடியத்துவங்கிற்று. குன்றுகளும் மலை களும் சேராகிப்போயிருந்த கடலால் சூழப்பட்டிருந்து, எல்லா இடங்களிலும் மனிதர் மற்றும் மிருகங்களின் பிரேதங்கள் பரவியிருந்தது. இவைகள் உருவழிந்து. காற்றை அசுசிப்படுத்த ஆண்ட வர் அனுமதிக்க மாட்டார். எனவே பூமியை மிகப்பரந்த கல்லறை நிலமாக்கினார். தண்ணீர்களை உலர்த்த அனுப்பப்பட்ட வலிய காற்று, மிகுந்த வேகத்தோடு, சிலவேளைகளில் மலைகளின் உச்சிகளையும் சுமந்து சென்று பிரேதங்களின் மேல் மண்ணையும் மரங்களையும் பாறைகளையும் குவித்தது. இதே முறையில், வெள் ளத்துக்கு முன் உலகத்தை செல்வச் செழிப்பாக்கி அழகுபடுத்தின. உலகவாசிகள் விக்கிரகங்களாக்கியிருந்த வெள்ளியும் பொன்னும் சிறந்த மரமும் விலைமதிப்புள்ள கற்களும் மனிதனுடைய பார்வையிலிருந்தும் தேடுதலிலிருந்தும் மறைக்கப்பட்டது. தண்ணீர்களின் வல்லமையான செயல் மண்ணையும் பாறைகளையும் இந்த பொக் கிஷங்களின் மேல் குவித்து, சில இடங்களில் அவைகளின் மேல் மலைகளையும் உண்டாக்கியது. எவ்வளவு அதிகம் பாவமனிதர்களை அவர் வளப்படுத்தி, விருத்தியடையச் செய்கிறாரோ, அவ் வளவு அதிகமாக அவர்கள் தங்கள் வழிகளை அவர் முன்பாக கெடுத்துக்கொள்வார்கள் என்று தேவன் கண்டார். தாராளமாக கொடுத்தவரை மகிமைப்படுத்த அவர்களை நடத்த வேண்டிய திருந்த பொக்கிஷங்கள் ஆராதிக்கப்பட்டு, தேவன் அவமதிக் கப்பட்டு ஒதுக்கப்பட்டார். PPTam 109.1

விவரிக்க முடியாத குழப்பம் மற்றும் பாழான தோற்றத்தை பூமி கொடுத்தது. ஒரு காலத்தில் சமச்சீராக மிக அழகாக இருந்த மலைகள் உடைந்து ஒழுங்கற்றுப் போயின. கற்களும் பாறையின் விளிம்புகளும் உடைந்த பாறைகளும் பூமியின் மேற்பரப்பில் இப் போது சிதறிக்கிடந்தன. அநேக இடங்களில் குன்றுகளும் மலை களும் காணாமற்போய், ஒரு காலத்தில் தாங்கள் நின்றிருந்த இடங்களில் ஒரு சுவட்டைக்கூட வைத்திருக்கவில்லை. சமபூமிகள் மலைத் தொடர்களுக்கு இடமளித்திருந்தன. இந்த மாற்றங்கள் சில இடங்களில் மற்ற இடங்களைக் காட்டிலும் குறிப்பிடும்படியாக இருந்தன. பூமியின் ஐசுவரியமான பொன்னும் வெள்ளியும் விலையுயர்ந்த கற்களும் காணப்பட்ட இடங்களில் சாபத்தின் கனமான சுவடுகள் காணப்பட்டன குடியேறியிராத தேசங்களிலும் குறைவான குற்றங்கள் நிலவின் இடங்களிலும் சாபம் குறைவாக இருந்தது. PPTam 110.1

இந்த நேரத்தில் மிகப்பரந்த காடுகளும் புதைக்கப்பட்டன. அவைகள் அப்போதிருந்து நிலக்கரியாக மாறி, இப்போதிருக்கிற மிகப்பரந்த நிலக்கரி படுகைகளை உருவாக்கி அதிக அளவு எண்ணெயையும் கொடுக்கின்றன. PPTam 110.2

கரியும் எண்ணெயும் அடிக்கடி பூமியின் பரப்பிற்குக் கீழே தீப்பற்றிக்கொண்டு எரிகின்றன. இவ்வாறு பாறைகள் வெப்பமடை கின்றன. சுண்ணாம்புக்கற்கள் எரிகிறது. இரும்புத்தாது உருகுகிறது. சுண்ணாம்பின் மேல் தண்ணீரின் செயல், தீவிரமான வெப்பத்திற்கு இன்னும் சீற்றத்தை உண்டாக்கி பூமியதிர்ச்சிகளையும் எரிமலைகளையும் எரிகின்ற மற்றவைகளையும் உண்டு பண்ணுகிறது. தீயும் தண்ணீரும் பாறைகளின் விளிம்பு மற்றும் தாதுக்களைத் தொடும் போது, நிலத்தின் கீழே வெடிக்கின்றன. அது முணுமுணுக்கிற இடிகளாகத் தொனிக்கின்றன. காற்று வெப்பமானதும் திணரடிக் கிறதுமாயிருக்கிறது. எரிமலை வெடிப்புகள் தொடர்கின்றன. இவைகள் பலவேளைகளில் வெப்பமடைந்திருக்கிற கூறுகளுக்கு வழிதராததால், பூமி தானே ஆட்டுவிக்கப்படுகிறது. நிலம் சமுத் திரத்தின் அலைகளைப்போல உயர்ந்து அமருகிறது. பெரும் பிளவுகள் காணப்பட்டு, சில சமயங்களில் நகரங்களும் கிராமங்களும் எரிகிற மலைகளுங்கூட விழுங்கப்படுகின்றன. கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கும் உலக முடிவிற்கும் சற்று முன்பு இந்த அதிசயமான வெளிக்காட்டுதல்கள் விரைவான அழிவின் அடை யாளங்களாக மிக பயங்கரமானதும் அடிக்கடி நிகழக்கூடியது மாயிருக்கும். PPTam 110.3

பூமியின் ஆழங்கள் கர்த்தருடைய ஆயுதசாலை. அங்கேயிருந்து அவர் பழைய உலகத்தை அழிக்க ஆயுதங்களை எடுத்தார். அவருடைய அழிவின் வேலையைச் செய்யும் படி பூமியிலிருந்து பீறிட்டுவந்த தண்ணீர்கள் வானத்திலிருந்து வந்த தண்ணீர்களோடு இணைந்தது. ஜலப்பிரளயத்திலிருந்து நெருப்பும் தண்ணீருங்கூட துன்மார்க்கப் பட்டணங்களை அழிக்கும் தேவனுடைய முகவர்களாக இருந்திருக்கின்றன. தேவனுடைய பிரமாணங்களை சாதார ணமாகக் கருதி, அவருடைய அதிகாரத்தை மிதிக்கிறவர்கள் அவ ரதுவல்லமைக்கு முன் நடுங்கி, அவருடைய நீதியுள்ள அதிகாரத்தை அறிக்கை பண்ணும்படியாக இந்த நியாயத்தீர்ப்புகள் அனுப்பப் பட்டன . எரிகிற மலைகள் நெருப்பையும் ஜூவாலைகளையும் உரு கின தாதுக்களையும் வீசி, ஆறுகளை வறளச் செய்து, ஐனம் நிறைந்த பட்டணங்களை மூழ்கடிப்பதையும் எல்லா இடங்களிலும் அழிவையும் நாசத்தையும் உண்டாக்குவதையும் மனிதர்கள் கண்ட பொழுது, கொழுத்த இதயங்கள் பயத்தால் நிறைந்தன. தேவநம் பிக்கையற்றவர்களும் பரியாசக்காரரும் தேவனுடைய நித்திய வல்லமையை ஒப்புக்கொள்ளும்படி நெருக்கப்பட்டார்கள். PPTam 110.4

இப்படிப்பட்ட காட்சிகளைக் குறிப்பிட்ட பழங்கால தீர்க்க தரிசிகள் : ஆ, உமது நாமத்தைச் சத்துருக்களுக்குத் தெரியப்பண்ணு வதற்கும், ஜாதிகள் உம்முடைய சந்நிதிக்கு முன் தத்தளிப்பதற்கும், தேவரீர் வானங்களைக் கிழித்திறங்கி, உருக்கும் அக்கினி எரியு மாப்போலவும், அக்கினிதண்ணீரைப் பொங்கப்பண்ணுமாப்போலவும், பர்வதங்கள் உமக்கு முன்பாக உருகும்படி செய்யும். நாங்கள் எதிர்பார்த்திராத பயங்கரமான காரியங்களை நீர் செய்தபோது, நீர் இறங்கினீர், உமது சந்நிதியில் பர்வதங்கள் உருகிப்போயின. ஏசாயா 54:1-3; கர்த்தருடைய வழி சுழல் காற்றிலும் பெருங்காற்றிலும் இருக்கிறது, மேகங்கள் அவருடைய பாதத்தூளாயிருக்கிறது. அவர் சமுத்திரத்தை அதட்டி, அதை வற்றிப்போகப்பண்ணி, சகல ஆறுகளையும் வறட்சியாக்குகிறார் (நாகூம் 1:3, 4) என்றனர். PPTam 111.1

உலகம் இதுவரைக்கண்டிராத மிக பயங்கரமான வெளிப்பாடுகள் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில் காணப்படும். அவர் சமுகத்தில் பர்வதங்கள் அதிர்ந்து மலைகள் கரைந்து போகும், அவர் பிரசன்னத்தினால் பூமியும் பூச்சக்கரமும் அதில் குடியிருக்கிற அனைவரோடும் எடுபட்டுப்போம். அவருடைய கோபத்துக்கு முன்பாக நிற்பவன் யார்? அவருடைய உக்கிரகோபத்திலே தரிப் பவன் யார்? அவருடைய எரிச்சல் அக்கினியைப்போல இறைக்கப் படுகிறது; அவராலே கன்மலைகள் பேர்க்கப்படும் (நாகூம் 1:5, 6), கர்த்தாவே, நீர் உமது வானங்களைத் தாழ்த்தி இறங்கி, பர்வதங்கள் புகையும்படி அவைகளைத் தொடும். மின்னல்களை வரவிட்டுச் சத்துருக்களைச் சிதறடியும், உமது அம்புகளை எய்து அவர்களைக் கலங்கடியும். சங்கீதம் 144:5,6 PPTam 111.2

உயர வானத்திலே அற்புதங்களையும், தாழப்பூமியிலே இரத் தம், அக்கினி, புகைக்காடாகிய அதிசயங்களையும் காட்டுவேன். அப். நட. 2:19; சத்தங்களும் இடிமுழக்கங்களும் மின்னல்களும் உண்டாயின; பூமி மிகவும் அதிர்ந்தது, பூமியின் மேல் மனுஷர்கள் உண்டான நாள் முதற்கொண்டு அப்படிப்பட்ட பெரிய அதிர்ச்சியுண் டானதில்லை . தீவுகள் யாவும் அகன்று போயின், பர்வதங்கள் காணப்படாமற்போயின . தாலந்து நிறையான பெரிய கல்மழையும் வானத்திலிருந்து மனுஷர்மேல் விழுந்தது; அந்தக்கல் மழையினால் உண்டான வாதையினிமித்தம் மனுஷர்கள் தேவனைத் தூஷித்தார்கள், அந்த வாதை மகா கொடிதாயிருந்தது. வெளி. 16:18, 20, 21. PPTam 112.1

வானத்தின் மின்னல்கள் பூமியின் நெருப்போடு இணையும் போது, மலைகள் சூளைகளைப்போல எரிந்து, தோட்டங்களையும் வயல்களையும் கிராமங்களையும் நகரங்களையும் மூழ்கடிக்கிற பயங்கரமான எரிமலைக்குளம்புகளை வெளித்தள்ளும். கொதித் துக்கொண்டிருக்கிற உருகின் பொருட்கள் ஆறுகளில் வீசியெறி யப்பட, அவைகள் ஆறுகளைக் கொதிக்கச் செய்து, அவைகள் மிகப்பெரிய பாறைகளை விவரிக்கக்கூடாத வேகத்தில் வீசி அவை களுடைய உடைந்த உதிரிகளை நிலத்தில் சிதறடிக்கும். ஆறுகள் உலர்ந்துபோம். பூமி பலமாக அசைக்கப்படும். எங்கும் பயங்கர மான பூமியதிர்ச்சிகளும் வெடிப்புகளும் உண்டாகும். PPTam 112.2

இவ்வாறாக, தேவன் துன்மார்க்கரை பூமியிலிருந்து அழிப் பார். ஆனால் இந்தக் குழப்பங்களின் மத்தியிலே நோவா பேழைக் குள் பாதுகாக்கப்பட்டதைப் போல் நீதிமான்கள் பாதுகாக்கப்படு வார்கள். தேவன் அவர்களுடைய அடைக்கலமாயிருப்பார். அவ ருடைய செட்டைகளின் கீழே அவர்கள் தங்களை வைத்துக்கொள்ளுவார்கள். சங்கீதக்காரன்: எனக்கு அடைக்கலமாயிருக்கிற உன்ன தமான கர்த்தரை உனக்குத் தாபரமாகக் கொண்டாய். ஆகையால் பொல்லாப்பு உனக்கு நேரிடாது, வாதை உன் கூடாரத்தை அணு காது. தீங்குநாளில் அவர் என்னைத் தம்முடைய கூடாரத்தில் மறைத்து, என்னைத் தமது கூடார மறைவிலே ஒளித்துவைத்து, என்னைக் கன்மலையின் மேல் உயர்த்துவார் என்று சொல்லுகிறான். சங் 91:9,10,27:5. அவன் என்னிடத்தில் வாஞ்சையாயிருக்கிறபடி யால் அவனை விடுவிப்பேன், என் நாமத்தை அவன் அறிந்திருக் கிறபடியால் அவனை உயர்ந்த அடைக்கலத்திலே வைப்பேன். சங் 91:14) என்பது தேவனுடைய வாக்குத்தத்தமாயிருக்கும். PPTam 112.3