Go to full page →

10 - பாபேல் கோபுரம் PPTam 122

சன்மார்க்க கேட்டினால் ஜலப்பிரளயம் சமீபத்தில் துண்டித்துப் போட்ட வனாந்தரமான பூமியை மக்களால் நிரப்ப தேவன் ஒரே குடும்பத்தை, தாம் இந்தச் சந்ததியில் உன்னை எனக்கு முன்பாக நீதிமானாகக் கண்டேன் (ஆதி 7:1) என்று அறிவித்திருந்த நோவா வின் வீட்டாரை பாதுகாத்திருந்தார். என்றாலும் நோவாவின் மூன்று குமாரர்களிலும், பிரளயத்துக்கு முன் இருந்த அதே பெரிய வேற்று மைகள் வெகுவிரைவாக உருவானது. மனித இனத்தின் தோற்றுனர் களான சேம், காம், யாப்பேத்தில் அவர்களுடைய சந்தியினரின் குணங்கள் முன்காணப்பட்டது. PPTam 122.1

தெய்வீக ஏவுதலினால் பேசின் நோவா, மனித இனத்தின் தகப்பன்களாயிருந்த இவர்களிலிருந்து எழும்பப்போகிற மூன்று பெரிய இனத்தின் சரித்திரத்தை முன்னறிவித்தான். காமின் வம்சத்தைப்பார்த்து, தகப்பனைவிடவும் அவன் மகன் வழியாக கானான் சபிக்கப்பட்டவன், தன் சகோதரரிடத்தில் அடிமைகளுக்கு அடிமை யாயிருப்பான் என்று அவன் அறிவித்தான். காமின் இயற்கைக்கு மாறான குற்றம், வாரிசு என்கிற மரியாதை வெகு காலத்துக்கு முன்பே ஆத்துமாவிலிருந்து எடுபட்டுப்போயிற்று என்று அறி வித்தது. அது அவனுடைய தேவபக்தியற்ற நிலையையும் தீய குணத்தையும் வெளிப்படுத்தியது. இந்தத் தீயகுணங்கள் கானா னிடமும் அவன் சந்ததியிடமும் நிலைத்திருந்தது. அவர்களுடைய தொடர்ச்சியான குற்றம் தேவனுடைய நியாயத்தீர்ப்புகளை அவர்கள் மேல் கொண்டு வந்தது. PPTam 122.2

அடுத்த பக்கத்தில், தங்கள் தகப்பனுக்காக சேமாலும் யாப் பேத்தாலும் காட்டப்பட்ட மரியாதை, அப்படியே தெய்வீக கட்ட ளைகளுக்குக் கொடுக்கப்பட்ட பயபக்தி, அவர்களுடைய வம்சத் திற்கு பிரகாசமான எதிர்காலத்தை வாக்குப்பண்ணியது. இந்த குமாரர்களைக் குறித்து : சோமுடைய தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக, கானான் அவனுக்கு அடிமையாயிருப் பான் என்று அறிவிக்கப்பட்டது. சேமின் வரிசையில், தெரிந்தெடுக் கப்பட்ட ஐனமும், தேவனுடைய உடன்படிக்கையும், வாக்குப்பண்ணப்பட்ட மீட்பரும் வரவேண்டும். யெகோவாதான் சேமின் தேவன். அவனிடமிருந்து ஆபிரகாமும், இஸ்ரவேல் ஜனமும் வரும், அவர்களிலிருந்து கிறிஸ்து வரவேண்டும். கர்த்தரைத் தெய் வமாகக் கொண்டிருக்கிற ஜனம் பாக்கியமுள்ளது. சங்.144:15. யாப் பேத்து, சேமுடைய கூடாரங்களில் குடியிருப்பான்; சுவிசேஷத்தின் ஆசீர்வாதங்களை யாப்பேத்தின் வம்சத்தார் விசேஷமாக பகிர்ந்து கொள்ள வேண்டும். PPTam 123.1

கானானின் தலைமுறையினர் மிகவும் கீழ்த்தரமான அஞ்ஞான முறைமைகளுக்குத் தாழ்ந்து போயினர். தீர்க்கதரிசனமாகக் கூறப்பட்ட சம்பவம் அவர்களை அடிமையாயிருக்க அறிவித்திருந்த போதும், நூற்றாண்டுகளாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. தெய் வீகம் சகித்துக்கொள்ளும் அளவைத் தாண்டும் வரையிலும் தேவன் அவர்களுடைய அவபக்தியையும் கேடுகளையும் பொறுத்து வந்தார். பின்னர் அவர்கள் துரத்திவிடப்பட்டு, சேம் மற்றும் யாப் பேத்தின் அடிமைகளானார்கள். PPTam 123.2

நோவாவின் தீர்கதரிசனம் கண்மூடித்தனமான பிரியத்தின் அறி விப்போ அல்லது கோபத்தின் கண்டனமோ அல்ல. அது அவனது குமாரரின் வாழ்க்கையையும் குணத்தையும் நிர்ணயிக்கவில்லை. மாறாக, அவர்கள் தனித்தனியாகத் தெரிந்து கொண்ட வாழ்க்கை முறை மற்றும் அவர்கள் விருத்தி செய்து கொண்ட குணத்தின் விளைவுகள் என்னவாக இருக்கும் என்று காட்டியது. ஒரு நியதி யாக, பிள்ளைகள் பெற்றோரின் பண்புகளையும் தன்மைகளையும் சுதந்தரித்து, அவர்களுடைய உதாரணங்ளைப் பின்பற்றுவார்கள். இதனால் பெற்றோரின் பாவங்கள் தலைமுறை தலைமுறையாக பிள்கைளாலும் செய்யப்படுகிறது. இவ்வாறே, காமின் பக்தியின்மையும் PPTam 123.3

தீயகுணமும் அவனுடைய சந்ததியிடம் மீண்டும் உண்டாகி, அநேக தலைமுறைகளுக்கு அவர்கள் மேல் சாபத்தைக் கொண்டு வந்தது. பாவியான ஒருவன் மிகுந்த நன்மையைக் கெடுப்பான். பிர. 918. PPTam 124.1

அடுத்தப் பக்கத்தில் தன் தகப்பனுக்காக சேம் காண்பித்த மரி யாதை எவ்வளவு ஐசுவரியமாகப் பதிலளிக்கப்பட்டது! அவ னுடைய சந்ததியில் எத்தகைய சிறப்புவாய்ந்த பரிசுத்த மனிதர்கள் தோன்றினார்கள்! உத்தமர்களின் நாட்களைக் கர்த்தர் அறிந்திருக் கிறார். அவன் சந்ததி ஆசீர்வதிக்கப்படும். சங்.37:18, 26. ஆகை யால் உன் தேவனாகிய கர்த்தரே தேவன் என்றும், தம்மில் அன்பு கூர்ந்து, தமது கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கு அவர் ஆயிரம் தலைமுறை மட்டும் உடன்படிக்கையையும் தய வையும் காக்கிற உண்மையுள்ள தேவன் என்றும் (உபா.7:9) நீ அறி யக்கடவாய். சில காலம் நோவாவின் வம்சத்தார் பேழை தங்கியிருந்த மலைகளிலேயே வசித்து வந்தனர். அவர்கள் எண்ணிக்கை உயர்ந்த போது, மருள்விழுகை பிரிவிற்கு வழிநடத்தியது. தங்கள் சிருஷ்டிகரை மறந்து, அவருடைய பிரமாணங்களின் கட்டுப் பாட்டை வீசியெறிய விரும்பினவர்கள், தேவனுக்குப் பயந்த தங்கள் தோழர்களின் போதனைகளாலும் வாழ்க்கையாலும் தொடர்ச்சியான எரிச்சலை உணர்ந்தார்கள். சில காலம் கழித்து, தேவனை தொழுது கொள்ளுகிறவர்களைவிட்டுப் பிரிய தீர்மானித்தார்கள். அப்படியே ஐபிராத்து நதியின் கரைகளில் சிநேயாரின் சமபூமிக்கு பிரயாணப்பட்டார்கள் அதன் அமைப்பாலும் மண்ணின் செழிப் பாலும் அவர்கள் கவரப்பட்டு, அந்தக் சமவெளியில் தங்கள் இல் லங்களை உண்டாக்கத் தீர்மானித்தார்கள். PPTam 124.2

இங்கே ஒரு பட்டணத்தையும் அதிலே உலக அதிசயமாகக்கூடிய மிகப்பிரம்மாண்டமான உயரங்கொண்ட ஒரு கோபுரத்தையும் கட்டத் தீர்மானித்தார்கள். இந்த சாகசமுயற்சிகள், கூட்டங்கூட்டமாக அவர்கள் பிரிந்து போவதைத் தடுக்கும் நோக்கத்தில் வகுக்கப் பட்டன. மனிதன் பூமி முழுவதும் பரவி, அதை நிரப்பி, அதைத் தன்கீழ் கொண்டுவரவேண்டும் என்று தேவன் அவனை நடத்தினார். ஆனால் இந்த பாபேலைக் கட்டியவர்கள், தங்களது சமுதாயம் கூட்டமாக ஒரே கூட்டமாக இணைந்திருந்து, முழு உலகத்தையும் தழுவுகிற ஏகாதிபத்தியத்தை ஸ்தாபிக்கவேண்டும் என்று தீர்மானித் தார்கள். இவ்வாறு அவர்களுடைய பட்டணம் உலகளாவிய சாம் ராஜ்யத்தின் தலைமையகமாயிருக்கும், அதன் மகிமை உலகத்தின் போற்றுதலையும் மரியாதையையும் சம்பாதிக்கும், இதை நிறுவியவர்கள் சிறப்பானவர்களாக அழைக்கப்படுவார்கள்; வானங்கள் வரை சென்ற இந்த அற்புதமான கோபுரம், அதைக் கட்டினவர் களின் வல்லமைக்கும் ஞானத்திற்கும் ஒரு நினைவுச்சின்னமாக நின்று, அவர்களுடைய புகழை பின் சந்ததிகள் வரைக்கும் நிலைத் திருக்கச் செய்யும் நோக்கத்தைக் கொண்டிருந்தது. PPTam 124.3

சிநேயார் சமபூமியில் வசித்தவர்கள், மீண்டும் பூமியின் மேல் ஒரு பிரளயத்தை கொண்டுவர மாட்டேன் என்ற தேவனுடைய உடன்படிக்கையை நம்பவில்லை. அவர்களில் அநேகர் தேவன் இருக்கிறார் என்பதை மறுதலித்து, வெள்ளத்துக்கு இயற்கையின் விளைவுகளைக் காரணம் காட்டினார்கள். மற்றவர்கள் தலைமையான ஒருவர் இருக்கிறார் எனவும் அவரே பிரளயத்துக்கு முன் னான உலகத்தை அழித்தாரென்றும் நம்பினார்கள். அவர்களுடைய இருதயம் காயீனுடையதைப் போல அவருக்கு எதிராகக் கலகம் செய்ய எழும்பினது. கோபுரத்தைக் கட்டுவதில் அவர்கள் முன்பாக இருந்த ஒரு நோக்கம், மற்றொரு வெள்ளம் வந்தால் தங்களைப் பாதுகாத்துக்கொள்ளுவதாக இருந்தது. அதன் உயரத்தை ஜலப் பிரளயத்தின் தண்ணீர்கள் எட்டின் அளவைவிடவும் மிக அதிகமாக உயர்த்துவதன் வழியாக, தங்களை ஆபத்திற்கான எல்லா சாத்தி யங்களையும் தாண்டி வைக்கலாம் என்று நினைத்தார்கள். மேகங்களின் மண்டலத்திற்கு ஏற முடியும்போது, வெள்ளத்திற்கான காரணத்தை அறிந்துகொள்ள PPTam 125.1

முடியுமென்று நம்பினார்கள். இந்த முழு வேலையும் அதைக் கட்டுகிறவர்களின் பெருமையை மேலும் அதிகம் உயர்த்தி, எதிர்கால தலைமுறையினரின் மனங்களை தேவனிடமிருந்து திருப்பி, அவர்களை விக்கிரக ஆராதனைக்கு வழிநடத்துவதற்காக வடிவமைக்கப்பட்டிருந்தது. PPTam 125.2

கோபுரம் பாதி முடிந்திருந்தபோது, அதன் ஒரு பகுதி கட்டுகிற வர்கள் தங்கியிருக்கும் இடமாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. மிகச்சிறப்பாக அமைக்கப்பட்டு, அலங்கரிக்கப்பட்டிருந்த மற்ற அறைகள் அவர்களுடைய விக்கிரகங்களுக்கு அர்ப்பணிக் கப்பட்டிருந்தன. மக்கள் தங்கள் வெற்றியில் களிகூர்ந்து, பொன் னாலும் வெள்ளியாலும் ஆன தேவர்களைப் புகழ்ந்து, வானத்தையும் பூமியையும் ஆட்சி செய்கிறவருக்கு எதிராகத் தங்களை வைத் தார்கள். மிகவும் செழிப்பாக முன்னேறிக்கொண்டிருந்த வேலை சடுதியாகக் குறுக்கிடப்பட்டது. கட்டுகிறவர்களின் நோக்கங்களை ஒன்றுமில்லாமற்போகப்பண்ண, தூதர்கள் அனுப்பப்பட்டார்கள். கோபுரம் அதிக உயரத்திற்குச் சென்றுவிட்டதால், உச்சியில் வேலை செய்து கொண்டிருந்தவர்களுக்கு கீழே இருந்தவர்களோடு நேரடி யாகத் தொடர்பு கொள்ள முடியவில்லை. எனவே வேலையைக் குறித்த நடக்கைகளுக்காகவோ அல்லது தேவையான பொருட்களை கேட்பதற்காகவோ, செய்தியை வாங்கி தங்களுக்கு அடுத்த படியாக கீழே இருப்பவர்களிடம் சொல்லும்படியாக மனிதர்கள் நிறுத்தப்பட்டார்கள். இவ்வாறு செய்தி ஒருவரிடமிருந்து மற்ற வருக்குப் போய்க்கொண்டிருந்தபோது, அவர்களுடைய பாஷை தாறுமாறாக்கப்பட்டது. எனவே தேவைப்படாத பொருட்கள் கேட் கப்பட்டன. பரிமாறப்பட்ட செய்திகள் கொடுக்கப்பட்ட செய்திக் குப் பல வேளைகளில் எதிர்மாறாக இருந்தன. குழப்பமும் திகைப் பான அச்சமுமே தொடர்ந்தது. வேலையனைத்தும் முடிவுக்கு வந்தது. அதற்கு மேல் இணக்கமோ அல்லது ஒத்துழைப்போ இருக்க முடியாது. கட்டினவர்கள் இந்த விசித்திரமான தவறான புரிந்து கொள்ளுதலுக்கு தங்களுக்குள் காரணம் கொடுக்கவே முடிய வில்லை. தங்களுடைய குமுறலிலும் ஏமாற்றத்திலும் ஒருவரை யொருவர் நிந்தித்தார்கள். அவர்களுடைய கூட்டணி சண்டையிலும் இரத்தஞ்சிந்துதலிலும் முடிவுக்கு வந்தது. தேவனுடைய அதிருப் தியின் சான்றாக, வானத்திலிருந்து வந்த மின்னல்கள் கோபுரத்தின் மேல்பகுதியை உடைத்து கீழே தரையிலே தள்ளிற்று. வானங்களிலே அரசாளுகிற தேவன் ஒருவர் உண்டு என்கிறதை உணரும் படி மனிதர்கள் நடத்தப்பட்டார்கள். PPTam 125.3

இந்த நேரம் வரையிலும் மனிதர்கள் அனைவரும் ஒரே பாஷையைப் பேசி வந்தார்கள். இப்போது ஒருவருக்கொருவர் பேசுவதைப் புரிந்து கொள்ள முடிந்தவர்கள் கூட்டங்களானார்கள். சிலர் ஒரு வழியாகவும் சிலர் வேறு வழியாகவும் சென்றார்கள். கர்த்தர் அவர்களை அவ்விடத்திலிருந்து பூமியின் மீதெங்கும் சித றிப்போகப்பண்ணினார். இந்தச் சிதறல் பூமியை மனிதர்களால் நிரப்பும் ஒரு வழிமுறையாயிற்று. இவ்வாறாக, ஆண்டவருடைய நோக்கம் நிறைவேறுவதைத் தடுக்க மனிதர் உபயோகித்த அதே முறையின் வழியாக அவருடைய நோக்கம் நிறைவேற்றப்பட்டது. PPTam 126.1

என்றாலும், தேவனுக்கு எதிராகத் தங்களை நிறுத்தின வர்களுக்கு எப்படிப்பட்ட நஷ்டத்தில் அது நிறைவேற்றப்பட்டது! பூமியின் பல்வேறு பகுதிகளில் தேசங்களை உண்டாக்கும்படி, அடுத்தடுத்து வரும் தலைமுறையினருக்கு மங்காத சத்திய ஒளி பிரகாசிப்பதற்கேதுவாக, மனிதர்கள் அவருடைய சித்தத்தைக் குறித்த அறிவை தங்களோடு சுமந்து புறப்பட்டுச் செல்ல வேண்டு மென்பது அவருடைய நோக்கமாக இருந்தது. நீதியைப் பிரசங்கித்த விசுவாசமுள்ள போதகனான நோவா, ஜலப்பிரளயத்துக்குப்பின்பு 350 வருடங்கள் உயிரோடிருந்தான். சேம் 500 வருடங்கள் வாழ்ந் திருந்தான். இவ்வாறாக, தேவனுடைய கோரிக்கைகளோடும், தங்கள் பிதாக்களோடு அவர் இடைப்பட்ட சரித்திரங்களோடும் பரீட்சயமாவதற்கான சந்தர்ப்பம் அவர்களுடைய சந்ததிகளுக்கு இருந்தது. ஆனால் சுவையில்லாத இந்த சத்தியங்களைக் கேட்க அவர்கள் மனமின்றி இருந்தனர். தேவனை தங்கள் சிந்தையில் வைத்திருக்க அவர்களுக்கு விருப்பமில்லை. பாஷைகளின் தாறு மாறுகளினால் வெளிச்சத்தைக் கொடுத்திருக்கக்கூடியவர்களோடு உறவு கொள்ளுவதிலிருந்து அவர்கள் அதிகமாகதடுக்கப்பட்டனர். PPTam 126.2

பாபேலைக்கட்டினவர்கள் தேவனுக்கு எதிராக முறுமுறுக்கும் ஆவியில் திளைத்தனர். ஆதாமிற்குக் காட்டப்பட்டகிருபையையும், நோவாவோடு செய்யப்பட்ட கிருபையுள்ள உடன்படிக்கையையும் நன்றியோடு நினைவு கூராமல், முதல் தம்பதியினரை ஏதேனிலிருந்து வெளியேற்றியதற்காகவும், உலகத்தை பிரளயத்தால் அழித்ததற்காகவும் அவரது உக்கிரத்தை அவர்கள் குற்றப்படுத் தினார்கள். தேவன் நியாயமற்ற கொடுமைக்காரார் என்று அவ ருக்கு எதிராக முறுமுறுத்த அதே நேரம், கொடுங்கோலன்களில் கொடுமையானவனது ஆதிக்கத்தை ஏற்றுக்கொண்டிருந்தார்கள். மக்களுடைய மனங்கள் விக்கிரகவணக்கத்தினால் இருளடைந் திருந்ததால், இந்த காணிக்கைகளுக்கு ஒரு போலியை உண்டு பண்ணவும், தங்களுடைய சொந்தக்குழந்தைகளை அவர்களுடைய தேவர்களின் பலிபீடங்களில் பலிகொடுக்கவும் அவன் நடத்தி னான். மனிதர்கள் தேவனிடமிருந்து விலக்கின்போது, தெய்வீக குணங்களான நீதியும் தூய்மையும் அன்பும், ஒடுக்குதல் கொடுமை மிருக்குணம் ஆகியவைகளால் நிரப்பப்பட்டது. PPTam 127.1

தேவனைச் சார்ந்திராத ஒரு அரசாங்கத்தை ஸ்தாபிக்க பாபே லின் மனிதர்கள் தீர்மானித்திருந்தனர். ஆண்டவருக்குப் பயப்பட்ட கூடவே பக்தியற்றவர்களின் வேஷத்தினால் வஞ்சிக்கப்பட்டு அவர்களுடைய திட்டங்களுக்குள் இழுக்கப்பட்ட சிலர் அவர் களுக்குள்ளே இருந்தார்கள். இந்த உண்மையானவர்கள் நிமித்தம் ஆண்டவர் தமது நியாயத்தீர்ப்புகளை தாமதித்து, மக்கள் தங்க ளுடைய மெய்யான குணத்தை வெளிப்படுத்த அவர்களுக்குக் காலம் கொடுத்தார். அது வளர்ந்தபோது, தேவனுடைய குமாரர்கள், அவர்களுடைய நோக்கங்களிலிருந்து அவர்களைத் திருப்பு வதற்காக உழைத்தார்கள். ஆனால் பரலோகத்தை எதிர்க்கத் துணிந்த தங்களுடைய வேலையில் அவர்கள் ஒருமுகப்பட்டிருந்தார்கள். தடைகட்டப்படாமல் சென்றிருந்தார்களென்றால், உலகத்தின் ஒழுக்கத்தை அதன் இளமையிலேயே சிதைத்திருப் பார்கள். அவர்களுடைய கூட்டணி கலகத்தின் அடிப்படையி லிருந்தது. சுயத்தை உயர்த்துகிற கடவுளுக்கு எந்த அதிகாரமும் கனமும் தராத ஒரு இராஜ்யம் ஸ்தாபிக்கப்பட்டது. இந்தக் கூட்ட மைப்பு அனுமதிக்கப்பட்டிருக்குமானால், பூமியிலிருந்து நீதியை அதோடு சமாதானம், மகிழ்ச்சி மற்றும் பாதுகாப்பையும் அடியோடு விரட்டியடிக்க ஒரு வல்லமையான சக்தி உருவாகியிருந்திருக்கும். பரிசுத்தமாயும் நீதியாயும் நன்மையாயும் (ரோமர் 7:12) இருக்கிற தெய்வீகக் கட்டளைகளுக்குப் பதிலாக தங்களுடைய சொந்த, சுயநலமான, கொடுமையான இருதயங்களின் நோக்கங்களுக்குப் பொருந்துகிற சட்டங்களைப் பொருத்த மனிதர்கள் முயற்சித்துக்கொண்டிருந்தார்கள். PPTam 127.2

ஆண்டவருக்குப் பயந்தவர்கள், இடைப்படும் படியாக அவரி டம் கதறிக்கொண்டிருந்தனர். மனுபுத்திரர் கட்டுகிற நகரத்தையும் கோபுரத்தையும் பார்க்கிறதற்குக் கர்த்தர் இறங்கினார். உலகத்தின் மேல் கிருபையைக் காண்பித்து, கோபுரம் கட்டினவர்களின் நோக் கத்தை முறியடித்து, அவர்களுடைய தைரியத்தின் நினைவுச்சின் னத்தை கவிழ்த்துப் போட்டார். கிருபையாக அவர்களுடைய பாஷையைக் குழப்பினார். இவ்வாறு அவர்களுடைய கலகத்தின் நோக்கங்களுக்குத்தடையைக் கொண்டுவந்தார். மனந்திரும்புவதற்காக போதுமான சந்தர்ப்பங்களைக் கொடுத்து மனிதர்களுடைய முறைகேடுகளை தேவன் நீண்டகாலம் பொறுத்துப்போகிறார். என்றாலும், அவருடைய நீதியான பரிசுத்தமான கட்டளையின் அதி காரத்தைத் தடுக்கும் அவர்களுடைய அனைத்துக் கருவிகளையும் குறிக்கிறார். அரசாட்சியின் செங்கோலைப் பிடித்திருக்கிற காணக் கூடாத கரம் அக்கிரமத்தை கட்டுப்படுத்தும்படி அவ்வப்போது நீட்டப்பட்டிருக்கிறது. பிரபஞ்சத்தின் சிருஷ்டிகர் ஞானத்திலும் அன்பிலும் சத்தியத்திலும் முடிவில்லாத ஒருவர்தான் வானத்திற்கும் பூமிக்கும் மேலான அதிபதி என்பதற்கும், தண்டனையின்றி எவ ரும் அவருடைய வல்லமையை எதிர்த்து நிற்க முடியாது என் பதற்கும் தவறில்லாத சான்றுகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. PPTam 128.1

பாபேலைக் கட்டியவர்களின் திட்டங்கள் அவமானத்திலும் தோல்வியிலும் முடிவுக்கு வந்தன. அவர்களுடைய பெருமையின் ஞாபகக்குறிப்பு அவர்களுடைய மடத்தனத்தின் நினைவுச்சின் னமாயிற்று. என்றாலுங்கூட, சுயத்தைச் சார்ந்து தேவனுடைய சட்டங்களை நிராகரிக்கும் அதே வழிமுறையை மனிதர்கள் தொடர்ந்து தேடுகிறார்கள். இதே கொள்கையைத்தான் சாத்தான் பரலோகத் திலே செயல்படுத்த முயன்றான். இதுதான் காணிக்கையைக் கொண்டுவந்ததில் காயீனையும் ஆட்சி செய்தது. PPTam 128.2

நம்முடைய காலத்திலும் கோபுரம் கட்டுகிறவர்கள் இருக்கிறார்கள். தேவனை நம்பாதவர்கள், அனுமானிக்கப்படுகிற அறிவிய லின் யூகத்தில் தங்கள் கோட்பாடுகளைக்கட்டி, வெளிப்படுத்தப்பட்டிருக்கிற தேவனுடைய வார்த்தையை நிராகரிக்கிறார்கள். தேவனுடைய சன்மார்க்க அரசாங்கத்தின் மேல் தீர்ப்பளிப்பதாக யூகித்துக் கொள்ளுகிறார்கள். அவருடைய பிரமாணங்களைத் தள்ளி, மனித அறிவின் தகுதியைக் குறித்து பெருமை கொள்ளுகிறார்கள். பின் னர்: துர்க்கிரியைக்குத்தக்கதண்டனை சீக்கிரமாய் நடவாதபடியால், மனுபுத்திரரின் இருதயம் பொல்லாப்பைச் செய்ய அவர்களுக் குள்ளே துணிகரங்கொண்டிருக்கிறது பிர. 8:11. PPTam 129.1

உலகத்தில் கிறிஸ்தவர்களென்று தங்களை அழைத்துக்கொள்ளும் அநேகர், தெளிவான வேதாகமப் போதனைகளிலிருந்து விலகி, மனித அனுமானங்களினாலும் இன்பமான கற்பனைகளினாலும் ஒரு நம்பிக்கையை கட்டிக்கொள்ளுகிறார்கள். மேலும் பர லோகத்திற்கு ஏறிச்செல்லவழியாக தங்களுடைய கோட்டைகளைச் சுட்டிக்காட்டுகிறார்கள். மீறுகிறவன் மரிக்கமாட்டான்; தேவனுடைய பிரமாணங்களுக்குக் கீழ்ப்படியாமலே இரட்சிப்பைக் கண்டடையலாம் என்று போதித்துக் கொண்டிருக்கும் போதே மனிதர்கள் சொல்வன்மை கொண்ட அந்த உதடுகளைப் புகழ்ந்து, அதிலே தொங்கிக்கொண்டிருக்கிறார்கள். கிறிஸ்துவைப் பின்பற்றுவதாகச் சொல்லுகிறவர்கள் தேவனுடைய தரத்தை ஏற்றுக்கொள்வார் களானால், அது அவர்களை ஒருமைப்பாட்டிற்குள் கொண்டுவரும். ஆனால் மனித ஞானம் அவருடைய பரிசுத்த வார்த்தைகளுக்கு மேலாக உயர்த்தப்படும் வரையிலும் பிரிவுகளும் பிரிவினைகளுமே இருக்கும். நிலவிவருகிற குழப்பமும் முரண்பாடான நம்பிக்கை களும் சட்டங்களும், கடைசி நாட்களில் உலகத்தை நேசிக்கிற சபை களுக்கு தீர்க்கதரிசனம் (வெளி. 14:3, 18:2) சூட்டுகிற பாபிலோன் என்ற வார்த்தையினால் சரியாகவே எடுத்துக்காட்டப்படுகிறது. PPTam 129.2

ஐசுவரியத்தையும் தகுதியையும் அடைவதன் வழியாக தங்களுக்கு பரலோகத்தை உண்டாக்க அநேகர் தேடுகிறார்கள். மனித உரிமைகளை மிதித்து, தெய்வீக அதிகாரத்தை கருத்தில் கொள்ளாது, அவர்கள், அவர்கள் ..... அகந்தையாய்க் கொடுமை பேசுகிறார்கள், இறுமாப்பாய்ப் பேசுகிறார்கள் (சங். 138) பெருமையானவர்கள் ஒரு காலத்திற்கு பெரிய அதிகாரத்தில் இருக்கலாம். தாங்கள் செய்யும் அனைத்திலும் வெற்றியடையலாம். என்றாலும், முடிவிலே அவர்கள் ஏமாற்றத்தையும் அவலங்களையுமே கண்டடைவார்கள். PPTam 129.3

தேவன் விசாரிக்கும் நேரம் சமீபமாயிருக்கிறது. மனிதர்கள் என்ன கட்டியிருக்கிறார்கள் என்பதைக் காண உன்னதமானவர் கீழே வருவார். அவருடைய அரசின் வல்லமை வெளிப்படுத்தப் படும். மனித மேட்டிமையின் கிரியைகள் கீழே தாழ்த்தப்படும், கர்த்தர்வானத்திலிருந்து நோக்கிப்பார்த்து, எல்லாமனுபுத்திரரையும் காண்கிறார். தாம் வாசமாயிருக்கிற ஸ்தானத்திலிருந்து பூமியின் குடிகள் எல்லார் மேலும் கண்ணோக்கமாயிருக்கிறார். கர்த்தர் ஜாதி களின் ஆலோசனையை விருதாவாக்கி, ஜனங்களுடைய நினைவுகளை அவமாக்குகிறார், கர்த்தருடைய ஆலோசனை நித்திய காலமாகவும், அவருடைய இருதயத்தின் நினைவுகள் தலைமுறை தலைமுறையாகவும் நிற்கும். சங்.33:13, 14, 10, 11, PPTam 130.1