Go to full page →

14 - சோதோமின் அழிவு PPTam 174

பார்தான் பள்ளத்தாக்கிலிருந்த பட்டணங்களில் வளத்திலும் அழகிலும் மிகவும் அழகானதாக தேவனுடைய தோட்டமாகிய ஏதேனைப் போல சோதோம் பட்டணம் இருந்தது. இங்கே வெப்ப மண்டலத்தின் தாவர இனங்கள் தழைத்தோங்க, இங்கேதான் பனை, ஒலிவ, திராட்ச மரங்களின் இருப்பிடம் இருந்தது. பூக்கள் வருட முழுவதிலும் மணம் வீசின. வயல்கள் மிகுதியான அறுவடையால் நிறைந்திருக்க, அதைச் சுற்றியிருந்த குன்றுகளை மந்தைகள் மூடியிருந்தன. கலையும் வணிகமும் சம்பூமியின் பெருமையான பட்டணத்திற்கு ஐசுவரியத்தைச் சேர்த்தது. கிழக் கத்திய செல்வங்கள் அவளுடைய மாளிகைகளை அலங்கரிக்க, அவளுடைய வணிகஸ்தலங்களின் தேவைக்காக பாலைவனத்தின் கூண்டுவண்டிகள் விலையேறப்பெற்ற பொருட்களைக் கொண்டு வந்தன. எந்தவித சிந்தையோ அல்லது உழைப்போ இன்றி, வாழ்க் கையின் ஒவ்வொரு தேவையும் சந்திக்கப்பட, வருடமுழுவதும் ஒரு கோலாகலமான திருவிழாவைப்போல் காணப்பட்டது. PPTam 174.1

எங்கும் ஆட்சி செய்த அபரிமிதமான தாராளம், ஆடம்பரத்தையும் பெருமையையும் பிறப்பித்தது. தேவையினால் ஒருபோதும் ஒடுக்கப்படாத அல்லது துக்கத்தினால் ஒருபோதும் பாரமடையாத இருதயங்களை, சும்மா இருப்பதும் ஐசுவரியமும் அடிமைப்படுத் துகிறது. இன்பத்தின் மேல் கொண்ட விருப்பம் செல்வத்தினாலும் ஓய்வினாலும் ஊட்டி வளர்க்கப்பட, மக்கள் தங்களை உணர்ச்சி களில் திளைக்கக் கொடுத்திருந்தார்கள். இதோ, கெர்வமும், ஆகாரத் திரட்சியும், நிர்விசாரமான சாங்கோபாங்கமுமாகிய இவைகளே உன் சகோதரியான சோதோமின் அக்கிரமம், இவை களே அவளிடத்திலும் அவள் குமாரத்திகளிடத்திலும் இருந்தன; சிறுமையும் எளிமையுமானவனுடைய கையை அவள் பலப்படுத்த வில்லை. அவர்கள் தங்களை உயர்த்தி, என் முகத்துக்கு முன்பாக அருவருப்பானதைச் செய்தார்கள்; அதை நான் கண்டபோது, அவர்களை ஒழித்துவிட்டேன் (எசே. 1649,50) என்று தீர்க்கதரிசி சொல்லுகிறான். ஐசுவரியத்தையும் ஓய்வையும் போல வேறு எதுவும் மனிதர்கள் நடுவே அதிகம் விரும்பப்படுவதில்லை . இவைகள் தான் சமபூமியின் மேல் அழிவைக் கொண்டு வந்த பாவங்களைப் பிறப்பித்தது. அவர்களுடைய உபயோகமற்ற சும்மாயிருந்த வாழ்க்கை சாத்தானின் சோதனைகளுக்கு அவர்களை இரையாக்க, அவர்கள் தேவனின் சாயலை உருவழித்து, தெய் வீகமாவதற்கு மாறாக, சாத்தானைப்போல் ஆனார்கள். சும்மாயிருப்பதுவே மனிதன் மேல் வரக்கூடிய மகா பெரிய சாபமாகும் ஏனெனில் தீமையும் குற்றமும் வரிசையாக அதைத் தெளர்வடையச் செய்து, அறிவைத் தவறாக அர்த்தப்படுத்தி, ஆத்துமாவின் தரத்தைக் குறைக்கிறது. காவலின்றி இருப்பவர்களையும், சில கவர்ச்சியான வேஷங்களில் தன்னை உட்புகுத்திக்கொள்ள யாருடைய ஓய்வு அவனுக்கு சந்தர்ப்பம் கொடுக்கிறதோ அவர்களையும் அழிக்க ஆயத்தத்தோடு சாத்தான் பதுங்கியிருக்கிறான். மனிதர்களிடம் அவர்களுடைய சும்மாயிருக்கும் நேரங்களில் வரும்போது அடைவதைப்போன்று, வேறு எந்த நேரத்திலும் அவன் அதிக வெற்றியடைவதில்லை. PPTam 174.2

சோதோமில் களிப்பும் கேளிக்கையும், விருந்தும் குடியும் இருந்தன . மிகப் பயங்கரமானதும் மிகவும் மிருகத்தனமானதுமான உணர்ச்சிகள் கட்டுப்படுத்தப்படவில்லை. மக்கள் வெளிப்படை யாக தேவனையும் அவரது சட்டங்களையும் நிந்தித்து, கொடுமையின் செயல்களில் மகிழ்ச்சி கண்டார்கள், ஜலப்பிரளயத் துக்கு முன்பான உலகத்தின் உதாரணத்தை தங்கள் முன் கொண்டிருந்தபோதும், எவ்வாறு தேவகோபம் வெளிப்படுத்தப்பட்டது என்று அன்றாட அறிவில் அறிந்திருந்த போதும் துன்மார்க்கமான அதே வழிகளை அவர்கள் பின்பற்றினார்கள். PPTam 175.1

லோத்து சோதோமுக்கு இடம் மாறின் போது, சீர்கேடு உலகளா வியதாக இல்லை. சன்மார்க்க இருளுக்கு மத்தியிலே பிரகாசிக் கும்படி தேவன் தமது கிருபையினால் தமது ஒளிக்கதிர்களை அனுமதித்திருந்தார். ஆபிரகாம் ஏலாமியர்களிடமிருந்து கைதிகளை விடுவித்தபோது, மக்களின் கவனம் மெய்யான விசுவாசத் திற்கு அழைக்கப்பட்டது. சோதோமின் மக்களுக்கு ஆபிரகாம் அந்நியனல்ல. காணப்படாத தேவனை அவன் ஆராதித்தது, அவர்கள் நடுவே பரிகாசக் காரியமாயிருந்தது. ஆனால் மாபெரும் வல்லமைகளின் மேல் அவன் பெற்ற வெற்றியும், கைதிகளையும் கொள்ளையையும் விட்டுக்கொடுத்த அவனுடைய தயாள குணமும் அவர்களுடைய ஆச்சரியத்தையும் பாராட்டையும் ஏற்படுத்தியிருந்தது. அவனுடைய திறமையும் வீரமும் போற்றப்பட்ட அதே நேரம், தெய்வீக வல்லமையே அவனை வெற்றி சிறக்கச் செய்தது என்கிற உணர்த்துதலை எவராலும் தவிர்க்கமுடியவில்லை. கூடவே சோதோமின் சுயநலமக்களுக்கு அந்நியமாயிருந்த அவனுடைய நேர்மையும் சுயநலமற்ற ஆவியும் தங்களுடைய தைரியத்தாலும் நம்பிக்கையாலும் அவன்கனப்படுத்தின் மதத்தின் மேன்மைக்கு மற்றொரு சான்றாக இருந்தது. PPTam 176.1

வானத்தையும் பூமியையும் உடையவராகிய உன்னதமான தேவனுடைய ஆசீர்வாதம் ஆபிரகாமுக்கு உண்டாவதாக, உன் சத் துருக்களை உன்கையில் ஒப்புக்கொடுத்த உன்னதமான தேவனுக்கு ஸ்தோத்திரம் (ஆதி. 14:19, 20) என்று ஆபிரகாம் மீது ஆசீர்வாதங்களை வைத்த மெல்கிசேதேக்கு, அவனுடைய பெலத்தின் ஊற்றும் அவனுடைய வெற்றியின் ஆதாரமுமாக யெகோவாவை அறிக்கை செய்தான். தேவன் தமது ஏற்பாட்டின் வழியாக ஆபிரகாமோடு பேசினார். என்றாலும் முன்பிருந்த அனைத்தும் மறுக்கப்பட்ட தைப்போலவே கடைசி ஒளிக்கதிரும் மறுக்கப்பட்டது. PPTam 176.2

சோதோமின் கடைசி இரவு இப்போது நெருங்கிக்கொண்டிருந்தது. அர்ப்பணிக்கப்பட்ட பட்டணத்தின் மீது பழிவாங்கும் மேகங்கள் தங்கள் நிழலை ஏற்கனவே வீசியிருந்தன. ஆனால் மனி தர் அதைப் புரிந்துகொள்ளவில்லை. அழிவின் பணிக்காக தூதர்கள் அதை நெருங்கிக் கொண்டிருந்தபோது, மனிதர்கள் செழிப்பையும் இன்பத்தையும் குறித்து கற்பனை பண்ணிக்கொண்டிருந்தனர். கடைசி நாளும் இதுவரை வந்து போய்க்கொண்டிருந்த நாட்களைப் போலவே இருந்தது. இன்பமும் பாதுகாப்புமான காட்சிகளின் மேல் மாலை நேரம் விழுந்து கொண்டிருந்தது. இறங்கிக்கொண்டிருந்த சூரியனின் கதிர்களால் நிகரற்ற அழகான நிலம் நனைக்கப்பட்டது. மாலை நேரத்தின் குளுமை அந்தப் பட்டணத்து மக்களை அழைக்க, இன்பந்தேடின கூட்டங்கள் அந்த மாலை நேரத்தை அனுபவிக்கும்படியாக இங்கும் அங்கும் அலைந்து கொண்டிருந்தன. PPTam 176.3

சாயங்காலத்திலே இரண்டு அந்நியர்கள் பட்டண வாசலை நெருங்கினார்கள். இரவிலே தங்கும்படியாக வந்த பிரயாணிகளாக அவர்கள் இருந்தார்கள். அந்தத்தாழ்மையானவழிப்பிரயாணிகளில் தெய்வீக நியாயத்தீர்ப்பின் வல்லமையான அறிவிப்பு இருக்கிறதை எவரும் அறியவில்லை. தங்கள் பெருமையான பட்டணத்துக்கு அழிவைக் கொண்டுவரும் உச்சகட்ட குற்றத்தை, அந்த பரலோகத் தூதுவர்களை நடத்தும் விதத்தினால் அதே இரவு அவர்கள் எட்டிப்பிடிப்பார்கள் என்பதை ஆணோடு ஆண் அவலட்சண மானதை நடப்பிக்கிற அக்கரையற்ற திரளானோர் கொஞ்சமும் கற்பனை செய்திருக்கவில்லை. ஆனால் அந்நியர்மேல் தயவான கவனத்தை வெளிக்காட்டி, அவர்களை தனது வீட்டிற்கு அழைத்த ஒரு மனிதன் இருந்தான். அவர்களுடைய மெய்யான குணத்தை லோத்து அறியாதிருந்தான். என்றாலும், சாந்தமும் உபசரிப்பும் அவனுடைய பழக்கமாயிருந்தது. அவை அவனுடைய மதத்தின் ஒரு பகுதியாகவும், ஆபிரகாமின் உதாரணத்திலிருந்து அவன் கற்றுக்கொண்ட பாடங்களாகவும் இருந்தன. ஒரு மரியாதையான ஆவியை அவன் பண்படுத்தாது இருந்திருப்பானானால், சோதோ மிலிருந்த மற்றவர்களோடு சேர்ந்து அவனும் அழியும்படி விட்டு விடப்பட்டிருப்பான். தங்கள் வீட்டுக்கதவுகளை அந்நியருக்கு எதிராக மூடுவதினால், ஆசீர்வாதத்தையும் நம்பிக்கையும் சமாதானமும் கொண்டுவந்திருக்கும் தேவனுடைய தூதுவர்களை அநேகர் வெளியே அடைத்திருக்கிறார்கள். PPTam 177.1

எவ்வளவு சிறியதாயிருந்தாலும், வாழ்க்கையின் ஒவ்வொரு செயலும் நன்மைக்கோ அல்லது தீமைக்கோ ஏதுவான தாக்கத்தைக் கொண்டிருக்கிறது. மிகச்சிறியதாகவே தோன்றும் கடமைகளிலும், உண்மையாக இருப்பதோ அல்லது நெகிழுவதோ, வாழ்க்கையின் மிக ஐசுவரியமான ஆசீர்வாதங்களுக்கோ அல்லது மிகப் பெரிய பேரழிவுக்கோ கதவைத் திறக்கும். சின்ன காரியங்கள் தான் குணத் தைச் சோதிக்கின்றன. வேஷமின்றி அனுதினமும் சந்தோஷத்தோ டும் மனதாரவும் செய்யப்படுகிற சுயமறுப்பின் செய்கைகளைப் பார்த்து தான் தேவன் புன்முறுவல் பூக்கிறார். நாம் சுயத்துக்காகப் பிழைக்கக்கூடாது. மாறாக, மற்றவர்களுக்காகபிழைக்கவேண்டும். சுயத்தை மறப்பதினாலும், அன்பான உதவுகிற ஆவியை போற்று வதினாலும் மட்டுமே நாம் நம்முடைய வாழ்க்கையை ஆசீர்வாதமாக ஆக்கமுடியும். சிறிய கவனங்கள், சின்ன எளிய மரியாதைகள் வாழ்க்கையின் சந்தோஷத்தை சேர்ப்பதில் அதிகம் பங்கு வகிக் கின்றன. அவைகளை நெகிழுவது மனித வேதனைகளில் வகிக் கும் பங்கு கொஞ்சமல்ல. PPTam 177.2

அந்நியர்கள் சோதோமிலே தவறான நடத்தப்படுவதைக் கண்ட லோத்து, தனது சொந்த வீட்டில் அவர்களுக்கு புத்துணர்ச்சி அளிப்பதன் வழியாக, நுழையும்போதே அவர்களைப் பாதுகாப் பதை தனது கடமைகளில் ஒன்றாக்கியிருந்தான். பிரயாணிகள் நெருங்கின் போது, அவன் வாசலில் அமர்ந்திருந்தான். அவர்களை கவனித்ததும் சந்திக்கும்படி எழுந்தான். மரியாதையாக குனிந்து, ஆண்டவன்மார்களே, அடியேனுடைய வீட்டு முகமாய் நீங்கள் திரும்பி,... இராத்தங்குங்கள் என்றான். அப்படியல்ல, வீதியிலே இராத்தங்குவோம் என்று சொல்லி, அவனுடைய உபசரிப்பை அவர்கள் நிராகரிப்பது போலத் தோன்றியது. இவ்வாறு பதில் தந்ததில் - லோத்துவின் உண்மையைச் சோதிப்பதும், சோதோம் மனிதருடைய குணத்தைக் குறித்து அறியாமல் இரவிலே வீதியில் தங்குவது பாதுகாப்பானதுதான் என்று தாங்கள் நினைப்பதுமாக காட்டும் இரண்டு நோக்கங்கள் இருந்தன. அவர்களுடைய பதில், கும்பலின் தயவிற்கு அவர்களை விட்டுவிடக்கூடாது என்று அதிக தீர்மானமாயிருக்கலோத்துவை நடத்தியது. அவர்கள் ஒப்புக்கொள்ளும் வரையிலும் அவர்களை நெருக்கினான். பின்பு அவர்களைத் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றான். PPTam 178.1

அந்நியரை தன் வீட்டுக்கு சுற்றுப்பாதையில் அழைத்து வரு வதன் மூலம், வாசலிலிருந்த சோம்பேறிகளிடமிருந்து தன் நோக் கத்தை மறைக்கலாம் என்று அவன் நம்பியிருந்தான். ஆனால் அவர் களுடைய தயக்கமும், தாமதமும் அவனுடைய தொடர்ச்சியான வற்புறுத்தலும் மற்றவர்கள் அவர்களை கவனிக்கும்படி நடத் தியது. இரவில் ஓய்வெடுக்கு முன்பாக, அக்கிரமக்கூட்டம் அவன் வீட்டைச் சுற்றிக் கூடியது. அது ஒரு திரள் கூட்டம் . வாலிபரும் வயோதிகரும் ஒரே விதமாக, இழிவான உணர்ச்சிகளால் ஆக்கிர மிக்கப்பட்டிருந்தனர். அந்த மனிதர்கள் வெளியே தங்களிடம் கொண்டுவரப்பட வேண்டும் என்று கோரின் கூட்டத்தின் ஏளனமும் பேரொலியும் கேட்டபோது, நகரத்தின் குணத்தைக் குறித்து அந்நியர்கள் விசாரித்துக்கொண்டிருக்க, அந்த இரவு கதவுக்கு வெளியே போக முயல வேண்டாம் என்று லோத்து அவர்களை எச்சரித்துக்கொண்டிருந்தான். PPTam 178.2

கொடுமை செய்யத் தூண்டப்பட்டால் அவர்கள் தனது வீட்டுக் குள் நுழைந்து விடுவார்கள் என்பதை அறிந்து, அவர்களை இணங்கவைக்கும் முயற்சியில் லோத்து வெளியே சென்றான். தனது அயலகத்தார் என்கிற அர்த்தத்தில், சகோதரரே என்ற வார்த்தையை உபயோகித்து, அவர்களை சமாதானப்படுத்தவும் அவர்களுடைய இழிவான நோக்கத்தினிமித்தம் அவர்களை வெட்கப்படச் செய்யவும் லோத்து : சகோதரரே, இந்த அக்கிரமம் செய்யவேண்டாம் என்றான். ஆனால் அவனுடைய வார்த்தைகள் ஜூவாலையின் மேலான எண்ணெயைப்போல் இருந்தன. அவர்களுடைய மூர்க்கம் புயலின் குமுறலைப்போல இருந்தது. தங்கள் மேல் தன்னை நியாயாதிபதியாக்கி கொண்டதைப்போல லோத்துவைப் பரிகசித்து, விருந்தாளிகளை நடத்த எண்ணியிருந்ததை விடவும் அவனை கேவலமாக நடத்துவோம் என்று பயமுறுத் தினார்கள். அவன்மீது சீறினார்கள். தேவனுடைய தூதர்களால் காப்பாற்றப்படாதிருந்தால், அவனை துண்டு துண்டாக்கியிருப்பார்கள். பரலோகத் தூதுவர்கள் தங்கள் கைகளை வெளியே நீட்டி, லோத்தைத் தங்கள் அண்டைக்கு வீட்டுக்குள் இழுத்துக்கொண்டு, கதவைப் பூட்டினார்கள். அதைத் தொடர்ந்த சம்பவம் அவன் உப சரித்த விருந்தாளிகளின் குணத்தை வெளிக்காட்டியது. இருதயக் கடினத்துக்கு கொடுக்கப்பட்டு இரட்டிப்பான குருட்டாட்டத்தினால் அடிக்கப்படாமல் இருந்திருந்தால், அவர்கள் மேல் வந்த தேவனுடைய அடி அவர்களை பயப்படுத்தி, தங்களுடைய தீய செயலை நிறுத்தச் செய்திருக்கும். கடைசி இரவு இதற்கு முன்னிருந்த பாவங்களைவிடவும் பெரிய பாவத்தால் குறிக்கப்படவில்லை. ஆனாலும் இத்தனை காலம் அற்பமாக எண்ணப்பட்டிருந்த கிருபை, கடைசியாக தனது மன்றாட்டை நிறுத்திக் கொண்டது. சே பாதோமின் குடிகள் தெய்வீக பொறுமையின் எல்லையைக் கடந்துவிட்டார்கள் தேவனுடைய பொறுமைக்கும் அவருடைய கோபத்துக்கும் இடையே மறைந்திருந்த எல்லையை கடந்தார்கள். சித்தீமின் பள்ளத்தாக்கில் அவருடைய கோபத்தின் அக்கினி கொளுத்தப்படவிருந்தது. PPTam 179.1

தங்களுடைய வேலையின் நோக்கத்தை தூதர்கள் லோத்து விற்கு வெளிப்படுத்தினார்கள். லோத்து காப்பாற்ற முயன்ற அந்நியர்கள் இப்போது அவனைக் காப்பாற்றி, அவனோடு கூட அந்த துன்மார்க்கப் பட்டணத்தைவிட்டு ஓடுகிற அவன் குடும்ப நபர்கள் அனைவரையும் பாதுகாப்பதாக வாக்குக் கொடுத்தார்கள். கூட்டம் சோர்வடைந்து கடந்து சென்றது, லோத்து தனது பிள்ளைகளை எச்சரிக்கும்படியாக வெளியே சென்றான். நீங்கள் எழுந்து இந்த ஸ்தலத்தை விட்டுப் புறப்படுங்கள் ; கர்த்தர் இந்தப் பட்ட ணத்தை அழிக்கப்போகிறார் என்ற தூதர்களின் வார்த்தைகளை திரும்பத்திரும்பச் சொன்னான். ஆனால் அது அவர்களுக்கு பரியாசம் பண்ணுவதைப்போல் இருந்தது. மூட நம்பிக்கை சார்ந்த பயம் என்று சொல்லி, நகைத்தார்கள். அவனுடைய குமாரத்திகள் அவர்களுடைய கணவர்மாரின் தாக்கத்துக்கு ஆட்பட்டிருந்தனர். இருந்த இடங்களில் அவர்கள் சவுகரியமாயிருந்தனர். ஆபத்திற்கான எந்த சான்றையும் அவர்களால் காணமுடியவில்லை . சகலமும் இருந்த விதமாகவே இருக்கிறது; அவர்களுக்கு மிக அதிக சொத் துக்கள் இருந்தன. அந்த அழகான சோதோம் அழிக்கப்படும் என் பதை அவர்கள் நம்பக்கூடாதிருந்தார்கள். PPTam 179.2

லோத்து துக்கத்தோடு வீட்டிற்குத் திரும்பி, தன் தோல்வியை அறிவித்தான். எழுந்து, அவனுடைய மனைவியையும் அவனுடைய வீட்டிலே இன்னமும் இருந்த இரண்டு குமாரத்திகளையும் அழைத்துக்கொண்டு, பட்டணத்தை விட்டுப்போகும்படி தூதர்கள் சொன்னார்கள். ஆனால் லோத்து தாமதித்தான். கொடுமையான செய்கைகளைக் கண்டு அனுதினமும் துயரப்பட்டிருந்தும், அந்த இழிவான பட்டணத்திலே செய்யப்பட்டு வந்த அக்கிரமத்தின் இழிவான அருவறுப்பை அவன் மெய்யாகப் புரிந்திருக்கவில்லை. தேவனுடைய நியாயத்தீர்ப்புகள் பாவத்தின் மேல் ஒரு தடையை உண்டாக்கவேண்டியதிருந்த பயங்கரமான அவசியத்தை அவன் உணராதிருந்தான். அவனுடைய பிள்ளைகளில் சிலர் சோதோமை பற்றிக்கொண்டிருந்தார்கள். அவர்களில்லாமல் வெளியேற அவன் மனைவி மறுத்துவிட்டாள். இந்த பூமியிலே தனக்கு மிகவும் அன்பானவர்களை விட்டுச்செல்லும் நினைவு அவனால் தாங்கக் கூடியதற்கும் அதிகமானதாக இருந்தது. தனது ஆடம்பரமான வீட் டையும், வாழ்நாள் முழுவதும் உழைத்துச் சேகரித்திருந்த சொத் துக்களையும் விட்டுவிட்டு ஆதரவின்றி அலைவது அவனுக்குக் கடினமாயிருந்தது. துக்கத்தினால் முட்டாளாக்கப்பட்டு, பிரிந்து செல்வதை வெறுத்தவனாக, அவன் தாமதித்தான். தேவனுடைய தூதர்கள் இல்லாதிருந்தால், அவர்கள் அனைவரும் சோதோமின் அழிவிலே அழிந்திருப்பார்கள். பரலோகத் தூதுவர்கள் அவனையும் அவன் மனைவி குமாரத்திகளையும் கைகளைப் பிடித்து பட்டணத்துக்கு வெளியே கொண்டுவந்தார்கள். PPTam 180.1

தூதர்கள் அவர்களை இங்கே விட்டு விட்டு, அழிவின் வேலையை நிறைவேற்ற சோதோமுக்குத் திரும்பினார்கள். மற்றொருவர் ஆபிரகாம் யாரிடம் மன்றாடினானோ அவர், லோத்து வின் அருகே வந்தார். அந்த சம்பூமி பட்டணங்களிலெல்லாம் பத்து நீதிமான்கள் கூட காணப்படவில்லை. ஆனால் முற்பிதாவின் ஜெபத் துக்குப் பதில் தரும்படியாக, தேவனுக்குப் பயந்த அந்த ஒரு மனி தன் அழிவிலிருந்து தப்புவிக்கப்பட்டான். திடுக்கிடும் தீவிரத்தோடு, உன் ஜீவன் தப்ப ஓடிப்போ, பின்னிட்டுப் பாராதே, இந்தச் சமபூமியில் எங்கும் நில்லாதே, நீ அழியாதபடிக்கு மலைக்கு ஓடிப்போ என்ற கட்டளை கொடுக்கப்பட்டது. இப்போது தயக்கமோ தாம தமோ சாவுக்குரியதாயிருக்கும். அர்ப்பணிக்கப்பட்டிருந்த பட்ட ணத்தின் மேல் வீசும் ஒரு பார்வையும், மிக அழகான வீட்டைவிட்டுச் செல்வதைக்குறித்த வருத்தத்தில் ஒரு நொடி தயங்குவதும் அவர் களுடைய ஜீவனை எடுத்துவிடும். தெய்வீக நியாயத்தீர்ப்பின் புயல், இந்த பரிதாபமானவர்கள் தப்பிப்பதற்காக மாத்திரம் காத்திருந்தது. PPTam 180.2

ஆனால் லோத்து குழப்பமும் பயமும் கொண்டவனாக : தனக்கு சொல்லப்பட்டபடி செய்ய முடியாது; தீங்கு என்னைத் தொட ரும் என்று மன்றாடினான். அந்தத் துன்மார்க்கப் பட்டணத்தில் அவிசுவாசத்தின் மத்தியில் வாழ்ந்ததால், அவனுடைய விசுவாசம் மங்கிப்போனது. பரலோகத்தின் அதிபதி அவன் பக்கத்திலே இருந்தார். என்றபோதும், தன்மேல் இத்தனை கவனமும் அன்பும் காண்பித்த தேவன் இனிமேல் தன்னைப் பாதுகாக்க மாட்டார் என் பதுபோல் தன் ஜீவனுக்காக மன்றாடினான். எந்தவித சந்தேகமும் கேள்வியுமின்றி, தனது சித்தத்தையும் ஜீவனையும் ஆண்டவருடைய கரத்தில் கொடுத்து, தெய்வீகத் தூதுவர்களிடம் தன்னை முழு மையாக ஒப்படைத்திருக்கவேண்டும். மாறாக, அநேகரைப்போல் தனக்காக திட்டமிட அவன் முயன்றான். அதோ, அந்த ஊர் இருக் கிறதே, நான் அதற்கு ஓடிப்போகத்தக்கதாய் அதுகிட்ட இருக்கிறது, சின்னதுமாய் இருக்கிறது, என் பிராணன் பிழைக்க நான் அங்கே ஓடிப் போகட்டும், அது சின்ன ஊர்தானே என்றான். இங்கே குறிப் பிடப்பட்ட நகரம் பெல்லா எனப்பட்ட நகரம். பின்னர் சோவார் என்று அது அழைக்கப்பட்டது. அது சோதோமிலிருந்து சில மைல் தூரத்திலிருந்து, அதைப்போலவே கெட்டுப்போய் அழிவிற்கென்று இருந்தது. ஆனால் அது விட்டுவிடப்பட வேண்டும் என்று கேட்டு, அது ஒரு சிறிய விண்ணப்பம் என்றும் அவன் வலியுறுத்தினான். அவனுடைய விருப்பம் அருளப்பட்டது. தேவன் நீ கேட்டுக் கொண்ட ஊரை நான் கவிழ்த்துப்போடாதபடிக்கு, இந்த விஷயத் திலும் உனக்கு அநுக்கிரகம் பண்ணினேன் என்று உறுதியளித்தார். ஓ, தவறு செய்கிற தமது கிரியைகள் மேல் தேவனுடைய கிருபை எவ்வளவு மகா பெரியது! PPTam 181.1

அக்கினிப்புயல் இன்னும் சற்று நேரமே தாமதிக்கப்படும் என்பதால், துரிதப்படும் படியானபவித்திரமான கட்டளை கொடுக் கப்பட்டது. ஆனாலும் தப்பியோடினவர்களில் ஒருவள் பின்னிட் டுப்பார்க்கும்படி துணிந்தாள். அவள் தேவனுடைய நியாயத்தீர்ப்பு களின் நினைவுச்சின்னம் ஆனாள். லோத்து தூதர்களின் எச்சரிப் புக்கு கீழ்ப்படியும்படி எவ்விதத் தயக்கத்தையும் வெளிக்காட்டாது, மன்றாட்டோ அல்லது எதிர்ப்போ போசாது, உண்மையாக மலைகளை நோக்கி ஓடியிருப்பானானால், அவன் மனைவியும் தப்பியிருப்பாள்; அவனுடைய உதாரணத்தின் தாக்கம் அவளுடைய அழிவை முத்திரையிட்ட பாவத்திலிருந்து அவளை காத்திருக்கும். ஆனால் அவளுடைய தயக்கமும் தாமதமும் தெய்வீக எச்சரிப்பை சாதாரணமாகக் கருதும்படி அவளை நடத்தியது. அவளுடைய சரீ ரம் சம் பூமியில் இருந்தபோதும், அவள் மனது சோதோமைப் பற்றிக்கொண்டிருந்தது. அவள் அதோடு அழிந்து போனாள். தேவனுடைய நியாயத்தீர்ப்புகள் அவளுடைய சொத்துக்களையும் அவனுடைய பிள்ளைகளையும் உள்ளடக்கியிருந்ததால், அவள் தேவனுக்கு விரோதமான கலகம் செய்தாள். அக்கிரமப் பட்டணத்திலிருந்து வெளியே அழைக்கப்பட்டதில் மிகுந்த தயவை பெற்றிருந்தபோதும் அநேக வருடங்களாக சேர்த்து வைத்திருந்த சொத்துக்கள் அழியும்படி விட்டுவிடப்பட்டதால் அவள் கடினமாக நடத்தப்பட்டதாக உணர்ந்தாள். விடுதலையை நன்றியோடு ஏற்றுக் கொள்ளுவதற்குப் பதிலாக தெய்வீக எச்சரிப்புகளை புறக்கணித்த வர்களின் வாழ்க்கையை விரும்பினவளாக துணிகரமாகத் திரும் பிப் பார்த்தாள். அவளுடைய ஜீவனைப் பாதுகாத்ததற்கு அவள் நன்றி காண்பிக்காததால், பிழைத்திருப்பதற்கு தகுதியற்றவள் என்று அவளுடைய பாவம் காட்டியது. PPTam 182.1

நம்முடைய இரட்சிப்பிற்கான தேவனுடைய கிருபையின் ஏற்பாடுகளை சாதாரணமாக நடத்துவதில் நாம் ஜாக்கிரதையாயிருக்கவேண்டும். என்னுடைய துணையும் பிள்ளைகளும் என் னோடு கூட இரட்சிக்கப்படாத பட்சத்தில் நான் இரட்சிக்கப்படு வதைக் குறித்து கவலைப்படவில்லை என்று சொல்லுகிற கிறிஸ்த வர்கள் இருக்கிறார்கள். தங்களுக்கு மிகவும் அன்பானவர்கள் இல்லாதபோது பரலோகம் பரலோகமாக இருக்காது என்று அவர்கள் உணருகிறார்கள். ஆனால் இந்த உணர்வில் விருப்பம் கொள்ளுகிறவர்கள், அவர் தங்களிடம் காண்பித்த மாபெரும் நன்மை மற்றும் கிருபையின் கண்ணோட்டத்தில் தேவனுடனுள்ள தங்களுடைய சொந்த உறவைக்குறித்த சரியான அறிவை கொண்டிருக்கிறார் களா? தங்கள் சிருஷ்டிகரும் மீட்பருமானவருடைய ஊழியத்தோடு பலமான அன்பு, கனம் மற்றும் உண்மை என்னும் கயிறுகளால் கட்டப்பட்டிருக்கிறோம் என்பதை அவர்கள் மறந்து போனார்களா? கிருபையின் அழைப்பு அனைவருக்கும் கொடுக்கப்படுகிறது. நம்முடைய நண்பர்கள் இரட்சகருடைய அன்பின் மன்றாட்டை புறக்கணிப்பதினாலே நாமும் திரும்பிவிடலாமா? ஆத்தும் மீட்பு அருமையாயிருக்கிறது. நம்முடைய இரட்சிப்பிற்காக கிறிஸ்து நித்தியமான கிரயத்தை செலுத்தியிருக்கிறார். இந்த மாபெரும் தியாகத்தின் மதிப்பைப் போற்றுகிற அல்லது ஆத்துமாவின் மதிப்பைப் போற்றுகிற ஒருவரும் மற்றவர்கள் அப்படிச் செய்வதி னாலே தேவனுடைய கிருபையின் அழைப்பை தள்ள மாட்டார்கள். அவருடைய நியாயமான உரிமைகளை மற்றவர்கள் பொருட்படுத்து வதில்லை என்கிற இதே உண்மை, தேவனை கனப்படுத்தி, அவருடைய அன்பை ஏற்றுக்கொள்ள யாரையெல்லாம் நடத்த முடியுமோ அவர்களை நடத்தி அதிக விழிப்பாயிருக்க நம்மை எழுப்ப வேண்டும். PPTam 182.2

லோத்து சோவாருக்குள் வரும் போது பூமியின் மேல் சூரியன் உதித்தது. காலை பிரகாசமான ஒளிக்கதிர்கள் சம்பூமியின் பட்டணங்களுக்கு செழிப்பையும் சமாதானத்தையுமே கூறுவதாகத் தோன்றியது. வீதிகளில் சுறுசுறுப்பான பரபரப்பு துவங்கியது. தங்கள் தொழிலை நோக்கியோ அல்லது அந்நாளின் இன்பத்தை நோக்கியோ மனிதர்கள் வெவ்வேறு பாதைகளில் போய்க்கொண்டிருந்தார்கள். மனபலம் குன்றின் வயதான மனிதனின் எச்சரிப்புகளையும் பயங்களையும் லோத்தின் மருமகன்கள் கேலி செய்து கொண்டிருந்தார்கள். சடிதியில், எதிர்பாராத விதத்தில், மேகமில் லாத வானத்திலிருந்து இடி இறங்குவது போல புயல் உண்டானது. PPTam 183.1

கர்த்தர் வானத்திலிருந்து கந்தகத்தையும் அக்கினியையும் அந்தப் பட்டணங்கள் மேலும் செழிப்பான சம் பூமியின் மேலும் வருஷித்தார். அதன் மாளிகைகள் மற்றும் கோயில்கள், விலையுயர்ந்த வீடுகள், தோட்டங்கள் மற்றும் திராட்சத்தோட்டங்கள், கடந்த இரவிலே பரலோகத்தூதுவர்களை அவமானப்படுத்தின இன்பம் தேடின அவலட்சணமான கூட்டம் எல்லாம் தகிக்கப்பட்டன. பெருந்தியின் புகை, மாபெரும் சூளையின் புகையைப்போல் மேலே சென்றது. அழகான சித்தீம் பள்ளத்தாக்கு இனி ஒருபோதும் கட்டப்படவும் குடியிருக்கவும் கூடாத கலகக்காரர்மேல் வரும் தேவனுடைய நியாயத்தீர்ப்புகளின் நிச்சயத்திற்கு அனைத்து தலைமுறைக்கும் சாட்சியாக பாழாக்கப்பட்டது. PPTam 183.2

சம்பூமியின் பட்டணங்களை அழித்துப்போட்ட தீயின் ஜூவா லைகள் நம்முடைய காலம் வரைக்கும் தங்களுடைய எச்சரிப்பின் வெளிச்சத்தை வீசுகின்றன. தேவனுடைய கிருபை, மீறுகிறவர்களை மிக நீண்டகாலம் பொறுத்திருந்தாலும், பாவத்தில் தாண்டிப் போகக்கூடாத ஒரு எல்லை மனிதனுக்கு இருக்கிறது என்கிற பயப்படக்கூடிய பவித்திரமான பாடத்தை நமக்குக் கற்பிக்கிறது. அந்த எல்லை எட்டப்படும் போது, கிருபையின் ஈவுகள் திரும்ப எடுத்துக்கொள்ளப்படும். நியாயத்தீர்ப்புகள் துவங்கும். PPTam 184.1

சோதோம், கொமோரா எந்தப் பாவங்களுக்காக அழிக்கப்பட்டதோ, அவைகளைக் காட்டிலும் மிகப்பெரிய பாவங்கள் இருக்கின்றன என்று உலகத்தின் மீட்பர் அறிவிக்கிறார். பாவிகளை மனந்திரும்புதலுக்கு அழைக்கிற சுவிசேஷத்தைக் கேட்டு கவனிக் காதவர்கள், சித்திம் பள்ளத்தாக்கில் வசித்தவர்களை விடவும் தேவனுக்கு முன்பாக அதிக குற்றவாளிகளாக இருக்கிறார்கள், தேவனை அறிந்தும், அவருடைய கற்பனைகளை கைக்கொள்ளு கிறோமென்று சொல்லியும், தங்களுடைய குணத்திலும் அன்றாட வாழ்க்கையிலும் கிறிஸ்துவை மறுதலிக்கிறவர்களுடைய பாவம் இன்னமும் பெரியதாயிருக்கிறது. சோதோமின் முடிவு இரட்ச கருடைய எச்சரிப்பின் வெளிச்சத்தில், துணிகரமான பாவங்களைக் குறித்த குற்றமுள்ளவர்களுக்கு மாத்திரமல்ல, பரலோகம் அனுப்புகிற வெளிச்சத்தையும் வாய்ப்புகளையும் அற்பமாக எண் ணுகிற அனைவருக்குமான பவித்திரமான கண்டனமாக இருக் கிறது. PPTam 184.2

உண்மையுள்ள சாட்சி எபேசு சபைக்கு ஆனாலும், நீ ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டாய் என்று உன் பேரில் எனக்குக் குறை உண்டு. ஆகையால், நீ இன்ன நிலைமையிலிருந்து விழுந்தாயென்பதை நினைத்து, மனந்திரும்பி, ஆதியில் செய்த கிரியைகளைச் செய்வாயாக; இல்லாவிட்டால் நான் சீக்கிரமாய் உன்னிடத்தில் வந்து, நீ மனந்திரும்பாத பட்சத்தில், உன் விளக்குத் தண்டை அதனிடத்தினின்று நீக்கிவிடுவேன் (வெளி 2.4, 5 என் கிறார். வழிதப்பிப்போய் துன்பப்படுகிற மகனை மன்னிக்க பெற்றோரை அசைக்கும் இளகிய மனவுருக்கத்தைவிடவும் அதிகமான மனவுருக்கத்தோடு, தாம் அளிக்கும் அன்பு மற்றும் மன்னிப்பின் ஈவுகளுக்கான பதிலுக்காக இரட்சகர் காத்திருக்கிறார். வழிதப்பி அலைகிறவனை பின்னால் என்னிடத்திற்குத் திரும்புங்கள், அப்பொழுது உங்களிடத்திற்குத் திரும்புவேன் (மல்கியா 37) என்று அவர் கதறுகிறார். ஆனால் தவறு செய்கிறவன், இரக்கத்தோடும் இளகிய அன்போடும் தன்னை அழைக்கிற சத்தத்தை கவனிக்க தொடர்ந்து மறுக்கும் போது, அவன் முடிவாக இருளில் விடப்படு வான். தேவனுடைய கிருபையை நீண்ட காலம் அற்பமாக எண்ணு கிற இருதயம் பாவத்தில் கடினப்படுகிறது. அதன்பின் அது தேவனுடைய கிருபையின் செல்வாக்கினால் பாதிக்கப்படுவதில்லை. மன்றாடுகிற இரட்சகர் : எப்பிராயீம் விக்கிரகங்களோடு இணைந் திருக்கிறான், அவனைப் போகவிடு (ஓசியா 4:17) என்று கடைசி யாக அறிவிக்கிற ஆத்துமாவின் அழிவு பயங்கரமாயிருக்கும். கிறிஸ்துவினுடைய அன்பை அறிந்தும், பாவ உலகத்தின் இன்பங்களை அனுபவிப்பதைத் தெரிந்துகொள்ள திரும்புகிறவர்களைக் காட்டிலும், நியாயத்தீர்ப்பு நாளிலே சமபூமியின் பட்டணங்களுக்கு நேரிடுவது இலகுவாயிருக்கும். PPTam 184.3

கிருபையின் அழைப்பை அற்பமாக எண்ணுகிறவர்களே, பரலோகப் புத்தகங்களிலே உங்களுக்கு எதிராக சேர்ந்து கொண்டிருக்கிறவைகளின் நீண்ட வரிசையை நினைத்துப் பாருங்கள். தேசங்கள், குடும்பங்கள் மற்றும் தனிப்பட்டவர்களின் பக்தியற்ற நிலை குறித்த ஆவணம் அங்கே வைக்கப்பட்டிருக்கிறது. கணக்கு போய்க்கொண்டிருக்கும் போது தேவன் நீடிய பொறுமையாக இருக்கலாம், மனந்திரும்புவதற்கான அழைப்புகளும், மன்னிப் பின் ஈவுகளும் கொடுக்கப்படலாம். என்றாலும், கணக்கு நிறை வடையும் நேரம், ஆத்துமா தனது தீர்மானத்தை எடுக்கும் நேரம், தனது சொந்த தெரிந்தெடுப்பினால் மனிதனுடைய முடிவு நிர் ணயிக்கப்படும் நேரம் வரும். அப்போது நியாயத்தீர்ப்பைச் செயல்படுத்தும்படி குறிப்பு கொடுக்கப்படும். PPTam 185.1

இன்றைய மத உலகின் நிலையில் எச்சரிப்படைவதற்கான கார ணம் இருக்கிறது. தேவனுடைய கிருபை அற்பமாக எண்ணப்பட்டிருக்கிறது. திரளானவர்கள் : மனுஷருடைய கற்பனைகளை உப தேசங்களாகப் போதித்து (மத். 159) யெகோவாவின் கற்பனையை செல்லாததாக்கிக்கொண்டிருக்கிறார்கள். நம்முடைய நாட்டிலே அநேக சபைகளில் பற்றில்லாத நிலை இருக்கிறது. வேதாகமத்தை வெளிப்படையாக மறுதலிக்கிற பற்றில்லாத நிலை அல்ல. கிறிஸ்தவம் என்னும் ஆடையைப் போர்த்தியிருந்து, தேவ னுடைய வெளிப்பாடுதான் வேதாகமம் என்கிறதை வலுவற்றதாக்கு கிற நம்பிக்கையின்மை இருக்கிறது. ஆர்வத்தோடு கூடிய பக்தி, முக்கியமான தெய்வபக்தி, வெறுமையான சம்பிரதாயத்திற்கு மாறிப்போனது. விளைவாக விசுவாசத்துரோகமும் புலன் இன்பமும் மேற்கொண்டிருக்கிறது. கிறிஸ்து லோத்தினுடைய நாட்களில் நடந்தது போலவும் ... மனுஷகுமாரன் வெளிப்படும் நாளிலும் அப்படியே நடக்கும் (லூக்கா 17:28, 30) என்று அறி வித்தார். நடைபெறும் சம்பவங்களின் சான்றாக, ஆவணங்கள் அவருடைய வார்த்தையின் நிறைவேறுதலுக்கு சாட்சி பகருகிறது. உலகம் அழிவதற்காக வேகமாக முதிர்ந்து கொண்டிருக்கிறது. விரைவில் தேவனுடைய நியாயத்தீர்ப்புகள் ஊற்றப்பட்டு, பாவமும் பாவிகளும் அழிக்கப்படவிருக்கின்றனர். PPTam 185.2

இரட்சகர் உங்கள் இருதயங்கள் பெருந்திண்டியினாலும் வெறியினாலும் லவுகீக கவலைகளினாலும் பாரமடையாதபடிக் கும், நீங்கள் நினையாத நேரத்தில் அந்த நாள் உங்கள் மேல் வராத படிக்கும் எச்சரிக்கையாயிருங்கள். பூமியிலெங்கும் குடியிருக்கிற அனைவர் மேலும் அது ஒரு கண்ணியைப்போல வரும் என்று கூறி னார். இந்த உலகத்தின் மேல் தங்களுடைய விருப்பங்களை வைத் திருக்கிற அனைவர்மேலும் வரும். ஆகையால் இனிச்சம்பவிக்கப் போகிற இவைகளுக்கெல்லாம் நீங்கள் தப்பி, மனுஷகுமாரனுக்கு முன்பாக நிற்கப் பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு, எப் பொழுதும் ஜெபம் பண்ணி விழித்திருங்கள் என்றார். லூக்கா 21:34 - 36. PPTam 186.1

சோதோமின் அழிவுக்கு முன்பு: உன் ஜீவன் தப்ப ஓடிப்போ, பின்னிட்டுப் பாராதே, இந்தச் சம்பூமியில் எங்கும் நில்லாதே, நீ அழியாதபடிக்கு மலைக்கு ஓடிப்போ என்ற செய்தியை தேவன் லோத்துவுக்கு அனுப்பினார். அதே எச்சரிப்பின் சத்தம். எருசலேம் சேனைகளால் சூழப்பட்டிருப்பதை நீங்கள் காணும் போது, அதின் அழிவு சமீபமாயிற்றென்று அறியுங்கள். அப்பொழுது யூதேயாவி லிருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகவும்,... கடவர்கள் (லூக்கா 21:20, 21) என்று எருசலேமின் அழிவிற்கு முன்கிறிஸ்துவின் சீஷர்களால் கேட்கப்பட்டது. அவர்கள் தங்களுடைய சொத் துக்களில் எதையாகிலும் பாதுகாக்கலாம் என்று தாமதிக்கக்கூடாது. மாறாக, தப்புவதற்கான மிகச்சிறந்த வாய்ப்புகளை ஏற்படுத்தவேண்டும். ஜீவனுக்காக தப்பிக்கிற, வெளியே வருகிற, துன்மார்க்கரிட மிருந்து தீர்மானமாகப் பிரிகிற ஒன்று இருந்தது. அப்படியே நோவா வின் காலத்திலிருந்தது ; லோத்துவின் காலத்திலும் இருந்தது; எருசலேமின் அழிவிற்கு முன் சீஷர்களிடமும் அப்படியே இருந்தது; கடைசி நாட்களிலும் அப்படியே இருக்கும். நிலவியிருக்கிற அக்கிரமத்திலிருந்து தங்களை பிரிக்கும்படி தமது ஜனங்களை அழைக்கிற தேவனுடைய சத்தம் மீண்டும் எச்சரிப்பின் செய்தியில் கேட்கப்படுகிறது. PPTam 186.2

பாபிலோனைக் குறித்த தரிசனத்தில், கடைசி நாட்களில் உலகிலே இருக்கப்போகிற சீர்கேடு மற்றும் மத்துரோகங்களின் நிலை, நீ கண்ட ஸ்திரீயானவள் பூமியின் ராஜாக்கள் மேல் ராஜ்ய பாரம் பண்ணுகிற மகா நகரமேயாம் (வெளி. 17:18) என்று யோவான் தீர்க்கதரிசிக்குக் காட்டப்பட்டது. அதன் அழிவுக்கு முன்பாக என் ஜனங்களே, நீங்கள் அவளுடைய பாவங்களுக்கு உடன்படாமலும், அவளுக்கு நேரிடும் வாதைகளில் அகப்படாமலும் இருக்கும் படிக்கு அவளை விட்டு வெளியே வாருங்கள் (வெளி. 18:4) என்கிற அழைப்பு பரலோகத்திலிருந்து கொடுக்கப்பட வேண்டும். நோவா மற்றும் லோத்துவின் நாட்களைப்போல பாவம் மற்றும் பாவிகளிடமிருந்து குறிப்பான பிரிவு நடக்கவேண்டும் தேவனுக்கும் உலகத்துக்குமிடையே எந்த சமரச மும், உலக பொக்கிஷங்களை பாதுகாக்க எந்த பின் நோக்கிச் செல் லுதலும் இருக்கமுடியாது . தேவனுக்கும் உலகப் பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களால் கூடாது - மத். 6:24. PPTam 187.1

சித்தீம் பள்ளத்தாக்கில் குடியிருந்தவர்களைப்போலவே, மக்கள் செழிப்பையும் சமாதானத்தையுங்குறித்து கனவு காண்கிறார்கள். உன் ஜீவன் தப்ப ஓடிப்போ என்கிற தேவனுடைய தூதர்களிட மிருந்து வரும் எச்சரிப்பு . ஆனால், தூண்டப்படவேண்டியதில்லை, எச்சரிப்படைய எந்த காரணமும் இல்லை என்கிற மற்ற சத்தங்கள் கேட்கப்படுகின்றன. வேகமான அழிவு, மீறுகிறவன்மேல் வர விருக்கிறது என்று பரலோகம் அறிவித்துக்கொண்டிருக்கும் போது, திரளானவர்கள் சமாதானமும் சவுக்கியமும் என்று கூறிக்கொண்டிருப்பார்கள். தங்களுடைய அழிவுக்கு முந்தைய இரவிலே, சம்பூமியின் பட்டணங்கள் இன்பத்தில் கலகம் செய்து, தேவனுடைய தூதுவர்களின் பயங்களையும் எச்சரிப்புகளையும் ஏளனம் செய்தது. ஆனால் அந்த பரியாசக்காரர்கள் அக்கினி ஜூவாலையில் அழிந்து போனார்கள். அந்த இரவில் தானே, சோதோமின் துன் மார்க்கமான கவலையற்ற மக்களுக்கு கிருபையின் கதவு என்று மாக மூடப்பட்டது. தேவன் எப்போதும் தம்மை பரியாசம் பண்ண விடுவதில்லை; அவரை அதிக காலம் அற்பமாக எண்ண முடியாது. இதோ, தேசத்தைப் பாழாக்கி, அதின் பாவிகளை அதிலிருந்து அழிப்பதற்காகக் கர்த்தருடைய நாள் கடூரமும், மூர்க்கமும், உக் கிரகோபமுமாய் வருகிறது ஏசா. 139. உலகத்தின் மாபெரும் கூட்டம் தேவனுடைய கிருபையை நிராகரித்து, வேகமான திரும்ப பெறக்கூடாத அழிவினால் மூழ்கடிக்கப்படும். ஆனால் எச்சரிப்பை கவனிக்கிறவன். உன்னதமானவரின் மறைவில் வசிப்பான். சர்வ வல்லவருடைய நிழலில் தங்குவான். அவருயை சத்தியம் அவனுக்கு பரிசையும் கேடகமுமாயிருக்கும். அவர்களுக்குத்தான் : நீடித்த நாட்களால் அவனைத் திருப்தியாக்கி, என் இரட்சிப்பை அவனுக் குக் காண்பிப்பேன் (சங். 91:14, 16) என்ற வாக்குத்தத்தம். PPTam 187.2

லோத்து குறுகிய காலமே சோவாரில் வசித்திருந்தான். சோதோ மைப் போலவே அங்கும் அக்கிரமம் நிலவியது. அந்தப் பட்டண மும் அழிக்கப்படும் என்று அங்கே தங்கியிருக்க பயந்தான் கொஞ்ச காலத்தில் தேவன் தீர்மானித்திருந்தபடி சோவாரும் அழிக்கப்பட்டது. லோத்து மலைகளுக்குப்போய், எதற்காக அந்தத் துன் மார்க்கமான பட்டணத்தின் செல்வாக்கிற்கு தன் குடும்பத்தை உட் படுத்த துணிந்திருந்தானோ, அவையெல்லாவற்றையும் இழந்த வனாக ஒரு குகையிலே தங்கியிருந்தான். ஆனால் சோதோமின் சாபம் அங்கேயும் அவனைத் தொடர்ந்தது அவனுடைய குமாரத்தி களின் பாவ நடக்கை, அந்த மிகவும் இழிவான இடத்தினுடைய தோழமையின் விளைவாக இருந்தது. அதனுடைய சன்மார்க்க சீர்கேடு, அவர்களுடைய குணங்களோடு பின்னிப்பிணைந்திருந்ததால், நன்மைக்கும் தீமைக்குமிடையே பகுத்தறிய அவர்களால் முடியவில்லை . லோத்தினுடைய மீந்த சந்ததியாரானமோவாபியரும் அம்மோனியரும் இழிவான விக்கிரகவணக்கம் செய்த கோத்திரங்களும், தேவனுக்கு எதிராகக்கலகம் செய்தவர்களும் அவருடைய ஜனத்துக்கு கசப்பான எதிரிகளுமாயிருந்தார்கள். PPTam 188.1

ஆபிரகாமின் வாழ்கையைவிட லோத்துவின் வாழ்க்கை எவ் வளவு மாறுபட்டிருக்கிறது! ஒரு காலத்தில் தோழர்களாக ஒரே பலி பீடத்தில் ஆராதனை செய்து, தங்களுடைய யாத்திரீக் கூடாரங்களில் பக்கம் பக்கமாக குடியிருந்தார்கள். இப்போது எவ்வளவு தூரம் பிரிக்கப்பட்டிருக்கிறார்கள் ! அதன் இன்பத்திற்காகவும் இலாபத்திற்காகவும் லோத்து சோதோமை தெரிந்து கொண்டான். ஆபிரகாமின் பலிபீடத்தையும், ஜீவனுள்ள தேவனுக்குக் கொடுக்கப்பட்ட அனு தினபலிகளையும் விட்டு, சீர்கேடும், விக்கிரகவணக்கமுங்கொண்ட ஐனத்தோடு கலக்கும்படி அவன் தன் பிள்ளைகளை அனுமதித்தான். என்றாலும், தன் இருதயத்தில் தேவபயத்தை தக்கவைத்திருந்தான். வேதவாக்கியங்களில் நீதியுள்ள மனிதனாக அவன் அறிவிக்கப்படு கிறான். நீதியுள்ள அவனுடைய ஆத்துமா, தனது காதுகளை அனு தினமும் வாழ்த்தின் இழிவான பேச்சுக்களாலும், தடுக்கவல்லமை யற்றிருந்த கொடுமையான குற்றங்களாலும் வாதிக்கப்பட்டது. PPTam 188.2

அவன் கடைசியாக, அக்கினியினின்று தப்பு விக்கப்பட்ட கொள்ளி (சக . 3:2) யாக காப்பாற்றப்பட்டான். என்றபோதும், சொத்துக்களை இழந்து, மனைவி பிள்ளைகளை இழந்து, தனது வயதான காலத்தில் அபகீர்த்தியினால் மூடப்பட்டவனாக காட்டு மிருகங்களைப் போல குகைகளில் வசித்து, உலகத்துக்கு நீதியுள்ள இனத்தையல்ல, மாறாக, இரண்டு ஜாதிகளை தேவனைப் பகைத்து, தங்களது அக்கிரமத்தின் பாத்திரம் நிரம்பி அழிவுக்கு நியமிக் கப்படும் வரையிலும் விக்கிரக வணக்கம் செய்த இரண்டு ஜாதிகளைக் கொடுத்தான். ஞானமில்லாத ஒரு அடியை பின்தொடர்ந்ததன் விளைவுகள் எவ்வளவு பயங்கரமானவைகள்! PPTam 189.1

ஐசுவரியவானாக வேண்டுமென்று பிரயாசப்படாதே, சுயபுத்தி யைச் சாராதே. பொருளாசைக்காரன் தன் வீட்டைக் கலைக்கிறான்; பரிதானங்களை வெறுக்கிறவனோ பிழைப்பான் (நீதி. 23:4; 15:27) என்று ஞானி சொல்லுகிறான். அப்போஸ்தலனாகிய பவுல் : ஐசு வரியவான்களாக விரும்புகிறவர்கள் சோதனையிலும் கண்ணியிலும், மனுஷரைக் கேட்டிலும் அழிவிலும் அமிழ்த்துகிற மதி கேடும் சேதமுமான பலவித இச்சைகளிலும் விழுகிறார்கள் (1தீமோ 6:9) என்று அறிவிக்கிறான். PPTam 189.2

லோத்து சோவாருக்குள் நுழைந்தபோது, தன்னை அக்கிரமத் திலிருந்து விலக்கவும், தன் குடும்பத்தாரை தனக்குப்பின் வர கட்டளையிடவும் நினைத்திருந்தான். ஆனால் குறிப்பிடக்கூடிய அளவு அவன் தோற்றுப்போனான். அவனைச் சுற்றியிருந்த, சீர்கேடடையச் செய்யும் செல்வாக்கு, அவனுடைய சொந்த விசு வாசத்தையும் பாதித்திருந்தது அவனது பிள்ளைகள் சோதோமின் குடிகளோடு கொண்டிருந்த தொடர்பு அவர்களுடைய விருப்பங்களை அப்பட்டணத்தாரின் விருப்பத்தோடு ஓரளவு கட்டியிருந்தது. அதன் விளைவு நம் முன் இருக்கிறது. PPTam 189.3

அநேகர் அதே தவறைச் செய்கிறார்கள். ஒரு வீட்டைத் தேர்ந் தெடுக்கும்போது, தங்களையும் தங்கள் குடும்பங்களையும் சூழ்ந் திருக்கும் சன்மார்க்க சமுதாய செல்வாக்குகளைக்காட்டிலும், தாங்கள் அடையக்கூடிய தற்காலிக சாதகங்களை அதிகமாக பார்க் கிறார்கள். அழகான செழிப்பான நாட்டை தெரிந்தெடுக்கிறார்கள். அல்லது அதிகமான செழிப்பை அடையும் நம்பிக்கையில், செழித் துக்கொண்டிருக்கிற சில பட்டணங்களுக்கு இடம் நகருகிறார்கள். ஆனால் அவர்கள் பிள்ளைகள் சோதனைகளால் சூழப்பட்டிருக் கிறார்கள். பக்திவிருத்திக்கும், சரியான குணங்கள் உருவாகுவதற்கும் சாதகமற்ற தோழமைகளை பலவேளைகளில் அவர்கள் உண்டாக்குகிறார்கள். சன்மார்க்க தளர்வு, அவிசுவாசம், ஆவிக்குரிய காரியங்களில் எண்ணமின்மை போன்ற சூழ்நிலை, பெற்றோர்களின் செல்வாக்கை தடுக்கும் இயல்பைக் கொண்டிருக்கிறது. பெற்றோ ருக்கு மற்றும் தெய்வீக அதிகாரத்துக்கு எதிரான கலகத்தின் உதார ணங்கள் எப்போதும் வாலிபர்முன் இருக்கின்றன. தேவபக்தி யற்றவர்களோடும் அவிசுவாசிகளோடும் இணைப்புகளை ஏற்படுத்தி, அநேகர் தேவனுடைய சத்துருவின் பக்கம் தள்ளப்படு கிறார்கள். PPTam 189.4

ஒரு வீட்டைத்தெரிந்தெடுக்கும் போது, நம்மையும் நம்முடைய குடும்பங்களையும் சூழ்ந்திருக்கும் சன்மார்க்க மற்றும் ஆவிக்குரி தாக்கங்களை நாம் முதலாவது கருத்தில் கொள்ள வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். நாம் சோதனையான இடங்களில் வைக் கப்படலாம். ஏனெனில் அநேகர் தாங்கள் விரும்புகிற சூழ்நிலை களில் வைக்கப்பட முடியாது. எப்போதெல்லாம் கடமை அழைக் கிறதோ, கிறிஸ்துவின் கிருபையை நம்பினவர்களாக காத்திருந்து ஜெபிக்கும் போது, அப்போதெல்லாம் களங்கமற்றவர்களாக நிற்க தேவன் நம்மைத் தகுதிப்படுத்துவார். ஆனால் கிறிஸ்தவ குணம் உருவாக சாத்தியமற்ற செல்வாக்குகளுக்கு நாம் நம்மைத் தேவையின்றி வெளிக்காட்டக்கூடாது. உலகம் மற்றும் அவிசுவாச சூழ்நிலைகளில் நம்மை வலிய வைக்கும் போது. நாம் தேவனுக்கு அதிருப்தியூட்டி, பரிசுத்த தூதர்களை நம்முடைய இல்லங்களிலிருந்து விரட்டுகிறோம். PPTam 190.1

நித்தியத்துக்கடுத்த விருப்பங்களை தியாகம் செய்து, தங்கள் பிள்ளைகளுக்கு உலக செல்வத்தையும் கனத்தையும் சம்பாதிக் கிறவர்கள், முடிவில் இந்த சாதகங்கள் பயங்கரமான நஷ்டமாயிருப்பதை காண்பார்கள். லோத்துவைப்போல, அநேகர் தங்கள் பிள்ளைகள் பாழாக்கப்பட்டதைக் காண்கிறார்கள். தங்கள் ஆத்துமாக்களையும் காப்பாற்றுவதில்லை. அவர்களுடைய வாழ்க் கையின் வேலை தொலைந்துபோனது ; அவர்களுடைய வாழ்க்கை துக்கமான தோல் வியாயிருக்கிறது; மெய்யான ஞானத்தை பழக்கப்படுத்தியிருப்பார்களானால், அவர்களுடைய பிள்ளைகள் உலக செல்வத்தை கொஞ்சமாகப் பெற்றிருக்கலாம். ஆனால் நித்தியமான சுதந்தரத்திற்கு நிச்சயமாக தகுதியடைந்திருப்பார்கள். PPTam 190.2

தேவன் தமது மக்களுக்கு வாக்குப் பண்ணியிருக்கிற பரம் பரை சொத்து இந்த உலகத்தில் இல்லை . ஆபிரகாம் இந்த பூமியிலே ஒரு உடைமையையும் கொண்டிருக்கவில்லை. ஒரு அடி நிலத் தையாகிலும் அவனுடைய கையாட்சிக்குக் கொடாமலிருக்கையில் (அப். 7:5) மிக அதிகமான பொருட்கள் அவனிடம் இருந்தது. அதை தேவ மகிமைக்காகவும், தன் சக மனிதர்களின் நன்மைக்கா கவும் அவன் உபயோகித்தான். விக்கிரகாராதனைக்காரரான அவனுடைய நாட்டு மக்களை விட்டு வரும்படி நித்திய சுதந்திரமாக கானான் தேசத்தைத் தரும் வாக்குறுதியோடு ஆண்டவர் அவனை அழைத்தார். என்றாலும், அவனாவது, அவன் குமாரனாவது, குமாரனின் குமாரனாவது, அதைப் பெறவில்லை . தனது மரித்தவர் களுக்காக கல்லறை இடம் வேண்டும் என்ற போது, கானானியர் களிடமிருந்து அதை விலை கொடுத்து வாங்க வேண்டியதிருந்தது. வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தில் அவனுடைய ஒரே சம்பத்து, மக்பேலாவின் குகையிலிருந்து குடைந்தெடுக்கப்பட்ட கல்லறையே. PPTam 190.3

ஆனாலும் தேவனுடைய வார்த்தை தவறவில்லை . யூதர்கள் கானானை ஆக்கிரமித்ததோடு அதன் முடிவான நிறைவேறுதல் நிகழவில்லை. ஆபிரகாமுக்கும் அவனுடைய சந்ததிக்கும் வாக்குத் தத்தங்கள் பண்ணப்பட்டன. கலா. 3:16. ஆபிரகாம் தானும் சுதந்திர வீதத்தை பகிர்ந்து கொள்ளவேண்டியனாயிருந்தான். தேவனுடைய வாக்குத்தத்தத்தின் நிறைவேறுதல் நீண்டகாலம் தாமதப்படுத்தப்பட்டது போலத் தோன்றலாம். ஏனெனில் கர்த்தருக்கு ஒரு நாள் ஆயிரம் வருஷம் போலவும், ஆயிரம் வருஷம் ஒருநாள் போலவும் (2பேதுரு 3:8) இருக்கிறது. அது தாமதிப்பது போலக் காணப்பட லாம். ஆனால் குறித்த காலத்தில், அது நிச்சயமாய் வரும், அது தாமதிப்பதில்லை (ஆபகூக் 23) ஆபிரகாமுக்கும் அவன் வித்துக் கும் கொடுக்கப்பட்ட ஈவு கானானை மாத்திரமல்ல, முழு உலகத்தையும் உள்ளடக்கியிருந்தது. அப்போஸ்தலன் : உலகத்தைச் சுதந்தரிப்பான் என்கிற வாக்குத்தத்தம் ஆபிரகாமுக்காவது அவன் சந்ததிக்காவது நியாயப்பிரமாணத்தினால் கிடையாமல் விசுவாசத் தினால் வருகிற நீதியினால் கிடைத்தது (ரோமர் 4:13) என்கிறான். மேலும் ஆபிரகாமுக்குக் கொடுக்கப்பட்ட வாக்குத்தத்தங்கள் கிறிஸ்துவின் வழியாக நிறைவேற வேண்டும் என்று வேதாகமம் தெளிவாக போதிக்கிறது. கிறிஸ்துவினுடைய அனைவரும், பாவத்தின் சாபத்திலிருந்து விடுபட்ட, அழியாததும் மாசற்றதும் வாடாததுமாகிய சுதந்தரத்திற்கேதுவாக ஆபிரகாமின் சந்ததி யாராயும், வாக்குத்தத்தத்தின்படியே சுதந்தரராயும் இருக்கிறார்கள், (கலா. 3:29; 1 பேதுரு 1:4). ஏனெனில், வானத்தின் கீழெங்குமுள்ள ராஜ்யங்களின் ராஜரிகமும் ஆளுகையும் மகத்துவமும் உன்னதமானவருடைய பரிசுத்தவான்களாகிய ஜனங்களுக்குக் கொடுக்கப்படும் சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள். தானி . 7:27; சங்.37:11. PPTam 191.1

தேவன் ஆபிரகாமுக்கு அழியாத சுதந்தரத்தினுடைய காட்சி யைக் கொடுத்தார். அவன் அந்த நம்பிக்கையில் திருப்தியடைந்தான். PPTam 192.1

விசுவாசத்தினாலே அவன் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திலே பரதேசியைப்போலச் சஞ்சரித்து, அந்த வாக்குத்தத்தத் திற்கு உடன் சுதந்தராகிய ஈசாக்கோடும் யாக்கோபோடும் கூடாரங்களிலே குடியிருந்தான், ஏனெனில், தேவன் தாமே கட்டி உண்டாக் கின அஸ்திபாரங்களுள்ள நகரத்துக்கு அவன் காத்திருந்தான். எபி. 11:9,10. PPTam 192.2

ஆபிரகாமின் சந்ததியைக் குறித்து: இவர்களெல்லாரும், வாக் குத்தத்தம் பண்ணப்பட்டவைகளை அடையாமல், தூரத்திலே அவைகளைக் கண்டு, நம்பி அணைத்துக்கொண்டு, பூமியின் மேல் தங்களை அந்நியரும் பரதேசிகளும் என்று அறிக்கையிட்டு, (வச. 13) என்று எழுதப்பட்டிருக்கிறது. மேன்மையான பரமதேசத்தையே (வச. 16) அடைய வேண்டுமானால், இங்கே பரதேசிகளும் அந் நியர்களுமாக நாம் வாழவேண்டும். ஆபிரகாமின் பிள்ளைகள், அவன் நோக்கியிருந்த தேவன்தாமே கட்டி உண்டாக்கின் பட்டணத்தைத் தேடுவார்கள். PPTam 192.3