Go to full page →

17 - தப்பித்து, வேறு நாட்டிற்கு ஓடின் யாக்கோபு PPTam 211

ஏசாவின் கோபத்தால் கொலை செய்யப்படுவான் என்று பய முறுத்தப்பட்டு, யாக்கோபு தன் தகப்பன் இல்லத்திலிருந்து தப்பி ஓடினான். என்றாலும் தன்னோடு தகப்பனுடைய ஆசீர்வாதங்களைச் சுமந்து சென்றான். உடன்படிக்கையின் வாக்குத்தத்தத்தை அவனி டம் புதுப்பித்து, அதன் சுதந்தரவாளியாக, மெசபத்தோமியாவி லிருந்த தன் தாயின் குடும்பத்திலிருந்து தனக்கு ஒரு பெண்ணைக் கொள்ளும்படி ஈசாக்கு அவனுக்கு உத்தரவு கொடுத்தான். என்ற போதும், ஆழமாக கலங்கின இருதயத்தோடுதான் யாக்கோபு தனது தனிமையான பிரயாணத்தைத் துவங்கினான். கையில் தன் னுடைய கோலை மட்டும் வைத்தவனாக, காட்டுத்தனமான நாடோடி கோத்திரங்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த தேசத்தின் வழியாக நூற்றுக்கணக்கான மைல்கள் அவன் பயணம் செய்ய வேண்டும். தன்னுடைய வருத்தத்திலும் பயத்திலும், கோபங் கொண்ட தன் சகோதரனால் கண்டுபிடிக்கப்பட்டு விடாதபடி, மனிதர்களை தவிர்க்க அவன் நாடினான். தேவன் தனக்குக் கொடுக்க எண்ணியிருந்த ஆசீர்வாதங்களைத்தான் என்றைக்குமாக இழந்துவிட்டோமோ என்று அவன் பயந்தான். அவன்மேல் சோதனையைக் கொண்டுவரும்படி சாத்தான் அவன் அருகில் இருந்தான். PPTam 211.1

இரண்டாம் நாளின் மாலை நேரம் அவன் தன் தகப்பன் வீட்டைவிட்டு வெகுதூரம் சென்றிருந்தான். தான் புறம்பே தள்ளப் பட்டவனாக உணர்ந்தான். இந்த வேதனையனைத்தும் அவனுடைய தவறான வழியினால் அவன் மேல் கொண்டுவரப்பட்டது என்ப தையும் அவன் அறிந்திருந்தான். விரக்தியின் இருள் அவன் ஆத்து மாவை நெருக்கியது. ஜெபிக்கவும் அவன் தைரியமற்றிருந்தான். என்றாலும் முற்றிலும் தனிமையாயிருந்ததால் இதற்கு முன் ஒருபோதும் உணர்ந்திராதவிதத்தில் தேவனிடமிருந்து வரும் பாதுகாப்பின் அவசியத்தை அவன் உணர்ந்தான். அழுகையோடும் ஆழ்ந்த தாழ்மையோடும் தன் பாவத்தை அறிக்கை செய்து, தான் முற்றிலுமாக கைவிடப்படவில்லை என்கிற சில சான்றுகளுக்காக கெஞ்சினான். இன்னமும் பாரமான அவன் மனது எந்த விடுதலை யையும் பெறவில்லை. தன்மேலிருந்த அனைத்து நம்பிக்கையையும் இழந்தான். தன் பிதாக்களின் தேவன் தன்னை உதறிவிட்டதாக அவன் பயப்பட்டான். PPTam 212.1

ஆனால் தேவன் யாக்கோபை தள்ளிவிடவில்லை. தவறுகின்ற நம்பிக்கையுள்ள தம்முடைய ஊழியக்காரனுக்கு அவருடைய கிருபை இன்னும் நீட்டப்பட்டது. அவன் பாவஞ் செய்திருந்தான். என்றாலும், தேவனுடைய தயவில் மறுபடியும் நிறுத்தப்படு வதற்கான வழி வெளிப்படுத்தப்பட்டபோது, அவனுடைய இரு தயம் நன்றியால் நிறைந்தது. PPTam 212.2

பிரயாணத்தினால்களைப்படைந்து, அலைந்து கொண்டிருந்த அவன் ஒரு கல்லைத் தலைக்கு வைத்து தரையில் படுத்தான். தூங்கினபோது. அவன் ஒரு ஏணியைக் கண்டான். பிரகாசமும் பள பளப்புமான அதன் அடிப்பாகம் தரையில் இருக்க, அதன் மேல் பகுதி பரலோகத்தை எட்டினது. இந்த ஏணியின் மேல் தூதர்கள் ஏறிக்கொண்டும் இறங்கிக்கொண்டும் இருந்தார்கள். மேலே மகி மையின் ஆண்டவர் இருந்தார். பரலோகங்களிலிருந்து, நான் உன் தகப்பனாகிய ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனுமாகிய கர்த்தர்; நீ படுத்திருக்கிற பூமியை உனக்கும் உன் சந்ததிக்கும் தரு வேன் என்று அவருடைய சத்தம் கேட்கப்பட்டது. துரத்தப்பட்ட வனாகவும், தப்பியோடுகிறவனுமாக இருந்த அவன் படுத்திருந்த தேசம், அவனுக்கும் அவனுடைய சந்ததிக்கும் உனக்குள்ளும் உன் சந்ததிக்குள்ளும் பூமியின் வம்சங்களெல்லாம் ஆசீர்வதிக்கப்படும் என்ற நிச்சயத்தோடு வாக்குப்பண்ணப்பட்டது. இந்த வாக்குத்தத்தம் ஆபிரகாமிற்கும் ஈசாக்கிற்கும் கொடுக்கப்பட்டது. இப்போது அது யாக்கோபிற்கு புதுப்பிக்கப்பட்டது. பின்னர் இப்போதைய துய ரத்தையும் தனிமையையும் விசேஷமாக கருத்தில் கொண்டு, நான் உன்னோடே இருந்து, நீ போகிற இடத்திலெல்லாம் உன்னைக் காத்து, இந்தத் தேசத்துக்கு உன்னைத் திரும்பிவரப்பண்ணுவேன். நான் உனக்குச் சொன்னதைச் செய்யுமளவும் உன்னைக் கைவிடு வதில்லை என்ற ஆறுதலான உற்சாகமான வார்த்தைகள் கூறப் பட்டன. PPTam 212.3

யாக்கோபை சூழவிருக்கிற தீய செல்வாக்குகளையும் அவன் வெளிப்படுத்தப்படப்போகிற ஆபத்துகளையும் ஆண்டவர் அறிந்திருந்தார். தன்னைக்குறித்த தெய்வீக நோக்கத்தை அவன் புரிந்து கொள்ளவும், தனிமையிலும் விக்கிரக வணக்கத்தார் மத்தியிலும் சூழ்ச்சி நிறைந்த மனிதர்கள் நடுவிலும் அவனுக்கு நிச்சயமாக வரக்கூடிய சோதனைகளை எதிர்க்க ஆயத்தமாகவும், தப்பியோடிக்கொண்டிருந்த மனந்திரும்பியவனின் முன்பாக அவர் கிருபையாக எதிர்காலத்தை திறந்தார். அவன் எட்டவேண்டிய உயர்ந்த தரம் அவன் முன்பாக எப்போதும் இருக்கும். தன் மூலமாக தேவனுடைய நோக்கம் அதன் நிறைவேறுதலை அடையும் என்கிற அறிவு விசுவாசமாக இருக்கும்படி நிலையாக அவனை உந்தும். PPTam 213.1

தரிசனத்திலே யாக்கோபுக்கு மீட்பின் திட்டம் முழுமையாக அல்ல, அந்த நேரத்திலே அவனுக்குத் தேவையாயிருந்த பகுதிகள் மாத்திரம் காட்டப்பட்டன. அவனுடைய கனவில் அவனுக்குக் வெளிக்காட்டப்பட்ட அதே இரகசிய ஏணியைத்தான் கிறிஸ்து நாத்தான் வேலிடம் பேசியபோது : வானம் திறந்திருக்கிறதையும், தேவதூதர்கள் மனுஷகுமாரனிடத்திலிருந்து ஏறுகிறதையும் இறங்குகிறதையும் நீங்கள் இது முதல் காண்பீர்கள் (யோவான் 1:51) என்று குறிப்பிட்டார். தேவனுடைய அரசாங்கத்திற்கு எதிராக மனிதன் கலகம் செய்த நேரம் வரையிலும் தேவனுக்கும் மனிதனுக் கும் இடையே சுதந்தரமான தோழமை இருந்தது. ஆனால் ஆதாம் மற்றும் ஏவாளின் பாவம் மனிதன் தன்னை உண்டாக்கினவரோடு தோழமை கொள்ளக்கூடாதபடி பூமியை பரலோகத்திலிருந்து பிரித்தது. என்றபோதும் நம்பிக்கையற்ற தனிமையில் உலகம் விட்டுவிடப்படவில்லை. அந்த ஏணி, தொடர்பின் ஊடகமாக நிய மிக்கப்பட்ட இயேசுவை எடுத்துக்காட்டுகிறது. பாவம் உண்டாக் கின பிளவை அவர் தமது சொந்த நன்மையினால் இணைத்திருக் காவிட்டால், ஊழியம் செய்யும் தூதர்கள் விழுந்து போன மனி தனுடன் எந்தத் தொடர்பும் கொண்டிருக்க முடியாது. கிறிஸ்து மனிதனை அவனுடைய பெலவீனத்திலும் உதவியற்ற நிலையிலும் நித்திய வல்லமையின் ஊற்றோடு இணைக்கிறார். PPTam 213.2

இவையெல்லாம் யாக்கோபுக்கு அவனுடைய சொப்பனத் திலே வெளிப்படுத்தப்பட்டது. அவனுடைய மனது சொல்லப்பட்ட வைகளின் ஒரு பகுதியை உடனே பற்றிக்கொண்ட போதிலும், அத னுடைய மாபெரும் இரகசியமான சத்தியங்கள் அவனுடைய வாழ் நாள் முழுவதற்குமான பாட ஆராய்ச்சியாக இருந்து, அவனுடைய புரிந்து கொள்ளுதலுக்கு அதிகமதிகமாகத் திறந்து காண்பித்தது. PPTam 214.1

இரவின் மிக ஆழ்ந்த நேரத்தில் யாக்கோபு தன் நித்திரையிலிருந்து விழித்துக்கொண்டான். தரிசனத்தில் கண்ட பிரகாசமான உருவங்கள் மறைந்து போயின. தனிமையான அந்த மலையின் மங்கின் எல்லையும் அதற்கு மேலாக நட்சத்திரங்களால் பிரகாசமாக் கப்பட்ட வானங்களும் அவன் பார்வையை சந்தித்தன. என்றாலும் தேவன் தன்னோடு இருக்கிறார் என்கிற பவித்திரமான உணர்வு அவனிடம் இருந்தது. காணக்கூடாத ஒரு சமூகம் அந்தத் தனி மையை நிறைத்தது. மெய்யாகவே கர்த்தர் இந்த ஸ்தலத்தில் இருக் கிறார்; இதை நான் அறியாதிருந்தேன். இது தேவனுடைய வீடே யல்லாமல் வேறல்ல, இது வானத்தின் வாசல் என்றான். PPTam 214.2

அதிகாலையிலே யாக்கோபு எழுந்து, தன் தலையின் கீழ் வைத்திருந்த கல்லை எடுத்து, அதைத் தூணாக நிறுத்தி, அதின்மேல் எண்ணெய் வார்த்தான். முக்கியமான சம்பவங்களை நினைவு படுத்தச் செய்கிற வழக்கத்தின்படியே, தான் எப்போதெல்லாம் அந்த இடத்தைக் கடக்க வேண்டியதிருக்குமோ, அப்போதெல்லாம் அந்த பரிசுத்த இடத்தில் ஆண்டவரைத் தொழுது கொள்ளுவதற்காக சற்றுத் தரிக்கும்படியாக, யாக்கோபு தேவனுடைய கிருபைக்கு ஒரு நினைவுச்சின்னத்தை நிறுத்தினான். அந்த இடத்துக்கு பெத் தேல் அல்லது தேவனுடைய வீடு என்று பெயரிட்டான். தேவனுடைய சமூகம் தன்னோடு இருக்கும் என்கிற வாக்குத்தத்தத்தை ஆழ்ந்த நன்றியோடு திரும்பக் கூறி, பின்னர்: தேவன் என்னோடே இருந்து, நான் போகிற இந்த வழியிலே என்னைக் காப்பாற்றி, உண்ண ஆகாரமும், உடுக்க வஸ்திரமும் எனக்குத் தந்து, என்னை என் தகப்பன் வீட்டுக்குச் சமாதானத்தோடே திரும்பிவரப்பண்ணு வாரானால், கர்த்தர் எனக்குத் தேவனாயிருப்பார், நான் தூணாக நிறுத்தின் இந்தக்கல் தேவனுக்கு வீடாகும், தேவரீர் எனக்குத் தரும் எல்லாவற்றிலும் உமக்குத் தசமபாகம் செலுத்துவேன் என்று ஒரு பவித்திரமான பொருத்தனை செய்தான். PPTam 214.3

தேவனோடு நிபந்தனைகள் ஏற்படுத்த யாக்கோபு இங்கே தேடவில்லை. தேவன் ஏற்கனவே அவனுக்குச் செழிப்பை வாக் குப்பண்ணியிருந்தார். இந்தப் பொருத்தனை தேவனுடைய அன் பையும் கிருபையையும் குறித்த நிச்சயத்திற்காக நன்றியினால் நிறைந்த இருதயத்திலிருந்து பாய்ந்த ஒன்றாக இருந்தது. தேவன் தன்மேல் உரிமை பாராட்டுகிறார்; அவைகளைதான் ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும், தனக்கு அளிக்கப்பட்ட தெய்வீக தயவின் விசேஷ அடையாளம் அதற்கான பலனை கோருகிறது என்றும் யாக்கோபு உணர்ந்தான். அவ்வாறே நம் மேல் வைக்கப்படும் ஒவ் வொரு ஆசீர்வாதமும் எல்லா கிருபைக்கும் ஊற்றானவருக்குப் பதில் தரும்படியாக நம்மை அழைக்கிறது. கிறிஸ்தவன் தன்னுடைய கடந்தகால வாழ்க்கையை அடிக்கடித் திருப்பிப் பார்த்து, தன்னுடைய சோதனைகளில் தனக்கு உதவி செய்து, அனைத்தும் இருளாகவும் விலக்கப்பட்டதாகவும் காணப்பட்ட போது தனக்கு முன் பாதைகளைத் திறந்து, சோர்வடையவிருந்த நேரங்களில் உற்சாகப்படுத்தி, தனக்காக நடப்பித்த விசேஷ விடுதலைகளை நன்றி யோடு நினைவுக்குக் கொண்டுவரவேண்டும். அவைகளனைத் தையும் பரலோக தூதர்களின் கவனிப்பிற்கான சான்றுகளாக அவன் உணரவேண்டும். எண்ணக்கூடாத இத்தனை ஆசீர்வாதங்களின் கண்ணோட்டத்தில், கீழ்ப்படிந்த நன்றியான இருதயத்தோடு கர்த் தர் எனக்குச் செய்த எல்லா உபகாரங்களுக்காகவும், அவருக்கு என்னத்தைச் செலுத்துவேன் (சங். 116:12) என்று அடிக்கடி கேட்கவேண்டும். PPTam 214.4

நம் நேரமும், நமது திறமைகளும், நமது சொத்துக்களும் நம்மை நம்பி இந்த ஆசீர்வாதங்களை நமக்குத் தந்திருக்கிறவருக்குப் பரிசுத்தமாக அர்ப்பணிக்கப்பட வேண்டும். நமக்காக விசேஷ விடுதலை நடப்பிக்கப்படுகிறபோதெல்லாம், அல்லது புதிய எதிர் பாராத தயவுகள் நமக்கு அளிக்கப்படும் போதெல்லாம், தேவ னுடைய தயவை நாம் ஒப்புக்கொள்ளவேண்டும். நம் நன்றியை வெறும் வார்த்தைகளில் விவரிப்பது மாத்திரமல்ல, யாக்கோபைப் போல், அவருடைய வேலைக்கான பரிசுகளாலும் காணிக்கைகளாலும் அறிவிக்கவேண்டும். நாம் தொடர்ந்து தேவனுடைய ஆசீர் வாதங்களைப் பெற்றுக்கொண்டிருப்பதைப்போலவே, தொடர்ந்து கொடுக்கவும் வேண்டும். PPTam 215.1

தேவரீர் எனக்குத் தரும் எல்லாவற்றிலும் உமக்குத் தசம பாகம் செலுத்துவேன் என்று யாக்கோபு கூறினான். சுவிசேஷத்தின் முழு வெளிச்சத்தையும் வாய்ப்புகளையும் அனுபவிக்கிற நாம், குறை வான வெளிச்சம் கொடுக்கப்பட்டிருந்த காலத்தில் வாழ்ந்தவர்களால் கொடுக்கப்பட்டதைக் காட்டிலும் குறைவாகக் கொடுப்பதில் திருப்தி அடையலாமா? அப்படியல்ல, நாம் அனுபவிக்கிற ஆசீர் வாதங்கள் அதிகமாயிருக்கும் போது, நம்முடைய கடமைகளும் அதற்கு ஏற்றாற்போல அதிகரிக்கவில்லையா? ஆனால் எவ்வளவு குறைவான மதிப்பீடு, அளவிடமுடியாத அன்பை, கற்பனைக்கெட் டாத மதிப்புள்ள பரிசை, காலத்தாலும் பணத்தாலும் அன்பாலும் கணக்குகளாலும் அளந்து பார்க்க முயற்சிப்பது எவ்வளவு அற்ப மாக இருக்கிறது. கிறிஸ்துவிற்கு தசம பாகம் ! ஓ, அற்பமான சொற்ப தொகை, அவ்வளவு பெரிய விலையேறப்பெற்றதற்காக வெட்கத் திற்குரிய பதிலீடு ! தனக்கென்று வைத்துக்கொள்ளாத அர்ப்பணிப் பிற்காக கல்வாரிச் சிலுவையிலிருந்து கிறிஸ்து அழைக்கிறார். நாம் வைத்திருக்கும் அனைத்தும், நம் முழுமையும் தேவனுக்கென்று அர்ப்பணிக்கப்பட வேண்டும். PPTam 215.2

தெய்வீக வாக்குத்தத்தங்களில் புதிய நிலைத்திருக்கும் விசு வாசத்தோடு, பரலோகத்தூதர்களின் சமூகத்தையும் பாதுகாப்பையும் குறித்த உறுதியை அடைந்தவனாக, யாக்கோபு கீழ்த்திசையாரின் தேசத்தில் (ஆதி. 29.1) தன் பயணத்தைத் தொடர்ந்தான். ஆனால் நூறு வருடங்களுக்கு முன்பு ஆபிரகாமின் தூதுவன் வந்ததைவிட இன்று அவனுடைய வருகை எத்தனை வேறுபட்டிருக்கிறது! ஒட்டகங்களின் மேல் பயணித்த ஒரு கூட்டத்தோடு, ஐசுவரியமான பொன் வெள்ளியினாலான பரிசுகளை எடுத்துக்கொண்டு ஊழியக்காரன் வந்திருந்தான். மகனோ, தனிமையில் கால்களில் காயமடைந்த பயணியாக தன்னுடைய கோலைத்தவிர வேறு எதுவுமின்றி வந்திருக்கிறான். ஆபிரகாமின் ஊழியக்காரனைப் போலவே யாக்கோபு, ஒரு கிணற்றண்டையிலே தரித்திருந்தான். இங்கேதான் அவன் லாபானின் இளைய மகள் ராகேலைச் சந்தித் தான். இப்போது கிணற்றிலிருந்த கல்லை நகர்த்தி, மந்தைகளுக்கு தண்ணீர் காண்பித்து யாக்கோபு சேவை செய்தான். தன்னுடைய உறவு முறையை தெரிவித்தபோது, அவன் லாபானுடைய வீட்டுக் குள் வரவேற்கப்பட்டான். பொருட்களின்றியும், வேலைக்காரரின்றியும் அவன் வந்திருந்தபோதும், சில வாரங்களே அவனுடைய ஊக்கத்தையும் திறமையையும் காண்பித்தது. அங்கு தங்கும் படி வற்புறுத்தப்பட்டான். ராகேலுக்காக அவன் ஏழு வருடங்கள் லாபானிடம் ஊழியம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. PPTam 216.1

முற்காலங்களில் மணவாளன் திருமண நிச்சயத்தை உறுதி செய்வதற்கு முன்பாக, குறிப்பிட்ட தொகையை அல்லது அதற்கு இணையான சொத்தை, தன்னுடைய சூழ்நிலைகளுக்கேற்றவாறு தன் மனைவியினுடைய தகப்பனுக்குக் கொடுக்கவேண்டியதிருந்தது. இது திருமண உறவிற்கான பாதுகாப்பாக கருதப்பட்டது. தன் குடும்பத்தை தாங்க ஏற்பாடு செய்யாதவனிடம் தன் மகளின் சந் தோஷத்தை நம்பிக்கொடுப்பது பாதுகாப்பானது என்று தகப்பன் மார்கள் நினைத்திருக்கவில்லை. தொழிலைப் பராமரிக்கவும், ஆடு மாடுகளையாவது நிலங்களையாவது சேர்க்கவும் போதுமான சிக் கனமும் ஆற்றலும் அவர்கள் கொண்டிராவிட்டால், அவர்களுடைய வாழ்க்கை மதிப்பற்றதென நிரூபிக்கப்படும் என்று அஞ்சப்பட்டது. என்றாலும் மனைவிக்காக செலுத்த ஒன்றுமில்லாதிருக்கிறவனை சோதிக்கும்படியான ஏற்பாடு செய்யப்படும். யாருடைய குமாரத் தியை அவர்கள் நேசித்தார்களோ, அந்த தகப்பனுக்கு வேலை செய்ய அவர்கள் அனுமதிக்கப்பட்டனர். கோரப்படுகிற சீதனத்தின் மதிப்பிற்கு ஒத்ததாக, வேலையின் கால அளவு குறிக்கப்பட்டது. மனு செய்தவன் தன் சேவையில் உண்மையாயிருந்து, மற்ற காரி யங்களிலும் தகுதியுள்ளவனாக நிரூபித்தால், மகளை தன் மனைவி யாகப் பெற்றுக்கொள்ளுவான். பொதுவாக, தகப்பன் வாங்கின் சீதனம் திருமணத்தின் போது அவளுக்குக் கொடுக்கப்படும். என்ற போதும், ராகேல் லேயாள் இருவருடைய காரியத்திலும் அவர்களுக்குக் கொடுக்கப்படவேண்டிய சீதனத்தை லாபான் சுயநலமாக தானே வைத்துக்கொண்டான். இதைக்குறித்து மெசொ பத்தோமியாவிலிருந்து கிளம்புவதற்கு சற்று முன்பாக அவர் எங்களை விற்று, எங்கள் பணத்தையும் வாயிலே போட்டுக்கொண் டார் என்று அவர்கள் குறிப்பிட்டார்கள். PPTam 216.2

இந்தப் பழங்கால பழக்கம் லாபான் செய்ததைப்போன்று சில வேளைகளில் தவறாக பயன்படுத்தப்பட்டாலும், நல்ல விளைவுகளையே பிறப்பித்தது. நேசிக்கிறவன் தன் மணப்பெண்ணை பெற்றுக்கொள்ள வேலை செய்யவேண்டும் என்றிருந்ததால், அவசரமான திருமணங்கள் தடுக்கப்பட்டு, அவனுடைய பிரியத் தின் ஆழமும், ஒரு குடும்பத்திற்கு கொடுக்கக்கூடிய அவனுடைய திறமையும் சோதிக்கப்படும் வாய்ப்பு இருந்தது. நம்முடைய காலத்திலே எதிர்மாறான முறை தொடரப்படுவதால், அநேகத் தீமைகள் விளைகின்றன. அதிகமான வேளைகளில் திருமணத்திற்கு முன்பு இருவரும் மற்றவருடைய பழக்கங்களோடும் இயல்புகளோ டும் அறிமுகமாவதற்கு குறைவான சந்தர்ப்பங்களே இருக்கிறது. பின்னர் தங்கள் விருப்பங்களை பீடத்தின் முன் இணைத்துக்கொள்ளும் போது, ஒவ்வொருநாள் வாழ்க்கையிலும் அவர்கள் ஒரு வருக்கொருவர் கிட்டத்தட்ட அந்நியர்களாகவே இருக்கிறார்கள். அநேகர் ஒருவருக்கொருவர் பொருந்தாதிருக்கிறதை வெகு தாமதமாகக் காண்கிறார்கள். அவர்களுடைய இணைப்பு வாழ்நாள் முழுவதும் பரிதாபமான ஒன்றாகவே இருக்கிறது. பல வேளை களில் மனைவியும் பிள்ளைகளும் கணவனும் தகப்பனுமானவ னுடைய சோம்பலாலும் திறமையின்மையாலும் அல்லது தீய பழக்கங்களாலும் வேதனையடைகிறார்கள். நேசிக்கிறவனுடைய குணம் திருமணத்திற்கு முன்பாக முற்கால பழக்கத்தின்படி சோதிக் கப்படுமானால், மிகப்பெரிய மகிழ்ச்சியின்மை தடுக்கப்பட்டிருக்கும். PPTam 217.1

ராகேலுக்காக யாக்கோபு ஏழு வருடங்கள் ஊழியம் செய் தான். அவள் பேரில் இருந்த பிரியத்தினாலே அந்த வருஷங்கள் அவனுக்குக் கொஞ்சநாளாகத் தோன்றினது. ஆனால் சுயநலமும் பிடுங்கிக்கொள்ளும் குணமுமுடைய லாபான், இவ்வளவு மதிப்புள்ள உதவியாளனை தக்கவைத்துக்கொள்ள விருப்பப்பட்டு, ராகேலுக்குப் பதிலாக லேயாளை மாற்றினதினால் கொடிய வஞ்ச கத்தைச் செயல்படுத்தினான். லேயாளும் இந்த வஞ்சகத்திற்கு உடன்பட்டாள் என்ற உண்மை, அவளை நேசிக்கவே முடியாது என்று உணரும்படியாக்கோபை நடத்தினது. கோபமாகலாபானை அவன் கடிந்து கொண்ட வார்த்தைகள், நீ இன்னும் ஏழு வருஷம் என்னிடத்தில் வேலை செய், ராகேலையும் உனக்குத் தருகிறேன் என்ற பதிலை சந்தித்தது. எனினும் லேயாள் தள்ளிவிடப்படுவது குடும்பத்துக்கு அவமானத்தைக் கொண்டு வரும் என்றதினால் அவளைத் தள்ளிவிடக்கூடாது என்று தகப்பன் வற்புறுத்தினான். இவ்வாறாக, யாக்கோபு மிகவும் வேதனையான சோதிக்கும் நிலையில் வைக்கப்பட்டான். முடிவாக, லேயாளை வைத்துக் கொள்ளவும், ராகேலை திருமணம் செய்யவும் அவன் தீர்மானித் தான். ராகேல்தான் எப்போதும் மிகவும் அதிகமாக நேசிக்கப்பட்ட வள். ஆனால் அவளுக்கு அவன் காட்டின் முன்னுரிமை, பொறா மையையும் வெறுப்பையும் எழுப்பிவிட, மனைவிகளான சகோ தரிகளிடையே உண்டான போட்டிகள் அவனுடைய வாழ்க்கையை கசப்பாக்கினது. PPTam 218.1

தன் உறவின் பிணைப்புகளை கருத்தில் கொள்ளாமல், அவர் களுடைய தொடர்பினால் வந்த எல்லா நன்மைகளையும் தான் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று செயல்பட்ட லாபானுக்காக வேலை செய்ததில், யாக்கோபு இருபது வருடங்கள் மெசொபத் தாமிய தேசத்திலே தங்கியிருந்தான். அவன் தன்னுடைய இரண்டு குமாரத்திகளுக்காகவும் பதினான்கு வருட ஊழியத்தை கோரியிருந்தான். மீந்திருந்த வருடங்களில் யாக்கோபினுடைய சம்பளம் பத்து முறை மாற்றப்பட்டது. என்றாலும், யாக்கோபின் சேவை, ஊக்கமும் உண்மையானதுமாயிருந்தது. கடைசி சந்திப்பில் லாபா னிடம் அவன் கூறின. இந்த இருபது வருஷகாலமாய் நான் உம் மிடத்தில் இருந்தேன் ; உம்முடைய செம்மறியாடுகளும் வெள் ளாடுகளும் சினையழியவில்லை, உம்முடைய மந்தையின் கடாக்களை நான் தின்னவில்லை. பீறுண்டதை நான் உம்மிடத்துக்குக் கொண்டுவராமல், அதற்காக நான் உத்தரவாதம் பண்ணினேன், பகலில் களவு போனதையும், இரவில் களவு போனதையும் என் கையில் கேட்டு வாங்கினர். பகலிலே வெயிலும் இரவிலே குளிரும் என்னைப்பட்சித்தது; நித்திரை என் கண்களுக்குத் தூரமாயிருந்தது; இவ்விதமாய்ப் பாடுபட்டேன் என்ற இந்த வார்த்தைகள், தன்னிடத் திலிருந்து பறித்துக்கொண்ட தன் எஜமானுடைய விருப்பங்களுக் காகச் சோர்வின்றி அவன் காண்பித்த ஜாக்கிரதையைத் தெளிவாக விவரிக்கிறது. PPTam 218.2

இரவும் பகலும் தங்கள் மந்தைகளை காவல் காப்பது மேய்ப் பர்களுக்கு அவசியமாயிருந்தது. கொள்ளையர்களால் வரும் ஆபத்துக்களிலும், கவனமாக காக்கப்படாத மந்தைகளிடத்திலே பேரழிவைக் கொண்டு வந்த எண்ணுக்கடங்காத துணிச்சலான காட்டுமிருகங்களால் வரும் ஆபத்துகளிலும் அவர்கள் இருந்தார்கள். லாபானுடைய பெரிய மந்தையை கவனிப்பதில் யாக்கோபு பல உதவியாளரை வைத்திருந்தான். எனினும். அவை எல்லாவற்றிற்கும் அவனே பதில் தர வேண்டியவனாயிருந்தான். வறண்ட காலத்தில் தாகத்தினால் மடிந்து போவதிலிருந்தும், குளிர் காலங்களில் இரவு நேர உறைபனியினால் குளிர்ந்து போவதிலிருந்தும் அவைகளைக் காப்பதற்கு வருடத்தின் சில பகுதிகளில் தானே மந் தையோடு தொடர்ந்து இருப்பது அவனுக்கு அவசியமாயிருந்தது. யாக்கோபு தலைமை மேய்ப்பனாயிருந்தான். அவனுக்குக் கீழ் வேலை செய்தவர்கள் கீழ்மேய்ப்பர்களாய் இருந்தார்கள். ஏதாகிலும் ஆடு தொலைந்து போனால், தலைமை மேய்ப்பன்தான் அந்த நஷ்டத்தை சந்திப்பான். அது செழிப்பான நிலையில் காணப்படா திருந்தால், கண்டிப்பான கணக்குத் தரும்படியாக யாரிடம் மந் தையை ஒப்படைத்திருந்தானோ, அவர்களை அவன் அழைப்பான். PPTam 219.1

ஜாக்கிரதையும் கவனமும் கொண்ட மேய்ப்பனுடைய வாழ்க் கையும், தன்னிடம் ஒப்படைக்கப்பட்டிருந்த உதவியற்ற ஜீவன் களிடம் அவன் காண்பிக்கும் இளகிய உருக்கமும், சுவிசேஷத்தின் மிக விலையுயர்ந்த சாத்தியங்கள் சிலவற்றை விளக்கும்படியாக, தேவ ஆவியினால் ஏவப்பட்ட எழுத்தாளர்களால் உபயோகிக்கப் பட்டிருக்கிறது. கிறிஸ்து தமது ஜனங்களுடன் கொண்டிருக்கும் உறவில் மேய்ப்பனோடு ஒப்பிடப்படுகிறார். விழுகைக்குப்பின்னர் தன்னுடைய ஆடுபாவத்தின் இருண்டபாதைகளில் அழிவுக்கென்று நியமிக்கப்பட்டதை அவர் கண்டார். அலைந்து கொண்டிருக்கிற இவைகளைக் காப்பாற்றும்படியாக, தமது தகப்பனுடைய வீட்டின் கனத்தையும் மகிமையையும் அவர் துறந்தார். நான் காணாமற்போனதைத் தேடி, தூரத்துண்டதைத் திரும்பக் கொண்டுவந்து, எலும்பு முறிந்ததைக்காயங்கட்டி, நசல் கொண்டதைத்திடப்படுத்து வேன், நான் என் ஆடுகளை இனிச் சூறையாகாதபடிக்கு இரட்சித்து, பூமியின் மிருகங்கள் அவர்களைப் பட்சிப்பதுமில்லை, (எசே .34:16, 22, 28) என்று அவர் சொல்லுகிறார். பகலிலே வெயிலுக்கு நிழலாகவும், பெருங்காற்றுக்கும் மழைக்கும் அடைக்கலமாகவும், மறைவிடமாகவும் (ஏசாயா 4:6) இருக்கிற அவருடைய மந்தைக் குள் வருமாறு அவைகளை அழைக்கிற அவருடைய சத்தம் கேட்கப்படுகிறது. மந்தைக்காக அவர் கொடுக்கும் கவனம் சோர் வில்லாத ஒன்று. பெலவீனமானவைகளை அவர் பெலப்படுத்தி, வேதனைப்படுகிறவைகளை விடுவிக்கிறார். ஆடுகளை தமது கரங்களில் சேர்த்துக்கொண்டு, தம்முடைய மடியிலே அவைகளை சுமக்கிறார். அவருடைய ஆடுகள் அவரை நேசிக்கின்றன. அந் நியருடைய சத்தத்தை அறியாதபடியினால் அவைகள் அந்நிய னுக்குப் பின் செல்லாமல், அவனை விட்டோடிப்போம் யோவான் 10:5 PPTam 219.2

நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக் கிறான். மேய்ப்பனாயிராதவனும், ஆடுகள் தனக்குச் சொந்தமல்லா தவனுமான கூலியாள் ஓநாய் வருகிறதைக் கண்டு ஆடுகளை விட்டு ஓடிப்போகிறான், அப்பொழுது ஓநாய் ஆடுகளைப் பீறி, அவைகளைச் சிதறடிக்கும். கூலியாள் கூலிக்காக வேலை செய்கிறவனாகை யால் ஓடிப்போகிறான், ஆடுகளுக்காக அவன் கவலைப்படான். நானே நல்ல மேய்ப்பன். நான் என்னுடையவைகளை அறிந்தும் என்னுடையவைகளால் அறியப்பட்டுமிருக்கிறேன் (யோவான் 10:11-15) என்று கிறிஸ்து சொல்லுகிறார். PPTam 220.1

பிரதான மேய்ப்பனாகிய கிறிஸ்து தமது மந்தையின் கண் காணிப்பை தனக்குக் கீழ் இருக்கும் மேய்ப்பர்களான தமது போத கர்களிடம் ஒப்புக்கொடுத்திருக்கிறார். அவர் காண்பித்த அதே ஆர் வத்தை அவர்களும் காண்பித்து, கொடுத்திருக்கிற வேலையின் புனிதமான பொறுப்பை உணரும்படியாக அவர்களை அழைக்கிறார். உண்மையாக இருக்கவும், மந்தையைப் போஷிக்கவும். பெலவீனமானவைகளை பலப்படுத்தவும் சோர்வடைந்தவைகளை உயிர்ப்பிக்கவும், பட்சிக்கும் ஓநாய்களிடமிருந்து அவைகளை மறைத்துக்கொள்ளவும் அவர் அவர்களுக்கு பவித்திரமாகக் கட்டளையிட்டிருக்கிறார். PPTam 220.2

தனது ஆட்டை இரட்சிக்கும்படி கிறிஸ்து தமது சொந்த வாழ்க் கையை கொடுத்தார். இவ்வாறு வெளிக்காட்டப்பட்ட அன்பை தம்முடைய மேய்ப்பர்களுக்கு உதாரணமாக அவர் சுட்டிக்காட்டு கிறார். ஆனால் ஆடுகள் தனக்குச் சொந்தமல்லாதவனுமான கூலியாள் மந்தையின் மேல் உண்மையான விருப்பம் கொண்டிருப்பதில்லை. அவன் ஆதாயத்திற்காக மாத்திரமே உழைக்கிறான். அவன் தனக்காக மாத்திரமே கவலைப்படுகிறான்; தன்னிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறவைகளின் நன்மையை விடுத்து தன்னுடைய சொந்த இலாபத்தையே ஆராய்கிறான். ஆபத்தான சமயங்களில் மந்தையை விட்டு அவன் ஓடிப்போவான். PPTam 221.1

அப்போஸ்தலனாகிய பேதுரு மேய்ப்பர்களுக்கு, உங்களிடத்திலுள்ள தேவனுடைய மந்தையை நீங்கள் மேய்த்து, கட்டாயமாய் அல்ல, மனப்பூர்வமாயும், அவலட்சணமான ஆதாயத்திற்காக அல்ல, உற்சாக மனதோடும், சுதந்தரத்தை இறு மாப்பாய் ஆளுகிறவர்களாக அல்ல, மந்தைக்கு மாதிரிகளாகவும், கண்காணிப்புச் செய்யுங்கள் (1 பேதுரு 5:2,3) என்று எச்சரிக்கை கொடுக்கிறான். பவுல். ஆகையால், உங்களைக் குறித்தும், தேவன் தம்முடைய சுயரத்தத்தினாலே சம்பாதித்துக்கொண்ட தமது ச பையை மேய்ப்பதற்குப் பரிசுத்த ஆவி உங்களைக் கண்காணிகளாக வைத்த மந்தை முழுவதையுங்குறித்தும், எச்சரிக்கையாயிருங்கள். நான் போனபின்பு மந்தையைத் தப்பவிடாத கொடிதான ஓநாய்கள் உங்களுக்குள்ளே வரும் (அப். 20:28, 29) என்று கூறுகிறான். PPTam 221.2

விசுவாசமான மேய்ப்பனுக்கு இருக்கும் கவனத்தையும் பாரத்தையும் விரும்பப்படாத வேலையாகக் கருதுகிற அனைவரும் அப்போஸ்தலனால் கட்டாயமாய் அல்ல, மனப்பூர்வமாயும், அவலட்சணமான ஆதாயத்திற்காக அல்ல, உற்சாக மனதோடும் (1 பேதுரு 52) என்று கடிந்துகொள்ளப்படுகிறார்கள். அப்படிப்பட்ட அனைத்து உண்மையற்ற ஊழியக்காரர்களையும் பிரதான மேய்ப்பன் மனதார வெளியேற்றுவார், கிறிஸ்துவினுடைய சபை அவருடைய இரத்தத்தினால் சம்பாதிக்கப் பட்டிருக்கிறது. ஒவ்வொரு மேய்ப்பனும் தன் கவனத்தில் இருக்கிற ஆடு, அளவிடமுடியாத தியாகத்தினால் சம்பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதை உணரவேண்டும். ஒவ்வொன்றையும் அளவிடமுடியாத மதிப்புள்ளதாகக் கருதி, அவைகளை நலமாகவும் செழிப்பாகவும் வைத்துக்கொள்ள தன் முயற்சியில் சோர்ந்து போகாதிருக்க வேண்டும். கிறிஸ்துவின் ஆவியைப் பெற்றிருக்கிற மேய்ப்பன், தனக்குக் கீழ் இருப்பவைகளின் நன்மைக்காக நிலையாக உழைத்து கிறிஸ்துவினுடைய சுயத்தை மறுக்கும் உதாரணத்தை பிரதிபலிப் பான். மந்தை அவனுடைய கவனத்தின்கீழ் செழிக்கும். PPTam 221.3

தங்கள் ஊழியத்தைக் குறித்த கண்டிப்பான கணக்கைத் தரும்படியாக அனைவரும் அழைக்கப்படுவார்கள். ஒவ்வொரு மேய்ப்பனிடமும்: உனக்குக் கொடுக்கப்பட்டிருந்த மந்தையும், உன் மகிமையான ஆட்டுக்கிடையும் எங்கே? (எரே. 13:20) என்று எஜமான் கோருவார். உண்மையாகக் காணப்பட்டவன் பெரும் பலனைப் பெறுவான். அப்போஸ்தலன் : அப்படிச் செய்தால் பிரதான மேய்ப்பர் வெளிப்படும் போது மகிமையுள்ள வாடாத கிரீடத்தைப் பெறுவீர்கள் (1 பேதுரு 5:4) என்று சொல்லுகிறான். PPTam 222.1

லாபானுக்குச் செய்த வேலையில்களைப்படைந்தவனாக, கானானுக்குத் திரும்புவதை யாக்கோபு ஆலோசித்தான். தன் மாமனாரிடம் : நான் என் ஸ்தானத்திற்கும் என் தேசத்திற்கும் போக என்னை அனுப்பிவிடும். நான் உமக்கு ஊழியஞ்செய்து சம்பாதித்த என் மனைவிகளையும் என் பிள்ளைகளையும் எனக்குத் தாரும், நான் போவேன், நான் உம்மிடத்தில் சேவித்த சேவகத்தை அறிந்திருக்கிறீர் என்றான். ஆனால் லாபான்: உன் நிமித்தம் கர்த்தர் என்னை ஆசீர்வதித்தார் என்று குறிப்பினால் அறிந்தேன் என்று அறிவித்து, தரித்திருக்கும் படி அவனை வற்புறுத்தினான். தன் செ ரத்து, தன் மருமகனின் கவனிப்பில் விருத்தியாகிறதை அவன் பார்த்தான். PPTam 222.2

நான் வருமுன்னே உமக்கு இருந்தது கொஞ்சம், நான் வந்தபின் கர்த்தர் உம்மை ஆசீர்வதித்ததினால் அது மிகவும் பெருகியிருக்கிறது என்று யாக்கோபு சொன்னான். ஆனால் காலம் சென்ற போது, யாக்கோபு மிகவும் விருத்தியடைந்து, திரளான ஆடுகளும், வேலைக்காரிகளும், வேலைக்காரரும், ஒட்டகங்களும், கழுதைகளும் உடையவனானான். லாபான் யாக்கோபி னுடைய அதிகமான செழிப்பினிமித்தம் பொறாமை கொண்டான். லாபானுடைய குமாரர் தங்கள் தகப்பனுடைய பொறாமையில் பங்கு கொண்டார்கள். அவர்களுடைய பொல்லாங்கான வார்த்தைகள் யாக்கோபினுடைய காதுகளுக்கு வந்தன. எங்கள் தகப்பனுக்கு உண்டானவைகள் யாவையும் யாக்கோபு எடுத்துக் கொண்டான் என்றும், எங்கள் தகப்பனுடைய பொருளினாலே இந்தச் செல்வத்தையெல்லாம் அடைந்தான் என்றும் சொன்ன வார்த்தைகளை யாக்கோபு கேட்டான். லாபானின் முகத்தை யாக்கோபு பார்த்தபோது, அது நேற்று முந்தைநாள் இருந்தது போல் இராமல் வேறுபட்டிருக்கக் கண்டான். PPTam 222.3

ஏசாவைச் சந்திக்கும் பயம் இல்லாதிருந்தால், தந்திரமான இந்த உறவினனை யாக்கோபு வெகுகாலத்திற்கு முன்பே விட்டு வந்திருப்பான். இப்போது லாபானுடைய குமாரர் அவனுடைய செல்வத்தை தங்களுடையதாக பார்த்து, அதை வன்முறையினால் எடுத்துக்கொள்ள முயற்சிக்கும் ஆபத்தில் தான் இருப்பதை அவன் உணர்ந்தான். எந்த வழியில் திரும்புவது என்று அறியாத மாபெரும் குழப்பத்திலும் துயரத்திலும் அவன் இருந்தான். என்றாலும், கிருபை நிறைந்த பெத்தேலின் வாக்குத்தத்தத்தை நினைத்தவனாக, தன் வழக்கை தேவனிடம் கொண்டு சென்று, அவரிடமிருந்து வழிநடத்துதலைத் தேடினான். ஒரு சொப்பனத்தில் . உன் பிதாக்களுடைய தேசத்திற்கும் உன் இனத்தாரிடத்திற்கும் நீ திரும்பிப்போ; நான் உன்னோடேகூட இருப்பேன் என்று அவன் விண்ணப்பத்திற்குப் பதில் கொடுக் கப்பட்டது. PPTam 223.1

லாபான் அங்கில்லாதிருந்தது, பிரிந்து செல்வதற்கான சந்தர்ப்பத்தை அவனுக்குக் கொடுத்தது. மந்தைகளும் மாடுகளும் வேகமாக சேர்க்கப்பட்டு முன்னதாக அனுப்பப்பட, யாக்கோபு தன் மனைவிகளோடும் பிள்ளைகளோடும் வேலைக்காரரோடும் ஐபிராத்தைக் கடந்து கானானின் எல்லையிலிருக்கும் கிலேயாத்தை நோக்கிச் சென்றான். மூன்று நாட்களுக்குப்பின்னர் அவர்கள் தப்பியோடினதைக்குறித்து லாபான் கேள்விப்பட்டு அவர்களைப் பின்தொடர்ந்தான். அவர்களுடைய பிரயாணத்தின் ஏழாம் நாளில் அவர்களை மேற்கொண்டான். அவன் மிகவும் கோபங்கொண்டு, அவர்களைத் திரும்பி வரும்படி பலவந்தப்படுத்த எத்தனித்திருந் தான். அவனுடைய படை மிகவும் பலமானதாயிருந்ததால், அப் படிச் செய்ய முடியாது என்று அவன் சந்தேகப்படவில்லை . தப்பி யோடியவர்கள் மிகப்பெரிய ஆபத்தில் இருந்தார்கள். PPTam 223.2

தேவன்தாமே தம்முடைய ஊழியக்காரனை காப்பாற்றும் படியாக தலையிட்டிருந்தார் என்ற உண்மையே, தன்னுடைய தீமையான நோக்கத்தை அவன் செயல்படுத்தாதிருந்ததற்குக் காரணம். உங்களுக்குப் பொல்லாப்புச் செய்ய எனக்கு வல்லமை உண்டு; ஆகிலும், உங்கள் தகப்பனுடைய தேவன் : நீ யாக்கோபோடே நன்மையே அன்றித் தீமை ஒன்றும் பேசாதபடிக்கு எச் சரிக்கையாயிரு என்று நேற்று ராத்திரி என்னோடே சொன்னார் என்று லாபான் அறிவித்தான். திரும்பிவரும்படியாக அவர்களைப் பலவந்தப்படுத்தக்கூடாது, அவர்களை மயக்கும் தூண்டுதல்களைக் காண்பித்து நிர்பந்திக்கவுங்கூடாது. PPTam 223.3

லாபான் தன் குமாரத்திகளின் சீதனங்களை அவர்களுக்கு தராதிருந்து, யாக்கோபைதந்திரமாகவும் கடினமாகவும் எப்போதும் நடத்தியிருந்தான். ஆனால் இப்போது, பிரிவுபசாரவிருந்து கொடுப் பதற்காவது, அல்லது தன்னுடைய குமாரத்திகளுக்கும் அவர்களுடைய பிள்ளைகளுக்கும் பிரியாவிடை கொடுப்பதற்காவது சந்தர்ப்பம் கொடுக்கவில்லை என்று சிறப்பான பாசாங்கு காண்பித்து, இரகசியமாகப் பிரிந்து வந்ததற்காக அவனைக் கடிந்து கொண்டான். PPTam 224.1

அதற்கு யாக்கோபு, லாபானுடைய சுயநலத்தையும் பிடுங்கிக் கொள்ளும் கொள்கையையும் முன்வைத்து, தன்னுடைய நேர்மைக் கும் உண்மைக்கும் அவனையே சாட்சியாக நிறுத்தினான். என் பிதா வின் தேவனாகிய ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் பயபக்திக் குரியவரும் என்னோடிராமற்போனால், நீர் இப்பொழுது என்னை வெறுமையாய் அனுப்பிவிட்டிருப்பீர்; தேவன் என் சிறுமையையும் என் கைப்பிரயாசத்தையும் பார்த்து, நேற்று ராத்திரி உம்மைக் கடிந்து கொண்டார் என்றான் யாக்கோபு . PPTam 224.2

முன்வைக்கப்பட்ட வார்த்தைகளை லாபானால் மறுக்கமுடிய வில்லை. இப்போது ஒரு சமாதான உடன்படிக்கையை அவன் முன்மொழிந்தான். யாக்கோபு அதற்கு இணங்க, உடன்படிக்கையின் அடையாளமாக ஒரு கல் குவியல் எழுப்பப்பட்டது. அந்தத் தூணுக்கு லாபான் : மிஸ்பே அதாவது காவற்கோபுரம் என்று பேரிட்டு, நாம் ஒருவரை ஒருவர் விட்டு மறைந்த பின்,... கர்த்தர் எனக்கும் உனக்கும் நடுநின்று கண்காணிக்கக்கடவர் என்று கூறினான். PPTam 224.3

பின்னும் லாபான் யாக்கோபை நோக்கி : இதோ, இந்தக் குவியலையும் எனக்கும் உனக்கும் நடுவாக நான் நிறுத்தின் தூணையும் பார் தீங்கு செய்ய நான் இந்தக் குவியலைக் கடந்து உன்னிடத்துக்கு வராதபடிக்கும், நீ இந்தக் குவியலையும் இந்தத் தூணையும் கடந்து என்னிடத்துக்கு வராதபடிக்கும் இந்தக் குவியலும் சாட்சி, இந்தத் தூணும் சாட்சி. ஆபிரகாமின் தேவனும் நாகோரின் தேவனும் அவர்கள் பிதாக்களின் தேவனுமாயிருக் கிறவர் நமக்குள்ளே நடுநின்று நியாயந்தீர்ப்பாராக என்றான். அப் பொழுது யாக்கோபு தன் தகப்பனாகிய ஈசாக்கின் பயபக்திக்குரியவர்மேல் ஆணையிட்டான். இந்த உடன்படிக்கையை உறுதிபண்ணும் வண்ணமாக அந்த கூட்டங்கள் ஒரு விருந்து உண்டார்கள். இரவு தோழமையான பேச்சுக்களோடு கடந்தது. விடியற்காலத்தில் லாபா னும் அவனுடைய கூட்டமும் பிரிந்து சென்றது. இந்தப் பிரிவோடு ஆபிரகாமின் பிள்ளைகளுக்கும் மெசொபத்தோமியாவின் குடிகளுக்குமிடையே இருந்த தொடர்பின் எல்லா சுவடுகளும் முடிவிற்கு வந்தது. PPTam 224.4