Go to full page →

தேவனுடைய முன்மாதிரி TamChS 175

மாபெரும் மருத்துவ நற்செய்தி ஊழியரான கிறிஸ்துதான் நம் முன்மாதிரி. அவர் வியாதியஸ்தர்களைக் குணமாக்கி, சுவிசேஷத்தைப் பிரசங்கித்தார். அவருடைய ஊழியத்தில் போதனையும் குண மாக்குதலும் இணைந்தே காணப்பட்டன. இன்றும் அவற்றைப் பிரித்துப் பார்க்கக்கூடாது. 59T, 170,171 TamChS 175.4

கிறிஸ்துவின் ஊழியர்கள் அவருடைய முன்மாதிரியைப் பின்பற்றவேண்டும். அவர் தாம் சென்ற இடங்களிலெல்லாம் உபத்திர வப்பட்டோரைத்தேற்றினார்; வியாதியஸ்தரைக் குணப்படுத்தினார். அதன்பிறகு, தம்முடைய இராஜ்யத்திற்கடுத்த மேன்மையான சத்தியங்களை அவர்களுக்கு எடுத்துரைத்தார். அவரைப் பின்பற்றுகிறவர்கள் செய்யவேண்டிய பணியும் இதுதான். 6COL, 233,234 TamChS 175.5

தங்களை கிறிஸ்துவின் பிள்ளைகளெனச் சொல்லிக்கொள் வோர் அவருடைய முன்மாதிரியைப் பின்பற்றவேண்டும். உங்கள் சகமனிதர்களின் சரீரத்தேவைகளைச் சந்தியுங்கள். அவர்கள் நன்றியுணர்வு காட்டுவது தடைகளை உடைக்கும். அவர்களுடைய இருதயங்களில் இடம்பிடிக்க உங்களுக்கு வழிகொடுக்கும். இந்த விஷயம்பற்றி ஊக்கமாகச் சிந்தியுங்கள். 19T, 127 TamChS 175.6

குறிப்பாக மருத்துவ நற்செய்தி ஊழியர்கள், தங்களுடைய மருத்துவ நற்செய்தி ஊழியத்தில் தெய்வீக முன்மாதிரியாம் கிறிஸ்து இயேசுவையே தங்கள் ஆவியிலும் வார்த்தையிலும் குணத்திலும் பின்பற்றவேண்டும். 27T, 127 TamChS 176.1