Go to full page →

வெளியீட்டு விரிவாக்கம் TamChS 195

இக்காலத்திற்கான சத்தியத்தை நம்புகிறவர்களே, விழித்துக் கொள்ளுங்கள். சத்தியத்தை அறிந்தவர்கள் அதை அறிவிப்பதற்கு உதவும்படி உங்களால் முடிந்த வழிகளை எல்லாம் உபயோகிக்க வேண்டியது உங்கள் கடமையாக இருக்கிறது. நம் வெளியீடுகளை விற்பதால் கிடைக்கும் தொகையில் பாதியை, இன்னும் அதிக புத்தகங்களைப்படைப்பதற்கான வசதிகளை அதிகரிப்பதற்குப் பயன்படுத்த வேண்டும். அத்தகைய படைப்புகள் குருடரின் கண்களைத் திறக்கவும், இருதயத்தின் தரிசு நிலத்தை உடைக்கவும் உதவியாக இருக்கும். 19T, 62 TamChS 195.5

தற்கால சத்தியத்தின் வெளிச்சம் அடங்கிய புத்தகப் படைப்புகளை வெளியீடுவதற்காக அமெரிக்கா, ஐரோப்பாவின் பல்வேறு இடங்களிலும், பிறதேசங்களிலும் கட்டடங்களை எழுப்பவேண்டு மென்று பல வருடங்களுக்குமுன்னர் ஆண்டவர் எனக்கு விசேஷித்த கட்டளைகளைக் கொடுத்தார். அழைப்பின் செய்திகளையும் எச்சரிப்பின் செய்திகளையும் அச்சகத்திலிருந்து உலகத்திற்குக் கொண்டுசெல்வதற்கான ஒவ்வொரு முயற்சியையும் மேற்கொள்ளுமாறு ஆண்டவர் என்னிடம் சொன்னார். வேறு எந்த வழியாலும் ஆதாயம்பண்ணப்பட முடியாத சிலர் நம்புத்தங்கள்மூலம் ஆதாயப்படுவார்கள். தற்கால ச்சத்தியம் குறித்த வெளிச்சத்தை உலகத்தில் பிரகாசிக்கும் கதிர்கள் நம் புத்தகங்களிலும் பத்திரிக்கைகளிலு மிருந்து புறப்படவேண்டும். 28T, 87 TamChS 196.1

நம்முடைய வெளியீடுகளை பல்வேறு மொழிகளில் அச்சிட்டு, ஒவ்வொரு நாகரிக தேசத்திற்கும் என்ன விலையானாலும் அனுப்ப வேண்டும் என்று எனக்குக் காட்டப்பட்டது. ஆத்துமாக்களின் மதிப்போடு ஒப்பிடும்போது, இந்த நேரத்தில் பணத்திற்கு ஏதாவது மதிப்பிருக்கிறதா? நம்மிடமுள்ள ஒவ்வொரு காசையும் நம்முடையதாகக் கருதாமல், ஆண்டவருடையதாகக் கருதவேண்டும்; தேவன் நம்மிடம் ஒப்படைத்துள்ள விலைமதிப்புமிக்க பொறுப்பாகக் கருத வேண்டும். தேவையற்ற நாட்டங்களில் அவற்றைச் செலவிடாமல், அழிவிலிருந்து ஆண்களையும் பெண்களையும் காப்பாற்றுகிற பணிக்காகப் பயன்படுத்தவேண்டும். 3LS, 214 TamChS 196.2

சத்தியம் அச்சிடப்பட்ட வார்த்தைகளை வெவ்வேறு மொழிகளில் மொழிபெயர்த்து, உலகத்தின் கடையாந்தரங்கள் மட்டும் கொண்டுசெல்ல வேண்டும். 49T, 26 TamChS 196.3

இந்த வெளியீடுகளை ஒவ்வொரு மொழியிலும் மொழி பெயர்க்க வேண்டும்; உலகத்திலுள்ள அனைவருக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க வேண்டும். ஊழியம் செய்கிற ஒவ்வொருவருக் கும் அவருடைய பிரயாசங்களை வெற்றிகரமாக மாற்றும் தெய்வீகத் திறனைத் தருவதாக கிறிஸ்து வாக்குரைக்கிறார். 19T, 34 TamChS 196.4

நம் வெளியீடுகள் எல்லா இடங்களுக்கும் செல்லவேண்டும். பல மொழிகளில் அவை வெளியாகட்டும். இந்த ஊடகத்தின்மூல மாகவும் ஜீவனுள்ள போதகர்மூலமாகவும் மூன்றாம் தூதனுடைய தூது கொடுக்கப்படவேண்டும். இக்காலத்திற்கான சத்தியத்தை விசுவாசிப்பவரே, விழித்துக்கொள்ளும். 2CEV, 101 TamChS 197.1

மூன்றாம் தூதனுடைய தூது ஒருபோதும் பிரசங்கிக்கப்பட்டிராத இடங்களுக்கு நம்முடைய வெளியீடுகளை தேவமக்கள் பலர் கொண்டு செல்லவேண்டும். பல்வேறு மொழிகளில் நம் புத்தகங்களை வெளியிடவேண்டும். தாழ்மையும் உண்மையுமான மனிதர்கள் இந்தப் புத்தகங்களை எடுத்துக்கொண்டு புத்தக ஊழியர்களாகச் செல்லவேண்டும்; வேறு எந்த வழியாலும் வெளிச்சத்தைப் பெறமுடியாதவர்களுக்கு சத்தியத்தைக் கொண்டு செல்ல வேண்டும். 39T, 33,34 TamChS 197.2

இரட்சகரின் சீக்கிர வருகை குறித்த வாக்குறுதிகள் அடங்கிய வெளியீடுகளை ஒவ்வொரு நகரமாக, ஒவ்வொரு நாடாக அவர்கள் கொண்டுசெல்ல வேண்டும். 49T, 34 TamChS 197.3

தவறான அபிப்பிராயம், மூடநம்பிக்கை ஆகிய சுவர்களை உடைப்பதில் வெளியீடுகள் பிற நாடுகளில் ஏற்கனவே சிலருடைய உள்ளங்களில் கிரியை செய்து வருவதாக எனக்குக் காட்டப்படுகிறது. தற்காலச் சத்தியம்பற்றி தாள்களிலும் துண்டுப்பிரதிகளின் சிலபக்கங்களிலும் ஆண்களும் பெண்களும் மிகுந்த ஆர்வத்தோடு வாசிப்பதாக எனக்குக் காட்டப்பட்டது. மிகவும் அருமையும் புதிதுமான ஆதாரங்களை வாசிப்பார்கள். ஆழமான, புதிய ஆர்வத்துடன் தங்கள் வேதாகமங்களைத் திறப்பார்கள். ஏனென்றால், அவர்களுக்கு விளங்காமலிருந்த சத்தியம் குறித்த விஷயங்கள் தெளிவாக்கப்பட்டன; குறிப்பாக, நான்காம் கற்பனையின் ஓய்வுநாள் குறித்த வெளிச்சம் தெளிவாக்கப்பட்டது. இந்த விஷயங்கள் இப்படித்தானா என்று காணும்படி அவர்கள் வேதவாக்கியங்களை ஆராய்ந்தபோது, அவர்களுடைய புத்தியில் புதிய வெளிச்சம் உதித்தது. ஏனென்றால், தூதர்கள் அவர்கள் மேலே பறந்து, வெளியீடுகளில் அவர்கள் வாசித்துக்கொண்டிருந்த சத்தியங்களை அவர்களுடைய உள்ளங்களில் உணர்த்தினார்கள். TamChS 197.4

அவர்களுடைய ஒரு கையில் தாள்களும் துண்டுப்பிரதிகளும் மற்றொறு கையில் வேதாகமும் இருந்ததையும், கன்னங்களில் கண்ணீர் வழிந்தோடியதையும், தேவன் சகல சத்தியத்திற்குள்ளும் தங்களை வழிநடத்தும்படி ஊக்கமாகவும் தாழ்மையாகவும் ஜெபித்து, அவருக்குமுன் பணிந்துகொண்டதையும் கண்டேன். அவர்கள் மூலம் அவர் என்ன செய்துகொண்டிருந்தாரோ, அதற்காகத்தான் முன்னரே அவர்களை அழைத்திருந்தார். சத்தியத்தை இருதயங்களில் ஏற்றுக் கொண்டபோது, வேதாகமம் அவர்களுக்கு ஒரு புதிய புத்தகமாக மாறியது; நன்றிமிகுந்த மகிழ்ச்சியோடே அதை தங்கள் மார்போடு அணைத்தார்கள். அதே சமயம் அவர்களுடைய முகங்களில் சந்தோஷமும் பரிசுத்த மகிழ்ச்சியும் காணப்பட்டது. TamChS 197.5

தாங்கள் வெளிச்சத்தைப் பெற்றுக்கொண்டதோடு மட்டும் அவர்கள் திருப்தியடையவில்லை, மற்றவர்களுக்கும் ஊழியம் செய்யத் துவங்கினார்கள். சத்தியத்தின் நிமித்தமாகவும் இருளிலிருந்த சகோதரருக்கு உதவுவதற்காகவும் சிலர் மிகுந்த தியாகங்களைச் செய்தார்கள். மற்ற மொழிகளிலும் துண்டுப்பிரதிகளையும் தாள்களையும் விநியோகித்து, மாபெரும் ஊழியத்தைச் செய்யும்படி இவ்வாறு வழி ஆயத்தமாகிறது. 1LS, 214,215 TamChS 198.1