சேர்ப்பின் பண்டிகைக்காக ஆயத்தமாக்கப்பட்ட பிரசுரங்கள் மூலம் விசேஷித்த ஊழியப்பணியைச் செய்யவிருக்கிற அனைவருக்கும் நான் சொல்ல விரும்புவது என்னவென்றால், ‘உங்களுடைய முயற்சிகளில் கருத்தாக இருங்கள்; பரிசுத்த ஆவியானவரு டைய வழிநடத்துதலின்கீழ் வாழுங்கள். உங்கள் கிறிஸ்தவ அனுபவத்தில் அனுதினமும் வளருங்கள். சிறப்பு தகுதியுடையவர்கள் வாழ்விலும் தாழ்விலும் அவிசுவாசிகளுக்காக ஊழியம் செய்யட்டும். அழிந்துபோகிற ஆத்துமாக்களை கருத்தோடு தேடுங்கள். ஓ, வழிதப்பிப் போனோரை மீண்டும் தம் மந்தைக்குள் கொண்டுவருவதற்கு கிறிஸ்து எவ்வளவாய் ஏங்குகிறாரெனச் சிந்தியுங்கள்! ஆத்துமாக்கள்மேல் கவனமாக இருங்கள்; அவர்களுக்காகக் கணக்குக்கொடுக்கவேண்டும். ‘இந்தச் சத்தியம்பற்றி நீங்கள் ஏன் எனக்குச் சொல்லவில்லை? என் ஆத்துமாமேல் நீங்கள் ஏன் அக்கறை காட்டவில்லை?’ என்று சொல்கிறவன் ஒருவன்கூட நியாயத் தீர்ப்பு நாளில் காணப்படாதபடிக்கு உங்கள் திருச்சபையிலும் அக்கம்பக்கத்திலும் நீங்கள் செய்கிற நற்செய்தி ஊழியத்தில் உங்களுடைய வெளிச்சம் தெளிவாக, தொடர்ந்து பிரகாசிக்கட்டும். எனவே, நம் விசுவாசத்தைச் சேராதவர்களுக்காக ஆயத்தமாக்கப்பட்ட புத்தகப்படைப்புகளை விநியோகிப்பதில் நாம் கவனமாக இருப்போமாக. அவிசுவாசிகளுடைய கவனம் சிதறாதபடிக்கு ஒவ்வொரு வாய்ப்பையும் நன்றாகப் பயன்படுத்துவோமாக. அந்தப் புத்தகங்களை வாங்குகிற ஒவ்வொருவரிடம் அவற்றைச் சேர்ப்போமாக. ‘கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவாந்தரவெளியிலே நம்முடைய தேவனுக்குப்பாதையைச் செவ்வைபண்ணுங்கள்’ என்கிற செய்தியை அறிவிக்கும்படி நம்மைப் பரிசுத்தம்பண்ணுவோமாக. 1Ms, June 5, 1914 TamChS 221.3