Go to full page →

இதே தடைகளைச் சந்திக்கிற இன்றைய தலைவர்கள் TamChS 228

நெகேமியாவின் அனுபவம்தான் இக்காலத்தில் தேவபிள்ளைகளிடம் மீண்டும் காணப்படுகிறது. சத்தியத்தின் நோக்கத்திற்காகப் பிரயாசப்படுபவர்கள், சத்தியத்தின் எதிரிகளுடைய கோபத்தைத் தூண்டாமல் அதைச் செய்யமுடியாது என்பதைக் கண்டுகொள்வார்கள். அவர்கள் ஈடுபட்டுள்ள பணிக்கு தேவன் அவர்களை அழைத்திருக்கலாம்; அவர்களுடைய ஊழியத்தை அங்கீகரித்திருக்கலாம்; ஆனாலும் நிந்தையிலும் பரிகாசத்திலுமிருந்து அவர்கள் தப்பிக்க முடியாது. உண்மையற்றவர்கள், நம்பமுடியாதவர்கள், சூழ்ச்சி செய்பவர்கள், மாய்மாலக்காரர்கள் சுருக்கமாகச் சொன்னால், அவர்களுடைய எதிரிகள் தங்கள் நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு என்னவானாலும் இவர்களைக் குற்றஞ்சாட்டுவார்கள். தேவபக்தியற்றவர்களைப் பிரியப்படுத்துவதற்காக, பரிசுத்தமானவைகள் நிந்தையான விதங்களில் சுட்டிக்காட்டப்படும். பொறாமை, கசப்பு, அவபக்தி, வெறுப்பு இவற்றோடு கூட கிண்டலும் கீழ்த்தரமான நகைச்சுவையும் சொற்ப அளவு கலந்தாலும் போதும்; தேவ நிந்தனை செய்கிற பரியாசக்காரனை அது குஷிப்படுத்திவிடும். துணிகரமான இந்தப் பரியாசக்காரர்கள் ஒருவருக்கொருவர் கபட்டுத்தன்மையை வளர்த்து, தேவதூஷணவேலையில் ஒருவரையொருவர் தைரியப்படுத்துவார்கள். அவமதிப்பும் ஏளனமும் மனித இயல்புக்கு வேதனை தரக்கூடியவை. ஆனால், தேவனுக்கு உண்மையாக இருக்கிற அனைவருமே அதைச் சகித்தாகவேண்டும். தேவன் தங்கள்மேல் சுமத்தியுள்ள பணியைச் செய்யாதபடிக்கு ஆத்துமாக்களைத் திசைதிருப்ப இதைக் கையாளுவது சாத்தானுடைய திட்டமாக இருக்கிறது. 2Sw, April 12, 1904 TamChS 228.1