பாழான இடங்களில் குடியேறுவதற்கு நற்செய்தி ஊழியக் குடும்பங்கள் தேவை. விவசாயிகளும், நிதிநிர்வாகிகளும், கட்டு மானக்காரர்களும், பல்வேறு கலைகளிலும் கைவினைத்திறன் களிலும் நிபுணர்களும் புறக்கணிக்கப்பட்ட களங்களுக்குச் சென்று நிலத்தைப் பண்படுத்தவேண்டும்; தொழிற்சாலைகளை நிறுவ வேண்டும்; தங்களுக்காக எளிய வீடுகளைக் கட்டவேண்டும்; தங் கள் அயலகத்தாருக்கு உதவவேண்டும். 3MH, 194 TamChS 240.2
இருளிலும் பொய்யிலும் இருக்கிற சமூகத்தினர்கள் மத்தியில் செல்லவும், எஜமானுக்காக விடாமுயற்சியோடு பிரயாசப்படவும் கிறிஸ்தவக் குடும்பங்களை தேவன் அழைக்கிறார். சுயதியாகம் இருந்தால்தான் இந்த அழைப்புக்கு இணங் கமுடியும். எல்லா தடைகளும் விலகட்டும் என்று அநேகர் காத்துக்கொண்டிருக்கிற வேளையில், உலகத்தில் நம்பிக்கையின்றி தேவனை அறியாமல் ஆத்துமாக்கள் மரித்துக்கொண்டிருக்கிறார்கள். உலக ஆதாயத் திற்காகவும், விஞ்ஞான அறிவைப் பெறுவதற்காகவும் அதிகமதி கமானவர்கள் தீங்குநிறைந்த பகுதிகளுக்கு துணிந்து செல்வார்கள், அங்கே கஷ்டத்தையும் தனிமையையும் அனுபவிப்பார்கள். மற்ற வர்களுக்கு இரட்சகரைப்பற்றிச் சொல்வதற்காக இத்தகைய பகுதிகளுக்குச் செல்ல ஆயத்தமாக இருப்பவர்கள் யார்? சுவிசே ஷம் அறிவிக்கப்படவேண்டிய இடங்களுக்குச் சென்று, இருளில் இருப்போருக்கு மீட்பரைச் சுட்டிக்காட்டக்கூடிய ஆண்களும் பெண்களும் எங்கே இருக்கிறார்கள்? 19T, 33 TamChS 240.3
குடும்பமாகச் சேர்ந்து நற்செய்தி ஊழியம் செய்து, தனி நபர் ஊழியத்தில் ஈடுபட்டு, புத்திக்கூர்மையோடும் அயராத கரங்களோடும் எஜமானுக்காக கடுமையாகப் பிரயாசப்பட்டு, அவருடைய ஊழியம் வெற்றிபெறபுதிய புதிய வழிகளைத் திட்டமிடுகிறவர்கள் இருக்கிறார்கள். 29T, 40 TamChS 241.1
பூமியின் இருளடர்ந்த பகுதிகளில், ஆவிக்குரிய இருள் சூழ்ந்த மக்களுள்ள பகுதிகளில் குடும்பங்கள் குடியேறி, கிறிஸ்துவினுடைய ஜீவ ஒளி தங்கள் மூலம் பிரகாசிக்க அனுமதித்தால், மாபெரும்பணியைச் செய்துமுடிக்கலாம். போதகரின் உதவியில்லாமல் நிர்வாகம் செய்யமுடியாத அளவுக்கு அதிகளவில் ஆர்வம் உண்டாகும் வரை, கான்ஃபரன்ஸிடமிருந்து நிதியுதவிபெறாமல், அமைதியாக, இடையூறு எதுவுமின்றி தங்கள் பணியை அவர்கள் துவங்கவேண்டும். 36T, 442 TamChS 241.2