முகாம் கூட்டங்கள் நம் ஊழியத்தின் மிகமுக்கிய ஏதுகரங்களில் ஒன்று ஆகும். மக்களுடைய கவனத்தை ஈர்ப்பதில் பயன்மிக்க மிகமுக்கிய பாணிகளில் இதுவும் ஒன்று. 16T, 31 TamChS 254.1
உலகப்பிரகாரமான எண்ணம், தவறான அபிப்பிராயம் ஆகிய தடைகளை எவ்வாறு உடைப்பது? மக்கள் நன்மையடைவதற்கு ஏதுவான ஈடு இணையற்ற சத்தியங்களை எவ்வாறு அறிந்துகொள்ளச் செய்வது? இவற்றை அறியாமல் நாம் ஊழியத்தில் குழம்பி நிற்கிறோம். இந்த ஊழியத்தை நிறைவேற்ற முக்கியக்கருவிகளில் ஒன்று முகாம் கூட்டம் என்று ஆண்டவர் அறிவுறுத்தியிருக்கிறார். 26T, 31,32 TamChS 254.2