எழும்புங்கள், எழும்புங்கள், என் சகோதர சகோதரிகளே, அமெரிக்காவில் ஊழியமே செய்யப்பட்டிராத பகுதிகளுக்குச் செல்லுங்கள்.அயல்நாட்டு ஊழியக்களங்களுக்காக ஏதாவது கொடுத்ததோடு உங்கள் கடமை முடிந்ததாக நினைக்க வேண்டாம். அயல்நாட்டுக் களங்களில் செய்யப்படவேண்டிய ஓர் ஊழியம் உள்ளது, அதேயளவுக்கு முக்கியமாக அமெரிக்காவில் செய்யவேண்டிய ஊழியமும் உள்ளது. அமெரிக்க நகரங்களில் கிட்டத்தட்ட எல்லா மொழிக்காரர்களும் இருக்கிறார்கள். தேவன் தம் திருச்சபைக்குக் கொடுத்திருக்கிற வெளிச்சம் இவர்களுக்குத் தேவை. 18T, 36 TamChS 260.1
தூர இடங்களிலுள்ள பல்வேறு தேசங்களைச் சேர்ந்த மக்களை எச்சரிப்பதற்கான திட்டங்களை நிறைவேற்றுகிற அதே வேளையில் நம் நாட்டில் குடியேறியுள்ள அயல்நாட்டுக்காரர்களுக்காகவும் அதிகம் செய்யவேண்டியுள்ளது. சீனாவில் உள்ள ஆத்துமாக்கள் எவ்வளவு விலையேறப்பெற்றவர்களோ, அவ்வளவுக்கு நம்முடைய தேசங்களில் குடியேறியிருக்கிற ஆத்துமாக்களும் முக்கியமானவர்களே. தேவனுடைய வழி நடத்துதலைப் பின்பற்றி, நாம் உண்மையோடு பிரயாசப்பட வேண்டும். ஆனால் நகரங்களிலும் கிராமங்களிலும் அருகிலுள்ள மாவட்டங்களிலும் உள்ள பல்வேறு தேசங்களைச் சேர்ந்த அயல்நாட்டவர்களுக்கும் நாம் நம் கடமையைச் செய்தாகவேண்டும். 1RH, July 25, 1918 TamChS 260.2
நியூயார்க் நகரத்திலும், சிகாகோவிலும், மக்கள் தொகை மிக அதிகமுள்ள பிற பெருநகரங்களிலும் அதிகளவில் அயல்நாட்டவர்கள் வசிக்கிறார்கள்; பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அந்தத் திரளான மக்கள் அனைவருமே நடைமுறை ரீதியாக எச்சரிக்கப்படாமல் இருக்கிறார்கள். அயல் நாடுகளில் ஊழியம் செய்ய செவந்த்-டே அட்வென்டிஸ்டுகள் மத்தியில் மிகுந்த வைராக்கியம் காணப்படுகிறது. அதேயளவு வைராக்கியத்தை அருகிலுள்ள நகரங்களில் ஊழியம் செய்யக் காட்டினால் அது தேவனுக்குப் பிரியமாக இருக்கும். அவருடைய மக்கள் பகுத்றிவோடு செயல்படவேண்டும். நகரங்களில் இந்த ஊழியத்தை மிகுந்த ஆர்வத்துடன் துவங்கவேண்டும். அர்ப்பணிப்பும் தாலந்துமுள்ள மனிதர்களை இந்த நகரங்களுக்கு அனுப்பி, ஊழியம் செய்யவேண்டும். மக்களை எச்சரிப்பதற்கான இந்த முயற்சிகளை செயல்படுத்துவதில் ஊழியர்கள் ஒத்துழைக்கவேண்டும். 2Ibid TamChS 261.1