எத்தியோப்பிய மந்திரி உயர்பதவியும், பெரும் செல்வாக்கும் உள்ளவனாக இருந்தான். அவன் மனமாற்றமடைந்தால், தான் பெற்ற வெளிச்சத்தை மற்றவர்களுக்குக் கொடுப்பான் என்றும், சுவிசேஷத்திற்காக வலுவான தாக்கத்தை ஏற்படுத்துவான் என்றும் தேவன் கண்டார். வெளிச்சத்தைத் தேடின அவனுக்கு தூதர்கள் உதவி செய்தார்கள்; இரட்சகரண்டை அவன் கொண்டுவரப்பட்டான். பரிசுத்த ஆவியானவருடைய உதவியால், அவனை வெளிச்சத்திற்கு வழிநடத்தக்கூடிய ஒருவனைச் சந்திக்கும்படி ஆண்டவர் அவனை வழி நடத்தினார். 1AA, 107 TamChS 267.3
புதிதாகப் பிறந்திருந்த சபையை அழிப்பதற்கு யூதர்கள் முயன்றபோது, அதைப் பாதுகாக்க நிக்கோதேமு முன்வந்தான். தன்னைப் பாதுகாக்க வேண்டுமென்கிற எண்ணமோ, கேள்வியோ இல்லாமல் சீடர்களுடைய விசுவாசத்தை ஊக்குவித்தான், எருசலே மிலுள்ள சபையைத் தாங்குவதற்கும், சுவிசேஷ ஊழியத்தை முன்கொண்டு செல்வதற்கும் தன்வசதிகளைப் பயன்படுத்தினான். மற்ற நாட்களிலெல்லாம் அவனுக்கு மரியாதை செலுத்தி வந்தவர்கள் இப்போது அவனைப் பரிகாசம் செய்து, உபத்திரவப்படுத்தினார்கள்; உலக ஆஸ்திகளில் தரித்திரனானான்; ஆனாலும் தன் விசுவாசத்தை உறுதியோடு அறிக்கையிடுவதில் அவன் தவறவில்லை. 2AA, 105 TamChS 268.1