Go to full page →

குடும்பப் பலிபீடத்தின் முக்கியத்துவம் TamChS 273

தேவனை நேசிப்பதாகச் சொல்கிறவரே, நீர் செல்லும் இடங்களுக்கெல்லாம் இயேசுவைக் கொண்டுசெல்வீராக; முற்கால கோத்திரப்பிதாக்களைப் போல, கூடாரம்போடுகிற இடத்திலெல்லாம் ஒரு பலிபீடத்தைக் கட்டுவீர்களாக. இந்த விஷயத்தில் ஒரு சீர்திருத்தம் தேவை; அது ஆழமானதும் விரிவானதுமான சீர்திருத்தமாக இருக்கும். 115T, 320, 321 TamChS 273.5

தேவனை விட்டு மக்களை வழிவிலக்குகிற ஒவ்வொரு முயற்சியையும் சாத்தான் எடுக்கிறான். தொழில் குறித்த கவலைகளில் அவர்களுடைய ஆவிக்குரிய வாழ்க்கை மூழ்கிவிடும்போது அவன் தன்னுடைய நோக்கத்தில் வெற்றிபெறுகிறான். ஏனெனில், அவர்களுடைய சிந்தனைகளை தொழிலிலேயே மூழ்கடித்து விட்டால் வேதாகமங்களை வாசிக்கவும், அந்தரங்கத்தில் ஜெபிக்கவும், காலையிலும் மாலையிலும் பலிபீடத்தின்மேல் துதிபலியையும் ஸ்தோத்திரபலியையும் தொடர்ந்து ஏறெடுக்கவும் அவர்கள் நேரம் செலவிடமாட்டார்கள். 25T, 426 TamChS 274.1

குடும்ப ஜெபத்தை இனிமையானதாகவும் சுவாரசியமானதாகவும் மாற்று வீர்களாக. 35T, 335 TamChS 274.2

ஜெபவேளையை மதிப்பதற்கு பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுக்கவேண்டும்; குடும்பஜெபத்தில் கலந்துகொள்ளுபடி காலையிலேயே அவர்களை எழும்பச் செய்யவேண்டும். 45T, 424 TamChS 274.3

ஆவிக்குரிய வாழ்வில் வெறுப்புண்டாகும்படி அல்லாமல், விருப்பதற்குரியதாக பிள்ளைகளுக்கு மாற்றவேண்டும். நாளின் சந்தோஷமிக்க வேளையாக குடும்பஜெபவேளையை மாற்றவேண்டும். எளிய, சரியான வேதப்பகுதிகளை வேதவாசிப்புக்குத் தெரிந்துகொள்ள வேண்டும். பாடல் பாடுவதில் பிள்ளைகளும் கலந்துகொள்ள வேண்டும். சுருக்கமாக, குறிப்பிட்ட விஷயத்திற்காக ஜெபிக்கவேண்டும். 55SW, June 13, 1905 TamChS 274.4

வீட்டிற்கும் குடும்ப ஜெபத்திற்கும் விருந்தினர்களை வரவேற்கவேண்டும். பொழுதுபோக்கில் நேரங்கழிப்பவர்களில் ஜெபவேளை தாக்கம் ஏற்படுத்துகிறது. ஒருமுறை கலந்துகொள்வதுகூட ஓர் ஆத்துமாவை மரணத்திலிருந்து காப்பாற்ற உதவலாம். இத்தகைய ஊழியத்தைக் குறித்து, ‘நானே பதிற்செய்வேன்’ என்று ஆண்டவர் சொல்கிறார். 66T, 347 TamChS 274.5

ஜெபவேளையை மதிக்கவும், பயபக்தியாக இருக்கவும் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்கவேண்டும். வேலைக்காக வீட்டிலிருந்து புறப்படுவதற்கு முன் குடும்பத்தினர் அனைவரையும் அழைத்து, அப்பாவோ, அப்பா இல்லாத பட்சத்தில் அம்மாவோ, அன்று முழுவதும் தேவன் தங்களைப் பாதுகாக்கமாறு அவரிடம் ஊக்கமாக மன்றாடவேண்டும். உங்களுக்கும் உங்களுடைய பிள்ளைகளுக்கும் முன்னால் பாவத்தூண்டல்கள் இருக்கின்றன என்கிற உணர்வும்கனிவும் இருதயம் முழுவதும் நிறைந்தவர்களாக, தாழ்மையோடு வாருங்கள். விசுவாசத்தோடு பலிபீடத்தின்மேல் அவர்களைக் கட்டி, ஆண்டவர் அவர்களைப் பாதுகாக்குமாறு மன்றாடுங்கள். இவ்வாறு தேவனிடம் அர்பணிக்கப்படுகிற பிள்ளைகளை பணிவிடைத் தூதர்கள் பாதுகாப்பார்கள். காலையிலும் மாலையிலும் ஊக்கமாக ஜெபித்தும், தளராமல் விசுவாசம் வைத்தும் தங்கள் பிள்ளைகளைச் சுற்றிலும் வேலியடைக்க வேண்டியது கிறிஸ்தவப் பெற்றோரின் கடமையாகும். பொறுமையோடு அவர்களுக்குப் புத்திசொல்லவேண்டும். தேவனுக்குப் பிரியமாக வாழும் விதம் பற்றி அன்பாகவும் சோர்ந்து போகாமலும் அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கவேண்டும். 11T, 397, 398 TamChS 274.6

‘தேவனுடைய சிநேகிதனான’ ஆபிரகாம் தகுதியான முன்மாதிரியை நமக்குமுன் வைத்திருக்கிறான். அவன் ஜெபவாழ்க்கை வாழ்ந்தான். எங்கெல்லாம் கூடாரத்தைப் போட்டானோ, அதற்கு மிக அருகிலே தன் பாளையத்திலுள்ள அனைவரையும் காலை மாலை பலிக்கு அழைக்கிற பலிபீடத்தையும் நிறுவினான். கூடாரத்தைப் பெயர்த்தபிறகும்கூட, பலிபீடம் அங்கேதான் இருந்தது. பின்னான வருடங்களில், திரிந்து கொண்டிருந்த கானானியர்களில் ஆபிரகாமிடமிருந்து போதனைகளைப் பெற்றவர்கள் அங்கே இருந்தார்கள். அவர்களில் யாராவது எப்போதாகிலும் அந்த பலி பீடங்களுக்கருகில் வரும்போது, தனக்குமுன் அங்கே வந்தவர் யார் என்பதை அறிந்துகொள்வார்; அவர் தனது கூடாரத்தை அங்கே போடும்போது, பலிபீடத்தைச் செப்பனிட்டு, ஜீவனுள்ள தேவனை அங்கே தொழுதுகொள்வார். 2 PP, 128 TamChS 275.1