Go to full page →

தெய்வீக ஊழியக்கட்டளை TamChS 35

சீடர்கள் செய்த வேலையை நாமும் செய்தாகவேண்டும். ஒவ்வொருகிறிஸ்தவரும் ஓர் ஊழியப்பணியாளராக இருக்கவேண்டும். உதவி தேவைப்படுவோருக்கு மனதுருக்கத்தோடும் பரிதாபத் தோடும் ஊழியம் செய்யவேண்டும்; பாடனுபவிக்கும் மனிதர்களின் வேதனைகளைத் தணிப்பதற்கு சுயநலமற்ற ஆர்வத்துடன் முயல வேண்டும். 2MH, p 104 TamChS 35.1

பரமேறிச் செல்லுமுன் கிறிஸ்து தம் சீடர்களுக்கு ஊழியக் கட்டளையைக் கொடுத்தார். அவர் இந்த உலகத்திற்கு விட்டுச் சென்றுள்ள நித்திய ஜீவனின் பொக்கிஷங்கள் குறித்த அவருடைய உயிலை அவர்கள் செயல்படுத்தவேண்டுமென்று சொன்னார். 3AA, p 27 TamChS 35.2

முதல் சீடர்களிடம் நம்பி ஒப்படைக்கப்பட்ட பொறுப்பு ஒவ்வொரு காலத்தைச்சேர்ந்த விசுவாசிகளுக்கும் உரியது. சத்தியத்தை அறிந்த ஒவ்வொரும், உலகத்திற்கு அறிவிக்கவேண்டிய பரிசுத்தமான சத்தியத்தைப் பெற்றிருக்கிறார்கள். தேவனுடைய உண்மை மக்கள் எப்போதுமே தீவிரமான ஊழியப்பணியாளர்களாக இருக்கிறார்கள். அவர் நாமத்தின் மகிமைக்காக தங்களுடைய வளங்களைப் பயன்படுத்துகிறார்கள். அவருடைய சேவையில் தங்கள் தாலந்துகளை ஞானமாகப் பயன்படுத்துகிறார்கள். 4AA, p 109 TamChS 35.3

சுவிசேஷ ஊழியக்கட்டளைதான் கிறிஸ்துவின் ராஜ்யத்தில் மிகப்பெரிய கட்டளையாகும். சீடர்கள் ஆத்துமாக்களுக்காக ஊக்கத்துடன் பிரயாசப்பட வேண்டும். அன்பின் அழைப்பை அனைவருக்கும் அறிவிக்கவேண்டும். மக்கள் தங்களிடம் வருவதற்காக அவர்கள் காத்திருக்கக்கூடாது; அவர்கள் மக்களிடம் சென்று, செய்தியை அறிவிக்கவேண்டும். 5AA, p 28 TamChS 35.4

கிறிஸ்து இந்தப் பூமியில் இருந்தபோது அவர் செய்த அதே வேலையை தேவ ஊழியர்களும் செய்யவேண்டுமென்று அவர் கட்டளையிட்டிருக்கிறார். அவர் செய்த ஒவ்வொரு வகை ஊழியத்தையும் செய்ய அவர்கள் தங்களை அர்ப்பணித்தாகவேண்டும். பரலோகம் தருகிறதும் ஆராயமுடியாததுமான ஐசுவரியங்களையும், அழியாத பொக்கிஷத்தையும் மனிதர்களுக்கு அவர்கள் சொல்ல வேண்டும். 69T, p 130 TamChS 35.5

சீடர்களுக்கு இயேசு கொடுத்த அதே ஊழியக்கட்டளையைத் தான் நமக்கும் கொடுத்திருக்கிறார். தேவனை அறியாதோருக்கும், உலகத்தில் நம்பிக்கையின்றி இருப்போருக்கும் அன்று போல இன்றும், சிலுவையில் அறையப்பட்டு உயிர்த்த இரட்சகரையே உயர்த்திக் காட்டவேண்டும். போதகர்களையும் ஊழியர்களையும் சுவிசேஷகர்களையும் ஆண்டவர் அழைக்கிறார். இரட்சிப்பின் செய்தியை அவருடைய தாசர்கள் வீடு வீடாகச் சென்று அறிவிக்க வேண்டும். கிறிஸ்துவின்மூலம் கிடைக்கிற மன்னிப்பின் செய்தியை சகல தேசத்தாருக்கும் ஜனத்தாருக்கும் பாஷைக்காரருக்கும் மக்களுக்கும் கொண்டுசெல்லவேண்டும்.உயிரற்றதும் சாரமற்றதுமான வார்த்தைகளால் இந்தச் செய்தியைச் சொல்லாமல், தெளிவும் உறுதியும் ஊக்கமும் தருகிறவார்த்தைகளால் இந்தச் செய்தியைச் சொல்ல வேண்டும். வாழ்க்கையில் தாங்கள் தப்பித்துக்கொள்வதற்கான எச்சரிப்புக்காக நூற்றுக்கணக்கானவர்கள் காத்திருக்கிறார்கள். கிறிஸ்தவத்தின் வல்லமைக்கான ஆதாரத்தை கிறிஸ்தவர்களில் உலகம் காணவேண்டும். உலகத்தின் ஒரு சில இடங்களில் அல்ல, உலகம் முழுவதிலும் இரக்கத்தின் செய்தி அவசியமாயிருக்கிறது. 1GW, p 29 TamChS 36.1

இயேசு பரலோகம் செல்வதற்குமுன்பாக, சுவிசேஷ ஒளியைப் பெற்றவர்களிடம் பூமியில் தம்முடைய வேலையை ஒப்படைத்தார். அந்த வேலையை அவர்கள் நிறைவேற்றி முடிக்கவேண்டியிருந்தது. தம் சத்தியத்தை அறிவிக்கிற வேலையை அவர் வேறு ஜீவிகள் எவரிடமும் விடவில்லை. ‘நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள். உலகத்தின் முடிவு பரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனே கூட இருக்கிறேன்’ என்றார். பரிசுத்தமான இந்த ஊழியக்கட்டளை இன்றைக்கும் பொருந்தும். இதை ஏற்றுக்கொள்கிற அல்லது மறுதலிக்கிற பொறுப்பை தேவன் தம் சபையிடமே விட்டுவிட்டார். 2HS, p 288 TamChS 36.2

ஒரு பரிசுத்த பணியை நமக்குக் கட்டளையிட்டிருக்கிறார். ‘ நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள்; இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனே கூட இருக்கிறேன்’ என்கிற ஊழியக்கட்டளை தந்திருக்கிறார். மத்தேயு 28:19,20. இரட்சிப்பின் சுவிசேஷத்தை உலகிற்கு அறிவிக்கும் பணிக்கு நீங்கள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளீர்கள். பர லோகத்தின் பரிபூரணம்தான் உங்களுடைய வல்லமையாக இருக்க வேண்டும். 19T, pp 20,21 TamChS 36.3