Go to full page →

பரிவும் சிநேகிதத்தன்மையும் TamChS 303

தேவனுடைய நோக்கம் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு துறையிலும் மனிதர்களுடைய வேதனைகளைக் கண்டு பரிவுகாட்டுகிற ஆண்களும் பெண்களும் தேவைப்படுகிறார்கள்; ஆனால் அத்தகைய பரிவு அரிதாகவே காணப் படுகிறது. 4RH, Mgy 6, 1890 TamChS 303.3

கிறிஸ்துவைப்போன்ற பரிவு நமக்கு அதிகமாகத் தேவைப்படுகிறது; தவறே செய்யாதவர்கள்போலக் காணப்படுபவர்கள்மேல் மட்டுமல்ல; ஏழைகள்மேலும், உபத்திரவப்படுவோர் மேலும், தவறுகளில் விழுந்து பாவம் செய்து மனந்திரும்பி சோதிக்கப்பட்டு, தைரியமிழந்து பாடனுபவிக்கிற ஆத்துமாக்கள் மேலும் பரிவு காட்டவேண்டும். அவர்களுடைய குற்றங்குறைகளை உணர்ந்து, இரக்கமுள்ள நம் பிரதான ஆசாரியன்போல மனதில் தொடப்பட்டவர்களாக நம் சகமனிதர்களை நாடிச்செல்லவேண்டும். 1GW, 141. TamChS 303.4

ஒருவருக்கொருவர் பரிவும் அன்பும் காட்டாததால் நாம் அதிகம் இழக்கிறோம். விடுதலைபற்றிப் பேசுகிறவன், தனக்குள்தானே முடங்கிவிட்டால், அவன் நிறைவேற்றுவதற்காக தேவன் வைத்திருந்த திட்டத்தைச் செய்யத் தவறுகிறான். நாம் தேவனுடைய பிள்ளைகள்; பரஸ்பரம் ஒருவரை ஒருவர் சார்ந்துதான் நம் சந்தோஷம் உள்ளது. தேவனுக்காகவும் மனிதருக்காகவும் நிறைவேற்ற கடமைகள் உள்ளன. இவ்வாழ்க்கையில் நாம் அனைவருமே அவரவரவர் பங்கை நிறைவேற்றவேண்டும். நமக்குள் உள்ள சமுகப்பண்புகளை சரியாகப் பேணிவளர்ப்பதுதான் நம் சகோதரர் மேல் நமக்கு பரிவைக்கொண்டுவருகிறது; பிறருக்கு ஆசீர்வாதங்களைக் கொண்டுவர முயற்சிக்கும்போது, நமக்குச் சந்தோஷம் கிடைக்கிறது. 24T, 71, 72 TamChS 304.1

ஒரு பரிசேயனுடைய வீட்டிற்கு இரட்சகர் விருந்திற்குச் சென்றிருந்தார். ஏழைகளானாலும் பணக்காரரானாலும்,அவர்களுடைய அழைப்பை ஏற்றுக்கொள்வார்; அங்கு நிலவுகிற காட்சியை வைத்து ஏதாவது படிப்பினை சொல்லிக்கொடுப்பது அவருடைய வழக்கம். 3COL, 219 TamChS 304.2