அழிவுகரமான இந்நாட்களில் சபையின் தேவை என்ன தெரியுமா? பவுலைப்போல பிரயோஜனமுள்ளவர்களாக இருக்கிறவர்கள் வேண்டும்; தேவனுக்கடுத்தவைகளில் ஆழமான அனுபவம் பெற்று, ஊக்கத்தாலும் வைராக்கியத்தாலும் நிறைந்த ஊழியப்படை வீரர்கள் வேண்டும். பரிசுத்தமாக்கப்பட்ட, சுயத்தைத் தியாகம் செய்கிறமனிதர்கள் வேண்டும்; பாடுகளையும் பொறுப்புகளையும் கண்டு ஒளியாதமனிதர்கள் வேண்டும்; தைரியமும் உண்மையுமுள்ள மனிதர்கள் வேண்டும்; உள்ளத்தில் கிறிஸ்து ‘மகிமையின் நம்பிக்கையாக’ உருவாகியிருக்கிறர்கள் வேண்டும்; பரிசுத்த அக்கினியால் உதடுகள் தொடப்பட்டு, ‘திருவசனத்தைப் பிரசங்கம்பண்ணுகிற’ மனிதர்கள் வேண்டும். இத்தகைய ஊழியர்கள் இல்லாததால்தான் தேவனுடைய திட்டம் செயலற்றுப்போகிறது; கொடிய விஷம்போல கொடிய தவறுகள் மனித இனத்தில் பெரும்பாலானவர்களின் ஒழுக்கநிலைகளைக் கறைப்படுத்தி, எதிர்பார்ப்புகளைக் கெடுத்து உள்ளன. 2AA, 507 TamChS 319.1
எதிர்ப்பு, அழிவு, இழப்பு, மனிதரின் நோவுகள் போன்றவற்றுக்கு மத்தியில் கடுமையாகப் போராடி, ஆத்தும இரட்சிப்பின் ஊழியத்தைச் செய்யவேண்டும். ஒரு யுத்தத்தை எடுத்துக்கொள்வோம்; தாக்குதல் நடத்துகிற இராணுவத்தின் படைப்பிரிவுகளில் ஒன்றை எதிரிப்படைகள் தாக்கி பின்வாங்கச் செய்யும்போது, படைகள் பின்வாங்கினாலும், முன்னே கொடிபிடித்து நிற்பவர் அந்த இடத்தை விட்டு அசையமாட்டார். கொடிகளோடு பின்வாங்கும்படி தளபதி அவரிடம் கத்தினால், “கொடியை நோக்கி வீரர்களை வரச் சொல்லுங்கள்” என்று கொடிபிடித்திருக்கிறவர் பதில் சொல்லுவார். கொடிபிடித்திருக்கிற உண்மையுள்ள ஒவ்வொருவர்மேலும் சுமத்தப்பட்டுள்ள பணி இதுதான்; அதாவது, மக்களைக் கொடிகளண்டையில் கொண்டுவரவேண்டும். முழுமனதோடு பணிசெய்ய ஆண்டவர் அழைக்கிறார். கிறிஸ்தவர்களெனச் சொல்லிக்கொள்கிற அநேகர் செய்கிற பாவம் என்ன தெரியுமா? தங்களையும் தங்களோடு தொடர்பிலுள்ளவர்களையும் கொடியை நோக்கிவரவைப்பதற்கான தைரியமில்லாதவர்களாக இருப்பதுதான் என்பது நம் எல்லாருக்கும் தெரியும். 19T; 45, 46 TamChS 319.2
ஆபத்துக்காலத்தில், சகல பெலத்தோடும் துணிவோடும் செல்வாக்கோடும் செயல்படவேண்டும். அந்நேரத்தில், உறுதியோடு நீதி மார்க்கத்தில் நிற்க அஞ்சுகிற மனிதர்களை தேவனால் பயன்படுத்த முடியாது. உன்னதங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளுக்கு எதிராகவும், இவ்வுலக அந்தகார அதிபதிகளுக்கு எதிராகவும், துரைத்தனங்களுக்கும் அதிகாரங்களுக்கும் எதிராகவும், தீமைக்கு எதிராகவும் உண்மையாய் யுத்தம் செய்யும் மனிதர்களையே அவர் அழைக்கிறார். அப்படிப்பட்டவர்களிடமே, “நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே” என்று சொல்கிறார். 2 PK, 142 TamChS 320.1
எலியா, நாத்தான், யோவான் ஸ்நானன் போன்று விளைவுகளைப் பொருட்படுத்தமால், உண்மையோடு தம் செய்தியைக் கொண்டுசெல்லும் மனிதர்களை தேவன் அழைக்கிறார். தங்களுக்கு உண்டானயாவற்றையும் தியாகம் செய்ய நேரிடினும், சத்தியத்தைத் துணிவோடு பேசும் மனிதர்களையும் தேவன் அழைக்கிறார். 3PK, 142 TamChS 320.2