Go to full page →

ஓய்வும் தியானமும் TamChS 325

‘எவ்வாறு வேலைசெய்ய வேண்டும்? எவ்வாறு ஓய்வு எடுக்க வேண்டும்?’ என்பதை இயேசுவின் சீடர்களுக்குக்கற்றுக் கொடுக்க வேண்டும். ‘அப்புறம் போய், சற்று நேரம் இளைப்பாறுங்கள்’ என்கிற கிறிஸ்துவின் கட்டளைக்கு தேவன் தெரிந்துகொண்ட ஊழியர்கள் செவிகொடுக்கவேண்டியது இன்று அவசியமாயிருக்கிறது. இந்தக்கட்டளையை அறியாததால்தான், மதிப்புமிக்க பல உயிர்கள் தேவையே இல்லாமல் பலியாகி உள்ளன. அறுப்பு மிகுதியாகவும், வேலையாட்களோ குறைவாகவும் இருந்தாலும், ஆரோக்கியத்தையும் உயிரையும் தியாகம் செய்து எதையும் சாதிக்கமுடியாது. செய்ய வேண்டியவை இன்னும் ஏராளம் இருப்பதையும் தங்களால் மிகக் குறைவாகவே செய்யமுடிவதையும் காணும்போது, பலர் மிகுந்த மனச்சோர்வுக்கு ஆளாகிறார்கள். பெலவீனப்பட்டு, களைத்துப் போன ஊழியர்கள் பலர் வேதனைப்படுகிறார்கள். இன்னும் அதிகமாகச் சாதிப்பதற்கான உடல்பெலத்திற்காக ஏங்குகிறார்கள்; ஆனால், இவ்வகை மக்களைப் பார்த்துதான் இயேசு,“வனாந்தரமான ஓரிடத்தில் தனித்துச் சற்றே இளைப்பாறும்படி போவோம் வாருங்கள்” என்று சொல்கிறார். 2RH, Nov. 7, 1893 TamChS 325.1

கிறிஸ்தவ வாழ்க்கையின் அடையாளம் இடைவிடாத செயலும், இடைவிடாத தியானமும் அல்ல. தொலைந்துபோனோரின் இரட்சிப்புக்காக கிறிஸ்தவர்கள் ஊக்கமாக வேலைசெய்ய வேண்டும்; தியானத்திற்கும் ஜெபத்திற்கும் தேவவார்த்தையை ஆராய்வதற்கும் நேரம் செலவிடவேண்டும். எப்போதும் வேலை அழுத்தத்தின் கீழும், பரபரப்பிலும் இருப்பது நல்லதல்ல; அவ்வாறு இருப்பது தனிப்பட்ட பக்தியான வாழ்க்கையைப் புறக்கணிக்கச் செய்கிறது; சரீர, மனத்திறன்கள் பாதிப்படைகின்றன. 3RH, Nov. 7, 1893 TamChS 325.2

தேவனுடைய பயிற்சியின்கீழ் இருப்பவர்கள், இருதயத்தோடும் இயற்கையோடும் தேவனோடும் அமைதியாகப் பேசுவதற்கு நேரம் அவசியம். இந்த உலகத்திற்கும், அதன் பழக்கவழக்கங் களுக்கும், அதன் நடைமுறைகளுக்கும் ஒத்துப்போகிற ஒரு வாழ்க்கை அவர்களில் வெளிப்படவேண்டும்; தேவனுடைய சித்தம் குறித்த அறிவைப் பெறும்படிக்கு ஒரு தனிப்பட்ட அனுபவத்தை அவர்கள் பெறவேண்டியது அவசியம்.இருதயத்தில் அவர் பேசுவதை நாம் ஒவ்வொருவரும் தனித்தனியாகக் கேட்கவேண்டும். மற்ற அனைத்து சத்தமும் அடங்கிய நிலையில், அமைதியாக அவருக்குமுன் காத்திருந்தால், ஆத்துமாவின் அமைதி தேவனுடைய சத்தத்தைத் தெளிவாகக் கேட்கச்செய்யும். ‘நீங்கள் அமர்ந்திருந்து, நானே தேவனென்று அறிந்துகொள்ளுங்கள்” என்று அவர் நமக்குக் கட்டளையிடுகிறார். தேவனுடைய எந்த ஊழியத்திற்கும் இதுதான் மிகச்சிறந்த ஆயத்தம். பலவிஷயங்கள் வேகமாக நெருக்கிக்கொண்டிருந்தாலும், வாழ்க்கையின் தீவிரச் செயல்பாடுகள் நெருக்கத்தைக் கொடுத்தாலும், இவ்வாறு தன்னைப் புத்துணர்வுகொள்ளச் செய்கிறவன், ஒளியும் சமாதானமுமான சூழல் தன்னைச் சூழ்ந்திருக்கும்படிச் செய்வான். உடலிலும் மனதிலும் வலிமையின் புதிய அருளைப் பெற்றுக்கொள்வான். அவனுடைய வாழ்க்கை மனிதர்களுடைய இருதயங்களைச் சென்றடையக்கூடிய நறுமணத்தை வீசச்செய்யும்; ஒரு தெய்வீக வல்லமையைப் பிரதிபலிக்கும். 1MH, 58 TamChS 325.3