Go to full page →

தோல்விகுறித்த நினைப்பே இருக்கக்கூடாது TamChS 342

தங்கள் பணி தோற்றுவிடுமோ என்று கிறிஸ்துவின் ஊழியர்கள் ஒருபோதும் நினைக்கக்கூடாது; அவ்வாறு பேசவும் கூடாது. ஆண்டவராகிய இயேசுவே எல்லாவற்றிலும் நம்மை செயல்திறன் உள்ளவர்கள் ஆக்குகிறார். அவருடைய ஆவியானவரே நமக்கு ஊக்கமாக இருக்க வேண்டும். வெளிச்சத்தைக் கொண்டு செல்கிற ஊடகங்களாக இருக்கும்படி அவருடைய கரங்களில் நம்மை ஒப்படைக்கும்போது, நன்மை செய்வதற்கான வழிகளுக்கு குறைவே இருக்காது. 2 GW, 19 TamChS 342.1

நாம் நம்மை முற்றிலும் தேவனுக்கு அர்ப்பணித்து, நமது ஊழியப்பணியில் அவருடைய வழிகாட்டுதல்களைப் பின்பற்றினால், அந்தப் பணியைச் செய்து முடிக்கிற பொறுப்பை அவர் ஏற்றுக் கொள்வார். நேர்மையான நமது முயற்சிகளுக்கு வெற்றிகிடைக்குமா என்று குழம்பவிடமாட்டார். தோல்வி குறித்து ஒருமுறைகூட நாம் சிந்திக்கக்கூடாது. தோல்வியே அறியாதவரோடு நாம் ஒத்துழைக்க வேண்டும். 3 COL, 363 TamChS 342.2

தம் மக்கள் தங்களையே மிகக்குறைவாக மதிப்பிடும்போது, ஆண்டவர் ஏமாற்றமடைகிறார். தாம் தெரிந்துகொண்ட சுதந்தரமான அவர்கள், தங்களுக்காக அவர் செலுத்தியுள்ள விலைக் கேற்ப தங்களை மதிப்பிடுவதையே அவர் விரும்புகிறார். அவர்கள்மேல் அவர் பிரிமாயிருக்கிறார்; இல்லையென்றால், அவர்களை மீட்பதற்கு மிகப்பெரிய விலையைக் கொடுக்கவேண்டியிருந்த போது, தம்முடைய குமாரன் தன் ஜீவனைக் கொடுப்பதற்காக அனுப்பியிருக்க மாட்டார். அவர்களுக்கென ஒரு பயன்பாட்டை வைத்திருக்கிறார்; தம் நாமத்தின் மகிமைக்காக அவர்கள் மிகமேலான கோரிக்கைகளை வைக்கும்போது அவர் மிகவும் சந்தோஷமடைகிறார். அவருடைய வாக்குறுதிகளில் அவர்களுக்கு நம்பிக்கையிருந்தால், மேலானவைகளை அவர்கள் எதிர்பார்க்கலாம். 1DA, 668 TamChS 342.3