Go to full page →

சேவைக்காக ஒழுங்கமைக்கவும் TamChS 49

வாலிப ஆண்களே,பெண்களே! ஒரு குழுவாக நீங்கள் வேலை செய்யமுடியாதா? ஆத்துமாக்களை அழிவிலிருந்து பாதுகாக்கும்படி கிறிஸ்துவின் படைவீரர்களாக, ஊழியத்தில் ஒன்றாகச் சேர்ந்து, எஜமானின் சேவையில் உங்களுடைய திறமை, திறன், தாலந்துகளை எல்லாம் ஈடுபடுத்தமுடியாதா? இயேசுவை மெய்யாகவே நேசிக்கிற வாலிபர்களான ஆண்களும் பெண்களும், ஓய்வுநாளைக் கைக்கொள்வதாகச் சொல்பவர்களுக்காக மட்டுமல்ல, நம் விசுவாசத்தைச் சேராதவர்களுக்கும் சேவை செய்ய ஒரு குழுவாக தங்களை ஒழுங்கமைப்பார்களா? 3ST, May 29, 1893 TamChS 49.2

வாலிபர்களான ஆண்களும் பெண்களும் சிறுவர்களும் பணி செய்யப்புறப்படுவார்களாக. சில திட்டங்களைத் தீட்டி, செயல்படுவதற்கு அவர்கள் ஒன்றுபடுவார்களாக. நீங்கள் ஒரு பணிக் குழுவை உருவாக்கவும், ஒன்றாகச் செயல்பட நேரம் ஒதுக்கி ஒன்று சேர்ந்து ஜெபிக்கவும், தேவன் கிருபை காட்டும்படி கேட்கவும், முடியாதா? 1YI, Aug 9, 1894 TamChS 49.3