Go to full page →

சுய-மெத்தன ஆவியுடையவர்கள் TamChS 53

ஒருகுறிப்பிட்ட வகை மக்களை எனக்குக் காட்டினார். தயாள உணர்வுகளும், அர்ப்பணிப்புமிக்க எண்ணங்களும், நன்மை செய்கிற ஆசையும் தங்களுக்கு இருப்பதாக அறிந்திருக்கிறார்கள்; அதேசமயம், அவர்கள் எதுவுமே செய்வதில்லை . அவர்களிடம் சுயமெத்தன எண்ணம் காணப்படுகிறது; தங்களுக்கு வாய்ப்புக் கிடைத்திருந்தால் அல்லது சாதகமான சூழல் அமைந்திருந்தால், மேன்மையும் நன்மையுமான பணியைச் செய்திருக்கலாம்; செய்திருக்க முடியும்; அதற்காகவே காத்திருப்பதாகச் சொல்லி, தங்களையே வஞ்சிக்கிறார்கள். தேவையில் இருப்பவனுக்கு அற்பக்காசும் கொடுக்கவிரும்பாத, பயங்கரக்கஞ்சனின் கஞ்சத்தனம் அவர்களுக்குப் பிடிப்பதில்லை. ‘அவன் தனக்காகவே வாழ்கிறான். மற்றவர்களுக்கு நன்மை செய்ய முன்வருவதில்லை’ என்று நினைக்கிறார்கள். ‘தவறாகப் பயன்படுத்தாமல், துருப்பிடிக்கவிடாமல், பூமியில் புதைத்துவைக்காமல், பயன்படுத்தும்படி அவனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள தாலந்துகளையும் வழிவகைகளையும் பிறருக்கு ஆசீர் வாதமாகப் பயன்படுத்தமாட்டான்’ என்றும் நினைக்கிறார்கள். ‘கஞ்சத்தனத்திற்கும் சுயநலத்திற்கும் இடங்கொடுப்பவர்கள் தங்கள் கஞ்சத்தனத்திற்கு அவர்களேதாம் பொறுப்பு.அவர்கள் தவறாகப் பயன்படுத்துகிற தாலந்துகளுக்கும் அவர்கள்தாம் பொறுப்பு’ என்று நினைக்கிறார்கள்.ஆனால் அதைவிட தாராளமனப்பான்மையும், ஆவிக்குரியவற்றை எளிதில் பகுத்தறிகிற திறனும் இருந்தும், தாங்கள் எதிர்பார்த்த வாய்ப்பு இன்னும் வரவில்லையென நினைத்து, அந்தக்கஞ்சனோடு தங்களை ஒப்பிட்டு,அவனைவிட செயல்படுகிற விருப்பம் அதிகம் இருப்பதாகவும், அற்ப நிலையிலுள்ள தங்கள் அயலாகத்தாரைவிட தாங்கள் மேலான நிலையில் இருப்பதாகவும் நினைக்கிறவர்களுக்குத்தான் பொறுப்பு அதிகம். அப்படிப்பட்டவர்கள் தங்களையே வஞ்சிக்கிறார்கள். பயன்படுத் தாமல் வெறுமனே பெற்றிருக்கிற தன்மை அவர்கள் பொறுப்பை அதிகரிக்கின்றது; எஜமான் கொடுத்த தாலந்துகளை பயன்படுத்தாமலிருந்தால், சேர்த்துவைத்தால் இவர்கள் யாரை இகழ்ச்சியாக நினைக்கிறார்களோ அவர்களைவிட இவர்கள் பெரிய குற்றவாளிகளாக இருக்கிறார்கள். அவர்களிடத்தில்” நீங்கள் உங்கள் எஜமானரின் சித்தத்தை அறிந்திருந்தீர்கள்; ஆனால், அதின்படி செய்யவில்லை” என்று சொல்லப்படும். 12T, 250,251 TamChS 53.2