Go to full page →

பயிற்சி கொடுக்கத் தகுதியான அதிகாரிகளைத் தேர்வுசெய்யுங்கள் TamChS 87

புதிய சபைகளுக்கு அதிகாரிகளைத் தேர்ந்தெடுக்கும் போது, மிகுந்த கவனம் அவசியம். முற்றிலும் மனமாற்றம் பெற்ற ஆண்களையும் பெண்களையும் தேர்ந்தெடுக்கவேண்டும். அறிவுரை வழங்கத் தகுதியானவர்களையும், சொல்லிலும் செயலிலும் ஊழியம் செய்யக்கூடியவர்களையும் தேர்ந்தெடுக்கவேண்டும். ஒவ்வொரு வகைப்பணியிலும் அர்ப்பணிப்போடுபணியாற்ற வேண்டியது அவசியமாக உள்ளது. 26T, 85 TamChS 87.1

மூப்பர்களும், சபையில் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களும் ஊழியத்தை எவ்வாறு செய்யப்போகிறோம் என்று மிகுந்த சிந்தையோடு திட்டமிடவேண்டும். சபையின் அங்கத்தினர்களில் ஒருவர்கூட குறிக்கோளில்லாமல் வாழாதபடிக்கும், அனைவரும் தங்களிடமுள்ள பல்வேறு திறமைகளின்படி சாதிக்கும்படிக்கும் காரியங்களை ஒழுங்குபடுத்த வேண்டும். அங்கத்தினர்கள் சுயநல மில்லாதவர்களாகவும், அர்ப்பணிப்புள்ளவர்களாகவும், தேவனுக்குப் பயன்மிக்க ஊழியர்களாகவும் மாறுவதற்கேற்ற பயிற்சியைக் கொடுப்பது இன்றியமையாததாகும். அத்தகைய மார்க்கத்தால் மட்டுமே சபை பயனற்ற நிலைக்கோ, மரித்த நிலைக்கோ செல்வதைத் தடுக்கமுடியும். சபையின் ஒவ்வோர் அங்கத்தினரும் தீவிரமாகச் செயல்படுகிறவராக அதாவது, ஜீவனுள்ள கல்லாக, தேவாலயத்தில் ஒளிவீசுபவராக மாறவேண்டும். 3RH, Sept. 2, 1890 TamChS 87.2