Go to full page →

தனிநபருக்கான அழைப்பு TamChS 18

ஒவ்வொரு கிறிஸ்தவனிடமும் ஒரு குறிப்பிட்ட பணியை தேவன் ஒப்படைத்திருக்கிறார். 4SW, 2-8-1904 TamChS 18.3

ஒவ்வொரு மனிதனும் தமது திராட்சத்தோட்டத்தில் வேலை செய்யவேண்டுமென்று தேவன் விரும்புகிறார். உங்களுடைய பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ள பணியை ஏற்றுக்கொண்டு, அதை உண்மையுடன் செய்யவேண்டும். 5BEcho, 10-6-1901 TamChS 18.4

நீங்கள் ஒவ்வொருவரும் ஜீவனுள்ள ஒரு நற்செய்திப்பணியாளராகத் திகழ்ந்திருந்தால், இக்காலத்திற்கான செய்தி சகல தேசங்களுக்கும் சகல ஜனங்களுக்கும் சகல தேசத்தாருக்கும் பாஷைக் காரருக்கும் வேகமாகப் பரவியிருக்கும். 66T, 438 TamChS 18.5

ஒவ்வொரு மெய்யான சீடனும், ஒரு நற்செய்தியாளனாக தேவனுடைய ராஜ்யத்தில் பிறந்திருக்கிறான். ஜீவத்தண்ணீரைப் பருகுகிறவன், ஜீவ ஊற்றாக மாறுகிறான். பெறுகிறவன் கொடுக் கிறவனாகமாறு கிறான். ஆத்துமாவில் காணப்படும் கிறிஸ்துவின் கிருபையானது வனாந்தரத்தில் காணப்படும் நீரூற்று போன்றது; அது பொங்கி அனைவருக்கும் புத்துயிர் கொடுக்கும். ஜீவ ஊற்றி லிருந்து பருகுமாறு அழிவின் விளிம்பில் இருப்பவர்களை அந்தக் கிருபை ஊக்குவிக்கும். 7DA, p195 TamChS 18.6

இக்காலத்திற்கான சத்தியம்பற்றிய அறிவை தேவன் யாரிடமெல்லாம் நம்பி ஒப்படைத்திருக்கிறாரோ, அவர்கள் ஒவ்வொருவரிடமும் தனிப்பட்ட சேவையை எதிர்பார்க்கிறார். அயல்நாடுகளுக்கு நற்செய்தியாளர்களாகச் செல்வது அனைவருக்கும் யத்திற்கு தேவ அழைப்பு சாத்தி யமில்லை; ஆனால், வீட்டில் இருந்துகொண்டே தங்கள் குடும்பத் தாருக்கும் அக்கம்பக்கத்தாருக்கும் நற்செய்தி சொல்கிறவர்களாக ஒவ்வொருவரும் விளங்கமுடியும். 19T, 30 TamChS 18.7

கிறிஸ்து தம் சீடர்களுக்கு ஊழியக்கட்டளையைக் கொடுத்த போது, அவர் பரலோகச் சிங்காசனத்தில் உட்கார இன்னும் கொஞ்ச நேரமே இருந்தது. தம்முடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ள அனைவரையும் நற்செய்தியாளராக்க எண்ணி, “நீங்கள் உலகமெங்கும் போய், சர்வசிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்” என்று சொன்னார். 2SW, Sep 20, 190 TamChS 19.1

ஆத்துமாக்களை இரட்சிப்பதே, கிறிஸ்துவின் நாமத்தைச் சொல்கிற ஒவ்வொருவரின் வாழ்க்கைப் பணியாக இருக்கவேண்டும். தேவன் நமக்குக் கிருபை தந்திருக்கிறார்; நம்மேல் வெளிச்சம் வீசச்செய்திருக்கிறார்; சத்தியத்தின் அழகையும் வல்லமையையும் காணச்செய்திருக்கிறார். எனவே, நாம் உலகத்திற்கு கடனாளிகளாக இருக்கிறோம். 34T, 53 TamChS 19.2

தனிப்பட்ட விதத்தில் எந்த முயற்சியும் எடுக்காமல், நிறு வனங்கள் பார்த்துக்கொள்ளும் என்கிற மனநிலைதான் எங்கும் காணப்படுகிறது. ஒருங்கிணைத்தல், அதிகாரக்குவிப்பு, பெரிய சபைகளையும் நிறுவனங்களையும் ஸ்தாபித்தல் போன்றவற்றைச் செய்ய மனித ஞானம் ஒத்துழைக்கிறது. ஆனால், நிறுவனங்களும் அமைப்புகளும்தான் நற்செய்தி அறிவிக்கவேண்டுமென அநேகர் ஒதுங்கிவிடுகிறார்கள். உலகத்தோடு ஒட்டில்லாமல் இருப்பதற்கு சாக்குப்போக்குச் சொல்கிறார்கள்; அவர்களுடைய இருதயங்கள் மரத்துப்போகின்றன.அவர்கள் சுயத்திலேயே மூழ்கிவிடுகிறார்கள்; எவ்விதத் தாக்கத்தையும் உண்டாக்குவதில்லை. தேவன்மேலும் மனிதன்மேலும் அன்பில்லாமல் போய்விடுகிறது. தம்முடைய சீடர்கள் ஒவ்வொருவருக்கும் தேவன் ஒரு வேலையைக் கொடுத்திருக்கிறார். எடுபிடிகளை நியமித்து அந்த வேலையைச் செய்யமுடியாது. வியாதியஸ்தர்களுக்கும் ஏழைகளுக்கும் ஊழியம் செய்வதையும், தொலைந்துபோனோருக்கு சுவிசேஷம் அறிவிப்பதையும் நிர் வாகக் குழுக்கள் அல்லது ஒழுங்கமைக்கப்பட்ட தொண்டு நிறுவனங்கள் செய்யட்டுமென்று ஒதுங்கக்கூடாது. தனிநபர் பொறுப்பையும், தனிநபர் முயற்சியையும், தனி நபர் தியாகத்தையும் சுவிசேஷம் எதிர்பார்க்கிறது. 4MH, p 147 TamChS 19.3

தெய்வீக வெளிச்சத்தைப் பெற்றிருக்கிற ஒவ்வொருவரும், ஜீவவெளிச்சம்பற்றி அறியாத ஒவ்வொருவரின் பாதையிலும் வெளிச்சம் வீசவேண்டும். 1 DA, p 152 TamChS 19.4

ஒவ்வொருவருக்கும் பணி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒருவருடைய பணியை இன்னொருவர் செய்யமுடியாது. ஒவ்வொருவரும் ஒரு முக்கியமான ஊழியப்பணியைப் பெற்றிருக்கிறார்; அதை அவர் புறக்கணிக்கவோ அலட்சியம் செய்யவோ முடியாது. ஏனெனில், அந்தப் பணியைச் செய்வதால் ஏதாவது ஆத்துமாவுக்கு நன்மை உண்டாகலாம்; அந்தப் பணியை நிராகரிப்பதால், கிறிஸ்து எந்த ஆத்துமாவுக்களுக்காக மரித்தாரோ அவற்றில் ஓர் ஆத்துமா அழிந்துபோகலாம். 2DA, p152 TamChS 20.1

தேவனோடு சேர்ந்து உழைக்கிறவர்களாக நாம் அனைவரும் காணப்பட வேண்டும்.சோம்பேறிகள் யாரையும் அவர்தம்முடைய வேலைக்காரனாக ஏற்றுக்கொள்வதில்லை. தங்களுடைய செயல் பாடு சபையின் வளர்ச்சியிலும் வளத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்கிற உணர்வானது சபை அங்கத்தினர்கள் ஒவ்வொருவரி டமும் இருக்கவேண்டும். 3RH, 12-12-1893 TamChS 20.2

தொலைந்துபோனோரை கிறிஸ்துவின் நாமத்தால் இரட்சிக்கிற பணிக்கு, அவர் மீட்டெடுத்துள்ள ஒவ்வோர் ஆத்துமாவும் அழைக்கப்பட்டுள்ளது. இஸ்ரவேலர் இந்தப் பணியைத்தான் நிராகரித்தார்கள். கிறிஸ்துவைப் பின்பவற்றுவதாகச் சொல்கிறவர்களும் இன்று இந்த அழைப்பை நிராகரிக்கவில்லையா? 4RH, 15-2-1887 TamChS 20.3

ஏதாவது ஒரு வேலை ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. சத்தியத்தை விசுவாசிக்கிற ஒவ்வோர் ஆத்துமாவும், தன் பங்கிற்கு தன் ஸ்தானத்தில் நின்று, “இதோ, அடியேன் இருக்கிறேன்; என்னை அனுப்பும்” என்று சொல்லவேண்டும். ஏசாயா 6:8. 5COL, p191 TamChS 20.4

நம் ஆண்டவராகிய இயேசுவின் வருகையை எதிர்பார்ப்பது மட்டுமல்ல,அதைத் துரிதப்படுத்துவதும் ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கும் இருக்கிற சிலாக்கியமாகும். 66T, 49 TamChS 20.5

உலகத்தை இரட்சிக்கும்படி கீழே இறக்கப்பட்டிருக்கும் சங்கிலியின் ஓர் இணைப்பு வளையமாக தேவனுடைய பிள்ளை இருக்கிறான்; தேவனுடைய பிள்ளையாக அவன் மாறியதிலிருந்து அவன் அப்படித்தான் தன்னைப் பார்க்கவேண்டும்; அவருடைய கிருபையின் திட்டத்தில் பங்குள்ளவனாக இருக்கவேண்டும். தொலைந்துபோனோரை இரட்சிக்கும்படி அவரோடு செல்கிற வனாகவும் இருக்கவேண்டும். 7COL, p69 TamChS 20.6

ஒவ்வொருவரும் ஏதாவது செய்யவேண்டும். கிறிஸ்துவுக்குப் பணிசெய்ய தங்களுக்கு வழியில்லை என்று யாரும் நினைக்கக்கூடாது. மனிதர் ஒவ்வொருவரையும் தம் பிள்ளைகள் என்றுதான் இரட்சகர் பார்க்கிறார். 1MH, p104 TamChS 21.1

ஆண்டவரோடு ஊழிய உடன்படிக்கை செய்துகொண்டவர்கள், ஆத்தும்- இரட்சிப்பு என்கிற மகத்தான, பெரும் பணியை அவரோடு சேர்ந்து செய்ய ஒப்பந்தம் செய்கிறார்கள். 27T, 19 TamChS 21.2

களம் மிகமிகப் பெரியது; திட்டம் விசாலமானது. எனவே தேவ வல்லமையின் கருவியாகச் சேவை செய்ய வேண்டும் என்கிற உந்துதலை பரிசுத்தமாக்கப்பட்ட ஒவ்வொரு இருதயமும் பெற்றுக் கொண்டாகவேண்டும். 39T, 47 TamChS 21.3

மனிதர்கள் தேவனுடைய கரத்தின் கருவிகள். தம் கிருபையான, இரக்கமான நோக்கங்களை நிறைவேற்றும்படி அவர்களைப் பயன்படுத்துகிறார். ஒவ்வொருவரும் அவரவர் பங்கைச் செய்ய வேண்டும்; அவரவர் வாழ்கிற காலத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், தேவன் அவர்களுக்கு நியமித்துள்ள பணியைச் செய்வதற்கு போதுமானதிறனைக்கொடுக்கவும் போதுமான வெளிச்சம் அவரவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. 4GC, p343 TamChS 21.4

ஒவ்வொருவனும் தன் திறமைக்கு தகுந்தவாறு ஊழியம் செய்யும்படி, சேவையின் ஆவியானது சபையார் அனைவரையும் ஆட்கொள்வதற்கு வெகுகாலம் தேவன் காத்திருக்கிறார். 5AA, p111 TamChS 21.5

தேவனுடைய ராஜ்யம்பற்றி அறிவிப்பதற்காக முதலில் பன்னிருவரையும், பிறகு எழுபது பேரையும் அனுப்பினார்.அப்போது, தாம் அவர்களுக்கு வெளிப்படுத்தியதை மற்றவர்களுக்குச் சொல்லவேண்டியது அவர்களுடைய கடமை என்பதைத்தான் கற்றுக்கொடுத்தார். அவர் செய்த ஒவ்வொன்றுமே, தனிப்பட்ட விதத்தில் அவர்கள் வேலைசெய் வதற்காகக் கொடுக்கப்பட்ட பயிற்சியாகும். பணியாட்கள் அதிகரிக்க அதிகரிக்க அந்தப் பணி பரவிச்சென்று, இறுதியில் பூமியின் கடையாந்தரங்கள்மட்டும் எட்ட வேண்டியிருந்தது. 6AA, p32 TamChS 21.6

ஊழியக்கட்டளையை நிறைவேற்றும்படி புறப்பட வேண்டியது அபிஷேகிக்கப்பட்ட ஊழியரின் கடமை மட்டுமல்ல. சக மனிதர்களின் இரட்சிப்புக்காகப் பிரயாசப்பட வேண்டிய அழைப்பு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவருக்கும் உள்ளது. 7AA, p110 TamChS 21.7

ஒரு சபை தன்னைப்பற்றி எவ்வளவு உயர்வாகப் பேசுகிறது என்பதை வைத்தோ, சபைப்பதிவில் உள்ள பெயர்களை வைத்தோ அந்தச் சபையின் மெய்த் தன்மையை அளக்க முடியாது; சபை தன் எஜமானுக்காக உண்மையில் என்ன செய்துவருகிறது? அங்கு உண்மையோடும் விடாமுயற்சியோடும் பிரயாசப்படுகிறவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்? இவற்றை வைத்துதான் சபையின் மெய்த்தன்மை அளக்கப்படுகிறது. பிரசங்கங்களையும் கொள்கைகளையும் விட தனிநபர் ஆர்வமும் கருத்தான பிரயாசமும் முயற்சியும்தான் கிறிஸ்துவுக்காக அதிகம் சாதிக்கமுடியும். 1RH, Sep 6, 1881 TamChS 21.8

எந்தவோர் இடத்தில் சபைஸ்தாபிக்கப்பட்டாலும், நற்செய்தி ஊழியப்பணியில் அங்கத்தினர்கள் அனைவரும் மும்முரமாக ஈடுபடவேண்டும். அக்கம்பக்கத்திலுள்ள ஒவ்வொரு குடும்பத்தை யும் அவர்கள் சந்தித்து, அவர்களுடைய ஆவிக்குரிய நிலையை அறிந்துகொள்ளவேண்டும். 26T, 296 TamChS 22.1

சபை அங்கத்தினர்கள் எல்லாருமே அயல்நாடுகளில் ஊழியம் செய்வதற்காக அழைக்கப்படவில்லை. ஆனால் உலகத்திற்கு வெளிச்சம் கொடுக்கிற மாபெரும் பணியில் எல்லாருக்குமே பங்கு இருக்கிறது. கிறிஸ்துவின் சுவிசேஷம் ஆற்றல்மிக்கது; பரவிச் செல்லக்கூடியது. சுயநல எண்ணங்களிலேயே மூழ்கியிருப்பவர் எவரும் சந்திப்புநாளில் எவ்வித சாக்குப்போக்கும் சொல்ல முடியாது. ஒவ்வொரு மனத்திறனையும் ஒவ்வொரு கரத்தையும் ஏதாவது வேலையில் ஈடுபடுத்த முடியும். வெவ்வேறு மனத்திறன் களுக்கும் வெவ்வேறு திறமைகளுக்கும் தகுந்த பலவிதமான வேலைகள் உள்ளன. 3HS, pp 290,291 TamChS 22.2

பரிசுத்தமான சத்தியத்தை உங்களிடம் ஒப்புவித்திருக்கிறார்; கிறிஸ்து வாசஞ்செய்கிற விசுவாசி ஒவ்வொருவரும் நித்திய ஜீவன் பெருக்கெடுக்கிற நீரூற்றாக இருக்கிறார். இந்த ஜீவத்தண்ணீரை மற்றவர்களுக்குக்கொடுப்பதற்கு எல்லா முயற்சிகளையும் நீங்கள் எடுக்காவிட்டால், தேவனுக்குமுன் நீங்கள் குற்றவாளிகளாக இருப்பீர்கள். 4HS, p 291 TamChS 22.3

கிறிஸ்துவுக்காக ஆத்துமாக்களை ஆதாயப்படுத்துவதில் கிறிஸ்தவர்களாகிய நாம் நம்மால் இயன்ற அளவில் இருப்பதில் ஒரு பங்கைக்கூடச் செய்வதில்லை. இந்த உலகத்தை எச்சரிக்க வேண்டி யுள்ளது. உண்மைக்கும், சிலுவை சுமப்பதற்கும், துரிதகமாகவும் தீவிரமாகவும் செயல்படுவதற்கும், சத்தியத்தில் தடுமாற்றமற்ற உறுதியைக் காண்பிப்பதற்கும், தேவபணிக்காகப் பாடுபடுவதற் கும், தியாகம் செய்வதற்கும் ஒவ்வொரு கிறிஸ்தவனும் ஒரு வழி காட்டியாக, மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்கவேண்டும். 1RH, Aug 23, 1881 TamChS 22.4

மனுபுத்திரனே, நான் உன்னை இஸ்ரவேல் வம்சத்தாருக்குக் காவற்காரனாக வைத்தேன்; ஆகையால் நீ என் வாயினாலே வார்த் தையைக்கேட்டு, என் நாமத்தினாலே அவர்களை எச்சரிப்பாயாக என்கிற வார்த்தைகளைப் பெற்ற இஸ்ரவேலின் தீர்க்கதரிசி பெற்றிருந்த அதே பொறுப்பை, சத்தியத்தின் வெளிச்சத்தைப் பெற்ற ஒவ்வொருவரும் பெற்றிருக்கிறார். எவ்வளவுக்குவாய்ப்பு களைப் பெறுகிறாரோ அவ்வளவுக்கு அது பொருந்தும். 29T, pp 19,20 TamChS 23.1

நீங்கள் ஆண்டவருடைய கிருபையைப் பெற்றவரா? மற்றவர் களுக்கு நீங்கள் செய்யவேண்டிய ஒருபணியை நியமித்திருக்கிறார். ஒவ்வொருவரும் தனித்தனியாக தங்களுடைய பங்குக்கு தங்களுடைய ஸ்தானத்தில் நின்று, இதோ, அடியேன் இருக்கிறேன்; என்னை அனுப்பும்’ என்று சொல்லவேண்டும். வேத வசனப் போதகர், நற்செய்திப் பணிச் செவிலியர், கிறிஸ்தவ மருத்துவர், வியாபாரி, தொழில் நிபுணர், கைவினைஞர் என்று வெவ்வேறு வேலைகளில் இருக்கிற ஒவ்வொரு கிறிஸ்தவருக்கும் இந்தப் பொறுப்புகள் உண்டு. நாம் எடுக்கிற ஒவ்வொரு முயற்சியின் இறுதி நோக்கம் நற்செய்திப் பணியாகத்தான் இருக்கவேண்டும். 3MH, p 148 TamChS 23.2

வீட்டு எஜமான் தன் வேலைக்காரரை அழைத்து, அவனவன் செய்யவேண்டிய வேலையைக்கொடுத்தான். தங்கள் ஆண்டவருடைய நன்மைகளைப் பயன்படுத்த வேண்டிய பொறுப்பு தேவ குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் உண்டு.யாரென்றே தெரியாத அளவுக்கு கீழ்நிலையில் இருப்பவர் முதல், மிகவும் பிரபலமாக உயர்ந்த நிலையில் இருப்பவர்வரை ஒவ்வொரு நபருமே ஒழுக்கத் திற்கான முகவர்தான்; அவருக்கு அருளப்பட்டிருக்கும் திறமைகளுக்கு அவர் தேவனுக்குக் கணக்குக் கொடுத்தாகவேண்டும். 4 BEcho, Jun 10, 1901 TamChS 23.3