Go to full page →

கிறிஸ்தவச் சேவை TamChS 1

அணிந்துரை TamChS 5

கிறிஸ்து இயேசுவுக்குள் அன்பான சகோதர-சகோதரிகளே! TamChS 5.1

இயேசு பரமேறிச்சென்றதற்கு முன்பு, சீஷரருகில் வந்து, அவர்களை நோக்கி, “ வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப் பட்டிருக்கிறது. ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்; இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்” என்றார். மத்தேயு 28:18-20. இந்தக் கட்டளையை ‘மாபெரும் ஊழியக்கட்டளை’ என்று அழைக்கிறோம். இந்தக் கட்டளையை நிறைவேற்றுவதற்காகவே திருச்சபை அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. TamChS 5.2

‘சகல ஜாதிகளையும் சீஷராக்கு’ என்று இயேசு சொன்னார்.ஒருவரை இயேசுவின் சீஷராக்க வேண்டுமானால், வாயால் செய்கிற உபதேசம் போதாது. மத்தேயு 24:14 இல் இயேசு சொல்லியுள்ள ஒரு கருத்தைக் கவனித்தாக வேண்டும். ‘ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும்.’ சாட்சியாகப் பிரசங்கிக்கவேண்டும். அதைச் செய்வது எப்படி என்பதைத்தான், இந்தப் புத்தகம் முழுவதிலும் படிக்க இருக்கிறீர்கள். TamChS 5.3

என்ன செய்யவேண்டும்? என்ன செய்யக் கூடாது? என்ன மனநிலையில் செயல்பட வேண்டும்? என்ன மனநிலையில் செயல்படக் கூடாது? எப்படிச் செய்யவேண்டும்? எப்படிச் செய்யக் கூடாது? இவைபோன்ற நடை முறை ஆலோசனைகள் நிரம்ப உள்ளன. TamChS 5.4

இந்த நன்மைகளை நீங்கள் பெற்று அனுபவிப்பதற்காக, இந்தப் புத்தகம் வெளியிடப்படுகிறது. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. TamChS 5.5

பா. அந்தோணிதாஸ்,
தலைவர்,
ஓரியண்டல் வாட்ச்மேன் பப்ளிஷிங் ஹவுஸ்