இருதயத்தில் ஏற்றுக்கொள்கிற ஒவ்வொரு சத்தியமும் வாழ்க்கையில் வெளிப்படவேண்டும். கிறிஸ்துவின் அன்பை எவ்வளவு தூரம் ஏற்றுக்கொள்கிறார்களோ, அவ்வளவுக்கு அவர் வல்லமையை மற்றவர்களுக்கு அறிவிக்கிற ஆர்வம் இருக்கும்; அவ்வாறு அறிவிக்கிற செயலால், அவர்கள் தங்கள் ஆத்துமாக்களில் அதன் மதிப்பை ஆழமாகவும் தீவிரமாகவும் உணருகிற வாய்ப்பு ஏற்படுகிறது. 1RH, Feb. 19, 1889 TamChS 128.3
நம் விசுவாசம் நற்கிரியைகளால் நிறைந்திருக்கவேண்டும்; ஏனென்றால் கிரியைகளில்லாத விசுவாசம் செத்தது. 24T, 145 TamChS 129.1
இருதயத்தில் சுவிசேஷச் செய்தியை ஏற்றுக்கொள்ள விரும்புகிற அனைவரும் அதை அறிவிக்க ஏங்குவார்கள்.பரலோகத்தால் உண்டான கிறிஸ்துவின் அன்பு வெளிப்படும். 3COL, 125 TamChS 129.2
தேவநாமத்தின் மகிமையை எங்கும் பரவச்செய்ய நம்முடைய திறனுக்குட்பட்ட அனைத்தையும் செய்து, தேவனை உண்மையோடு சேவித்து, அவரைப் போற்றவேண்டும். 4COL, 300 TamChS 129.3
மூன்றாம் தூதனுடைய செய்தியை ஆமோதிப்பது அல்லது அதை நம்புவதுடன் இன்று நம் விசுவாசம் நின்று விடக்கூடாது. விளக்கை நிரப்பி, ஜீவ வெளிச்சத்தை வீசச்செய்து, இருளில் இருப்போருக்கு வழியைக் காண்பிக்கிற கிறிஸ்துவினுடைய கிருபையின் எண்ணெயை நாம் பெற்றிருக்கவேண்டும். 59T, 155 TamChS 129.4
அன்பின் பிரயாசத்தையும் நற்கிரியைகளையும் எவ்வளவுக்கு மேற்கொள்கிறீர்களோ அவ்வளவுக்கு நம் ஆவிக்குரிய பெலனும் ஆசீர்வாதமும் இருக்கும். 63T, 526 TamChS 129.5
சத்தியத்தின் வெளிச்சத்தைப் பெற்ற அனைவரும் அதன்படி வாழ்ந்திருந்தால், எவ்வளவோ அதிகம் சாதித்திருக்கலாம். 79T, 40 TamChS 129.6
நாம் குறைவுள்ளவர்களாக இருப்பதாக எனக்குக்காட்டப்பட்டது. நம் விசுவாசத்திற்கு ஏற்றதாக நம் கிரியைகள் இல்லை. மனிதர்களுக்குக் கொடுக்கப்பட்டதிலேயே மிகவும் பக்திக்குரிய, மிகவும் முக்கியமான செய்தி பிரகடனத்தின்கீழ் நாம் வாழ்கிறோம் என்று நம் விசுவாசம் சாட்சியிடுகிறது. ஆனால் இந்த உண்மையை வைத்துப்பார்த்தால், நம் முயற்சிகளும் நம் சுயதியாகமனநிலையும் நம் ஊழியத்தின் தன்மைக்கு ஒத்ததாக இல்லை. மரித்த நிலையிலிருந்து நாம் விழிக்கவேண்டும், கிறிஸ்து நமக்கு ஜீவனைத் தருவார். 82T, 114 TamChS 129.7
விசுவாசத்தோடு செல்லுங்கள். சத்தியத்தை நீங்கள் விசுவா சித்ததுபோலவே அதை அறிவியுங்கள். அதை நீங்கள் உண்மையிலேயே வாழ்ந்துகாட்டுவதை நீங்கள் யாருக்காகப்பிரயாசப்படுகிறீர்களோ அவர்கள் காணட்டும். 19T, 42 TamChS 129.8
கிறிஸ்துவைப் போன்ற வாழ்க்கைதான் கிறிஸ்தவ மார்க்கத்திற்கு ஆதரவாக அதிகம் பேசக்கூடிய வல்லமையான வாதமாக இருக்கிறது. 29T, 21 TamChS 130.1
கிறிஸ்துவின் நாமத்தை அறிக்கையிட்டாலும் அவருடைய சேவையில் ஈடுபடாத அநேகர் இருக்கிறார்கள். தங்களை பக்திவான்களெனச் சொல்லி கூட்டம் சேருகிறார்கள், அவ்வாறு செய்து தங்கள் ஆக்கினையை அதிகரிக்கிறார்கள்.ஆத்துமாக்களை அழிப்பதில் சாத்தானுடைய அதிக வஞ்சகமான, அதிக வெற்றிகரமான ஏதுகரங்களாக மாறுகிறார்கள். 3RH, March 27, 1888 TamChS 130.2
கர்த்தருக்காகக் காத்திருப்பவர்கள் சத்தியத்திற்குக் கீழ்ப்படிந்து தங்களுடைய ஆத்துமாக்களைச் சுத்திகரிக்கிறார்கள். விழிப்போடு காத்திருக்கிற அதே சமயத்தில், ஊக்கமாகவும் பிரயாசப்படுகிறார்கள். ஆண்டவர் கதவருகே நிற்கிறார் என்பதை அறிந் திருப்பதால், ஆத்தும இரட்சிப்பிற்காக தெய்வீக அறிவு ஜீவிகளுடன் சேர்ந்து பணிசெய்ய வேண்டுமென்கிற வைராக்கியம் உயிர்கொள்கிறது.ஆண்டவருடைய வீட்டாருக்கு ஏற்றவேளையில் போஜனம் கொடுக்கிற’ உண்மையும் விசுவாசமுமான ஊழியர்களாக இருக்கிறார்கள். இன்றைக்குத் தேவையான சத்தியத்தை அறிவிக்கிறார்கள். ஏனோக்கு, நோவா, ஆபிரகாம், மோசே என ஒவ்வொருவரும் தங்கள் காலச் சத்தியத்தை அறிவித்ததுபோல, கிறிஸ்துவின் ஊழியர்களும் தங்கள் தலைமுறையினருக்கு விசேஷித்த எச்சரிப்பைக் கொடுப்பார்கள். 4DA, 634 TamChS 130.3
எவ்வளவு வெளிச்சத்தைப் பெற்றிருக்கிறோம் என்பதை வைத்தல்ல, பெற்றதை எவ்வளவுக்கு பயன்படுத்துகிறோம் என்பதை வைத்துதான் தேவனுக்குமுன் நம் நிலை உள்ளது. அதிக வெளிச்சத்தைப் பெற்றிருந்தும், தேவனைச் சேவிப்பதாகச் சொல்லியும், ஒளியைப் புறக்கணித்து அனுதினவாழ்வில் விசுவாச அறிக்கைக்கு விரோதமாக வாழ்கிறவர்களைவிட, தன்னால் பகுத்தறிய முடிகிற அளவுக்கு சரியானதைச் செய்யத் தீர்மானிக்கிற அஞ்ஞானி மிகுந்த தயவைப் பெறுகிற நிலையில் இருக்கிறான். 5DA, 239 TamChS 130.4
கர்த்தருடைய வருகையை எதிர்பார்ப்பது மட்டுமல்ல,அதைத் துரிதப்படுத்துவதும் ஒவ்வொரு கிறிஸ்தவனுக்குமுரிய சிலாக்கிய மாகும். அவரது நாமத்தைத் தரித்திருப்பதாகச் சொல்கிற ஒவ்வொருவரும் அவருடைய மகிமைக்காகக் கனிகொடுத்திருந்தால், உலகம் முழுவதிலும் சுவிசேஷத்தின் விதை எவ்வளவு துரிதமாக விதைக்கப்பட்டிருக்கும்! கடைசி மகா அறுவடை சீக்கிரம் நிகழப்போகிறது, மதிப்புமிக்க தானியத்தைச் சேர்க்கும்படி கிறிஸ்து வருவார். 1COL, 69. TamChS 130.5
கிறிஸ்தவர்கள் விழித்துக்கொண்டு, தாங்கள் புறக்கணித்த கடமைகளை மீண்டும் செய்யவேண்டும்; ஏனென்றால், அவர்களுடைய தனிப்பட்ட முயற்சிகளைச் சார்ந்துதான் அவர்களுடைய ஆத்துமாக்களின் இரட்சிப்பு உள்ளது. 2RH, Aug. 23, 1881 TamChS 131.1
கிறிஸ்துவோடு சேர்ந்து பணியாற்றுவதில்தான் மெய்யான தொழுகை உள்ளது. ஜெபங்களும் புத்திசொல்லுதலும் பேசுதலும் மலிவான கனிகள்; இவை மரத்தில் கட்டப்படுகிற செயற்கைக்கனிகள். ஆனால், நற்கிரியைகளிலும், உதவி தேவைப்படுவோரையும் திக்கற்றோரையும் விதவைகளையும் கவனிப்பதிலும் வெளிப்படும் கனிகள் மெய்யானவை; அவை இயற்கையாகவே நல்ல மரத்தில் விளைபவை. 3RH, Aug. 16, 1881 TamChS 131.2
வெளிச்சத்தைப் பெறுவதும், அதை மற்றவர்களுக்குப் பிரதிபலிப்பதும் ஒவ்வொரு விசுவாசிக்கும் தேவன் நியமித்திருக்கிற ஒவ்வோர் அங்கத்தினரும் செய்தாகவேண்டும். ஆண்டவருடைய திராட்சத்தோட்டத்தில் வேலைசெய்யாமல் இருக்கிற ஒருவர்கூட அதற்குச் சாக்குப்போக்குச் சொல்லமுடியாது. 4RH, Feb. 19, 1889 TamChS 131.3
தர்ம காரியங்களைச் செய்வது, அன்பான வார்த்தைகளைப் பேசுவது, வறியோர்மேலும் உதவி தேவைப்படுவோர் மேலும் வேதனையில் இருப்போர் மேலும் கனிவான எண்ணங்கொள்வது போன்ற செய்கைகள்தாம் நம்மிடம் கிறிஸ்து எதிர்பார்க்கிற கனிகளாகும். 5RH, Aug. 16, 1881 TamChS 131.4
யாக்கோபின் கிணற்றருகே இயேசுவோடு பேசிய சமாரிய ஸ்திரீ, தான் இரட்சகரைக் கண்டதுமே, மற்றவர்களை அவரிடம் அழைத்துவந்தாள். அவருடைய சீடர்களைவிட திறமையான நற்செய்தியாளர் என்று தன்னை நிரூபித்தாள். சமாரியா வளமானகளம் என்று சொல்லுமளவிற்கு சீடர்களால் அங்கு எதையும் காணமுடிய வில்லை. எதிர்காலத்தில் செய்யவேண்டிய ஒரு மாபெரும் பணி பற்றியே சிந்தித்துவந்தார்கள். தங்களைச் சுற்றிலும் அறுவடைக்களம் இருந்ததை அவர்கள் காணவில்லை. ஆனால், அவர்கள் வெறுத்த ஒரு பெண் மூலமாக அந்நகரம் முழுவதும் இயேசுவைப் பற்றிக் கேள்விப்படமுடிந்தது. அந்த வெளிச்சத்தை உடனே அவள் தன் சகதேசத்தாருக்குக் கொண்டு சென்றாள். கிறிஸ்துவுக்குள்ளான நடைமுறை விசுவாசம் எவ்வாறு செயல்படும் என்பதற்கு எடுத்துக்காட்டாக அவள் இருக்கிறாள். 1MH, 102 TamChS 131.5
செவந்த்-டே அட்வென்டிஸ்டுகள் வளருகிறார்கள்; எண்ணிக்கையில் இருமடங்காகிறார்கள்; ஊழியப்பணிகளை நிறுவுகிறார்கள்; பூமியின் அந்த காரமான இடங்களில் சத்தியத்தின் கொடியை விரிக்கிறார்கள்; ஆனாலும், தேவன் எதிர்பார்ப்பதைவிட பணி மெதுவாகவ நடைபெறுகிறது. ஏன்? திருச்சபையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற அளவுக்கு முயற்சிக்கும் படி தூண்டுதல் இல்லை. தீவிர பக்தியில்லாமலும், பணியில் அர்ப்பணிப்பும் தாழ்மையும் தேவபயமும் இல்லாமலும் ஒவ்வொரு பணியும் முடங்குகிறது. கிறிஸ்துவின் சிலுவை வீரர்கள் எங்கே? தேவபயமும் நேர்மையும் ஏகமனமும் தேவமகிமையை மட்டுமே சிந்தையுமாகக் கொண்டவர்கள் தீமைக்கு எதிராகப் போராட தங்களை ஆயத்தப்படுத்துகிறார்கள். இந்த ஆவிக்குரிய போராட்டத்தின் வேளையில் உணர்வற்ற, கோழையான உள்ளம் படைத்தவர்கள் அளவுக்கதிகமாக உள்ளார்கள். ஓ, பெலவீனத்திலிருந்து அவர்கள் பெலனடைந்து, வீரதீரத்தோடு போராடி, எதிரி சேனைகளை ஓடச்செய்தால் நன்றாக இருக்குமே! 2HS, 290 TamChS 132.1
தேவன் கொடுத்துள்ள ஆற்றல்களைப் பயன்படுத்த மறுக்கும்போதெல்லாம், அந்த ஆற்றல்கள் வலிமை குறைந்து, அழிந்து போகின்றன. வாழ்ந்து காட்டாத, பிறருக்கு அறிவிக்கப்படாத சத்தியமானது உயிர்தரும் ஆற்றலையும், சுகமாக்கும் பண்பையும் இழந்து விடுகிறது. 3AA, 206 TamChS 132.2
எந்த நோக்கத்திற்காக உழைப்பதை நேசிப்பதாகச் சொல்கிறீர்களோ அதை மூடிமறைக்காமல், அதை முன்னேற்றுவதுதான் உங்கள் பக்திக்கு எலும்பும் தசையுமாக இருக்கும். 44T, 236 TamChS 132.3
கிருபையின் வழிகளால் வருகிற ஆசீர்வாதங்களை மட்டும் வெறுமனே பெற்றுக்கொண்டு, கிறிஸ்துவுக்காக எதுவும் செய்யாமல் கிறிஸ்தவ வாழ்க்கை வாழ்கிறவர்கள், எந்த வேலையும் செய்யாமல் வெறுமனே சாப்பிட்டு வாழமுயல்பவர்களைப் போல இருக்கிறார்கள். இவ்வுலக வாழ்வைப் போன்றுதான் ஆவிக்குரிய வாழ்விலும், இது எப்போதுமே சிதைவையும் சீர்கேட்டையுமே கொண்டுவரும். 1SC, 80,81 TamChS 132.4