இரவு தரிசனங்களில் மனதை ஈர்க்கிற ஒரு காட்சி எனக்குக் காட்டப்பட்டது. அழகுமிக்க சில மாளிகளைகளில் ஓர் அக்கினி பந்து விழுந்து, அவற்றை உடனே அழித்துப்போட்டது. யாரோ ஒருவர் “தேவனுடைய நியாயத்தீர்ப்புகள் பூமியில் சம்பவிக்கும் என்று அறிந்திருந்தோம்; ஆனால், இவ்வளவு சீக்கிரத்தில் அவை சம்பவிக்கும் என்பதை அறிந்திருக்கவில்லை” என்று சொல்வது கேட்டது. மற்றவர்கள் மிகுந்த வியாகுலத்தோடு ‘ ‘உங்களுக்குத் தெரியுமா! அப்படியானால் எங்களிடம் சொல்லியிருக்கலாமே? எங்களுக்குத் தெரியாதே!” என்று அழுதார்கள். எல்லாப் பக்கங்களிலும் இதுபோன்று மக்கள் பேசின நிந்தையான வார்த்தைகள் எனக்குக் கேட்டன. TamChS 150.1
மிகுந்த வருத்தத்துடன் நித்திரையிலிருந்து எழுந்தேன். மீண்டும் தூங்கியபோது, ஒரு பெரிய கூட்டத்தில் நிற்பதுபோலத் தெரிந்தது. அதிகாரி ஒருவர் அந்தக் கூட்டத்தாரிடம் பேசிக்கொண்டிருந்தார். அவருக்கு முன் ஒருபெரிய உலகவரைபடம் விரிக்கப்பட்டிருந்தது. அந்த வரைபடம் தேவனுடைய திராட்சத்தோட்டத்தைச் சுட்டிக் காட்டுவதாகவும், அதைப் பண்படுத்தியாகவேண்டும் என்றும் அவர் சொன்னார். பரலோக ஒளியார் மேலாவது வீசப்பட்டபோது, அதை அவர் மற்றவர்களுக்குப் பிரதிபலிக்க வேண்டியிருந்தது. பல இடங்களில் விளக்குகளைத் தூண்டிவிட வேண்டியிருந்தது; அந்த விளக்குகளிலிருந்து வேறு விளக்குகளைத் தூண்டவேண்டியிருந்தது. TamChS 150.2
“நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்; உப்பானது சாரமற்றுப்போனால், எதினால் சாரமாக்கப்படும்? வெளியே கொட்டப்படுவதற்கும், மனுஷரால் மிதிக்கப்படுவதற்குமே ஒழிய வேறொன்றுக்கும் உதவாது. நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்; மலையின் மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது. விளக்கைக் கொளுத்தி மரக்காலால் மூடிவைக்காமல், விளக்குத் தண்டின்மேல் வைப்பார்கள்; அப்பொழுது அது வீட்டிலுள்ள யாவருக்கும் வெளிச்சம் கொடுக்கும். இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக்கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது” என்கிற வார்த்தைகள் மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டன. மத்தேயு 5:13 16. TamChS 150.3
உலகின் மேடான இடங்களிலிருந்தும் பள்ளமான இடங்களிலிருந்தும், நகரங்களிலிருந்தும் கிராமங்களிலிருந்தும் வெளிச்சம் வெள்ளம்போல புறப்பட்டு வந்தது. அநேகர் வேத வசனத்திற்குக் கீழ்ப்படிந்தார்கள்; அதன் விளைவாக ஒவ்வொரு நகரத்திலும் கிராமத்திலும் அவருக்கு நினைவிடங்கள் இருந்தன. உலகம்முழுவதும் அவருடைய சத்தியம் அறிவிக்கப்பட்டது. 19T, 28, 29 TamChS 151.1