தேவ ஆசீர்வாதத்திற்காக ஆர்வத்துடன் தனிநபர் தேடும் போது, சபை புத்துயிர் பெறுகின்றது. அவர் பசிதாகத்தோடு தேவனைத் தேடுகிறார்; விசுவாசத்தோடு கேட்கிறார்; அதன்படி பெறுகிறார். அவர் தேவனைச் சார்ந்திருந்து, மிகுந்த ஆர்வத்துடன் ஊழியம் செய்கிறார். இதேபோன்ற ஆசீர்வாதத்தை ஆத்துமாக்கள் தேடுகின்றன. இளைப்பாறுதலின் காலங்கள் வருகின்றன. விரிவான பணிகளை ஊழியர்கள் புறக்கணிக்க மாட்டார்கள்; சரியான நேரத்தில் பெரிய திட்டங்களைத் தீட்டுவார்கள். ஆனாலும், நண்பர் அயலவருக்கான தனி ஊழியம் அதைவிட பெரிய வெற்றியைத் தரும். இப்படிப்பட்ட ஊழியம்செய்வதற்கு ஆள் இல்லாததால்தான் அநேகர் அழிந்துகொண்டிருக்கிறார்கள். கிறிஸ்து அவர்களுக்காக மரித்தாரே. TamChS 161.1
ஒவ்வோர் ஆத்துமாவும் விலையேறப்பெற்றது; கல்வாரி அதன் மதிப்பைக் காட்டுகிறது. சத்தியத்திற்குத் திரும்புகிற ஓர் ஆத்துமா, மற்றவர்களை வெல்வதற்கான கருவியாக இருக்கும்; ஆசீர்வாதமும் ஆத்தும இரட்சிப்பும் அதிகமாகும். பெரிய கூட்டங்களோடு தனிநபர் ஊழியமும் செய்யவேண்டும்; அப்போது பெரிய நன்மை ஏற்படும்; தேவனுடைய ஆசீர்வாதத்தால் முழுமையான வேலை நடக்கும். இந்த இரண்டில் ஒன்றுதான் சாத்தியம் என்றால், தனிநபர் ஊழியம் நடக்கட்டும்; வீடுகளுக்குச் சென்று, குடும்ப அங்கத்தினர்களோடு பழகுங்கள்; அற்பமானவற்றையல்ல, மேலான சத்தியங்களைப் பேசுங்கள். ஆத்தும இரட்சிப்புக்காக நீங்கள் பாரத்தோடு இருப்பதை அவர்கள் பார்க்கட்டும். 2RH, March 13, 1888 TamChS 161.2