கேட்டுக்கொண்டிருந்த மக்களுக்கு ஏற்றபடி இரக்கத்தின் செய்தியை அவர் கூறினார். ‘இளைப்படைந்தவனுக்கு சமயத்திற்கேற்ற வார்த்தை சொல்ல”அறிந்திருக்கும்படி, சத்தியத்தின் பொக்கிஷங்களை பிடித்தமான விதத்தில் மனிதர்களுக்குச் சொல்லும்படி, அவருடைய உதடுகளில் அருள் நிறைந்திருந்தது. தப்பெண்ணம் கொண்டிருந்தவர்களைச் சந்திக்கிற வித்தையை அறிந்திருந்தார்; அவர்கள் ஆச்சரியத்தோடு கவனிக்கும்படியான எடுத்துக்காட்டுகளைச் சொன்னார். அவர்களுடைய கற்பனையில் தோன்றியதை வைத்தே இருதயத்தில் இடம்பிடித்தார். அனுதின வாழ்விலிருந்து எடுத்துக்காட்டுகளைச் சொன்னார்; அவை சாதாரண விஷயங்களாக இருந்தபோதிலும், ஆழமான அர்த்தமுடையவைகளாக இருந்தன. வான்வெளிப் பறவைகள், வயல்வெளி லீலி புஷ்பங்கள், விதை, மேய்ப்பன், ஆடு போன்றவற்றின் மூலம் அழியாத சத்தியத்தை எடுத்துக்கூறினார். அதன்பிறகு அவருடைய சீடர்கள் அவற்றை இயற்கையில் பார்த்தபோதெல்லாம் அவர் சொன்ன வார்த்தைகளை நினைவு கூர்ந்தார்கள். கிறிஸ்துவின் எடுத்துக்காட்டுகள் அவருடைய போதனைகளை மீண்டும் மீண்டும் வலியுறுத்தின. 1DA, 254 TamChS 166.1
இந்த விக்கிரக வழிபாட்டுக்காரர்களுக்கு சிருஷ்டிகராகிய தேவனையும், மனித இனத்தின் இரட்சகரான அவருடைய குமாரனையும் பற்றி அறிந்துகொள்ளச் செய்ய அப்போஸ்தலர்கள் பெரிதும் முயன்றார்கள். சூரியன், சந்திரன், அற்புதமான தட்பவெப்ப சுழற்சிநிலைகள், பிரமாண்டமான பனி முகட்டு மலைகள், வானுயர்ந்த மரங்கள், மனிதனுடைய கற்பனைக்கும் எட்டாத ஆச்சரியங்கள் நிறைந்த இயற்கையின் வெவ்வேறு அற்புதங்கள் என்று தேவனுடைய அற்புதக் கிரியைகளுக்கு நேராக முதலாவது அவர்களுடைய கவனத்தைத் திருப்பினார்கள். சர்வவல்லவரின் இந்தப் படைப்புகள்மூலம் அஞ்ஞானிகளின் மனதை பிரபஞ்சத்தின் மாபெரும் அரசர் பற்றித் தியானிக்கும்படி அப்போஸ்தலர்கள் வழிநடத்தினார்கள். 2AA, 180 TamChS 166.2