Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

எலன் ஜி. உவைட்டின் ஜீவியமும் உபதேசங்களும் - இரண்டு பாகங்கள்

 - Contents
 • Results
 • Related
 • Featured
No results found for: "".
 • Weighted Relevancy
 • Content Sequence
 • Relevancy
 • Earliest First
 • Latest First
  Larger font
  Smaller font
  Copy
  Print
  Contents

  ஆலயம் ஆட்டுக்குட்டியைப் பற்றிய சொப்பனம்

  இவ்விதம் திகைத்து கலங்கியிருக்கையில், நான் ஒரு சொப்பனங் கண்டேன்; அது என் மனதில் பலமாய்ப் பதிந்தது. நான் ஒரு ஆலயத்தைக் காண்பதாகவும் அதில் அநேகம்பேர் கூடுவதாகவும் சொப்பனங் கண்டேன். காலம் முடிவடைவதற்குள் அதில் அடைக்கலம் புகுந்தவர்கள் மட்டும் இரட்சிக்கப்படுவார்கள்; வெளியே நிற்பவர்களெல்லாம் சதா காலத்திற்கு கைவிடப் படுவார்கள். வெளியே பல பாதைகளில் போய்க் கொண்டிருந்த திரளான ஜனங்களெல்லாம் ஆலயத்தினுட் பிரவேசித்தோரைப் பரியாசம் பண்ணி நிந்தித்ததுமன்றி, பத்திரமாய்க் காக்கப்படுவதற்கான இந்த ஏற்பாடு தந்திரமான ஒரு வஞ்சகமேன்றும், வாஸ்தவத்தில் அத்தகைய ஆபத்து ஒன்றும் நேரிடுவதில்லை இன்றும் அவர்களுக்குச் சொன்னார்கள். பின்னையும் அவர்கள் உள்ளே தீவிரித்துச் செல்வோரிற் சிலரைத் தடை செய்தார்கள்.LST 19.1

  பரியாசத்திற்குப் பயந்து கூட்டம் களைந்து போகுமட்டும் காத்திருப்பதே உத்தமமென்றும் அல்லது அவர்களுக்கு தென்படாமற் பிரவேசிக்க வேண்டுமென்றும் நான் யோசித்தேன். ஆனால் கூட்டம் குறையாது வர வர அதிகரித்ததினால் பிந்திப் போவேனென்று பயந்து தீவிரமாய் வீட்டை விட்டு கூட்டத்திற்குள் நெருங்கிச் சென்றேன். ஆலயம் போய்ச் சேர வேண்டுமென்னும் என் ஆத்திரத்தினால் என்னைச் சூழ்ந்து நின்ற கூட்டத்தை நான் கவனிக்கவும் இல்லை; சட்டை செய்யவுமில்லை.LST 19.2

  கட்டடத்திற்குட் பிரவேசித்ததும் விஸ்தாரமான அவ்வாலயம் பிரம்மாண்டமான ஓர் தூணின் பெலத்தில் நிற்பதாகவும், முழுவதும் பீறுண்டு இரத்தம் வடியப் பெற்ற ஓர் ஆட்டுக் குட்டி அத்தூணோடு கட்டப்பட்டிருப்பதாகவும் கண்டேன். உள்ளே இருந்த நாங்கள் இவ்வாட்டுக்குட்டி எங்கள் நிமித்தமே நருங்குண்டு பீரப்பட்டதாகக் கண்டோம். ஆலயத்தில் பிரவேசித்தவர்களெல்லாரும் அதின் முன்பாக வந்து தங்கள் பாவங்களை அறிக்கையிட வேண்டும். ஆட்டுக்குட்டிக்கு எதிராக உயரமான ஆசனங்கள் போடப்பட்டிருந்தன; அவைகளில் உட்காந்திருந்தவர்கள் மிகுந்த சந்தோஷமுள்ளவர்களாய்க் காணப்பட்டார்கள். பரம வெளிச்சம் வீச, அவர்கள் முகங்கள் பிரகாசமைக் காணப்பட்டன. தேவ தூதர்களின் இராகத்திற் கொப்பான இரகமாய்ச் சந்தோஷத்துடன் ஸ்தோத்திர கீதங்களைப் பாடித் தேவனைப் புகழ்ந்தார்கள். ஆட்டுக் குட்டிக்கு முன்பாக வந்து தன்கள் பாவங்களை அறிக்கையிட்டு மன்னிப்படைந்தவர்கள் இவர்கள். இப்பொழுது இவர்கள் ஓர் ஆனந்த சம்பவம் நடை பெறுவதற்குக் காத்துக் கொண்டிருந்தார்கள்.LST 19.3

  நான் கட்டடத்திற்குள் பிரவேசித்த பிறகும் இந்த ஜனங்களுக்கு முன் என்னைத் தாழ்த்த வேண்டுமே என்னும் பயமும் வெட்கமும் எனக்கு உண்டாயிற்று; ஆனால் நான் கட்டாயமாய் முன் செல்ல வேண்டுமென்று காணப்பட்டதால், ஆட்டுக் குட்டியின் முன் போயர் நிற்பதற்கு நான் துணைச் சுற்றி மெதுவாய் நடந்து போனேன். அப்போது ஓர் எக்காளம் தொனித்தது, ஆலயம் அதிர்ந்தது, கூடியிருந்த பரிசுத்தவான்கள் கெம்பீரமாய் ஆர்பரித்தார்கள்; கட்டடம் பயங்கர ஜோதி மயமாய் பிரகாசித்தது, அதன் பின்பு எல்லாம் காரிருளாயிற்று, அந்தப் பிரகாசத்துடன் பாக்கியசாலிகளான அந்த ஜனங்கள் எல்லோரும் மறைந்து போனார்கள்; நானோ இரவின் பயங்கர இருளில் தனியாய் விடப்பட்டேன்.LST 19.4

  மன வேதனையோடு வித்தேன், சொப்பனங் கண்டதாக நான் நம்ப ஏதுவில்லை. எனக்கு நாசம் தீர்மானிக்கப் பட்டதென்றும், கர்த்தரின் ஆவியானவர் என்னைக் கைவிட்டு விட்டார், இனி என்னிடம் வர மாட்டறேன்றும், எனக்குத் தோன்றிற்று.LST 20.1

  Larger font
  Smaller font
  Copy
  Print
  Contents