Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

எலன் ஜி. உவைட்டின் ஜீவியமும் உபதேசங்களும் - இரண்டு பாகங்கள்

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    பூரண ஒற்றுமை

    தேவ தூதர்கள் ஒற்றுமையுடன் கிரியை செய்கிறார்கள். பூரண ஒழுங்கே அவர்களுடைய சகல கிரியைகளின் இலட்சணமாம். நாம் எவ்வளவுக்கதிகமாய் தேவ தூத சேனையின் ஒற்றுமையையும் ஒழுங்கையும் பின்பற்றுகிறோமோ அவ்வளவுக்கதிகமாய் இந்த பரம தூதாட்கள் நமக்காகச் செய்யும் பிரயத்தனங்கள் பலிதாகும். ஒற்றுமையான செய்கைக்கு அவசியமில்லை என்று நாம் கண்டு ஒழுங்கீனமாய் நமது செய்கைகளில் கிரமமற்றும் அமைப்பு இன்றியும் இருந்தால் தீர்க்கமான் அமைப்புடன் பூரண ஒழுங்குடனும் செல்லும் தேவதூதர்கள் நாம் ஜெயமடையத் தக்கதாய்க் கிரியை செய்யக் கூடாதவர்கள் ஆவர்கள். குழப்பத்தையும், தடுமாற்றத்தையும், அமைப்பின்மையும் ஆசீர்வதிக்க அவர்களுக்கு அனுமதி இல்லாத படியினால் அவர்கள் விசனத்துடன் திரும்பிப் பொய் விடுகிறார்கள். பரம தூதாட்களின் ஒத்துழைப்பை விரும்புகிற அனைவரும் அவர்களுடன் இசைந்து கிரியை செய்ய வேண்டும். ------- Chr. Ex. and T.199LST 186.2