Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

எலன் ஜி. உவைட்டின் ஜீவியமும் உபதேசங்களும் - இரண்டு பாகங்கள்

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    உறுதியாயிருங்கள்

    மனுஷருடைய ஆத்துமாக்களைப் பரீட்சிக்கும் காலங்கள் நமக்கு முன் இருக்கின்றன; விசுவாசத்தில் பலவீனப்பட்டிருப்போர் மோசமான அந்நாட்களின் பரீட்சைக்கு நிற்க மாட்டார்கள். வெளிப்படுத்தலின் பெரிய சத்தியங்களைக் கவலையுடன் ஆராய்ச்சி செய்ய வேண்டும்; ஏனெனில் நாம் எல்லாரும் தேவ வசனத்தைப் பற்றிய தெளிவான அறிவுடையவர்களாயிருக்க வேண்டும். தேவ ஆராய்ச்சியின் மூலமாகவும் இயேசுவோடு அனுதினமும் ஐக்கியப்பட்டிருப்பதினாலும் தனித் தனிமையாய் நமது உத்தரவாதம் இன்னதென்பதை நாம் திட்டமாய் அறிந்து கொல்வதுந் தவிர அந்தப் பரீட்சை, சோதனையின் காலத்தில் நிலைநிற்கத் தக்க பலத்தையும் பெற்றுக் கொள்வோம். எவனுடைய ஜீவியம் அந்தரங்க சங்கிலி வலையங்களினால் கிறிஸ்துவோடு இணைக்கப்பட்டிருக்கிறதோ அவன் இரட்சிப்புக்கேற்ற விசுவாசத்தின் மூலமாய் தேவ வல்லமையினால் காக்கப்படுவான்.LST 193.1

    நாம் தேவ விஷயங்களைப் பற்றி அதிகமாயும் லெளகீக காரியங்களைப் பற்றி குறைவாயும் சிந்திக்க வேண்டும். நமது ஜனங்கள் வேத வாக்கியங்களை அறிந்து கொள்ள வேண்டியதவசியம்; பூமியின் மேல் வரப்போகிறவைகளுக்குத் தங்களைத் தகுதியுள்ளவர்களாக்கக் கூடியதும், பலவித போதகமாகிய காற்றினாலே அடிபட்டு அலையாமல் தங்களைக் காத்துக் கொள்ளக் கூடியதுமான சத்திய போதனைகளைப் பற்றி அவர்கள் ஒழுங்காய் அறிய வேண்டும்.LST 193.2