Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

எலன் ஜி. உவைட்டின் ஜீவியமும் உபதேசங்களும் - இரண்டு பாகங்கள்

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    ஏசாயாவின் கட்டளை

    தேவன் ஏசாயாவின் மூலமாய் தமது ஜனங்களுக்கு ஓர் செய்தியை அனுப்பப் போகும் சமயத்தில் அவர் முதன் முதல் அந்த தீர்க்கதரிசியை பரிசுத்த ஸ்தலத்துக்குள்ளிருக்கும் மகா பரிசுத்த ஸ்தலத்தை காட்சியில் நோக்கிப் பார்க்க இடங்கோடுத்தார். திடீரென வாசலும் ஆலயத்தின் உட்டிரையும் மேலே இழுத்துக் கொள்ளப் பட்டதாகக் காணப்பட்டது; உள்ளே தீர்க்கதரிசியின் பாதங்கள் முதலாய் படலாகாத மகா பரிசுத்த ஸ்தலத்தை உற்றுப்பார்க்க அவனுக்கு இடங்கொடுக்கப்பட்டது. அங்கே அவனுக்கு முன்பாக உயரமும் உன்னதமுமானதோர் சிங்காசனத்தின் மேல் யேகோவா வீற்றிருப்பதானதோர் காட்சி எழும்பிற்று, அப்போது அவருடைய மகிமையினால் ஆலயம் நிறைந்தது. மகா ராஜாவைச் சுற்றி மெய் காவலர் போல் சேராபீன்கள் சிங்கசனத்தைச் சூழ்ந்திருந்தார்கள்; அவர்களைச் சுற்றிப் பிரகாசித்த மகிமையை அவர்கள் பிரதிவிம்பிக்கச் செய்தார்கள். அவர்களுடைய துதியின் கீதங்கள் மகா முழக்கமாய் முழங்கின போது பூமியதிர்ச்சியினால் அசையுண்டாற்போல் அந்த வாசலின் தூண்கள் ஆடின.LST 204.1

    தீர்க்கதரிசி உற்றுக்கேட்ட போது ஆண்டவரின் மகிமையும், வல்லமையும், மகத்துவமும் அவனுடைய காட்சிக்குத் தெரிந்தது; இவ் வெளிப்படுத்தலின் வெளிச்சத்தில் அவனுடைய சொந்த உள் அசுத்தம் பிரமிப்பான தெளிவுடன் காணப்பட்டது. அவனுடைய வார்த்தைகளே அவனுக்குத் தீட்டாய்த் தோன்றின. “ஐயோ! அதமானேன், நான் அசுத்த உதடுகளுள்ள மனுஷன்... சேனையின் கர்த்தராகிய ராஜாவை என் கண்கள் கண்டதே” என்று மகா பணிவுடன் அலறினான்.LST 204.2

    ஏசாயாவின் பணிவு உத்தமமானது. மனுஷ தன்மைக்கும் தேவ தன்மைக்குமுள்ள வித்தியாசம் அவனுக்குத் தெளிவாக்கப் பட்டபோது, அவன் தன் சூனியத்தையும் அபாத்திரத்தையும் முழுவதுமாய் உணர்ந்தான். யேகோவாவின் நின்மல உரைகளை அவன் எவ்விதம் ஜனங்களுக்கு உரைப்பது?LST 204.3

    “அப்பொழுது செராபீன்களில் ஒருவன் பலிபீடத்திலிருந்து, தன கையிலே பிடித்த குறட்டால் ஒரு நெருப்புத்தழலே எடுத்து, என்னிடத்தில் பறந்து வந்து, அதினால் என் வாயைத் தொட்டு: இதோ இது உன் உதடுகளைத் தொட்டதினால் உன் அக்கிரமம் நீங்கி, உன் பாவம் நிவிர்த்தியானது என்றான்” என்பதாக அவன் எழுதுகிறான்.LST 204.4

    பின்பு “யாரை நான் அனுப்புவேன், யார் நமது காரியமாய்ப் போவான்?” என்று உரைக்கிற ஆண்டவருடைய சத்தத்தை ஏசாயா கேட்டு தெய்வீக தொடுதலைப் பற்றிய நினைவால் பலமடைந்தவனாக “இதோ, அடியேன் இருக்கிறேன்; என்னை அனுப்பும்” எனப் பகர்ந்தான்.LST 204.5

    தேவனுடைய ஊழியர்கள் விசுவாசத்தினால் மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் உற்று நோக்கி, பரலோக பரிசுத்த ஸ்தலத்திலிருக்கிற நமது மகா பிரதான ஆசிரியர் செய்கிற வேலையைப் பார்க்கிற போது தாங்கள் அசுத்த உதடுகளுள்ள மனுஷரென்றும் உணருகிறார்கள். கிறிஸ்துவின் சம்பூரணத்தோடு அவர்கள் தங்கள் சொந்த அபாத்திரத் தன்மையை ஒப்பிட்டுப் பார்க்கும் போது வெகுவாய்ச் சோர்வடையலாமே. உத்தம மன ஸ்தாபத்தோடு, அவர்கள் தங்கள் பெரிய வேலைக்கு முழுவதும் அபாத்திரவான்களும் தகுதியற்றவர்களுமென உணர்ந்து அவர்கள் “நான் அதமானேன்” என்கிறார்கள். ஆனால் ஏசாயாவைப் போல் அவர்கள் தங்கள் இதயங்களைத் தேவனுக்கு முன்பாகத் தாழ்த்தினால் தீர்க்கதரிசிக்குச் செய்யப்பட்ட வேலை அவர்களுக்கும் செய்யப்படும். பலிபீடத்திலிருந்து எடுக்கப்பட்ட நெருப்புத்தழலால் அவர்களுடைய உதடுகள் தொடப்படும், அப்பொழுது அவர்கள் தேவனுடைய மகத்துவத்தையும் வல்லமையையும் தங்களுக்குச் சகாயம் புரிவதற்கான அவருடைய உற்சாகத்தையும் பற்றிய சிந்தனையில் தங்களை மறந்து விடுவார்கள். தங்களுக்கு ஒப்புவிக்கப்பட்ட காரியத்தின் பரிசுத்தத்தை அவர்கள் உணர்ந்து, தமது தூதைக் கொண்டுபோகும்படி தங்களை அனுப்பினவரை அவமானப் படுத்தத்தக்கதான எல்லாவற்றையும் வெறுக்கும்படி நடத்தப்படுவார்கள்.LST 205.1

    நெருப்புத்தழல் சுத்திகரிப்புக்கு அடையாளமாயிருக்கிறதுமன்றி தேவனுடைய மெய்த் தொண்டரின் முயற்சிகள் பெலனுள்ளவை என்றும் காட்டுகிறது. ஆண்டவர் தங்கள் உதடுகளைத் தொடத்தக்கதாக பூரண தத்தம் செய்கிறவர்களுக்கு, நீங்கள் அறுப்பாகும் நிலத்திற்குப் போங்கள், நான் உங்களோடு ஒத்துழைப்பேன் என்னும் வார்த்தை பேசப்படுகிறது.LST 205.2

    இவ்வாயத்தமுடைய ஊழியன் உலகத்தில் நன்மைக்கானதோர் வல்லமையாயிருப்பான். அவனுடைய வார்த்தைகள் அனுதாபத்தினாலும் அன்பினாலும் நிறைந்து நேர்மையும் சுத்தமும் உண்மையுமுள்ளவைகளாயிருக்கும்; அவனுடைய செய்கையும் நேர்மையாயிருந்து பெலவீனருக்கு உதவியாயும் ஆசீர்வாதமாயுமிருக்கும். கிறிஸ்து அவனில் நிலைத்திருந்து மனோ, வாக்கு, காயங்களை அடக்கி ஆளுகிறவராயிருப்பார். பெருமை, பொருளாசை, தன்னயம் முதலானவற்றை மேற்கொள்வதாக அவன் தனக்குத் தானே பொருத்தனை செய்து கொண்டான். இப் பொருத்தனையை அவன் நிறைவேற்றுவதற்கு வகை தேடும் போது அவன் ஆவிக்குரிய பலமடைகிறான். தேவனோடு அவன் அனுதினமும் ஐக்கியமாயிருப்பதினால் வேதாகம அறிவில் வல்லவனாகிறான். அவனுடைய ஐக்கியம் பிதாவோடும் குமாரனோடும் இருக்கின்றது; அவன் எப்பொழுதும் தெய்வ சித்தத்திற்குக் கீழ்ப்படிகிறபடியால், அலைந்து திரியும் ஆத்துமாக் களைக் கிறிஸ்துவின் மந்தையிடமாக வழி நடத்தத்தக்க வார்த்தைகளைப் பேச அவன் நாளுக்கு நாள் அதிகத் தகுதியுள்ளவனாகிறான்.---G.W. 21-23.LST 205.3