ஐசுவரியவான்களுக்கும் ஏழைகளுக்கும் ஒன்றுபோல்
அவருடைய ஜீவியம் எவ்வளவு முயற்சியுள்ள ஜீவியம்! நாளுக்கு நாள் அவர் வறுமையும் துக்கமுமடைந்துள்ள ஏழைகளின் வாசல் களில் பிரவேசித்து, சோர்வுற்றோருக்கு நம்பிக்கையையும் இடுக்கண் அடைந்தோருக்கு சமாதானத்தையும் கூறியிருப்பதாகக் காணப்பட்டிருப்பார். கிருபையும், மன உருக்கமும், இரககமுமுள்ளவராய் அவர் தாழ்மைப் படுத்தி நசுக்கப்பட்டோரைத் தூக்கி எடுக்கிறவராயும், துக்கப் பட்டோரை ஆறுதல் படுத்துகிறவராயும் சுற்றித் திரிந்தார். அவர் சென்ற இடமெல்லாம் அவர் ஆசீர்வாதத்தைக் கொண்டு போனார்.LST 206.4
இயேசு தரித்திரருக்கு ஊழியஞ் செய்யும் போதே ஐசுவரியவான்களிடம் சேருவதற்கான வழிகளையும் கண்டறிந்தார். செல்வமும் கல்வி அறிவுமுள்ள பரிசேயனாகிய அந்த யூத தனவந்தனோடும்அந்த ரோம அதிகாரியோடும் அவர் பழகும்படி தேடினார். அவர்களுடைய அழைப்புகளைஅவர் ஏற்றுக்கொண்டு அவர்களுடைய விருந்துகளில் பங்கடைந்ததுமன்றி, அவர் அவர்களுடைய இதயங்களை யடைந்து அழிவற்ற ஐசுவரியங்களை அவர்களுக்கு வெளிப்படுத்தும் பொருட்டு அவர்களுடைய உற்சாக முயற்சிகளையும் தொழில்களையும் அறிகிறவராயிருந்தார்.LST 207.1
ஜாதி, அல்லது வகுப்பு அல்லது கொள்கை முதலியவற்றின் பேதங்கள் ஒன்றையும் அவர் பார்க்கவில்லை. வேதபாரகரும் பரிசேயரும் பரம ஈவுகளை தங்களுடைய தேசத்திற்கும் ஜனத்திற்கு மாத்திரம் பயன்படச் செய்யவும், உலகிலுள்ள தேவனுடைய குடும்பத்தைச் சேர்ந்த மற்றவர்கள் அதற்கு அபாத்திரரெனத் தள்ளவும் விரும்பினார்கள். ஆனால் கிறிஸ்துவோ பிரிவினையாகிய சுவர் ஒவ்வொன்றையும் தகர்த்துப் போட வந்தார். ஆகாயம், வெளிச்சம் அல்லது பூமியைச் செழிப்பாக்கும் மழை ஆகிய இவைகள் மட்டிடப்படாதது போல, அவருடைய இரக்கமும் அன்பும் மட்டிடப்பட முடியாதெனக் காட்டுவதற்காக அவர் வந்தார்.LST 207.2
ஜாதி இல்லை என்னும் ஓர் மார்க்கத்தை, யூதனையும் புறஜாதியானையும் சுயாதீனனையும் அடிமையையும் தேவனுக்கு முன்பாக சரிசமானமைப் பொதுவான சகோதரத்துவத்தில் இணைக்கும் ஓர் மார்க்கத்தை கிறிஸ்துவின் ஜீவியம் ஸ்தாபித்தது. அரசியல் நிர்வாகத்தைப் பற்றிய எக்கேள்வியும் அவரைத் தூண்டினதில்லை. அயலகத்தார் அந்நியர் என்றும் தோழர் சத்துருக்கள் என்றும் அவர் வித்தியாசம் பாராட்டவில்லை. ஜீவ தண்ணீர்களுக்கானதோர் ஆத்ம தாகமே அவருடைய இருதயத்தின் பாரமாயிருந்தது.LST 207.3
முரடர்களும் கவைக்குதவாதவர்களாகத் தோன்றினவர்களும் தேவனுடைய பிள்ளைகளென விளங்கச் செய்யும் தன்மையையடைந்து, கறையற்றவர்களும் தீங்கற்றவர்களுமாகக் கூடுமேன்னும் நிச்சயத்தை அவர்களுக்குக் காண்பித்து அவர்களுக்கு நம்பிக்கையை உண்டாக்க விரும்பினார்.LST 207.4
சாத்தானின் ஆளுகைக்குட்பட்டு வழி விலகிப் போனவர்களையும், அவனுடைய கண்ணியினின்று விலகிக் கொள்ள வல்லமையற் றிருந்தவர்களையும் அவர் அடிக்கடி சந்தித்தார். அவ்விதம் அதைரியப்பட்டும், நோய்ப்பட்டும், சோதிக்கப்பட்டும், விழுந்தும் போன ஒருவனுக்கு இயேசு உருக்க இரக்கமான வார்த்தைகளையும், அவசியப்பட்டதும்உணர்ந்து கொள்ளக் கூடியதுமான வார்த்தைகளையும் பேசுவார், ஆத்துமாக்களின் சத்துருவோடு நேரில் கை கலந்து போர் புரிந்தோரான மற்றவர்களையும் அவர் சந்தித்தார். விடாமுயற்சியாய்ப் போர் புரிந்தால் அவர்கள் ஜெயமடைவார்கள் என்று சொல்லி அவர்களைத் தைரியப்படுத்தினார்; ஏனெனில் தேவதூதர்கள் அவர்கள் பக்கத்தில் நின்று அவர்களுக்கு ஜெயம் கொடுப்பார்கள்.LST 207.5
இயேசு யூதனுயிருந்தும் அவர் தமது ஜாதியின் பரிசேய வழக்கங்களைத் தள்ளி சமாரியரோடு தாராளமாய் உறவாடினார். அவர்களுடைய பொறாமைக்கு அவர் பயப்படாமல் நிந்திக்கப்பட்ட இந்த ஜனங்களின் உபசாரத்தை அவர் அங்கிகரித்தார். அவர்களுடைய கூரைகளின் கீழ் அவர்களோடு தூங்கினார், அவர்களுடைய பந்தியில் அவர்களோடு உட்கார்ந்து , அவர்களுடைய கரங்களால் தயாரிக்கப்பட்டதும் பரிமாரப்பட்டதுமான ஆகாரத்தைச் சாப்பிட்டார், அவர்களுடைய தெருக்களில் போதித்தார், மிக்க பரிவுடனும் மரியாதையுடனும் அவர்களை நடத்தினார்.---M.H. 22-6.LST 208.1
* * * * *
மனுஷனுடைய அவசியத்திற்கான சோர்வடையா ஊழியராக நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இவ் வுலகம் வரலானார்.---M.H. 17.LST 208.2
* * * * *