Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

எலன் ஜி. உவைட்டின் ஜீவியமும் உபதேசங்களும் - இரண்டு பாகங்கள்

 - Contents
 • Results
 • Related
 • Featured
No results found for: "".
 • Weighted Relevancy
 • Content Sequence
 • Relevancy
 • Earliest First
 • Latest First
  Larger font
  Smaller font
  Copy
  Print
  Contents

  தேவன் தமது ஊழியரை எவ்விதம் பயிற்றுவிக்கிறார்

  தமது ஊழியர்கள் தங்களுக்கு நியமிக்கப்பட்ட இடங்களை நிரப்ப ஆயத்தமாயிருக்கும் பொருட்டு ஆண்டவர் அவர்களை பயிற்றுவிக்கிறார். அதிக உத்தம ஊழியம் செய்வதற்கு அவர்களைத் தகுதியுள்ளவர்களாக்க அவர் விரும்புகிறார். சிலர் ஆட்சியை ஆசிக்கிறவர்களாயிருக்கிறார்கள், அவர்கள் கீழ்ப்படுதலின் மூலமாய் பரிசுத்தமாகுதல் வேண்டும். ஒரு வேளை அவர்கள் விரும்பாத கடமைகளை அவர் அவர்கள் முன் வைக்கலாம். அவர்கள் அவரால் நடத்தப்பட விரும்புகிறவர்களா யிருந்தால் கீழ்ப்படிதலின் ஆவியோடு அவர்கள் இக்கடமைகளை நிறைவேற்றுவதற்கு அவர் அவர்களுக்குக் கிருபையையும் பெலத்தையும் அருளுவார். இவ்விதம் அவர்கள் அவ்விடங்களை நிரப்ப தகுதியுள்ளவர்களாகிப் பயிற்றுவிக்கப்பட்ட தங்கள் திறமைகளைக் கொண்டு பெரிய ஊழியஞ் செய்கிறவர்க ளாவார்கள்.LST 220.2

  சிலருக்கு தேவன் ஏமாற்றங்களையும் அப ஜெயங்களையும் வரவிட்டு அவர்களைப் பயிற்றுவிக்கிகிறார். அவர்கள் கஷ்டங்களை மேற்கொள்ளப் படிக்க வேண்டுமென்பது அவருடைய நோக்கம். அப ஜெயமாகக் காண்பிக்கத்தக்கதான தீர்மானம் பண்ணுகிறதற்கு அவர் அவர்களை ஏவுகிறார். அடிக்கடி மனுஷர் தங்களுக்கு நேரிடுகிற இடுக்கண்கள், இடையூறுகள் நிமித்தம் ஜெபித்துக் கண்ணீர் சிந்துகிறார்கள். ஆனால் அவர்கள் தங்கள் நம்பிக்கைக்கு ஆதியா யிருந்ததை முடிவு பரியந்தம் உறுதியாய்ப் பற்றிக்கொண்டால், தேவன் அவர்களுக்கு வழியைத் தெளிவாக்குவார். மலை போல் காணப்படும் கஷ்டங்களுக்கு விரோதமாய் அவர்கள் போராடும் போது ஜெயம் ஏற்படும், ஜெயத்தோடு மிகுந்த சந்தோஷம் ஏற்படும்.LST 220.3

  ஒரே வித வாழ்க்கை மிகுதியும் ஆவிக்குரிய வளர்ச்சிக்கு ஏதுவானதல்ல. அவ்வித வாழ்க்கையில் ஒரு மாறுதல் ஏற்படுவதினால் மாத்திரம் சிலர் பக்தியின் உன்னதத் திட்டத்தை அடையக்கூடும். குணக் கட்டுமான நலத்திற்காக தேவன் தமது பராமரிப்பில் மாறுதல்கள் அவசியமெனக் காண்பிக்கிற போது வாழ்க்கையின் அமைதலான ஓட்டத்தை தடுக்கிறார். ஓர் ஊழியன் இன்னும் அதிகமாய் நெருங்கிப் பழக வேண்டுமென்று அவர் காணும்போது, அது நடைபெறும் பொருட்டு அவனுடைய நண்பர்கள், அவனோடு பழக்கமானவர் களுடைய சகவாசத்தை விட்டு அவர் அவனைப் பிரிக்கிறர்.அவர் எலியாவை பரலோகம் கொண்டு போவ தற் காயத்தப் படுத்தும்போது,அந்த தீர்க்க தரிசி சமாதான சவுக்கியத்துடன் வாழ்வதினால் ஆவிக்குரிய வல்லமையை அடையத் தவறிப் போகாதிருக்கும் பொருட்டு தேவன் அவனை இடம் விட்டு இடம் பெயர்ந்து போகச் செய்தார்,அன்றியும் அநேக ஆத்துமாக்கள் விசாலமும் அதிக அனுகூலமுமான அநுபோகம் அடைவ தற்கேதுவாக எலியாவின் நடக்கை ஓர் வல்லமை யாயிருக்க வேண்டுமென்பது தேவ நோக்கமாயிருந்தது,LST 220.4

  தேவன் தங்களுக்குக் குறித்திருக்கும் இடத்திலுருந்து மகிழ்ச்சியோடு தேவனுக்கு ஊழியஞ் செய்ய அல்லது அவர் தங்கள் கைகளில் கொடுத்திருக்கும் வேலையை முறுமுறுப்பில்லாமல் செய்ய பிரியமற்றிருக்கிறவர்கள் பலர் உண்டு. நாம் நமது கடமையை நிறைவேற்றுகிற விஷயத்தில் அதிருப்தியடைதல் நியாயமாயிருப்பினும்,ஒப்புவிக்கப்பட்ட கடமையை விட்டு மற்றொரு கடமையை நாம் செய்ய விரும்புகிறதி னிமித்தம், அந்தக் கடமையைக் குறித்து அதிருப்தி அடைதல் நமக்குத் தகாது. தேவன் தமது பராமரிப்பில் நபரின் நோய்ப்பட்ட மனதுக்கு ஒளஷதம் போலிருக்கிற ஊழியத்தை அவர்களுக்கு முன் வைக்கிறார்.இவ்விதம் அவர் அவர்கள் தங்கள் சொந்த இஷ்டப்படி நடப்பதைத் தள்ளிப் போடும்படிப் பார்க்கிறார். அவர்கள் இஷ்டப் பிரகாரம் செய்ய விடுகிறதானால் , அது அவர் அவர்களுக்காக வைத்திருக்கும் வேலைக்கு அவர்களை அபாத்திரவான்களாக்கும்,அவர்கள் இந்த ஊழியத்தை ஏற்றுக் கொண்டு செய்கிறதாயிருந்தால் அவர்களுடைய மனசுகுணமடையும்.அவர்கள் அதை வேண்டா மென்றால்,அவர்கள் தங்களோடும் மற்றவர்களோடும் போர் புரியும் படி விடப்படுவார்கள்.LST 221.1

  சமாதானத்துடன் ஓரிடத்திலிருந்து இளைப்பாற இடங் கிடையாமல், இன்றிரவு தங்கள் கூடாரத்தை ஓரிடத்திலும் நாளை இரவு இன்னொரு இடத்திலும் போடவும் இவ்வாறு எப்பொழுதும் இடம் பெயர்ந்து போகும்படி இடம் பெற்றவர்கள் கர்த்தர் தங்களை நடத்துகிறார் என்றும் , தங்களில் பூரண குணங்கள் ஏற்படுவதற்கு இது அவர் கையாடும் வழி என்றும் நினைத்துக் கொள்வார்களாக, செய்யும்படிக்கு அவர்கள் கேட்கப்படும் சகல மாறுதல்களிலும் தேவனே தங்கள் துணையும், தங்கள் வழிகாட்டியும்,தங்கள் தஞ்சமுமானவர் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.LST 221.2

  Larger font
  Smaller font
  Copy
  Print
  Contents