Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

எலன் ஜி. உவைட்டின் ஜீவியமும் உபதேசங்களும் - இரண்டு பாகங்கள்

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    தேவனுடைய சிங்காசனம்

    பரலோகத்திலுள்ள ஆலயத்தில் தேவனுடைய வாசஸ்தலமாகிய அவருடைய சிங்காசனம் நீதியிலும் நியாயத்திலும் உறுதிப்படுத்தப் பட்டிருக்கின்றது. மகா பரிசுத்த ஸ்தலத்தில் சகல மனிதா குலத்தாரையும் பரீட்சிக்கும் நீதியின் பெரிய சட்டமாகிய அவருடைய நியாயப் பிரமாணம் உள்ளது. நியாயப் பிரமாணப் பலகைகள் வைக்கப்பட்டுள்ள உடன்படிக்கைப் பெட்டி கிருபாசனத்தால் மூடப்பட்டிருக்கிறது, அதற்கு முன்பாக கிறிஸ்து தமது இரத்தத்தைக் கொண்டு பாவிகளுக்காக பரிந்து பேசுகிறார். இவ்விதமாக மானிட மீட்பின் ஒழுங்கில் நீதியும் கிருபையும் ஒன்றியிருப்பதாகக் காண்பிக்கப்பட்டிருக்கிறது. மட்டற்ற ஞானமே இவ்வைக்கியத்தைச் சூழ்ச்சிக்கவும், மட்டற்ற வல்லமையே அதை நடப்பிக்கவுங் கூடும். அது பரலோகத்தை யெல்லாம் ஆச்சரியத்தாலும் துதியாலும் நிரப்புகிற ஓர் ஐக்கியம்.LST 41.2

    பூலோக பரிசுத்த ஸ்தலத்திலுள்ள கேருபீன்கள் கிருபாசனத்தை கீழ் நோக்கி வணக்கமாய் நிற்பது பரம சேனை மீட்பின் வேலையை எவ்வளவு ஆசையாய்க் கவனிக்கிறதென்பதைக் காட்டுகிறது. மனந்திரும்பும் பாவியை நீதிமானாக்கி கெட்டுப்போன மனுஷ குலத்தோடு தமது ஐக்கியத்தைப் புதுப்பிக்கும் தேவன் நீதியுள்ள வராயிருக்கக் கூடுமென்பதும், எண்ணிக்கைக்கு அடங்காத ஜனக்கூட்டத்தை அழிவின் பாதளத்திலிருந்து தூக்கி எடுத்து அவர்கள் பரிசுத்த தேவதூதர்களோடு சேர்ந்து எப்பொழுதும் தேவ சமூகத்தில் வாசமாயிருக்கும் பொருட்டு அவர்களைக் கரையற்ற தமது சொந்த நீதியின் உடைகளால் உடுத்துவிக்கக் கூடுமென்பதும் தேவதூதர்கள் உற்றுப் பார்க்க ஆசையாயிருக்கும் கிருபையின் இரகசியம்.LST 41.3