Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

எலன் ஜி. உவைட்டின் ஜீவியமும் உபதேசங்களும் - இரண்டு பாகங்கள்

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    ஆம் பாகத்தின் பொருளடக்கம்

    பாகம் 1

    முதலாம் அத்தியாயம்—இளமைப் பருவமும் வாலிபமும் வமிசமும் ஆரம்ப ஜீவியமும்

    இரட்டைப் பிள்ளைகளான எலன் கோல்டும் எலிசபேத்தும் ராபர்ட் யூனிஸ் ஹார்மன் குடும்பத்தில் பிறந்த எட்டுப் பிள்ளைகளுள் இளையவர்கள். அவர்கள் மேயும் மாகாணத்திலிருக்கும் போர்ட்லண்டுக்கு மேற்கில் சுமார் பத்து மைல்களுக்கு அப்பாலிருக்கும் கோர்ஹம் கிராம வாசிகள். அவர்கள் 1827 நவம்பர் 26-ல் பிறந்தார்கள். அவ்விரட்டைப் பிள்ளைகளின் இளமைப் பருவத்தில் ஹார்மன் குடும்பம் தங்கள் தந்தை தொப்பி வேலை செய்து கொண்டிருந்த போர்ட்லாண்டு நகரில் போய்க் குடியிருந்தது.LST 9.1

    ராபர்ட் ஹார்மன் சத்தியசாந்தன் எனப் பெயர் பெற்றவரும் ஊக்கமுள்ள உத்தம கிறிஸ்தவ பக்தனுமானவர். அவர் மனைவியும் அவ்வாறே எளியோர் வறியோரின் நிர்ப்பந்தங்களை நீக்குவதற்கான சகல முயற்சிகளிலும் உற்சாகமாய் முற்பட்டு நின்றவரும், சற்குணம் படைத்தவருமானதோர் உத்தம கிறிஸ்தவர். இருவரும் மெதடிஸ்டு எப்பிஸ்கோப்பல் சபை அங்கத்தினராயிருந்து பாவிகளைக் குணப்படுத்தும் வேலையிலும் தேவனுடைய வேலையை கட்டுவதிலும் சிறந்து விளங்கினர். நாற்பது ஆண்டுகளாய் அவர்கள் இத்தகைய ஊழியம் செய்தனர், இக்காலத்தில் அவர்கள் தங்கள் மக்கள் யாவரும் மனந்திருந்திக் குணப்படுவதைக் கண்டு பெருவகை யடைந்தனர்.LST 9.2

    அவர்கள் எளிமையான நிலைமையிலிருந்தாலும், முயற்சியுடையராயும், பிறரை உதவியை நாடாதவராயும் இருந்தனர். நியூ இங்கிலாந்திலுள்ள பூர்வ குடும்பங்களைப் புகழ்பெறச் செய்த அபூர்வ லட்சணங்களாகிய கடவுள் வணக்கமும் பெற்றோர் பக்தியும் இளமையில் உறுதியாய் உணர்ந்தவர். உலகில் மிக்க பிரபலமான ஊழியர்களின் குணங்களில் காணப்பட்ட உண்மை ஜாக்கிரதை முதலிய பாடங்கள் இவர்கள் போதனையினாலும் சாதனையினாலும் மக்களுக்கு விளங்கின.LST 9.3

    பெற்றோர் இருவரிடத்திலும் அதிகப்படியான சரீர சகிப்பினை உண்டு. மக்கள் இவ்வசீர்வாதத்தையும் அத்துடன் தாயினிடம் விசேஷமாய்ச் சிறந்து விளங்கிய ஜாக்கிரதையையும், குண சீலத்தையும் ஆளும் திறமையையும் சுதந்தரித்துக் கொண்டனர்.LST 9.4

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents