Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

எலன் ஜி. உவைட்டின் ஜீவியமும் உபதேசங்களும் - இரண்டு பாகங்கள்

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    பெரியதோர் துரதிஷ்டம்

    எலனுடைய சரீரமும் மனமும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து பலப்பட்டது. குழந்தையாயிருக்கும் கும் போதே அவர் படிப்பின் மீதுள்ள ஓர் வாஞ்சையையும் நுட்ப அறிவையும் நல்ல ஞாபக சக்தியையும் காண்பித்தார். அவர் நம்பிக்கையில் களிகூரும் தன்மையுடையவராய் சங்கப் பிரியமும், தைரியமும், தீர்க்கமும், ஊக்கமுமுள்ளவர். பெற்றோர் அவரைக் குறித்து விசேஷமாய்க் கவனிப்பதும், அவரின் பிற்கால ஜீவியத்தைக் குறித்து மேன்மையாய் எண்ணிக்கொள்வதும் இயல்பே.LST 9.5

    அப்படியிருக்க, ஒன்பது வயதில் அவருடைய ஜீவியத்தின் பாதையில் குவித்து வைத்திருப்பதாய்க் காணப்பட்ட சாதாரண பாலிய இன்பங்கள் திடீரென முடிவடைந்தன. பள்ளித் தோழியான ஓர் சிறு பெண் ஏதோ ஓர் அற்பக் காரியத்தில் கோபமாய்க் ஓர் கல் விட்டெரிய, அது அவர் மூக்கில் பட்டு மூக்கெலும்பு முறிந்தது, அப்படுகாயம் அவர் உருக்குலைந்து போகச் செய்தது மாத்திரமல்ல, ஆது மரணபத்தான நோய்க்கிடமாகி, அதனிமித்தம் அவர் பல ஆண்டுகள் கஷ்டப்பட்டார். பல வாரங்களாய் அவர் மரண மயக்கமாய்க் கிடந்து, பின்பு அதனின்று தமக்கு நேர்ந்த துரதிஷ்டத்தையும் அதின் கேடுகளையும் குறித்துச் சிந்திக்குங் கவலைக்குள்ளாகினார்.LST 10.1