Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

மாரநாதா! (இயேசு வருகிறார்!)

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    ஒரு அபாய அறிவிப்பை முழங்குங்கள்! , ஏப்ரல் 8

    “சீயோனிலே எக்காளம் ஊதுங்கள், என் பரிசுத்த பர்வதத்திலே எச்சரிப்பின் சத்தமிடுங்கள்; தேசத்தின் குடிகள் எல்லாம் தத்தளிக்கக்கடவர்கள்; ஏனெனில் கர்த்தருடைய நாள் வருகிறது, அது சமீபமாயிருக்கிறது.” - யோவேல் 2:1.Mar 195.1

    நமது நித்தியவாழ்வின் நலம்பற்றிய காரியங்களே இப்பொழுது நமது கவனத்தை ஈர்க்கவேண்டும். பரலோகக் காரியங்களுக்கு இனியும் இரண்டாவது இடத்தைக் கொடுத்துக்கொண்டிருக்க முடியாது. உலகத்தின்மீது தேவனுடைய நியாயத்தீர்ப்புகள், பக்தி விநயமான எச்சரிப்பின் வார்த்தைகளை பின்வருமாறு கூறுகின்றன. “நீங்கள் நினையாத நாழிகையிலே மனுஷகுமாரன் வருவார்; ஆதலால், நீங்கள் ஆயத்தமாயிருங்கள்” — மத்தேயு 24:44.Mar 195.2

    நமது சபைகளிலே, அதிகமதிகமான மக்கள் நிகழ்காலத்திற்கு உரிய சத்தியத்தின் உண்மையான பொருளை அறியாதவர்களாக இருக்கிறார்கள். முடிவு சமீபமென்று தெளிவாக சொல்லிக்கொண்டிருக்கின்ற காலங்களின் அடையாளங்களின் நிறைவேறுதலை புறக்கணிக்க வேண்டாம் என்று அவர்களுக்கு நான் வேண்டுகோள் விடுக்கிறேன். ஆ! தங்கள் ஆத்தும இரட்சிப்பை நாடித்தேடாத அநேகம் பேர் வெகு சீக்கிரத்தில், “அறுப்புக்காலம் சென்றது, கோடைக்காலமும் முடிந்தது, நாமோ இரட்சிக்கப்படவில்லை” (எரேமியா 8:20) என்று மனங்கசந்து அழுது புலம்புவார்கள்.Mar 195.3

    இந்த பூமியின் வரலாற்றின் கடைசிக் காட்சிகளின் காலத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். தீர்க்கதரிசனம் துரிதமாக நிறைவேறிக்கொண்டிருக்கிறது. தவணையின் மணிநேரங்கள் விரைவாகக் கடந்துசென்றுகொண்டிருக்கின்றன. நமக்கு நேரம் இல்லை-இழப்பதற்கு ஒரு கண நேரங்கூட கிடையாது. காவல் காக்கும்பொழுது, தூங்குகிறவர்களாக நாம் காணப்படக்கூடாது. “எனது எஜமான் வர நாட்செல்லும்” என்று ஒருவரும் தங்களது இதயத்திலோ தங்களது கிரியைகளின்மூலமாகவோ சொல்லாதிருக்கட்டும். ஊக்கமான எச்சரிப்பின் வார்த்தைகளிலே கிறிஸ்துவின் அதிசீக்கிர வருகையின் செய்தி முழங்கட்டும். வர்ப்போகின்ற கோபாக்கினையினின்று தப்பும்படியாக எங்கணும் சென்று ஆண்களிடமும் பெண்களிடமும் மனந்திரும்பும்படி இணங்குவதற்காக நாம் பேசுவோம்; உடன், ஆயத்தமாகும்படி நாம் அவர்களை விழிப்படையச்செய்ய வேண்டும். நமக்கு முன்பாக வரப்போகின்ற காரியங்களைப்பற்றி நமக்கு ஒன்றும் தெரியாது. ஊழியர்களும் சபையாரும் முதிர்ந்துகிடக்கிற வயல்களிடத்திற்குச் செல்லட்டும்….Mar 195.4

    ஆண்டவர் சீக்கிரம் வரவிருக்கிறார். சமாதானத்தோடு அவரைச் சந்திக்க நாம் ஆயத்தமாயிருக்க வேண்டும். நம்மைச் சுற்றிலும் இருப்பவர்களுக்கு வெளிச்சத்தைக் கொடுப்பதற்காக நமது வல்லமைக்குட்பட்ட அனைத்துக் காரியங்களும் செய்யப்பட வேண்டுமென்று நாம் தீர்மானிப்போம். நாம் துக்கத்தோடிருக்க வேண்டியதில்லை; உற்சாகமாக இருக்க வேண்டும். ஆண்டவராகிய இயேசுவை நம்க்கு முன்பாக எப்பொழுதும் வைத்திருக்க வேண்டும். அவரது வருகைக்காக நாம் ஆயத்தமாகிக் காத்திருக்க வேண்டும். ஆ! அவரைக் கண்டு, அவரது மீட்கப்பட்ட மக்களாக வரவேற்கப்படுவது எவ்வளவு மகிமையான ஒரு காரியம்! நாம் நீண்டகாலமாகக் காத்திருந்துவிட்டோம்; இதனால், நமது விசுவாசம் பெலவீனமடைந்துவிடக்கூடாது. நாம் நமது இராஜாவை அவரது அழகிலே காணக்கூடுமானால், நாம் என்றென்றும் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக இருப்போம். “வீட்டைநோக்கிச் செல்லுகிறோம்” என்று உரத்த குரலில் சத்தமிட வேண்டும் என்பது போன்று நான் உணர்கிறேன், அவரது மீட்கப்பட்டோரை, அவர்களது நித்திய வீட்டிற்கு அழைத்துச்செல்லத்தக்கதாக, வல்லமையோடும் மகா மகிமையோடும் கிறிஸ்து வருகின்ற அந்த நேரத்தை, நாம் நெருங்கிக்கொண்டிருக்கிறோம்.⋆Mar 196.1

    வாக்குத்தத்த வசனம்: Mar 196.2

    “கர்த்தாவே, உம்முடைய நியாயத்தீர்ப்புகளின் வழியிலே உமக்குக் காத்திருக்கிறோம்; உமது நாமமும், உம்மை நினைக்கும் நினைவும் எங்கள் ஆத்தும வாஞ்சையாயிருக்கிறது.” - ஏசாயா 26:8.Mar 196.3