Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

மாரநாதா! (இயேசு வருகிறார்!)

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    மற்றவர்களை இரட்சிப்பதற்காக வாழ்தல்! , ஏப்ரல் 11

    ” … ஒருவன் என் பின்னே வர விரும்பினால் அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை அநுதினமும் எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பறக்கடவன்.” - லூக்கா 9:23.Mar 201.1

    மிகவும் அதிகமாக, உச்சகட்ட அளவில் மூழ்கிக்கிடக்கின்ற, தேவனிடமிருந்து நம்மைப் பிரிக்கின்ற, மிகவும் அதிகமாக மற்றவர்களைத் தொற்றிக்கொள்ளுகின்ற, ஆவிக்குரிய சீர்குலைவுகளை உண்டாக்கக்கூடிய பாவம்- தன்னலமே! சுயத்தை மறுத்தாலன்றி நாம் தேவனிடத்திற்குத் திரும்பமுடியாது. நாம் எதையுமே நாமாகச் செய்யமுடியாது; ஆனால், தேவன் நம்மை பலப்படுத்துவதின் மூலமாக, நாம் மற்றவர்களுக்கு நன்மை செய்வதாக வாழலாம். இந்த வழியில் தன்னலம் என்ற தீமையை ஒழித்துவிடலாம். பயனுள்ள- தன்னலமற்ற- வாழ்க்கையின்மூலமாக, அனைத்தையும் தேவனுக்கு அர்ப்பணிக்கவேண்டுமென்ற விருப்பத்தை வெளிப்படுத்தத்தக்கதாக, அஞ்ஞான நாடுகளுக்கு நாம் செல்லவேண்டிய அவசியமில்லை. தன்னலமற்ற இந்த ஊழியத்தை குடும்பத்தினரிடையே- சபையிலே-நாம் பழகுகிறவர்கள் மத்தியிலே மற்றும் யாரோடு தொழில்செய்கின்றோமோ அவர்களிடத்திலே செய்யவேண்டும். அன்றாட வாழ்க்கையின் சாதாரண நடைமுறையிலே சுயமானது மறுக்கப்பட்டு, கீழாக அடக்கிவைக்கப்பட வேண்டும்.Mar 201.2

    ” நான் அநுதினமும் சாகிறேன்” என்ற பவுலார் கூற முடிந்தது. சின்னச்சின்ன நடவடிக்கைகளிலே ஒவ்வொருநாளும் சுயத்திற்கு மரித்தல், நம்மை வெற்றியாளர்களாக மாற்றுகிறது. மற்றவர்களுக்கு நன்மைசெய்யவேண்டுமென்ற அந்த விருப்பத்திலே சுயத்தை நாம் மறக்கவேண்டும். அநேகரிடத்தில் மற்றவர்களுக்காகக் காட்டப்படும் அன்பானது, திட்டமானவிதத்தில் குறைவுபட்டுக் காணப்படுகிறது. உத்தமமாக அவர்களது கடமையைச் செய்வதற்குப்பதிலாக, அவர்களது சொந்த இன்பங்களையே நாடித் தேடுகிறார்கள். அவருடைய ஞானத்தைத் தேடி, தங்களது பொருளினாலும் செல்வாக்கினாலும் மற்றவர்களை ஆசீர்வதிப்பது அவரது பின்னடியார்களின் ஒரு கடமையென்று தேவன் உறுதியாகக் கட்டளையிடுகிறார். தங்களது செல்வாக்கிற்கு உட்பட்டவர்களாக வருகின்றவர்களுடைய சிந்தனைகளையும் உள்ளான நேசங்களையும் உயர்த்தத்தக்கதாக தேவனால் கொடுக்கப்பட்ட இந்த ஞானமானது, தங்களது சக்திகுட்பட்ட அனைத்தையும் அவர்கள் செய்வதற்கு உதவிசெய்கிறது. மற்றவர்களுக்கு உதவிசெய்வதிலே ஒரு இனிய மனநிறைவை அனுபவிக்க முடியும். உள்ளான ஒரு சமாதானம் ஒரு போதிய வெகுமதியாக அமையும். மற்றவர்களுக்கு நன்மைசெய்ய வேண்டுமென்ற-உயரிய- மேன்மையான — ஒரு விருப்பத்தால் தூண்டப்பட்டு செய்பவர்கள், வாழ்வின் பலதரப்பட்ட கடமைகளை உத்தமமாகச் செய்துமுடிப்பதில் அவர்கள் உண்மையான மகிழ்ச்சியைக் கண்டடைகிறார்கள். இது பூமிக்குரிய ஒரு வெகுமதியைவிட மேலானதொன்றாகும்.; ஏனெனில், ஒவ்வொரு கடமையும் உத்தமமாகவும் தன்னலமற்ற முறையிலும் செயல்படுத்தப்படும்பொழுது, அந்தக் காரியமானது தூதர்களால் கவனிக்கப்பட்டு, வாழ்வின் பதிவேடுகளிலே பிரகாசிக்கின்றது.Mar 201.3

    பரலோகத்திலே தங்களைப்பற்றியோ தங்களது சொந்த மகிழ்ச்சியைப்பற்றியோ எவருமே நினைக்கமாட்டார்கள். உத்தமமான — தூய்மையான அன்பினால் அனைவரும் தங்களைச்சுற்றிலும் இருக்கிற பரலோக ஜீவிகளுடைய மகிழ்ச்சியையே நாடுவார்கள். புதிய பூமியிலே, பரலோகத்தின் சமுதாய உறவை நாம் அனுபவிக்க விரும்பினால்,இப்பொழுது- இந்த பூமியிலே பரலோகக் கொள்கைகளால் நாம் ஆளப்பட வேண்டும்.Mar 202.1

    கிறிஸ்துவின் குணத்தையுடையோராக இவ்வுலகில் வாழ்ந்து, தேவனை மகிமைப்படுத்துவதே, நாம் நமது உலகத்தில் செய்ய வேண்டிய மாபெரும் ஊழியம் ஆகும்.⋆Mar 202.2

    வாக்குத்தத்த வசனம்: Mar 202.3

    ’அவன் என்னிடத்தில் வாஞ்சையாயிருக்கிறபடியால், அவனை விடுவிப்பேன்; என் நாமத்தை அவன் அறிந்திருக்கிறபடியால் அவனை உயர்ந்த அடைக்கலத்திலே வைப்பேன்.” - சங்கீதம் 91:14.Mar 202.4