Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

மாரநாதா! (இயேசு வருகிறார்!)

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    உலகத்தால் அங்கீகரிக்கப்படப்போகின்ற நற்குணம்! , ஏப்ரல் 15

    “கோணலும் மாறுபாடுமான சந்ததியின் நடுவிலே குற்றமற்றவர்களும் கபடற்றவர்களும், தேவனுடைய மாசற்ற பிள்ளைகளுமாயிருக்கும்படிக்கு..” - பிலிப்பியர் 2:15.Mar 209.1

    அவரது மக்கள்மூலமாக அவரது இராஜ்யத்தின் கொள்கைகளை வெளிப்படச்செய்வதே தேவனுடைய நோக்கமாகும். அவர்களது வாழ்க்கையிலும் குணத்திலும் இந்தக் கொள்கைகளை வெளிப்படுத்தத்தக்கதாக, இந்த உலகத்தின் பழக்கங்கள், வழக்கங்கள், நடைமுறைகள் ஆகியவற்றினின்று அவர்க்ளைப் பிரித்துவைக்கவேண்டுமென்று அவர் விரும்புகிறார். … அவரது சபையிலே நன்மையும் இரக்கமும் நீதியும் தேவனுடைய அன்பும் வெளிப்படுவதை நோக்கிப்பார்த்து, இந்த உலகமானது அவரது குணத்தின் ஒரு பிரதிபலிப்பைப் பெற்றுக்கொள்ள வேண்டும். வாழ்க்கையிலே தேவனுடைய பிரமாணமானது, இத்தகையவிதத்தில் ஒரு முன்மாதிரியாகக் காட்டப்படும்பொழுது, உலகத்தின் மற்ற எல்லா மக்களையும்விட, தேவனை நேசித்து அவரைச் சேவிக்கின்ற மக்களுடைய மேன்மையான நிலையை இந்த உலகங்கூட அங்கீகரிக்கும்.Mar 209.2

    மற்ற எல்லா மக்களையும்விட ஏழாம் நாள் வருகையினர் சபையின் அங்கத்தினர்களின் கடவுட்பற்று இதயத்திலும் உரையாடலிலும் பரிசுத்தம் என்பதின் மாதிரிப் படிவங்களாயிருக்கவேண்டும். சாவிற்கு மானிடராகிய இவர்களிடத்தில்தான் மிக பக்திவிநயமான சத்தியங்களைக் காக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருக்கின்றது. கிருபைக்கு வல்லமையின் — திறமையின் ஒவ்வொரு நன்கொடையும் தாராளமாக வழங்கப்பட்டிருக்கிறது. வானத்தின் மேகங்கள்மீது அதிசீக்கிரம் வரப்போகின்ற, கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்காக அவர்கள் நோக்கிப்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களது விசுவாசமானது, அவர்களது வாழ்க்கையிலே ஆதிக்கஞ்செலுத்தும் ஒரு வல்லமையாக இல்லையென்ற எண்ணத்தை இவ்வுலகத்திற்கு அவர்கள் கொடுப்பார்களானால், அது மாபெரும் அளவில் தேவனை அவமதிக்கும் ஒரு செயலாயிருக்கும்.Mar 209.3

    சாத்தானின் சோதனைகளின் அதிகரிக்கும் வல்லமையால், தேவனுடைய மக்களுக்கு நாம் வாழ்கின்ற காலங்களானது முழுவது, ஆபத்து நிறைந்ததாயிருக்கிறது; எனவே, ஒவ்வொரு காலடியையும் நாம் நிச்சயத்தோடும் நீதியோடும் எடுத்துவைக்கத்தக்கதாக, அந்த மாபெரும் போதகரிடம் நாம் கற்றுக்கொள்ளவேண்டியது அவசியமாகும். அற்புதமான காட்சிகள் நமக்கு முன்பாக விரித்துக் காட்டப்படுகின்றன். இச்சமயத்தில், தேவனுடைய மக்கள் என்று கூறிக்கொள்பவர்களது ஜீவியங்களிலே, ஒரு உயிருள்ள சாட்டி பகரப்படவேண்டும்; இவ்வாறாக, இந்தக் காலத்தில் தீமையானது எப்பக்கத்திலும் கோலோச்சிக்கொண்டிருக்கும்பொழுது, இன்னும் ஒரு மக்கள் கூட்டம் தேவனுடைய சித்தத்தைச் செய்வதற்காக, தங்களுடைய சித்தத்தைப் புறம்பே தள்ளிவிட்டவர்களாக, தங்களது இதயங்களிலும் ஜீவியங்களிலும் தேவனுடைய பிரமாணம் எழுதப்பட்ட ஒரு மக்கள் கூட்டமாக இருப்பதை, இந்த உலகம் காணவேண்டும்.Mar 210.1

    அவர்களது நினைவுகள் தூய்மையாகவும், அவர்களது வார்த்தைகள் மேன்மையாகவும், மேம்படுத்தக்கூடியதாகவும் இருக்க வேண்டும். அவர்கள் செய்வது, சொல்வது அனைத்திலும் கிறிஸ்துவின் மார்க்கமானது பின்னிப் பிணைந்திருக்க வேண்டும். அவர்கள் பரிசுத்தமாககப்பட்ட- தூய்மையாக்கப்பட்ட புனிதமான மக்களாக, தங்கள் தொடர்புகொள்கிற அனைவரிடத்திலும் வெளிச்சத்தைக் கொடுப்பவர்களாக இருக்க வேண்டும். அவர்களது ஜீவியங்களிலே சத்தியத்திற்கு முன்மாதிரிகளாக வாழ்ந்து, அவர்கள் பூமியிலே ஒரு துதியாக இருக்க வேண்டும் என்பதே அவரது நோக்கமாகும். அதைச் செய்துமுடிப்பதற்கு கிறிஸ்துவின் கிருபை போதுமானாதாகும்.Mar 210.2

    வாக்குத்தத்த வசனம்: Mar 210.3

    “நல்ல மனுஷனுடைய நடைகள் கர்த்தரால் உறுதிப்படும், அவனுடைய வழியின்மேல் அவர் பிரியமயிருக்கிறார்.” - சங்கீதம் 37:23.Mar 210.4