Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

மாரநாதா! (இயேசு வருகிறார்!)

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    நமது குறைபாடுகளை தேவன் சரிப்படுத்துகிறபொழுது….! , ஏப்ரல் 17

    “தேவனுடைய கிருபையை நீங்கள் விருதாவாய்ப் பெறாதபடிக்கு, உடன்வேலையாட்களாகிய நாங்கள் உங்களுக்குப் புத்திசொல்லுகிறோம்.” - 2 கொரிந்தியர் 6:1.Mar 213.1

    உலகம் முழுவதும் நடைபெறும் தேவனுடைய ஊழியத்திலே நாம் பங்காளிகளாக இருக்கவேண்டும். எங்கெல்லாம் ஆத்துமாக்கள் ஆதாயம்பண்னப்படவேண்டுமோ அங்கிருந்து அநேக குமாரர்களும், குமாரத்திகளும் கொண்டுவரப்பட்டத்தக்கதாக, நாம் நமது உதவிக்கரங்களை நீட்டவேண்டும். முடிவு சமீபம்; இந்தக் காரனத்திற்காக, ஊழியத்திற்கு உதவியை வழங்கக்கூடிய ஒப்படைக்கப்பட்ட அனைத்து திறமைகளையும் அனைத்து செயல்துணைகளையும் மிகவும் அதிகமாகப் பயன்படுத்த வேண்டும்….Mar 213.2

    இரக்கத்தின் கடைசி தூதானது யாரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறதோ, அவர்களில் அநேகர் பரபரப்புடன் ஒன்றாகக்கூடி, தங்களது சொந்த ஆத்துமாக்களின் நன்மைக்காக மாத்திரம் பிரசங்கக்கூட்டங்களுக்கு வருகிறார்கள். அங்கு பிரசங்கங்கள் அதிகமாக இல்லாவிட்டால் அதிருப்தியடைகிறார்கள். மற்றவர்களின் இரட்சிப்பிற்காக அவர்கள் எதையும் செய்வதில்லை. அவர்களுக்கு எந்தப் பாரமும் கிடையாது. முடிவு சமீபமாக நெருங்கிக்கொண்டிருக்கும் நேரத்தில், இத்தகைய நிலையில், இந்த மக்களைக் காணும்பொழுது, தூதர்கள் எவ்வளவு வேதனை அடைகிறார்கள். உயிரோட்டமுள்ள விசுவாசத்தினால், கிறிஸ்துவோடு இணைக்கப்பட்டிருக்கும் அனைவரும் அவருடைய தெய்வீக தன்மைக்கு பங்காளிகளாக இருப்பார்கள்; தொடர்ந்து அவரிடமிருந்து ஆவிக்குரிய ஜீவனைப் பெற்றுக்கொண்டிருப்பார்கள். அவர்கள் அமைதியாக இருக்க முடியாது.Mar 213.3

    உயிரானது நிலைபெற்றிருக்கும்போது, தன்னை எப்பொழுதும் செயலிலே காட்டுகிறது. இதயம் உயிரோடு இருக்குமானால் உடலின் ஒவ்வொரு பகுதிக்கும் ஜீவனைக் கொடுக்கும் இரத்தத்தை அனுப்பிக்கொண்டிருக்கும். யாருடையுஅ இதயங்களெல்லாம் ஆவிக்குரிய உயிரோட்டத்தால் நிறைந்திருக்கிறதோ, அவர்கள் அதை வெளிப்படுத்தத்தக்கதாக எவரும் அவர்களை வற்புறுத்த அவசியமில்லை. அவர்களிடமிருந்து தெய்வீக ஜீவனானது கிருபையின் வளப்பமிக்க வேகத்தில் பாய்ந்தோடும். அவர்கள் ஜெபிக்கும்பொழுதும், அவர்கள் பேசும்பொழுதும், அவர்கள் ஊழியஞ்செய்யும்பொழுதும் தேவன் மகிமைப்படுகிறார்.Mar 213.4

    மிகவும் கூர்மதி படைத்த அல்லது மிகவும் தாலந்துகள் நிறைந்தவர்களது ஊழியந்தான் மிகவும் மேம்பட்ட, நீடித்து நிற்கின்ற பலன்களைக் கொடுக்கும் என்பதில்லை. மிகவும் திறமை வாய்ந்த ஊழியர்கள் யார்? ” நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்: என்று இயேசு கொடுக்கும் இந்த அழைப்பிற்கு யார் ஆதரவாகப் பதில் தருகிறார்களோ, அவர்களே மிகத் திறமையான ஊழியர்கள் ஆவர்.Mar 214.1

    தேவனால் அறிவாற்றலின் தாலந்துகளை அடையப்பெற்றவர்கள், அவ்ருடைய மகிமைக்காக அந்தத் தாலந்துகளை பயன்படுத்த மறுப்பார்களானால், அவர்களைப் பரீட்சித்துப்பார்த்து, புடமிட்டு, பின்னர் அவர்களது சொந்தக் கற்பனை வளத்திற்கே விட்டுவிடுவார்; பின்னர், இத்தகைய அளவிற்கு வளமான வாய்ப்பு நலன்களைப் பெறாதவர்களாகக் காணப்படுகின்றவர்கள் மற்றும் அதிக அளவில் தங்கள்மீது நம்பிக்கைவைக்காதவர்கள் ஆகியோரை எடுத்து, பெலவீனமானவர்களை செயல்திறமுடையவராக மாற்றுகிறார்; ஏனெனில், அவர்கள் தாங்கள், தங்களால் செய்யக்கூடாத காரியங்களை, தங்களுக்காக தேவன் செய்யவேண்டுமென்று, அவர்மீது முழு நம்பிக்கையையும் வைக்கிறார்கள். முழு மனதோடு செய்யப்படும் இந்த சேவையை தேவன் ஏற்றுக்கொள்வார் அவர்களிடம் காணப்படும் குறைபாடுகளை அவரே சரிப்படுத்திவிடுகிறார். உங்களது பரலோக எஜமானரைப்பற்றி, நீங்கள் எத்தகைய அறிக்கையைக் கொடுத்துக்கொண்டிருக்கிறீர்கள் என்பதைத் தூதர்கள் உன்னிப்பாகக் கவனித்துக் கேட்கின்றனர்.⋆Mar 214.2

    வாக்குத்தத்த வசனம்: Mar 214.3

    ” .. நான் கர்த்தர், எனக்குக் காத்திருக்கிறவர்கள் வெட்கல்படுவதில்லை என்பதை அப்பொழுது அதறிந்துகொள்வாய்” - ஏசாயா 49:23.Mar 214.4