Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

மாரநாதா! (இயேசு வருகிறார்!)

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    தேவ ஆட்டுக்குட்டி! , ஏப்ரல் 19

    “…இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி.” - யோவான் 1:29.Mar 217.1

    மானுடத்திற்கே உரித்தான பொதுவான பெலவீனங்களும் குறைகளும் இயல்பிலேயே யோவான் ஸ்நானகனுக்கு இருந்தது; ஆனால், தெய்வீக அன்பின் தொடுதலானது அவனை முற்றிலுமாக மாற்றிவிட்டது. கிறிஸ்து தமது ஊழியத்தை ஆரம்பித்த பின்னர் யோவானின் சீடர்கள் அவனிடத்தில் வந்து, எல்லா மனிதரும் ஒரு புதிய போதகரை பின்பற்றிச்செல்கிறார்கள் என்று குறைகூறி முறையிட்டார்கள். யோவான் தனக்கும் மேசியாவிற்குமுள்ள தொடர்பை எவ்வளவு தெளிவாகப் புரிந்திருந்தானென்றும், யாருக்காக வழியை அவன் ஆய்த்தம் பண்ணினானோ அந்த ஒருவரை மகிழ்ச்சியோடு அவன் வரவேற்றான் என்பதையும் யோவான தெளிவுபடுத்தினான்.Mar 217.2

    யோவான் பிரதியுத்தரமாக: “பரலோகத்திலிருந்து ஒருவனுக்குக் கொடுக்கப்பட்டாலொழிய, அவன் ஒன்றையும் பெற்றுக்கொள்ளமாட்டான். நான் கிறிஸ்துவல்ல, அவருக்கு முன்னாக அனுப்பப்பட்டவன் என்று நான் சொன்னதற்கு நீங்களே சாட்சிகள்.. இந்தச் சந்தோஷம் இப்பொழுது எனக்குச் சம்பூரணமாயிற்று. அவர் பெருகவும் நான் கிறுகவும் வேண்டும்”. (யோவான் 3:27-30) என்றான்.Mar 217.3

    விசுவாசத்திலே மீட்பரை நோக்கிப்பார்த்தவனாக, யோவான் சுயத்தை விட்டொழித்த அந்த உயர்வான நிலைக்கு எழும்பினான். மனிதரை தன் பக்கமாக கவர்ச்ச்சித்து இழுக்க அவன் முயற்சிக்கவில்லை. ஆனால், அவர்களது நினைவுகளை தேவ ஆட்டுக்குட்டியின்மீது தங்கும் அளவிற்கு உயர்வாக, மேலும் உயர்வாக, அவன் உயர்த்த முனைந்தான், அவன் தானே ஒரு குரலாக வனாந்தரத்தில் கூப்பிடுகிற சத்தமாகவே மாத்திரம் இருந்தான்; இப்பொழுது, மகிழ்ச்சியோடு மெளனத்தையும் மறைவான ஒதுக்கிடத்தையும் ஏற்றுக்கொண்டான். ஜீவனின் ஒளியாகிய அவரிடத்திற்கு அனைவரது கண்களும் திரும்பத்தக்கதாக அவ்வாறு செய்தான்.Mar 217.4

    தேவனுடைய தூதுவர்களாக தங்களது அழைப்பிற்கு உண்மையாக இருப்பவர் தங்களுக்கு நன்மதிப்பைத் தேடமாட்டார்கள். கிறிஸ்துவிற்காக கொண்ட அன்பிலே, சுயத்தின்மீது வைத்திருக்கும் அன்பானது அமிழ்ந்துபோய்விடும். “இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுகுட்டி” (யோவான் 1:29) என்று யோவான் ஸ்நானகன் கூறியறிவித்ததுபோல, தங்களுடைய ஊழியமும் கூறியறிவித்தல்தான் என்பதை நன்றாக விளங்கிக்கொள்வார்கள். அவர்கள் இயேசுவை உயர்த்திக் காட்டுவார்கள். அவரோடு சேர்ந்து மனித இனமும் உயர்த்தப்படும்…Mar 218.1

    சுயத்தை வெளியேதள்ளி, வெறுமையாககப்பட்டிருந்த தீர்க்க தரிசியின் ஆத்துமாவானது, தெய்வீக ஒளியினால் நிறைந்திருந்து … மீட்பரின் மகிமையைக்குறித்து சாட்சிபகர்ந்தது…கிறிஸ்துவானவரின் இந்த மகிமையிலே அவரது பின்னடியார்கள் அனைவரும் பங்கடைவார்கள். சுயத்தை வெளியேற்றி இருதயத்தை வெறுமையாக்க நாம் விருப்பத்தோடு இருந்தால் மாத்திரமே, நாம் பரலோக ஒளியைப் பெற்றுக்கொள்ளமுடியும். நம்முடைய அனைத்து நினைவுகளையும் கிறிஸ்துவிற்கான கீழ்படிதலிற்குச் சிறைப்படுத்திக்கொண்டுவர சம்மதித்தால் மாத்திரமே, தேவனுடைய குணத்தை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ளமுடியும். விசுவாசத்திலே கிறிஸ்துவை ஏற்றுக் கொள்வோம். இதைச்செய்கிற அனைவருக்கும் பரிசுத்த ஆவியானவர் மட்டில்லாத அளவிற்கு கொடுக்கப்படுகிறார். “ஏனென்றால், தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக அவருக்குள் வாசமாயிருக்கிறது. மேலும் சகல துரைத்தனங்களுக்கும் அதிகாரத்துக்கும் தலைவராயிருக்கிற அவருக்குள் நீங்கள் பரிபூரணமுள்ளவர்களாயிருக்கிறீர்கள்” - கொலோசெயர் 2:9,10.⋆Mar 218.2

    வாக்குத்தத்த வசனம்: Mar 218.3

    “கிறிஸ்துவ இயேசுவுக்குள் நம்மைத் தமது நித்திய மகிமைக்கு அழைத்தவராயிருக்கிற சகல கிருபையும் பொருந்திய தேவன் தாமே கொஞ்சக்காலம் பாடநுபவிக்கிற உங்களைச் சீர்ப்படுத்து, ஸ்திரப்படுத்து, பலப்படுத்தி, நிலைநிறுத்துவாராக.”- 1 பேதுரு 5:10.Mar 218.4