Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

மாரநாதா! (இயேசு வருகிறார்!)

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    கர்த்தரின் வருகையைத் துரிதப்படுத்துதல்!, ஜனவரி 11

    “அவர் நீதியோடே சீக்கிரமாய்த் தம்முடைய காரியத்தை நிறைவேற்றுவார்; கர்த்தர் பூமியிலே சீக்கிரமாகவே காரியத்தை நிறைவேற்றி முடிப்பார்... ” - ரோமர் 9:28Mar 21.1

    “அக்கிரமம் மிகுதியாவதினால் அநேகருடைய அன்பு தணிந்துபோம். முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான். இராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும்” (மத்தேயு 24:12-14) என்று எருசலேமைக்குறித்த தீர்க்கதரிசனத்தில் இயேசு கூறினார். இந்தத் தீர்க்கதரிசனம் மீண்டும் நிறைவேறுதலை அடையும். அந்த நாளில் நடைபெற்ற திரளான அக்கிரமங்கள் இந்தத் தலைமுறையிலும் அதன் மறுபடிவத்தை (அதே நிலையை) காண்கிறது. சுவிசேஷம் பிரசங்கிக்கப்படுவது குறித்து முன்னறிவிக்கப்பட்டதும் இதைப் போன்ற நிலையையே உடையதாக இருக்கிறது, எருசலேமின் விலுகைக்குமுன், பரிசுத்த ஆவியின் ஏவுதலினால் பவுலார், “...வானத்தின் கீழிருக்கிற சகல சிருஷ்டிகளும் பிரசங்கிக்கப்பட்டுவருகிறது...” (கொலோசெயற் 1:23) என்று அறிவித்தார். அதேபோன்று, மனுஷகுமாரனின் வருகைக்கு முன்னரும், நித்திய சுவிஷேமானது, “...சகல ஜாதிகளுக்கும், கோத்திரதாருக்கும், பாஷைக்காரருக்கும், ஜனக்கூட்டத்தாருக்கும்...” (வெளிப்படுத்தல் 14:6,14) பிரசங்கிக்கப்பட வேண்டும். தேவன். “மேலும், ஒரு நாளைக் குறித்திருக்கிறார்; அதிலே... பூலோகத்தை நீதியாய் நியாயந்தீர்ப்பார்” -- அப். 17:31. கிறிஸ்து எப்பொழுது அந்த நாள் வந்துசேரும் என்று நமக்குக் கூறுகின்றார். உலகம் முழுவதும் மனந் திரும்புதலை அடையுமென்று இங்கு அவர் கூறுகிறதில்லை; ஆனால். “இராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும்” (மத்தேயு 24:14) என்று கூறுகிறார். உலகத்திற்கு சுவிசேஷத்தைக் கொடுப்பதின்மூலம், ஆண்டவரின் வருகையைத் துரிதப்படுத்துவது, நமது சக்திக்கு உட்பட்டதாயிருக்கிறது. தேவனுடைய நாள் வருவதற்காக எதிர்பார்த்துக்கொண்டு மட்டுமிராமல், அவருடைய வருகையைத் துரிதப்படுத்தவும் வேண்டும் (2 பேதுரு 3:12). ஆண்டவர் வகுத்துக் கொடுத்தபடி, கிறிஸ்துவின் சபையானது அதற்கு நியமிக்கப்பட்ட வேலையைச் செய்துமுடித்திருக்குமானால், இந்த உலகம் முழுவதுமே இந்த நாளுக்கு முன்பாகவே எச்சரிக்கப்பட்டிருந்திருக்கும். ஆண்டவராகிய இயேசுவும் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் இந்தப் பூமிக்கு மீண்டும் வந்திருப்பார்.Mar 21.2

    ஆண்டவரது பிள்ளைகள் என்று சொல்லிக்கொள்பவர்களது மத்தியில் காணப்படுகின்ற அவிசுவாசமும், உலகப்பற்றும், அர்ப்பணிக்காத நிலையும், பூசலுமே இந்தப் பாவமும் துக்கமும் நிறைந்த உலகத்திலே, அநேக ஆண்டுகளுக்கு நம்மை இருக்கும் படியாகச்செய்துவிட்டது...Mar 22.1

    இஸ்ரவேல் புத்திரர் செய்ததைப்போலவே, கீழ்ப்படியாமையினால், இந்த உலகத்திலே அநேக ஆண்டுகள் நாம் தங்கியிருக்க வேண்டியதிருக்கலாம். அவர்கள் தங்களது தவறான போக்கினால், அதின் விளைவை அனுபவித்துக்கொண்டு, அதே சமயத்தில் தேவனை அதினிமித்தம் குற்றஞ் சாடிக் கொண்டுமிருக்கிறார்கள். கிறிஸ்துவிற்காகவாவது, அவரது மக்கள் இத்தகைய குற்றத்தைச்சாட்டி, பாவத்தின்மேல் பாவத்தைக் கூட்டாதபடி இருக்க வேண்டும்.⋆Mar 22.2

    வாக்குத்தத்த வசனம்: Mar 22.3

    “அவன் என்னை நோக்கிக் கூப்பிடுவான், நான் அவனுக்கு மறுஉத்தரவு அருளிச்செய்வேன்; ஆபத்திலே நானே அவனோடிருந்து, அவனைத் தப்புவித்து, அவனைக் கனப்படுத்துவேன்.” - சங்கீதம் 91:15Mar 22.4