Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

மாரநாதா! (இயேசு வருகிறார்!)

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    வாலிபர்கள் தேவனுடைய கருவிகள் ! , ஏப்ரல் 23

    “தன் இளம்பிராயத்தில் நுகத்தைச் சுமக்கிறது மனுஷனுக்கு நல்லது.” - புலம்பல் 3:27.Mar 225.1

    வாலிபர்கள் தங்களது சக்தியோடும், உயிர்துடிப்போடும் சுயமறுப்பிலும், தியாகத்திலும், துனபத்திலும் தம்மோடு பங்கு கொள்ளத்தக்கதாக, தேவன் அவர்களை அழைக்கின்றார். அந்த அழைப்பை ஏற்றுக்கொள்வார்களானால், எந்த ஆத்துமாககளுக்காக அவர் மரித்தாரோ, அந்த ஆத்துமாக்களுக்காக சேவைசெய்கின்ற உபகரணங்களாக அவர்களை மாற்றுவார். சிலுவையில் அடிக்கப் பட்ட அந்த இரட்சகரை சேவிக்கத்தக்கதான நிபந்தனைகளைப் பற்றிய முழு அறிவையும்பெற்று, அதற்காக தாங்கள் கொடுக்க வேண்டிய விலையை உணர்ந்தவர்களாக (பாடு அனுபவிக்க வேண்டும் என்பதை) அந்த ஊழியத்திற்குள் பிரவேசிப்பார்களானால், அவர் அவர்களை ஏற்றுக்கொள்வார்…Mar 225.2

    நமது சொந்த இருதயங்களை தேவனுக்கு இசைவாகக் கொண்டுவருவதே நமது முதல் வேலையாகும்; அப்பொழுது தான் மற்றவர்களுக்காக ஊழியஞ்செய்ய நாம் ஆயத்தமாகிறோம். முந்தைய நாட்களிலே, நமது உற்சாகமும் , ஊக்கமுமுள்ள ஊழியர்களின் மத்தியிலே தங்களது இதயங்களை உய்த்தாராய்ந்து சோதிக்கும் தன்மை மிகவும் அதிகமாகக் காணப்பட்டது. அவர்கள் ஒருங்கிணைந்து ஒருவருக்கொருவர் ஆலோசனைகொடுத்து, தெய்வீக வழிகாட்டுதலை அறியத்தக்கதாக, தாழ்மையாக ஜெப ஐக்கியத்தில் ஊக்கமாக ஈடுபட்டார்கள்… நமது விசுவாசத்தின் ஆரம்ப நாட்களைவிட, கிறிஸ்துவின் வருகை மிகவும் சமீபாயிருக்கிறது. ஒவ்வொரு நாள் கடந்துசெல்லும்பொழுதும் எச்சரிப்பின் செய்தியை உலகத்திற்குக் கொடுக்கும் நாட்களிலே ஒருநாள் குறைந்து விடுகிறது. இன்றைய நாட்களில் தேவனோடு மன்றாடி பரிந்துபேசி ஜெபித்தலும், அதிகமான தாழ்மையும் அதிகமான தூய்மையும் அதிகமான விசுவாசமும் காணப்படுமானால், எவ்வளவு நன்றாக இருக்கும்!Mar 225.3

    தவறான கருத்துக்கள் எனப்படும் இருளிலே இருப்பவர்களுக்கு தேவனுடைய வசனத்தை எடுத்து விளக்கிக்காட்ட வேண்டிய அந்த மாபெரும் உயரிய பணியை,நமது எஜமானருக்காக நாம் செய்யவேண்டியதிருக்கிறது. வாலிப நண்பர்களே, உங்களிடம் ஒரு பரிசுத்த பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருந்தால், எப்படி நடந்துகொள்வீர்களோ அப்படி நடந்துகொள்ளுங்கள். உங்களில் நிலைத்திருக்கும் நம்பிக்கைக்கான ஒரு காரணத்தைக் கேட்கின்ற ஒவ்வொருவருக்கும் உடனே பதில்கொடுக்கிற அளவிற்கு, வேதத்தைக் கற்றுத்தெளிந்த மாணவர்களாக நீங்கள் இருக்க வேண்டும். உங்களது மெய்யான கிறிஸ்தவ மேன்மைக்கு ஏற்றபடி உங்களிடத்தில் மக்களின் நன்மைக்கு சாதகமான ஒரு சத்தியம் இருக்கிறது என்பதற்கான ஆதாரத்தைக் காட்டுங்கள். இந்தச் சத்தியானது உள்ளான ஆத்துமாவிலே கிரியைசெய்திருக்கும் என்றால், ஒரு கிறிஸ்தவன்மாத்திரமே உடைமையாகப் பெற்றிருக்கக் கூடிய அத்தகைய முகபாவத்திலும், நடந்துகொள்ளும் முறையிலும் அமைதியான-மேன்மையான-தன்னடக்கமான நிலையிலும் சமாதானத்திலும், அது தன்னை வெளிப்படுத்திக்காட்டும். மெய்யான தாழ்மையுள்ளவர்களிடத்திலும், சுவிசேஷத்திலே வெளிப்படுகின்ற சத்தியங்களால் மனங்கள் விரிவடைந்திருப்பவர்களிடத்திலும், மற்றவர்களால் தெளிவாக உணரப்படுகின்ற அளவிற்கு ஒரு செல்வாக்கு உணரப்படும். உள்ளங்களிலும், இதயங்களிலும் அவர்கள் ஒரு எண்ணப்பதிவை ஏற்படுத்துவார்கள். நமது வாலிபர்கள் சிலுவையை எடுத்துக்கொண்டு, இயேசுவைப் பின்பற்றுவதற்கு வழிநடத்தக் கூடிய சுத்தமான மார்க்கத்தின் ஆவியினால் நிறையப்பெற்றிருப்பதைவிட, வேறு எந்தவிதமான உயரிய விருப்பமும் எனக்குக் கிடையாது. கிறிஸ்துவின் வாலிப சீடர்களே, கொள்கையினால் அடக்கியாளப்பட்டவர்களாக — பரிசுத்தம் என்னும் உடைமைகளை அணிந்தவர்களாக — புறப்பட்டுச்செல்லுங்கள். எந்த இடத்தில் அதிக அளவில் பயனுள்ளவர்களாக இருப்பீர்களோ அந்த இடத்தில், உங்களது தாலந்திற்குத் தகுந்தவிதத்தில், பொருத்தமான ஒரு பதவியை பெற்றுக்கொள்ள உங்களது மீட்பர் உங்களை நடத்துவார். கடமையின் பாதையிலே, அன்றாட நாட்களிற்குப் போதுமான கிருபையை நீங்கள் நிச்சயமாகப் பெற்றுக் கொள்ளலாம்.⋆Mar 225.4

    வாக்குத்தத்த வசனம்: Mar 226.1

    “அவர் தமக்குப் பயந்தவர்களுடைய விருப்பத்தின்படி செய்து , அவர்கள கூப்பிடுதலைக்கேட்டு, அவர்களை இரட்சிக்கிறார்.” - சங்கீதம் 145:19.Mar 226.2