Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

மாரநாதா! (இயேசு வருகிறார்!)

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    நமது சொத்துக்கள் அனைத்தும் தேவனுக்கே! , ஏப்ரல் 26

    “இலவசமாய்ப் பெற்றீர்கள், இலவசமாய்க் கொடுங்கள்.” - மத்தேயு 10:8.Mar 231.1

    மனிதர் தேவனிடமிருந்து பெறுகின்ற அனைத்து வளமான நன்கொடைகளும் தொடர்ந்து அவருக்கே சொந்தமானவைகளாக இருக்கின்றன. இந்த பூமியில் நமது கரங்களில் அவர் கொடுத்திருக்கின்ற மதிப்புவாய்ந்த, மற்றும் அழகான பொருட்கள் எதுவாயினும் நம்மைச் சோதிப்பதற்காக கொடுக்கப்பட்டிருக்கின்றன; மேலும், அவருக்காக நாம் கொண்டுள்ள அன்பின் ஆழத்தைத் தெரிவிப்பதற்காகவும், அவர் நமக்கு வழங்கியிருக்கும் சலுகைகளுக்காக அவரைப் பாராட்டுவதற்காகவும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. செல்வவளம் நிறைந்த பொக்கிஷங்களானாலும், அறிவாற்றலானாலும், அவர்களை மனப்பூர்வமான காணிக்கையாக இயேசுவின் பாதங்களில் வைக்கப்பட வேண்டும்.Mar 231.2

    “நீங்கள் உலகமெங்கும் போய், சர்வசிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்” ( மாற்கு 16:15) என்று இயேசு தமது சீடர்களுக்குக் கட்டளை கொடுக்கும்போது, அவரது கிருபையின் அறிவைப் பரப்புகின்ற ஊழியத்தை கிறிஸ்து மனிதருக்கு திட்டமிட்டு குறித்துக்கொடுத்தார். சிலர் பிரசங்கஞ் செய்வதற்காக செல்லும்போது மற்றுமுள்ளோரிடம் இந்த உலகில் அவரது ஊழியத்தை ஆதரிப்பதற்காக, காணிக்கைகளைக் கொடுக்கும்படி அழைக்கிறார். எல்லாரும் ஏராளமான காணிக்கைகளைக் கொடுத்துவிட முடியாது; எல்லாரும் மாபெரும் காரியங்களையும் சிறப்புவாய்ந்த — நேர்த்தியான — செயல்களையும் செய்துவிட முடியாது; ஆனால், அனைவரும் சுயத்தை மறுக்கின்ற காரியத்தைச் செயல்படுத்தலாம். சிலர் ஆண்டவருடைய பண்டக சாலைக்கு ஏராளமான நன்கொடைகளைக் கொண்டுவரமுடியும்; ஆனால், மற்றும் சிலரோ சில சிறு காசுகளை மாத்திரமே கொண்டு வரமுடியும்; ஆனால், நேர்மையான முறையில் கொண்டுவரப்படும் ஒவ்வொரு காணிக்கையும் ஆண்டவரால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.Mar 231.3

    தன்னலத்தை மறுக்கும் செயல்களால் தேவனுடைய ஊழியத்திற்காக, எவ்வளவு அதிகமாக சேமித்துவைக்க முடியும் என்பதைக் காணும்போது, அநேகர் ஆச்சரியமடைவார்கள், சுயமறுப்பின்றி கொடுக்கப்படுகின்ற ஏராளமான நன்கொடைகளால் தேவனுடைய ஊழியம் வளர்ந்து உருவாக்கப்டுவதைவிட, தியாகச்செயல்களின் மூலமாகக் கொடுக்கப்படும் சின்னஞ்சிறு காணிக்கைகள் தேவனுடைய வேலையை பலப்படுத்துவதறகு, அதிக நன்மை கொடுக்கக்கூடியதாக இருக்கும்.Mar 232.1

    தாராளமாகக் கொடுக்கின்ற ஆவியானது பரலோகத்தின் ஆவியாகும். சுயத்தைத் தியாகஞ்செய்த கிறிஸ்துவின் அன்பானது சிலுவையின்மீது வெளிப்படுத்தப்பட்டது. மனிதனின் இரட்சிப்பிற்காக அவர் தம்மிடமிருந்த அனைத்தையும் கொடுத்தார்; பின்னர், தம்மைத்தாமே தத்தஞ்செய்தார். ஆசிர்வதிக்கப்பட்ட மீட்பருடைய ஒவ்வொரு பின்னடியாரையும் இரக்க மனப்பான்மையோடிருங்கள் என்று கிறிஸ்துவின் சிலுவையானது வேண்டுகோள் விடுக்கின்றது. “கொடுங்கள், கொடுங்கள்” என்ற கொள்கையே சிலுவையின் மீது விளக்கிக் காட்டப்பட்டது உலகியல் சார்ந்த மக்களுடைய கொள்கை, “பெற்றுக்கொள், பெற்றுக்கொள்” என்பதே.Mar 232.2

    கிறிஸ்துவின் சிலுவையினின்று பிரகாசிக்கும் சுவிசேஷ ஒளியானது தன்னலத்தைக் கடிந்துரைக்கிறது…உலகைப் பற்று, பேராசை என்னும் கண்ணிகளில் அகப்படுகின்ற அபாயத்தில் தேவனுடைய மக்களில் அநேகர் இருக்கின்றனர். அவர்களது வருவாய்க்கான-தேவைகளை அவரது இரக்கமே பன்மடங்கு பெருகச்செய்கிறது என்பதை, அவர்கள் பிரிந்துகொள்ளவேண்டும்…இந்த உலகத்திலே அவரது ஆசிர்வாதங்களைப் பகிர்ந்துகொடுப்பதற்கான ஒரு ஊடகமாக மனிதனை வைத்திருக்கிறார், மனிதன் தன்னைப் படைத்தவரைப் போல, குணத்திலே தன்னலமற்றவனாக, கொடுக்கும் திறமை உடையவனாகி, இறுதியில் அந்த நித்திய மகிமையான வெகுமதியை, கிறிஸ்துவோடு ஒரு பங்காளியாக இருந்து பெற்றுக்கொள்ளத்தக்கதாக, தேவன் அறச்செயல்களின் அமைப்பு முறையை திட்டமிட்டு வைத்திருக்கிறார்.⋆Mar 232.3

    வாக்குத்தத்த வசனம்: Mar 232.4

    “நீ வருகையிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்; நீ போகையிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்.” - உபாகமம் 28:6.Mar 232.5