Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

மாரநாதா! (இயேசு வருகிறார்!)

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    தவறான விருப்பதுடனுள்ள ஆர்வம்! , ஏப்ரல் 28

    “தேவனைப்பற்றி வைராக்கியமுண்டென்று அவர்களைக்குறித்துச் சாட்சிசொல்லுகிறேன்; அதுவும் அது அறிவுக்கேற்ற வைராக்கியம் அல்ல.” - ரோமர் 10:2.Mar 235.1

    குறிக்கோள் அல்லது நோக்கமின்றி இறைச்சலோடு கூடிய பற்றார்வம் காணப்படுகின்றது. அது அறிவுக்கேற்றபடி அமையவில்லை; மேலும், இக்காரியமனது அதன் இயங்குமுறையிலே குருட்டுத்தனமகவும் அதனால் விளைகின்ற பயன்களிலே அழிவைக் கொடுக்கிறதாகவுமிருக்கிறது. இது ஒரு கிறிஸ்தவனின் ஆர்வமல்ல. கிறிஸ்தவனின் பற்றார்வமானது கொள்கையினால் கட்டுப்படுத்தப்படுகிறது. திடீர் திடீரென்று வருவதல்ல. கிறிஸ்தவப் பற்றார்வமானது, உற்சாகமும் ஊக்கமும் நிறைந்தது; ஆழமானது; உறுதியானது. முழு ஆத்மாவையும் ஈடுபடுத்தி, ஒழுக்க உணர்வுகளைச் செயல்படுத்தத்தக்கதாக எழுப்பிவிடுகிறது.Mar 235.2

    ஆத்துமாக்களின் மீட்பும், தேவனுடைய இராஜ்யத்தைக்குறித்த அக்கறையூட்டும் காரியங்களும், அதிகம் முக்கியதுவம் வாய்ந்த செய்திகளாகும். ஆத்தும ஆதாயமும், தேவனுடைய மகிமை ஆகியவைகளைத் தவிர வேறு எந்த இலக்குகள் மாபெரும் உள்ளார்வத்தைக்காட்ட நம்மை அழைக்கிறது? ஆராய்ந்து பார்க்கக் கூடிய காரியங்கள் இங்கு இருக்கின்றன. அவைகளை இலேசாக எண்ணி மதிப்பீடு செய்துவிடமுடியது. நித்தியத்தைப் போன்று அவைகள் மேன்மையான முக்கியத்துவம் வாய்ந்தவை. நித்தியத்திற்கு அடுத்த விளக்க முடிவுகள் வெற்றிபெறுமா, அல்லது தோல்வியடையுமா என்ற உறுதியற்ற நிலை இருக்கிறது. வளமான வாழ்வு அல்லது கடுந்துயரம் ஆகிய ஏதாவதொன்றிற்காக ஆண்களும், பெண்களும் தீர்மானம் செய்துகொண்டிருக்கிறார்கள். கிறிஸ்தவ பற்றார்வமானது, அதைக்குறித்துப் பேசப்படும்போழுது, ஆர்வத்தை அது இழந்துவிடக்கூடாது. ஆற்றலோடும், திறனோடும் உணர்ந்து செயல்படும்; எனினும், கிறிஸ்தவ பற்றார்வமானது மற்றவர்களால் காணப்படவேண்டும் என்பதற்காக மட்டும் செயல்புரியாது. ஒவ்வொரு முயற்சியிலும், ஒவ்வொரு ஊழியத்திலும் தாழ்மையும் தனிச்சிறப்பும் வாய்ந்த பண்பாகக் காணப்படும். கிறிஸ்தவ பற்றார்வமானது, ஊக்கமுள்ள ஜெபத்திற்கும், தாழ்மையான ஒப்புக்கொடுத்தலிற்கும் குடும்பத்தின் கடமைகளில் உத்தமமாக இருத்தலுக்கும் வழிநடத்துகிறது. குடும்ப வளையத்திற்குள் மென்மை, அன்பு, இரக்கம், பரிவு ஆகிய குணநலன்கள் காணப்படும். இவைகளே எப்பொழுதும் கிறிஸ்தவ பற்றார்வத்தினால் பெறப்படும் கனிகளாகும்...Mar 235.3

    ஆ! ஆத்துமாக்களின் மதிப்பை ஒரு சிலரே எண்ணிப்பார்க்கிறார்கள். வெகு சிலரே கிறிஸ்துவைப்பற்றிய, அறிவை அறிகிறதற்கு ஆத்துமாக்களைக் கொண்டுவர விருப்பத்தோடிருக்கிறார்கள். அழிந்துக்கொண்டிருக்கும் ஆத்துமாக்கள் விஷயத்தில் அதிகமாகப் பேசப்படுகிறது, அவர்கள்மீது அன்புகாட்டுவதாகக் கூறப்படுகிறது; ஆனால், இந்தப் பேச்சு கீழ்த்தரமான ஒரு சரக்கு. மனமார்ந்த கிறிஸ்தவப் பற்றார்வமே தேவைப்படுகிறது; அதாவது, ஏதாவதொன்றைச் செய்வதின் மூலமாகவே வெளிப்படுகின்ற ஒரு பற்றார்வம்; இப்பொழுது, அனைவரும் தங்களுக்காக ஊழியஞ் செய்ய வேண்டும். அவர்களது இதயத்திலே இயேசு இருப்பார் என்றால், மற்றவர்களிடம் அவரைப்பற்றி அறிக்கைசெய்வார்கள். நயாகராவின் தண்ணீர்கள் எப்படி அருவியாக விழுவதினின்று நிறுத்தப்பட முடியாதோ, அதைப்போல கிறிஸ்துவை உள்ளத்தில் கொண்டிருக்கின்ற ஆத்துமா, அவரை அறிக்கைசெய்வதை ஒரு போதும் தடைசெய்யமுடியாது.Mar 236.1

    ஒவ்வொரு கிறிஸ்தவனுடைய ஆழ்ந்த பற்றார்வமானது நித்திய வாழ்வைப்பற்றிய காரியத்தில் ஈடுபட்டிருக்கவேண்டும். மாபெரும் மீட்பின் திட்டத்தில் கிறிஸ்துவோடும், பரலோகத்தின் தூதர்களோடும் உடன் ஊழியராக இருக்க வேண்டும்! எந்த ஊழியத்தை இதற்கு ஈடாக ஒப்பிட்டுக் கூறமுடியும்! இரட்சிக்க ஒரு உபகரணமாக இருந்தவர்மீதும் பிரதிபலிக்கிறது.⋆Mar 236.2

    வாக்குத்தத்த வசனம்: Mar 236.3

    “முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக்கொடுக்கப்படும். ” - மத்தேயு 6:33.Mar 236.4