Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

மாரநாதா! (இயேசு வருகிறார்!)

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    தேவவாக்கியங்களின் பொருளை திரிபுபடுத்திக் கூறுதல்!, மே 4

    “...கல்லாதவர்களும் உறுதியில்லாதவர்களும் மற்ற வேத வாக்கியங்களைப் புரட்டுகிறதுபோலத் தங்களுக்குக் கேடுவரத்தக்கதாக இவைகளையும் புரட்டுகிறார்கள்.” - 2 பேதுரு 3:16.Mar 247.1

    இந்த நிலையினால், என்ன முக்கிய விளைவுகள் ஏற்பட்டு விடப்போகிறதென மனிதர் எண்ணும்போது, அதுவே சாத்தானின் மாபெரும் வெற்றியுள்ள வஞ்சகங்களில் ஒன்றாகக் காணப்படுகிறது. சாத்தியமானது அதை நேசிப்பதினால் ஏற்றுக்கொள்ளப்படுமானால், அதைப் பெற்றுக்கொள்பவரது ஆத்துமாவை பரிசுத்தப்படுத்துகிறது என்பது அவனுக்கு கட்டுக்கதைகளையும் வேறொரு சுவிசேஷத்தையும் அதற்குப்பதிலாக வைப்பதற்காகத் தொடர்ந்து முயற்சிசெய்துகொண்டிருக்கிறான்.. Mar 247.2

    கிறிஸ்தவ உலகில் காணப்படுகின்ற தேவ வாக்கியங்கள் பற்றிய தெளிவற்ற - போலியாகப் புனையப்பட்ட கருத்து விளக்கங்கள், மார்க்கசம்பந்தமான விசுவாசத்தைக்குறித்த முரண்பாடான கோட்பாடுகள் அனைத்தும், நமது மாபெரும் எதிராளியின் கைவண்ணமேயாகும். மக்கள் சத்தியத்தைத் தெளிவாக விளங்கிக்கொள்ளாதபடி, குழப்பமடையத்தக்கதாக இவ்வாறு செய்கிறான்.கிறிஸ்தவ உலகிலே சபைகளுக்கு மத்தியில் முரண்பாடுகளும், பிரிவினைகளும் ஆதரிப்பதற்காக, வேதவாக்கியங்களை பொருள் மாற்றித் திரித்துக்கூறுகின்றவாறு, நிலைத்திருகின்ற ஒரு பழக்கமே பெருமளவில் இதற்கான காரணமெனத் தெரிகிறது. அவருடைய சித்தத்தைப்பற்றி அறிவைப் பெற்றுக்கொள்ளத்தக்கதாக, தாழ்மையான இதயத்தோடு தேவனுடைய வார்த்தையை கவனமாகப் படிப்பதற்குப் பதிலாக, விசித்திரமான - தனிப்புதுமையான - சிலவற்றைக் கண்டுபிடிக்கவேண்டுமென்று அநேகர்தேடி அலைகிறார்கள். Mar 247.3

    தவறான கோட்பாடுகளையும் அல்லது கிறிஸ்தவப் பண்பிற்கு ஒத்துவராத பழக்கவழக்கங்களையும் ஆதாரங்கொடுத்துத் தாங்கு வதற்காக, வேதவாக்கியங்களின் பகுதுகளைத் துணிந்து எடுத்து, அந்த வசனம் கூறப்பட்ட சந்தர்ப்பத்திநின்று அதைப் பிரித்தெடுத்து, அவர்களது கருத்தை நிரூபிப்பதற்காக, ஒரு தனி வசனத்தின் பாதியை, மேற்கோளாக எடுத்துக்கூறுவார்கள்; ஆனால், அந்த வசனத்தில் மீந்திருக்கும் பகுதியோவெனில், அவர்கள் நிரூபித்த கருத்திற்கு எதிர்மறையாக இருக்கும். சர்ப்பத்தின் தந்திரத்தோடு, தங்களது மாம்ச இச்சைகளுக்கு இசைந்துபோகத்தக்கதாக, தொடர்பற்ற கூற்றுகளில் சொற்களை இணைத்து, அதற்குப் பொருள்கொடுத்து, அதற்குப் பின்னல் தங்களை வலுவாக வித்துக் கொள்கிறார்கள்; இவ்வாறு, அநேகர் வேண்டுமென்றே தேவனுடைய வார்த்தையைத் தவறாகப் பயன்படுத்துகிறார்கள். மற்றும் சிலர் தங்களது சுறுசுறுப்பான கற்பனைத்திறனோடு, பரிசுத்த வேத எழுத்துக்களிலுள்ள உருவகங்களுக்கும் அடையாளங்களுக்கும் தங்களது விருப்பத்திற்கிசைவாக பொருள் விளக்கம் கொடுக்கிறார்கள். வேதவாக்கியங்கள், அவைகளுக்கு அவைகளே, பொருள் விளக்கங்கொடுக்கக்கூடியவை, என்ற சாட்சியை, ஒரு சிறிதும் அவர்கள் மதிக்கிறதில்லை; மேலும், தங்களால் கூறப்படுகின்ற பொருந்தாத கருத்துக்களை, வேதாகமத்தின் போதனைகளென்று முன்னிலைப்படுத்துகிறார்கள்.Mar 247.4

    எப்பொழுதெல்லாம் வேதவாக்கியங்களைப் படிக்கும் ஒரு காரியமானது ஜெபசிந்தனையோடும், தாழ்மையோடும் போதனையை ஏற்றுக்கொள்ளும் குணத்தோடும், செய்யப்படவில்லையோ, அப்பொழுதெல்லாம் தெளிவாக விளங்கக்கூடிய சுலபமான பகுதிகள் மற்றும் மிகக்கடினமான பகுதிகளுங்க்கூட அதின் உண்மையான பொருளினின்று திரித்துக்கூறப்பட்டுவிடும்...ஒரு ஜெபசிந்தையோடுகூடிய இதயத்தோடு படிக்கும்பொழுது, அனைவருக்கும் தேவனுடைய வார்த்தையானது, மிகவும் தெளிவாக இருக்கும். உண்மையிலேயே நேர்மையான ஒவ்வொரு ஆத்துமாவும், சத்தியத்தின் வெளிச்சத்தினிடத்திற்கு வந்துசேர்வார்கள். “நீதிமானுக்காக வெளிச்சமும், செம்மையான இருதயத்தாருக்காக மகிழ்ச்சியும் விதிக்கப்பட்டிருக்கிறது” - சங்கீதம் 97:11. எந்த சபை அங்கத்தினராயினும், மறைந்திருக்கும் புதையலைத் தேடுவதுபோன்று, சத்தியத்தை ஊக்கத்தோடு தேடாவிட்டால், பரிசுத்தத்தில் முன்னேறிச்செல்ல முடியாது.⋆Mar 248.1

    வாக்குத்தத்த வசனம்: Mar 248.2

    “...சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்...” -யோவான் 8:32.Mar 248.3