Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

மாரநாதா! (இயேசு வருகிறார்!)

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    போலியான அறிவியளிலுள்ள அபாயங்கள்!, மே 6

    “ஓ! தீமோத்தேயுவே, உன்னிடத்தில் ஒப்புவிக்கப்பட்டதை நீ காத்துக்கொண்டு, சீர்கேடான வீண்பேச்சுகளுக்கு, ஞான மென்று பொய்யாய்ப் பேர்பெற்றிருக்கிற கொள்கையின் விபரீதங்களுக்கு விலகு.” - 1 தீமோத்தேயு 6:20.Mar 251.1

    நியூ ஹாம்ஷயர் என்ற இடத்தில், தேவனைப்பற்றி பொய்யான கருத்துகளை சுறுசுறுப்பாகப் பரப்பிக்கொண்டிருந்தவர்கள் இருந்தார்கள். இந்த மனிதர்கள் தங்களது கருதுக்களின்மூலமாக சத்தியத்தைப் பயனற்றதாக ஆக்கிக்கொண்டிருந்தார்கள் என்பது பற்றி எனக்கு வெளிச்சம் கொடுக்கப்பட்டது. இந்தக் கருத்துக்களில் சில, சுகபோக இச்சைக்கு (Free-Lovism) வழிநடத்தியது. இந்த மனிதர்கள் தேவனைப்பற்றி யூகித்து, தான்தோன்றித் தத்துவங்களை மக்கள் முன்பாக வைத்து, ஆத்துமாக்களை வஞ்சித்துக்கொண்டிருந்தனர் என்பது எனக்குக் காட்டப்பட்டது...Mar 251.2

    அவர்களது ஏனைய கருத்துக்களினிடையே, ஒருமுறை பரிசுத்தமாக்கப்பட்டவர்கள் பாவஞ்செய்யமுடியாது என்ற கருத்தையும் வைத்திருந்தார்கள். இதை நற்செய்திபோன்ற உணவாக மக்களுக்கு முன்பாக வைத்துக்கொண்டிருந்தார்கள். அவர்களுடைய இத்தைகைய பொய்யான கொள்கைகள், அவைகளுக்கே உரிய ஏமாற்றம் செல்வாக்கின் பாரத்தால், அவர்கள் தங்களுக்கும், மற்றவர்களுக்கும் அதிகத் தீமைகளை விளைவித்துக் கொண்டிருந்தார்கள்; இவ்வாறு, அழகாகப் புனையப்பட்ட கொள்கைகளின் தீமையைக் கண்டறிய முடியாதவர்கள்மீது ஒரு ஆவிக்குரிய கோட்பாட்டின் ஆதிக்கத்தைப் பெற்றுக்கொண்டிருந்தார்கள்; ஏற்கனவே மாபெரும் தீமைகள் விளைவித்துவிட்டன. எல்லாரும் பரிசுத்தமானவர்கள் என்ற கொள்கையானது, பரிசுத்தமாக்கப்பட்டவர்களது மனப்போக்கானது ஒருபோதும் வழிவிலகிப் போகத்தக்கதாக, நடத்திச்செல்லும் ஆபத்தில் இல்லை என்ற நம்பிக்கைக்கு வழிநடத்தியது. இந்த நம்பிக்கையின் விளைவாக, இதயத்தின் தீயவிருப்பங்கள் நிறைவேறுதலை அடைந்தன. இந்த இதயங்கள் பரிசுத்தமாக்கப்பட்டவைகள் என்று சொல்லப்பட்டிருந்தாலும், சிந்தையிலும், செயலிலும் பரிசுத்தத்திற்கு வெகு தூரத்தில் இருந்தன.Mar 251.3

    ‘,ஆள்தத்துவத்தில் குறித்துக்காட்டப்படாத ஒரு கடவுள் இயற்கையின்மூலமாக எங்கும் பரவியிருக்கிறார்’ என்ற கொள்கையையும், மற்றும் ‘பரிசுத்த மாம்சம்’ என்ற கொள்கையையும் மக்களுக்குமுன் வைத்துக்கொண்டிருந்தார்கள். இந்த ஒரே ஒரு சந்தர்ப்பத்தில், இத்தகையோரைக் கடிந்துகொள்ளத்தக்கதாக நான் அழைக்கப்பட்டேன்.Mar 252.1

    வருங்காலத்தில் சத்தியமானது மனிதரின் கொள்கையால் போலியாக்கப்பட்டுவிடும். பாதுகாப்பான கொள்கைபோன்று வஞ்சிக்கும் கொள்கைகள் மனிதர்முன் வைக்கப்படும். பரலோக மன்றங்களிலே போலியான அறிவியலை சாத்தான் தனது செயல் துணைகளின் ஒன்றாகப் பயன்படுத்தினான். அக்காரியமானது இன்றுங்கூட அவனால் பயன்படுத்தப்படுகிறது...Mar 252.2

    தேவனுக்காக ஊழியஞ்செய்கிறவர்கள் கலப்படமற்ற மெய்யான ஒன்றிற்குப்பதிலாக, போலியானதை ஏற்றுக்கொள்ள வேண்டாமென நான் அவர்களிடத்தில் கெஞ்சி மன்றாடுகிறேன். மிகவும் அருமையான சத்தியங்கள் நிறைந்த ஒரு முழு வேதாகமம் நம்மிடத்தில் இருக்கிறது. யூகங்களோ அல்லது பொய்யான பரபரப்போ நமக்கு அவசியமில்லை. சத்தியம் எனப்படும் பொற்கலசத்திலே கிறிஸ்துவின் போதனைகள் எடுத்துக்காட்டியதுபோல் பாவத்தை உணர்த்தி, ஆத்துமாக்களை மனந்திரும்பச்செய்யும் காரியங்கள் நமக்கு இருக்கிறது. அவர் எந்த சத்தியங்களை இந்த உலகிற்குக் கூறியறிவிக்க வந்தாரோ, அந்த சத்தியங்களை கிறிஸ்துவின் எளிமையோடு மக்கள்முன் வையுங்கள். உங்கள் தூதின் வல்லமை, அதை மற்றவர்கள் உணரும்படிச் செய்துவிடும். வேதாகமத்தை அடித்தளமாகக் கொண்டிராத கொள்கைகளையோ அல்லது பரிசோதனைகளையோ மக்கள்முன் வைக்காதீர்கள்.⋆Mar 252.3

    வாக்குத்தத்த வசனம்:Mar 252.4

    “...சத்தியத்துக்குச் செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்துபோகுங் காலம் வரும். நீயோ...சுவிசேஷகனுடைய வேலையைச் செய், உன் ஊழியத்தை நிறைவேற்று.” - 2 தீமோத்தேயு 4:4,5.Mar 252.5