Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

மாரநாதா! (இயேசு வருகிறார்!)

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    காலங்களும் வேளைகளும்!, மே 8

    அதற்கு அவர்: “பிதாவானவர் தம்முடைய ஆதீனத்திலே வைத்திருக்கிற காலங்களையும் வேலைகளையும் அறிகிறது உங்களுக்கு அடுத்ததல்ல” என்றார். - அப்போஸ்தவர் 1:7.Mar 255.1

    காலங்களையும் வேலைகளையும் தேவன் தமது சொந்த அதிகாரத்திற்குள் வைத்திருக்கிறார். இந்த அறிவை தேவன் ஏன் நமக்குக் கொடுக்கவில்லை? ஏனெனில், அவர் அப்படிச் செய்திருப்பாரானால், நாம் அதை சரியாகப் பயன்படுத்திருக்க மாட்டோம். நமது மக்கள் மனதில் இந்த அறிவு இருக்குமானால், காரியங்களில் ஒருவிதமான-வித்தியாசமான சூழ்நிலையே விளைவாக இருக்கும். அதாவது வரப்போகின்ற மகாநாளிலே நிற்கத்தக்கதான ஒரு மக்கள் கூட்டத்தை ஆயத்தஞ்செய்யும் தேவனுடைய பணியில் பெருமள விற்கு தாமதத்தை ஏற்படுத்திவிடும்...இயேசு தமது சீடர்களிடத்தில் விழிப்போடு, கவனமாயிருக்கவேண்டுமென்று கூறினார்; ஆனால், திட்டவட்டமான ஒரு நேரத்தைப்பற்றி அல்ல. தங்களுடைய தலைவனின் கட்டளைகளுக்காக, கவனமாக செவிசாய்த்துக்கொண்டிருக்கவேண்டுமென்ற நிலையில், அவரது பின்னடியார்கள் இருக்க வேண்டும். ஆண்டவரின் வருகையின் நாளை நெருங்கிவரும் போது, அவர்கள் விழிப்போடிருக்க வேண்டும்; காத்துக்கொண்டிருக்க வேண்டும்; ஜெபித்துக்கொண்டிருக்க வேண்டும்; ஊழியஞ் செய்துகொண்டிருக்க வேண்டும்; ஆனால், அந்த நேரம் சரியாக எப்பொழுது வரும் என்று எவருமே முன்னரிவிக்கமுடியாது. “அந்த நாளையும், நாழிகையையும் ஒருவனும் அறியான்” அவர் ஓராண்டிற்குள் அல்லது இரண்டு ஆண்டுகளுக்குள் அல்லது ஐந்து ஆண்டுகளுக்குள் வருவாரென்று நீங்கள் கூறமுடியாது. அல்லது பத்து அல்லது இருபது ஆண்டுகளுக்குள் அவர் வரமாட்டார் என்று கூறி, அவரது வருகையைத் தள்ளிப்போடவுங் கூடாது...பரிசுத்த ஆவியின் பெரும் அருள்மாரிக்கானாலும், அல்லது கிறிஸ்துவின் வருகைக்கானாலும், திட்டமான நேரத்தை நாம் அறியவேண்டியதில்லை.Mar 255.2

    பழைய எருசலேமிற்குப் போகவேண்டியது தங்களது கடமை என்றும், ஆண்டவர் வருமுன்பாக தாங்கள் அங்கு செய்யவேண்டிய பணி ஒன்று உண்டு என்றும், ஒரு மாபெரும் தவறான காரியத்தை நம்பிக்கொண்டிருந்த சிலர் எனக்குச் சுட்டிக்காட்டப்பட்டார்கள். இந்த ஒரு கருத்தானது, மூன்றாம் தூதனுடைய தூதிற்கடியில் ஆண்டவரின் நிகழ்கால ஊழியத்தின் பெயரிலுள்ள எண்ணத்தையும் ஆர்வத்தையும் எடுத்துப்போடத்தக்கதாக, திட்டஞ்செய்யப்பட்ட தாகும். இன்னமும் எருசலேமிற்குப் போகவேண்டுமென்று எண்ணிக் கொண்டிருப்பவர்களுக்கு, அவர்கள் மனங்கள் அங்கேதான் இருக்கும். தாங்களும், மற்றவர்களும் அங்கு செல்லவேண்டுமென்பதற்காக அவர்களது பொருளும், நிகழ்கால சத்தியத்திற்குப் பயன்படாதபடி நிருத்திவைக்கப்பட்டுவிடும். இந்தவிதமான ஊழியத்திட்டமானது எத்தகைய மெய்யான நன்மையையும் நிறைவேற்றாது. ஒரு சில யூதர்களைக்கூட, இயேசுவின் முதலாம் வருகையில் விசுவாசம் வைக்கச் சொல்வதற்கு நீண்டகாலம் எடுக்கும். அவரது இரண்டாம் வருகையை நம்பச்செய்வதற்கு மேலும் அதிகக் காலமாகும். Mar 255.3

    குறிப்பு: இந்த வேதப் பகுதியானது 1850-ம் ஆண்டுகளின் ஆரம்ப நாட்களில் எழுதப்பட்டது. “வரப்போகின்ற காலம்” என்ற பொருள்பற்றி ஆதரித்து வாதாடியவர்கள், பழைய எருசலேமானது ஒரு கிறிஸ்துவ சாட்சியின் மையமாக, பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசனங்களை நிறைவேற்றத்தக்கதாகக் கட்டப்படுமேன்று போதித்தார்கள்.⋆Mar 256.1

    வாக்குத்தத்த வசனம்: Mar 256.2

    “ஆகையால், ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள்.” - 1 பேதுரு 5:6. Mar 256.3